Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரன், வராவெவ கொடுத்த தீர்ப்புக்கள் பற்றி மீள்பரிசீலனை வேண்டும்!

Featured Replies

 

 

 

wigneshwarn.png
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய சீ.எம். விக்னேஸ்வரன், ஓய்வுபெற்ற நீதிபதி பீ.பீ. வராவெவ ஆகியோர் நீதிமன்றில் சேவைபுரிந்த காலத்தில் வழங்கிய தீர்ப்புக்கள் பற்றி சந்தேகம் எழுந்துள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கிறது.

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சீ.வீ. விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வட மாகாணத்திற்கும், ஓய்வுபெற்ற நீதிபதி பீ.பீ. வராவெவ ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மத்திய மாகாண சபைக்கும் முதலமைச்சர் வேட்பாளர்களாக போட்டியிட முன்வந்துள்ளது தொடர்பில் இச்சந்தேகம் எழுந்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எஸ்.எம். சந்திரசேன குறிப்பிடுகிறார்.

தேர்தல் வேட்பாளர்களாக அவர்களின் பெயர்கள் முன்மொழியப்படுவதற்கு முன்னரேயே அவர்கள் அரசியல் ஆழக் காலூன்றியிருக்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ள அமைச்சர், அவர்களால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் நீதியானவைதானா என்பது பற்றி அலச வேண்டும் என ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார்.

http://www.ilankainet.com/2013/07/blog-post_1290.html

அதுதான் தேவை. தேவையான கமிசன் றிப்போட்டுக்கள் குப்பைக் கூடைக்குள் போய்விட்டன. LLRC அறிக்கையை முன்னால் நகர்த்த ஐ.நா.வுக்கு தன்னும் முடியவில்லை. பாராளுமன்ற  தெரிவுக்குழு சிராணி மீதான விசாரணையை கண் மூடி முழிக்க முதல் முடித்து வைத்துவிட்டது. அதே நேரம் சி.வி. விக்கினேஸ்வரனுக்கு, சிராணிக்கு தெரியா சட்ட நுணுக்கங்கள் விமல் வரைக்கும் விளங்குகிறது. 

 

எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மீது வரும் சந்தேகம், நாட்டின் சுற்றுலாத் துறையையே கேள்விக்குறியாக்கி உலக நாடுகளை  தமது குடிமக்கள் இ்ங்கைக்கு விஜயம் செய்யவேண்டாம் என்று அறிக்கைவிட வைத்த தங்காலை ரவுடி மீது வரமாட்டேங்கிறதே.

 

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய சீ.எம். விக்னேஸ்வரன், ஓய்வுபெற்ற நீதிபதி பீ.பீ. வராவெவ ஆகியோர் நீதிமன்றில் சேவைபுரிந்த காலத்தில் வழங்கிய தீர்ப்புக்கள் பற்றி சந்தேகம் எழுந்துள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கிறது.

இந்த நீதிபதிகள் மீது சந்தேகம் வந்த காரணம் அவர்கள் எதிர்க்கட்சியில் தேர்தலில் இறங்கியது. எதிர்க்கட்சிகளில் இருபத்தால் அவர்கள் நடுநிலைமையாக  சில ஆளும்கட்சி ரவுடிகளை உள்ளே போட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தால். இதனால் நீதித்துறை முழுவதாக சீரழியத்தக்கதாக அவர்கள் மீது தனிப்பட்ட விசாரணை முடிக்கு விடப்படுகிறது. இந்த பழிவாங்கல் நடத்தை வெற்றி அளிக்கிறதோ இல்லையோ இதனால் இனி வரும் காலத்தில் இலங்கையில் ஒரு நீதிபதியும் உண்மைக்கு ஆதரவாக தீர்ப்புக்கொடுக்கப் போவதில்லை.

 

இந்த பொறாமைக்கு காரணம் இலங்கையின் மும்மொழி ஊடகங்களும் நீதியரசர் விக்கினேஸ்வரனை, அவரைக் கூட்டமைப்பு ஏகமனதாக தெரிந்த நாளில் இருந்து கலைத்துக் கலைத்து பேட்டி காண்கின்றன. அவரை அவை நடத்தும் விதம், மகிந்தா ஜனாதிபதி தேர்தலில் இறங்கிய போது நடத்தாத நடத்துகை. அரசின் ஒரே ஒரு நோக்கம் பொய் அறிக்கைகள் தயாரித்து நீதியரசரை சிறையில் போட்டு, வடமாகாண தேர்தலை பூச்சியப் படுத்துவது அல்லது நடக்காமலே குழப்பிவிடுவதென்பதாகும். இதில் நீதியரசர் துணிச்சலோடு சிறைக்கு போய்க்காட்ட வேண்டும்.

 

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் மீண்டும் பயம்கொள்ளத் தொடங்கிவிட்டான். விக்னேஸ்வரன்மூலம் எமது பலத்தைக் காண்பிப்பது புலம்பெயர் தமிழர்களது கடமை. இதில் நாம் சொல்லவேண்டிய செய்தி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நாம் இன்னமும் கைவிடவில்லை என்பதையே. உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழர்கள் சேர்ந்து, புலத்தில் வரப்போகும் தேர்தலையொட்டி ஒரு கொள்கைப்பிரகடனம் விடலாம். அது எவ்வாறெனில் தமிழர்கள் எதிர்கொள்ளும் இத்தேர்தல் போர்குற்றம், இனவழிப்பு இவைகளுக்கு விசாரணை கோரியும் எமதினத்துக்குப் பிரிந்துபோகும் உரிமை உண்டு என்பதைத் தெரிவிப்பதற்குமான தேர்தல் என்பதையே நாம் கருதுகிறோம் எனக்கூறி புலத்துத் தமிழர்களை அதிகபட்சமாக விடுதலைநோக்கி வாக்களிக்கும்வண்ணம் கேட்டுக்கொள்ளலாம். இதன்மூலம் கூத்தமைப்புக்கும், இந்தியாவுக்கும் நாம் சரியான செய்தியைச் சொல்லியோராவோம். ஆனால் நிலைமைகள் மாறலாம் ஆகவே அவசரப்படல் வேண்டாம். தவிர தமிழீழ விடுதலைவேண்டுவோர் அனைவரும் இத்தேர்தலில் களமிறங்கிச் செயற்படுவது காலத்தின் தேவை எனிலும் இத்தேர்தல் எமது தேசவிடுதலைபாதையில் இம்மியளவும் முன்னகர்வு ஏற்படுத்த மாட்டாது என்பதை நாம் உணர்தேயிருத்தல் வேண்டும். ஆனால் எமது நிறம் என்ன என்பதை எதிரிக்கும், எமதெதிரியின் நண்பனுக்கும் தெரியப்படுத்தலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.