Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடபகுதியில் தற்கொலைகள் அதிகரிப்பு…ஒரே தினத்தில் 3 தற்கொலைகள் (இணைப்பு)

Featured Replies

ஓடக்கரை பருத்தித்துறையைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்றுக் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மேற்படி முகவரியைச் சேர்ந்த மகேந்திரன் – கிரிதரன் (வயது-32) என்பவரே அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டு மந்திகை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

2ம் இணைப்பு

வவுனியா, கூமாங்குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் பத்மயோகா (வயது 17) என்ற மாணவி தனது வீட்டு கிணற்றில் குதித்து உயிரிழந்த நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.வவுனியா மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர், இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,கிணற்றுக்குள் குதித்தமையால் நீரில் முழ்கி இம்மரணம் இடம்பெற்றுள்ளதாகவும், இது ஒரு தற்கொலையெனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இம்மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.எனினும், குறித்த மாணவி தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3ம் இணைப்பு

இளம் ஆசிரியை தற்கொலை – வவுனியாவில் சம்பவம்..!

பன்னிரெண்டு வருட காதலன் திருமணம் செய்ய சீதனம் கோரியதால் இளம் விஞ்ஞான பட்டதாரியான ஆசிரியை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.கனகபுரம் கிளிநொச்சியினை சொந்த இடமாகக் கொண்டவரான செல்வி. சர்மினி கதிர்காமு (வயது 28) என்பவரே நேற்று தற்கொலை செய்த நிலையினில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் வவுனியா இரம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய ஆசிரியையென கூறப்படுகின்றது.முன்னதாக இவரை கடந்த 12 வருடமாக காதலித்து வந்த இளைஞன் திருமணம் செய்வதற்கு ஜம்பது இலட்சம் சீதனம் கோரியதாக கூறப்படுகின்றது.அதையடுத்து மனமுடைந்த யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.சம்பவத்தையடுத்து குறித்த இளைஞன் தலைமறைவாகியிருப்பதாகவும் பொலிஸார் தேடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 www.irruppu.com

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு சமூக அக்கறையற்ற புத்திசீவிகளின் இருப்பு.. பல மட்டங்களிலும் உள்ள சமூக அடக்குமுறைகள்.. காதல்.. ஆக்கிரமிப்பாளனின் இருப்பு.. இனத்துரோகிகளின் இருப்பு.. விலைவாசி உயர்வு.. கடன்.. வேலையற்ற பிரச்சனை..கல்வி அடக்குமுறைகள்.. சமூகக் கவனிப்பின்மை..முக்கிய பங்களிக்கின்றன.

 

தாயகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் ஒட்டுக்குழு தொலைக்காட்சி சேவை ஒன்றை அவதானித்த போது அதில் சினிமா சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி தொலைபேசி வாயிலாக இளைய சமூகத்தை அதனோடு கட்டி வைத்துள்ளனர். அதில் கலந்துரையாடும் பலரும் குறிப்பாகப் பெண்கள் கூறுவது.. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டால்.. வீட்டில் சும்மா இருக்கிறேன்" என்பது தான் பதிலாக உள்ளது.

 

இப்படி இளைஞர்களின் யுவதிகளின் மனித வலுவை வீணடிக்கும்.. ஒரு நிலை.. தாயத்தில் தொடர் கதையாக உள்ள நிலையில்.. அவர்களின் எண்ணங்களும் செயற்பாடுகளும் சமூக வளர்ச்சி குறித்து இன்றி சினிமா வளர்ச்சி... காதல் உணர்ச்சிப் பெருக்கு நோக்கி இருக்கும் நிலையில்.. காதல்.. கடன்.. கல்யாணம்.. தற்கொலை போன்ற வியாதிகள் பெருகவே செய்யும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.