Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாணசபைத் தேர்தல்விவகாரம் முஸ்லிம் தலைமைகள் TNAயிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணசபைத் தேர்தல்விவகாரம் முஸ்லிம் தலைமைகள் TNAயிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை
19 ஜூலை 2013
- எழுதுவது இலங்கையன் -




ஏதாவது செய்தேயாகவேண்டும் என்கின்ற நிலைப்பாட்டுக்கு தள்ளப்பட்டுள்ள இலங்கை அரசாங்கம் விரும்பியோ விரும்பாமலோ வட மாகாண சபைத் தேர்தலை அறிவித்துள்ளது. இத்தேர்தலைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அங்கு தோல்வியுறச் செய்வதானால் அதற்கான ஒரே வழி, தேர்தலை நீதியாக நடக்க விடாமல் செய்வதே. இது தவிர வேறெந்த வியூகமும் அங்கு பலிக்காது என்பது சர்வதேசம் அறிந்த மாபெரும் உண்மை. ஏனனில் தமிழ் மக்கள் யாவரும் தமது உணர்வு வெளிப்பாடாகவே இத்தேர்தலைக் கருதுகின்றனர்.



இந்த உண்மையானது கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த மக்கள் ஆணையிலிருந்து நிரூபணமானது. ஆனால் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவானது சிறுபான்மையினருக்குச் சாதமாக அமைந்தும் கூட முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கையாலாகாத்தனத்தினால், சுயநலச் சூதாட்டங்களினால் அது பாழாய்ப் போனது என்பது வரலாற்றுத் துரோகத்தின் வடுவாகும்.

நான் இவ்வாறு சொல்வதற்கான காரணம், நடப்பிலுள்ள கிழக்கு மாகாண சபை அமைந்து ஒரு வருடமாகின்ற நிலையில், கிழக்கு மாகாணத்தில் சிறுபான்மையினர் எதிர்கொள்வதாகப் பட்டியலிடப்பட்டுள்ள எந்தப் பிரச்சினைக்கும் ஆக்கபூர்வமான தீர்வுகள் அடையப்படவில்லை. மாறாக அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கே நிறந்தீட்டப் பட்டுக்கொண்டிருக்கிறது. “திவிநெகும்” தொடங்கி எல்லா வேலைத்திட்டங்களிலும் சிறுபான்மையினரின் நலன்கள் கணக்கிலெடுக்கப்படவே இல்லை என்பதே கசப்பாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளவேண்டிய உண்மையாகும்.

இன ஒடுக்குமுறை, பேரினவாத வராண்டுதல்கள், உரிமை மறுப்புக்கள், அத்துமீறல்கள், அபிவிருத்தி வெளிப்பகட்டுக்கள் என சிறுபான்மையினர் துன்புற்றுக்கொண்டிருக்கும் சமயம் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவையும் அதற்கு பின்னரான மாகாண சபையின் செயற்பாடுகளையும் யாவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து ஏமார்ந்து போனதற்கான முக்கிய காரணம் முஸ்லிம் அரசியல் தலைமைகளே என அடித்துச் சொல்ல முடியும்.

சர்வதேசம் எதிர்பார்த்ததைப் போன்றே கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தாலும் மாகாண சபை அதற்கு மாற்றமாகவே அமைந்தது.

அமைச்சர் அதாவுல்லாஹ் மற்றும் ரிசாட் பதியுதீன் போன்றவர்கள் தேர்தலின் போதும் தேர்தலின் பின்னரும் அரசாங்கத்துக்கு நல்ல பிள்ளையாகவே இருந்து வந்தனர். அமைச்சர் ஹக்கீமோ கூலுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற கணக்கில் அமைச்சராக இருந்து கொண்டே பிரிந்து போட்டியிடல் நாடகத்தை அரங்கேற்றினார். இதன் விளைவாக தேர்தல் முடிவு சிறுபான்மை மக்களின் வெற்றியாகவும், கிழக்கு மாகாண சபை அமைத்தல் மஹிந்த அரசின் வெற்றியாகவும் மாறிப்போனது.

தமிழ்த் தேசியப் கூட்டமைப்பு, ஜ.தே.க மற்றும் இன்னும் சில புத்திஜீவிகள் அமைப்புக்கள் என யாவரும் காலில் விழாத குறையாக ரவூப் ஹக்கிமிடம் மன்றாடியும் அவர் சிறுபான்மையினருக்கான மாகாண சபை அமைக்க உடன்படவேயில்லை. அவர் “அமைச்சர்” ஹக்கீமாகவே இருக்க ஆசைப்பட்டார். அதனால் “பொருத்தமான தருணத்தில் பொருத்தமற்ற முடிவை எடுப்பதில் தான் வல்லவர்” என்பதை மீண்டும் நிரூபித்துக்காட்டினார்.

இப்படியாக முழுக்க முழுக்க முஸ்லிம் அரசியல் தலைமைதுவங்களினாலேயே வலுவிழந்து போன கிழக்கு மாகாண சபையைப் போன்று நிச்சயமாக வட மாகாண சபை அமையப் போவதில்லை. ஏனெனில் அங்கு ரவூப் ஹக்கீம், அதாவுல்லாஹ், ரிஷhட் பதியுதீன் போன்ற “அரசாங்க அமைச்சர்களின்” வார்த்தைகளை நம்பி ஏமாறும் மக்கள்; (முஸ்லிம்கள்) வடக்கில் 3.06% (32,364) இனரேயாவர். எனவே கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்க ரவூப் ஹக்கீமைக் கெஞ்சியதைப் போல வட மாகாண சபையில் கெஞ்சவேண்டிய குறைந்த பட்சத் தேவை கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடையாது. அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுக்கின்ற மேற்படி முஸ்லிம் தலைமைகள் புறக்கணிக்கத்தக்க அளவிலான மக்கள் ஆணையை மட்டுமே அங்கு பெறமுடியும் என்பது திண்ணம்.

எனவே இந்த வட மாகாண சபைத் தேர்தலானது சிறுபான்மையினரின் அரசியல் வரலாற்றில் அதிலும் குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானதொன்றாக அமையப் போகின்றது என்பதனால் நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலை விடவும் இத்தேர்தல் மீதான சர்வதேசத்தின் கவனக்குவிப்பு அதிகமாக உள்ளது.

வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு முடிந்திருக்கும் நிலையில் எழுதப்படுகின்ற இக்கட்டுரையின் நோக்கம் முஸ்லிம் மக்களை மீள் பரிசீலனைக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைகளை சுய விசாரணைககும் தூண்டுவதேயாகும்.

பல கலந்துரையாடல்கள், கருத்து முரண்பாடுகள் என சில நாட்கள் கழிந்தாலும் அனைவரினதும் ஏகோபித்த முடிவாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எவ்வளவோ மாற்றுக்கருத்துக்கள் மறறும் சுயநலன்கள் என்பவைகளையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைவருமாய்ச் சேர்ந்து மக்கள் நலன் என்கின்ற ஒரே காரணத்திற்காய் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார்கள். இந்நிலையானது ஜனநாயத்தை விரும்பும் இலங்கை மக்களுக்கும், சர்வதேசத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதுள்ள மரியாதையை அதிகரித்துள்ளது.

ஆரம்பத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் முதலமைச்சர் வேட்பாளராக நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களை நியமிப்பது தொடர்பில் தனது யோசனையை முன்வைத்திருந்தார். அதன் பின் கூட்டமைப்பின் உறுப்பினர்களிடையே இது தொடர்பில் பல கருத்து முரண்பாடுகள் எழுந்தன. மாவை சேனாதிராஜா அவர்களும் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவதில் தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலை கண்டு ஊடகங்கள் தங்கள் பாட்டுக்கு தமது பக்கங்களை நிரப்பிக்கொண்டிருந்தனர். அரசாங்கமும் ஊர் இரண்டு பட்டால் கூத்தாட்டிக்குக் கொண்டாட்டம் என மகிழ்ந்து கொண்டிருந்தது. ஆனால் யாரைத் தெரிவு செய்தால் தமது எதிரணிகள் அதிர்ந்து அச்சப்படுவார்களோ அவரையே இறுதியில் கூட்டமைப்பு தெரிவு செய்தது. எதிரியின் அச்சம்தான் தமது வெற்றி என்பது கூட்டமைப்புக்கு தெரியாதா என்ன...?

நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவு செய்தமை, எந்த சுயநலமுமற்ற மக்கள் நலனுக்கான அரசியலே என்பது அழகாகப் புலனாகின்றது. முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற தீர்மானத்தை எடுத்ததையடுத்து தலைவர் இரா சம்பந்தனுடன் மாவை சேனாதிராஜா உட்பட மாற்றுக்கருத்துக் கொண்டிருந்த ஏனைய உறுப்பினர்களுமாய்ச் சேர்ந்து நீதியரசர் விக்னேஸ்வரனின் வீட்டுக்குச் சென்று அவரைத் தெரிவு செய்த செய்தியை சந்தோஷமாகத் தெரிவித்து கலந்துரையாடியுள்ளனர். இவ்விடயம் ஒன்றே வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் வெற்றியடைந்து விட்டார்கள் என்ற எதிர்வுகூறலுக்குப் போதுமான சான்றாக இருக்கின்றது. இந்த இனிப்பான செய்தியை அறியும்போது மாவை சேனாதிராஜாவும் மாற்றுக் கருத்துக் கொண்டிருந்த மற்றைய உறுப்பினர்களும் மக்கள் மத்தியில் மகத்தானவர்களாகக் காட்சி தருகிறார்கள்.

01. மாவை சேனாதிராஜாவுக்கு முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் இருந்தும், அதற்கான ஆதரவிருந்தும் அவர் அதனை புறந்தள்ளியுள்ளார்.

02. சுரேஷ; பிரேமச்சந்திரனின் தம்பியாகிய சர்வேஷவரனுக்கு முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட விருப்பமிருந்தும் இறுதியில் சுரேஷ பிரேமச்சந்திரன் அதற்கு முக்கியமளிக்கவில்லை.

03. கூட்டமைப்பிலுள்ள ஏனைய உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜாவை நியமிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தும் அவர்கள் தலைமையின் முடிவை ஏக மனதாக ஏற்றுக் கொண்டனர்.

04. வேட்பாளர் தெரிவு தொடர்பில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக மற்றும் கூட்டமைப்புக்குள் பிளவுகளை உண்டுபண்ண சில தீய சக்திகளால் மேற்கொள்ளப்பட்ட “பணப்பெட்டி” விவகாரம் அத்தனையும் தோல்வியில் முடிந்துள்ளன.

மேற்படி விடயங்களிலிருந்து முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் கவனிக்க வேண்டிய நிறையப் பாடங்கள் இருக்கின்றன.

01. பொருத்தமான நேரத்தில் பொருத்தமான முடிவு எடுப்பதாக அடிக்கடி கூறும் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் வெறும் வாய்ச் சொல்லில் வீரர். ஆனால் அதனை கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் சரியாகச் செய்துள்ளார்.

02. கட்சியில் தனது இருப்பு மற்றும் அந்தஸ்த்து பறிபோகும் என்ற சுயநலத்திற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் சார்ந்த யாருக்கும் அது கிடைத்து விடக் கூடாது என்பதில் ரவூப் ஹக்கீம் கரிசணையாக இருந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

03. முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே உள்ள உள் முரண்பாடுகள் காரணமாக மக்கள் நலன் கருதி எதிலும் தீர்க்கமான முடிவை எடுக்க முடியாத நிலையே காணப்படுகிறது.

04. “அவ்வாறு செய்தால் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவோம், இவ்வாறு செய்தால் கட்சியை விட்டு பிரிந்து சென்று அரசாங்கத்துடன் தனியாக இணைவோம்” என தலைமைக்கு சவால் விடும் உறுப்பினர்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மலிந்து கிடக்கிறார்கள்.

05. தலைமையின் விருப்பத்திற்கு மாறாக கிழக்கு மாகாண சபையில் “திவிநெகும”விற்கு ஆதரவு அளித்தார்கள்.

06. தலைமைக்குத் தெரியாமலேயே பஷPர் சேகுதாவூத் அமைச்சுப் பதவியைப் பெற்று வந்தார்.

07. ஏதாவது பாராளுமன்றத் தீர்மானங்களில் கூட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் யாவரும் ஏகோபித்த முடிவை எடுப்பதோ வாக்களிப்பதோ கிடையாது.

08. தமக்கு ஆதரவளிக்கும் மக்களின் விருப்பு வேறாகவும், தமது விருப்பு வேறாகவும் உள்ள ஒரே கட்சி முஸ்லிம் காங்கிரஸே.

முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஏனைய முஸ்லிம் கட்சிகள் யாவும், எதிர்வருகி;ன்ற வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் எவ்வளவு ஒற்றுமையுடன் சுய நலன்களைத் துறந்து மக்கள் நலனுக்காகவே செயற்படுகின்றன என்பதைக் கூர்ந்து அவதானிக்க வேண்டும். அது மட்டுமன்றி அவர்களின் ஒற்றுமையினால், மக்களின் நலனில் கொண்ட அக்கறையினால் எதிர்வரும் தேர்தலில் (நீதியாக நடைபெறுமாக இருந்தால்) எவ்வளவு சாதித்துக் காட்டப் போகின்றார்கள் என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும்.

தேர்தல் என்பது மக்களின் அபிலாசைகளை அடைவதற்கான திறவுகோள். அதனை எவ்வாறு மக்களுக்காகப் பயன்படுத்துவது என்பது பற்றியெல்லாம் இந்த வட மாகாண சபை வெற்றிக்கு பின்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எய்தவிருக்கும் அடைவுகளில் இருந்து முஸ்லிம் தலைமைத்துவங்கள் இனியாவது கற்றுக் கொள்ள வேண்டும்


http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94197/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இரு இனங்கள் உள்ளன. ஒன்று தமிழ்மொழியை தாய்மொழியாகக் கொண்ட தமிழினம். மற்றது சிங்கள மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட சிங்கள இனம். முஸ்லிம்கள் தாங்களும் இலங்கையில் ஒரு இனம் என்றால்! அவர்களின் தாய்மொழி முஸ்லிம்மொழியா? அப்படி ஒரு மொழி இலங்கையில் இருப்பதாக இன்றுவரை கேள்விப்பட்டதில்லை!. அவர்கள் மொழியற்றவர்களாக இருந்தால், தமிழர் கூட்டணியிடம் கற்றுக்கொள்வதோடு, சிங்களக் கூட்டணியிடமிருந்தும் கற்றுக்கொள்ளலாம்.

 

 

 

 

 

 

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது... ஸ்ரீலங்காவில் தேர்தல் நடக்கின்றதோ....
அப்போது.. எல்லாம், முஸ்லிம்களால் பிரச்சினை தான்.
தாம் தமிழரா, சிங்களவரா, மதவாதியா, இனவாதியா.... என்ற பல முகங்களுடன் களமிறங்கி, குட்டையை..... குழப்பியடித்து, லாபம் பார்ப்பதில் வல்லவர்கள்.
 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களும் குழம்ப  தொடங்கிருப்பதால்

முன்னாள் நீதிபதி  அவர்களின் தெரிவு சரி  என்பது நிரூபணமாகிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.