Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் 'நகர வளாகம்' - சீன நிறுவனத்துடன் உடன்படிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Srilanka_China.jpg

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் உள்ள நிலம் ஒன்றில் 1.4 பில்லியன் டொலர்கள் செலவில் 'நகர வளாகம்' ஒன்றை உருவாக்குவதற்கான உடன்படிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் சீன நிறுவனம் ஒன்றுடன் கைச்சாத்திட்டுள்ளதாக புதனன்று சிறிலங்காவின் உத்தியோகபூர்வ வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது. 

புதிய கொழும்பு தெற்கு துறைமுகத்திற்கு அடுத்ததாக உள்ள 230 ஹெக்ரேயர் நிலப்பரப்பரப்பை சிறிலங்கா அரச துறைமுக அதிகாரசபையானது மீளப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக இதன் தலைவர் பிரியாத் பண்டு விக்ரம தெரிவித்துள்ளார். 

சிறிலங்காத் தலைநகரின் கரையோரத்தை நவீனமயப்படுத்தும் விதமாக சீன தொடர்பாடல் கட்டுமான நிறுவனமானது [China Communications Construction Company Limited – CCCC] துறைமுகத்திற்கு அருகிலுள்ள நிலத்தில் 1.43 பில்லியன் டொலர்கள் செலவில் 'துறைமுக நகரம்' ஒன்றை உருவாக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக பிரியாத் பண்டு விக்ரம மேலும் குறிப்பிட்டுள்ளார். 

"நாங்கள் தற்போது துறைமுகத்திற்கு அருகிலுள்ள நிலத்தை துறைமுக அதிகாரசபையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து அங்கே சிறிய நகரம் ஒன்றை உருவாக்கவுள்ளோம்" என விக்ரம தெரிவித்துள்ளார். 

"இது தொடர்பில் சீன நிறுவனத்துடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் செப்ரெம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படும். புதிய துறைமுக நகரத்தைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் நிலத்தை மீள உரிமையாக்கும் நடவடிக்கையானது 39 மாதங்களுக்குள் நிறைவடைந்துவிடும் என நாம் நம்புகிறோம்" எனவும் விக்ரம மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இந்த புதிய துறைமுக நகரத்தில் 22 மாடிகளைக் கொண்ட தலைமைப் பணியகங்கள், விடுதிகள், குடியிருப்புக்கள் மற்றும் ஏனைய வசதி வாய்ப்புக்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சீன தொடர்பாடல் கட்டுமான நிறுவனத்திடம் 99 ஆண்டுக் குத்தகைக்கு 50 ஹெக்ரேயர் நிலங்கள் வழங்கப்படும் எனவும் சிறிலங்கா அரசின் கீழ் செயற்படும் துறைமுக அதிகார சபையின் தலைவர் விக்ரம சுட்டிக்காட்டியுள்ளார். 

ஹொங்கொங்கைத் தளமாகக் கொண்டியங்கும் சங்றி லா உள்ளடங்கலாக சில அனைத்துலக விடுதிகள் சிறிலங்காவில் தமது விடுதிகளைக் கட்டிவருகின்றன. சிறிலங்காவில் 37 ஆண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டுப் போரானது மே 2009ல் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறான அனைத்துலக விடுதிகள் சிறிலங்காவில் போருக்குப் பின்னான அபிவிருத்திப் பணிகளின் மூலம் தமக்கான வருவாய்களை ஈட்டிக்கொள்வதற்காக விடுதிகளை அமைத்து வருகின்றன. 

சிறிலங்காவில் இடம்பெறும் கட்டுமானப் பணிகளில் சீன நிறுவனங்கள் முதன்மையான பங்காளிகளாக உள்ளதுடன், இவை சிறிலங்காவில் ஏற்கனவே விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், தொடருந்துப் பாதைகள் போன்றவற்றை அமைத்துள்ளன. 

பிரதான கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் 500 மில்லியன் டொலர்கள் செலவில் மேற்கொள்ளப்படும் கொள்தாங்கி துறைமுகப் பணிகளின் முதற்கட்டம் அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகவும், இதன் மூலம் சிங்கப்பூர் மற்றும் துபாய் போன்றவற்றுடன் சிறிலங்காவானது துறைமுக சார் தொடர்புகளைப் பேணமுடியும் எனவும் விக்ரம தெரிவித்துள்ளார். 

புதிய கொழும்பு துறைமுகத்தை அடுத்த 35 ஆண்டுகளுக்கு சீன துறைமுக பொறியியலாளர் நிறுவனம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவுள்ளது. இதன் மூலம் இச்சீன நிறுவனமானது ஏற்கனவே கொழும்பு துறைமுகத்தில் செயற்படும் சிறிலங்கா அரச அதிகார சபை மற்றும் தனியாருக்குச் சொந்தமான கொள்தாங்கிகள் போன்றவற்றுடன் போட்டியிடும் எனவும் கூறப்படுகிறது. 

சீனாவானது சிறிலங்காவின் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் தனது 'முத்துமாலை' மூலோபாயத்தை விரிவுபடுத்துவதுடன், பிராந்திய வல்லரசான இந்தியாவைச் சூழவும் தனது புவிசார் செல்வாக்கைச் செலுத்துவதே அடிப்படை நோக்காகக் கொண்டுள்ளது என்கின்ற குற்றச்சாட்டை விக்ரம மறுத்துள்ளார். 

« சீனாவுடனான எமது நட்பானது எமது துறைமுகங்களை அபிவிருத்தி செய்து கொள்வதை அடிப்படையாகக் கொண்ட வர்த்தக சார் நலனாகும். நாங்கள் எமது துறைமுகங்களில் எந்தவொரு இராணுவத் தளங்களையோ அல்லது இராணுவ நலனுக்காக இவற்றைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்க மாட்டோம் » என விக்ரம தெரிவித்துள்ளார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20130725108735

அப்போ இலங்கை "கொழும்பு - சீனா கிறடிட் கம்பனியிடம்" (CCCC) 99 ஆண்டுகள் அடகு? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.