Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெட்கப்பட்ட ஆறு!

Featured Replies

வெட்கப்பட்ட ஆறு!

 

 

Flower_river_Wallpaper__yvt2.jpg

 

தலைவன் சில காலம் தலைவியைக் காணவராமல் இருந்தான். அவனது பிரிவாற்றாமையால் வருந்திய தலைவி தலைவனின் மலையிலிருந்து ஓடிவரும்அருவியிடம் இவ்வாறு பேசுகிறாள்..

எம் தலைவரது மலைநாட்டிலிருந்து வரும் ஆறே….
எம் அணிகலன்கள் நெகிழுமாறு துன்பம் மிகுந்தது!
மெல்லிய தோளும் மெலிந்து போயிற்று!
உடல் பாழ்பட பசலையும் படர்ந்தது!
உடலைப் பார்த்து நெற்றியும் பசலை கொண்டது!


(புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டதுபோல என்றொரு பழமொழி சொல்வார்கள். அது போலவே தலையின் நிலை உள்ளது உடலைப் பார்க்கும் ஆற்றல் நெற்றிக்குக் கிடையாது என்றாலும் பார்த்தது அதனால் நெற்றியும் கெட்டது என்கிறாள். அறிவுக்கு இடம்கொடுக்காமல் கவிதையின் கற்பனை உலகத்துக்கு உள்ளே போனால் தலைவியன் நிலை சிரிக்கவைப்பதாக உள்ளது.)

இந்நிலையில் என் நிலையை எண்ணிப் பார்காதவனாக நின் தலைவனும் எனக்குக் கொடுமை செய்தான்.

கலங்கும் குளிந்த கண்களிலிருந்து நீர்பெருகுமாறு அறத்தினைக் கைவிட்டு நீங்குதல் நின் தலைவனுக்குப் பொருந்துவதாகுமா..?

நான் இப்படியெல்லாம் உன்னைக் கேட்பேன் என்று எனக்கு அஞ்சி, அவர் மலையில் மலர்கின்ற மலர்களால் நீ உன் உடலை முழுதும் மறைத்துப் போர்த்துக்கொண்டு நாணத்தால் மிகவும் வெட்கிச் செல்கிறாய்!
என்கிறாள்.

(கடன்கொடுத்தவரைப் பார்த்தவுடன் கடன் வாங்கியவர் எப்படியாவது தன்னை மறைத்துக்கொண்டு தப்பிஓட முயல்வாரே அதுபோல ஆறும்,
அவரை மடக்கிப் பிடிப்பாரே கடன் கொடுத்தவர் அதுபோல தலைவியும் இங்கே காட்சியளிப்பதும் ஒப்புநோக்கத்தக்கனவாக உள்ளன.)

ஆறு மலர்களைச் சுமந்து வருவதும்
உடல் மெலிதலும் இயல்பானவையே என்றாலும்..

தலைவி அருவியிடமும், உடலிடமும் இவ்வாறு பேசுவது இவளது ஆற்றாமையையே உணர்த்துவதாக இருந்தாலும் இவளது நிலையைக் காண்பவர்களால் சிரிக்காமல் இருக்கமுடியாது.

முனைவர் இரா.குணசீலன்
http://www.gunathamizh.com/2012/02/blog-post_13.html

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கோமகன். மலர்கள் மிக அழகு.

நன்றி கோமகன். மலர்கள் மிக அழகு. .

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி கோமகன் !

இம்மென்கீரனார்.

முனைவர் இரா.குணசீலன்
on Wednesday, December 02, 2009
 
aaru.jpg

இன்பம், துன்பம் இரண்டும் கலந்ததே மனித வாழ்வியல்,

இன்பத்தை அன்பானவர்களிடம் பங்கிட்டுக்கொண்டால் இரண்டுமடங்காகும்,

துன்பத்தைப் பங்கிட்டுக் கொண்டால் பாதியாகக் குறையும்.

இன்பம் வந்தபோது பங்கிட்டுக்கொள்ள நண்பர்களைத் தேடும் மனது, துன்பம் வந்த போது யாருக்காகவும் காத்திருப்பதில்லை “அழுகை, புலம்பல்“ இவ்விரண்டில் ஒன்றாக வெளிப்படுகிறது...

இவ்விரண்டும் ஒரு வகையில் துன்பம் என்னும் மன அழுத்தத்தை நீக்கும் வாயில்கள் தான்.. 

மன அழுத்தம் அதிகமானால், நீடித்தால் மனப்பிறழ்வாகிவிடும் என்பது உளவியல்.

இங்கு ஒரு தலைவியின் அழகான புலம்பல்...

களவொழுக்கம் (காதல்) காரணமாக அலர் எழுந்தது. அதனால் தலைவன் சில காலம் தலைவியைக் காணவராமல் இருந்தான். அவனது பிரிவாற்றாமையால் வருந்திய தலைவி தலைவனின் மலையிலிருந்து ஓடிவரும் ஆற்றிடம் புலம்புவதாக இப்பாடல் அமைகிறது.

(காமம் மிக்க கழிபடர் கிளவியால் வரைவிடத்துக்கண், தலைமகள் தலைமகன் வரையினின்றும் போந்த ஆற்றொடு புலந்து சொல்லியது.)

அஃறிணை உயிர்களிடம் பேசுவது அறிவுடைமை ஆகாது. ஆயினும் துன்பத்தில் வாடிய மனது இதை அறியாது. தலைவன் மீது கொண்ட அன்பு மிகுந்த தலைவி அதனை எப்படி வெளிப்படுத்துவது என்பதை அறியாள். தலைவன் தன்னைக் காணவராததால் அவன் மீது மிகுந்த வருத்தம் கொண்டாள். தன் வருத்தத்தை அவன் நாட்டிலிருந்து வரும் ஆற்றிடம் இவ்வாறு வெளிப்படுத்துகிறாள்.

“பெரிய ஆண் புலியால் தாக்கப் பெற்று புண்பட்டு, பெண்யானையால் தழுவப் படும் வலிமை குன்றிய ஆண்யானை மூங்கிலால் செய்யப்பட்ட தூம்பு போல ஒலித்தற்கு இடனான எம் தலைவரது மலைநாட்டிலிருந்து வரும் ஆறே….

எம் அணிகலன்கள் நெகிழுமாறு துன்பம் மிகுந்தது!

மெல்லிய தோளும் மெலிந்து போயிற்று!

உடல் பாழ்பட பசலையும் படந்தது!

உடலைப் பார்த்து நெற்றியும் பசலை கொண்டது!

இந்நிலையில் என் நிலையை எண்ணிப் பார்காதவனாக நின் தலைவனும் எனக்குக் கொடுமை செய்தான்.

கலங்கும் குளிந்த கண்களிலிருந்து நீர்பெருகுமாறு அறத்தினைக் கைவிட்டு நீங்குதல் நின் தலைவனுக்குப் பொருந்துவதாகுமா..?

நான் இப்படியெல்லாம் உன்னைக் கேட்பேன் என்று எனக்கு அஞ்சி, அவர் மலையில் மலர்கின்ற மலர்களால் நீ உன் உடலை முழுதும் மறைத்துப் போர்த்துக்கொண்டு நாணத்தால் மிகவும் வெட்கிச் செல்கிறாய்!

உன்னை மட்டும் ஊர்வழியே அனுப்பிவிட்டு அன்பும் அருளும் இன்றி என்னைத் துறந்து செல்லும் வன்மையுடையோரை என் தலைவன் என்பேனா?

அவரை என் அயலார் என்று கூறுதல் எவ்விதத்தில் தவறாகும்?

நீயோ நெடுந்தொலைவு வந்துள்ளாய்!

நின் ஓட்டத்தைத் தடுத்து தீயினைப் போன்ற மலர்களைப் பூத்து நிழல்தரும் வேங்கை நிழலிலே தங்கிச் செல்வாயாக!

ஆரியரின் பொன்கொழிக்கும் இமயமலையைப் போன்ற பூக்கள் பூத்துக் குலுங்கும் எம் தந்தையது காடான இங்கு இன்றைய பொழுது நீ தங்கிச் செல்லலாமே..!

இன்று நீ இங்கு தங்கிச் செல்வதால் உனக்கு ஏதும் தீங்கு நேர்வதுண்டோ..?

என வினவுகிறாள்..

பாடல் இதோ…

'இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூர,

படர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇ,

மென் தோள் நெகிழச் சாஅய், கொன்றை

ஊழுறு மலரின் பாழ் பட முற்றிய

5 பசலை மேனி நோக்கி, நுதல் பசந்து,

இன்னேம் ஆகிய எம் இவண் அருளான்,

நும்மோன் செய்த கொடுமைக்கு, இம்மென்று,

அலமரல் மழைக் கண் தெண் பனி மல்க,

நன்று புறமாறி அகறல், யாழ நின்

10 குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ?

கரை பொரு நீத்தம்! உரை' எனக் கழறி,

நின்னொடு புலத்தல் அஞ்சி, அவர் மலைப்

பல் மலர் போர்த்து, நாணு மிக ஒடுங்கி,

மறைந்தனை கழியும் நிற் தந்து செலுத்தி,

15 நயன் அறத் துறத்தல் வல்லியோரே,

நொதுமலாளர்; அது கண்ணோடாது,

அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ,

படித்துப் பயன்பெறவும்.

மாரி புறந்தர நந்தி, ஆரியர்

பொன் படு நெடு வரை புரையும் எந்தை

20 பல் பூங் கானத்து அல்கி, இன்று, இவண்

சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ?

குய வரி இரும் போத்துப் பொருத புண் கூர்ந்து,

உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை

வாங்கு அமைக் கழையின் நரலும், அவர்

25 ஓங்கு மலை நாட்டின் வரூஉவோயே!

இம்மென்கீரனார் (அகநானூறு-398)

இப்பாடல் வழி அறியலாகும் உண்மைகள்..

1.இப்பாடல் பாடிய புலவரின் பெயர் தெரியாத சூழலில் இப்பாடலில் இடம்பெறும்…

“நும்மோன் செய்த கொடுமைக்கு, இம்மென்று“

என்னும் அடியில் இடம்பெற்ற “இம்“ என்னும் சொல் இம்மென் கீரனார் என்று இப்புலவர் பெயர் பெறக் காரணமானது.

2. தலைவன் மீது கொண்ட மிகுந்த அன்பு காரணமாக ஆற்றாது புலம்பும் தலைவியின் நிலை காமம் மிக்க கழிபடர் கிளவி என்னும் அகத்துறையை விளக்குவதாக அமைகிறது.

3. தலைவனின் பிரிவை ஆற்றாத தலைவி தன் ஆற்றாமையை ஆற்றிடம் வெளிப்படுத்துகிறாள். இயல்பாக மலர் செறிந்து செல்லும் ஆற்றிடம் எனக்கு அஞ்சித் தான் நீ உன் உடலில் மலர் போர்த்திச் செல்கிறாய் என்கிறாள்.

4. தலைவனுடன் சேர்ந்திருக்க இயலாத வருத்தத்தில் இருக்கும் தலைவி, அவன் நாட்டிலிருந்து வரும் ஆற்றுடனாவது சில காலம் தங்கியிருக்கலாம் என்று கருதி ஆற்றிடம் தன் ஊரில் தங்கிச்செல்லவேண்டும் என வேண்டுதல் விடுக்கிறாள்.

 
 

தலைவன் குறிஞ்சி நிலத்தோனும் தலைவி முல்லை நிலத்தாளுமாக பாடல் சித்தரிக்கிறது போலிருக்கிறது. வருவான் வருவான் என ஆற்றங்கரையில் நிதமும் உலாவி வந்தாள் நங்கை. கங்கையின் கரையில் காதலுனுக்காக காத்திருந்தாள் மங்கை. நாளும் கரைபுரண்டோடியது கங்கை. ஆனால் ஓடி வரும் நதியோடு கூடி வரவில்லை காதலன்.

 

உண்மைத் தோழியாக இருந்திருந்தால் சென்று தூது சொல்லியிருப்பாள் இந்தக் கங்கை இல்லையா. முகத்தை மறைக்காமல் பதில் சொல்லியிருப்பாள் இல்லையா. தலைவனக்கு இரக்கம் இல்லை; ஆனால் இந்த தோழிக்குமா? திகைக்கிறாள் தலைவி.

 

அப்போ எப்போது தோழியானால் இந்த கங்கா அந்த தலைவிக்கு? தலைவியின் காதலுக்கு தூது போனது இந்த நதிதான். நேராகக் கொண்டுவர ஆரம்பிக்க முன்னர்,அவன் மதயானையை ஒத்து  மலைகுன்றில் நின்றுகொண்டும், தாவி ஏறி சிறு குரங்காக ஒழித்திருந்த மரத்திலிருந்து பறித்துப்போட்ட பூக்களை வாரியள்ளிக்கொண்டு வந்து அவள் கையில் கொடுத்த தோழிதான் இந்த ஆறு. பின்னர் அவன் கையிலிருந்து மலர்களை வாங்கும் பழக்கம் வந்த பின்னர் தோழி ஆற்றில் மிதந்துவரும் மலர்ளை எடுப்பதில்லை. இன்றும் வழமை போல ஆற்றில் மலர்கள் மிதந்து வந்தன அவளின் காதலின் இனிமையான ஆரம்ப நாட்களை நினைவு படுத்தின. ஆனால் ஊடலில் இருந்த தலைவி ஆற்றில் மிதந்து போகும் அந்த மலர்களை தன் கையால் தொட்டு எடுக்க விரும்பவில்லை. அதானால் அவை அவளை கடந்தும் தொடர்ந்து சென்றன. அது அவளுக்கு ஆறு முகத்தை மூடுவது போலிருந்தது. வளைந்து நெளிந்து செல்லும் ஆறும் நாணத்துடன் நடப்பது போலவும் பட்டது. தலைவியைக் கண்டு தோழி நாணிக்குறுகிளால் தோழி இழைத்த துரோகம் ஒன்றினாலகத்தான் இருக்க முடியும் இல்லையா....... 

  • தொடங்கியவர்

பகிர்வுக்கு நன்றி கோமகன். மலர்கள் மிக அழகு.

 

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்கநன்றி சுமே :) .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.