Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதியின் அட்டகாசமும் றவுடித்தனமும்

Featured Replies

sumana_CI.jpg

 

தேசிய சாமாதானப் பேரவையினால் மட்டக்களப்பு விடுதி ஒன்றில்  இன்று (27.07.13) ஏற்பாடு செய்யப்பட்ட காணி நடைமுறைகள் தொடர்பான கருத்தரங்கில் மட்டக்களப்பு மங்கராமய விகாரதிபதி குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார்.

இக் கருத்தரங்கிற்குள் பிரவேசித்த மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர்  இந்த கருத்தரங்கு தவறான முறையில் நடைபெறுவதாகக் கூறி குழப்பத்தில் ஈடுபட்டார். 

கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் காணி பிரச்சினை மற்றும் அவற்றுக்கான தீர்வு தொடர்பிலான பரிந்துரைகள் குறித்து தெளிவுப்படுத்துவதற்கான செயலமர்வொன்று நடத்தப்பட்டது. 

தேசிய சமாதான பேரவையினாலேயே இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மூவினங்களையும் சேர்ந்தவர்கள் சிவில் சமூகத்தினர் மீள்குடியேறிய பகுதியிலுள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் பல்கலைகழக விரிவுரையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். 

திடீரென அந்த செயலமர்விற்குள்நுளைந்த மட்டக்களப்பு மங்களாராம விஹாராதிபதி அம்பிட்டிய சமரத்ன தேரர் தானும் இந்த செயலமர்வில் உரையாற்றவேண்டுமென கேட்டுள்ளார். 

அவருக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் அந்த செயலமர்வில் உரையாற்றுவதற்கு ஏற்பாட்டாளர்கள் இடமளித்துள்ளனர். 

அவரது உரை செயலமர்வின் தொனிப்பொருளுக்கு அப்பால் சென்று கொண்டிருக்கின்றமை குறித்து ஏற்பாட்டாளர்கள் விஹாராதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தபோதே அவர் ஏற்பாட்டார்களை தாக்கியதாகவும் இதனையடுத்தே அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவத்தை அடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் இருதரப்பினரிடமும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94523/language/ta-IN/article.aspx

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மொட்டை, நல்ல தண்ணிக்காரர் போல தெரிகிறார்.

ஒரு Mendis Special உள்ள தள்ளிப் போட்டுத்தான் உள்ளிட்டிருப்பார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.