Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒருபடி மேல் சென்று தமிழர்களுக்கு உரிமை வழங்க வேண்டும்: சோமவன்ச

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் அரசியலமைப்பு சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான, இனவாத அரசியலமைப்பாகும். இதனை தற்போதைய அரசாங்கம் முழு உலகத்திற்கும் வெளிப்படுத்தியுள்ளது. உரிய உரிமைகள் உள்நாட்டில் வழங்கப்படாத நிலையில், தமிழர்கள் இந்தியாவிடமோ, ஏனைய சர்வதேச நாடுகளிடமோ செல்வதை குறைகூற முடியாது என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

 

இந்தியாவிற்கு உரிய பாடம் புகட்ட வேண்டுமாயின் இந்தியா வலியுறுத்துவதைவிட ஒருபடி மேல் சென்று தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கி தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அப்போது சர்ச்சைக்குரிய இலங்கை - இந்திய ஒப்பந்தமும் தானாக இரத்தாகிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

தேசிய பிரச்சனை தீர்வுக்கான அணுகுமுறை முன்மொழிவுகள் என்ற தலைப்பில் ஜே.வி.பி. வெளியிட்ட நூலின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று புதன்கிழமை இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.

 

இதற்கு தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே சோமவன்ச அமரசிங்க மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் பேசும்போது மறக்க முடியாத ஒரு விடயம்தான் கறுப்பு ஜூலை. இந்த கரும் புள்ளியை அளிக்க வரலாற்றில் வந்த எந்த அரசியல் தலைவரும் சாதாரண முயற்சியைக்கூட முன்னெடுக்கவில்லை. ஆனால்,இனப் பிரச்சனைக்கான தீர்வை பலமுறை வலியுறுத்திய போதிலும் அதற்கு உரிய வகையில் ஆளும் தரப்புகள் செவிசாய்க்கவில்லை. ஜே.வி.பி.யின் வலியுறுத்தல்களை புரிந்துகொள்ள 1987ஆம் ஆண்டுவரை அரசு காத்திருந்தது.

 

அதாவது இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படப்போகும் ஆபத்தை பலமுறை எடுத்துரைத்தும் பயனில்லாத நிலையே காணப்பட்டது. இறுதியாக உதவிக்காக அழைக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்திய இராணுவம் இலங்கையை ஆக்கிரமித்தது. இவ்வாறு நடைபெறும் இனப் பிரச்சினைக்கு உரிய தீர்வை 1971ஆம் ஆண்டிலேயே ஜே.வி.பி.யின் ஸ்தாபக தலைவர் ரோஹன விஜேவீர வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், அதனை புறம்தள்ளிவிட்டு நாட்டை கொடிய ஆயுதப் போராட்டத்திற்குள் ஆளும் வர்க்கம் தள்ளிவிட்டது.

 

தற்போது தமிழர்களுக்கு என்ன பிரச்சினை என்று சில சிங்கள இனவாதிகள் கேட்கின்றனர். அரசியலமைப்பு இனவாதமானது என்பதை முழு உலகமும்புரிந்து கொண்டுள்ளது. சிங்ளம் அரச மொழி, இரண்டாவது வரியில் தமிழும் அரச மொழி என அரசிலயமைப்பில் குறிப்பிட்டுள்ளமை ஊடாக இலங்கை இனவாத நாடு என்பதையே வெளிப்படுத்தியுள்ளது. உண்மையைக் கூறப்போனால் இன்று அரச மொழி சிங்களமல்ல. ஆங்கிலமே. ஏனெனில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து நடவடிக்கைகளுமே பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே நடைபெறுகின்றது.

 

நிலைமை இவ்வாறு இருக்க தற்போது திடீரென 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். அதற்கு ஆதரவாகவும் அரசிற்குள் இருந்து குரல் எழும்புகின்றது. எதிர்க்கட்சி அரசாங்கத்திற்குள்ளேயே உள்ளது. எவ்வாறாயினும் இனப்பிரச்சினை தீர்விற்கு ஜே.வி.பி.நிலையானதும் உறுதியானதுமான நிலைப்பாட்டினை கொண்டுள்ளது.

 

மாகாண சபை முறைமை முழுமையாக ஒழிக்கப்பட்டு அனைத்து இன மக்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். ஜே.வி.பி.ஆட்சியில் நடைபெறும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுவது போன்ற இனப் பிரச்சினைக்கான தீர்வு என்பது கொடுக்கல்- வாங்கல் அல்ல. உரிய தீர்வை வழங்காமையினாலேயே இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இலங்கை விவகாரங்களில் தலையிடுகின்றது.

அதுமட்டுமின்றி நம்பிக்கையானவர்களிடம் தஞ்சம் பெற்ற தமது உரிமைகளை வென்றெடுக்க இந்தியாவில் இலங்கைத் தமிழர்கள் சென்றதும் உள்நாட்டு சிங்களத் தலைவர்களின் அசமந்தப் போக்கினாலேயே. எனவே, தமிழ் மக்களை குறை கூறுவது முறையில்ல. ஆகவே, இலங்கை - இந்திய ஒப்பந்தம் உட்பட இந்தியாவின் தலையீடுகளையும் அழுத்தங்களையும் வென்றெடுக்க தேசிய பிரச்சினைக்கு விரைவில் தீர்வுக்கண்டு தமிழர்களுக்கு கூடிய உரிமைகளை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=6106

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.