Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரித்து தனி நிர்வாக அலகு அமைக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்

Featured Replies

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமத்தில் சிங்களவர்களினால் கால்நடைகளை சுட்டுக் கொல்லும் நடவடிக்கை மீண்டும் தலைதூக்கியுள்ளதாக பண்ணை உரிமையாளர்கள் மிகுந்த கவலையடைகின்றார்கள். மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று செலங்கல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மஞ்சள் ஆறு (தற்போது சிங்களப் பெயர் மங்களகம) பகுதியில் கால்நடைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மாடுகள் சுட்டுக் கொல்லப்படுகின்றன.

29072013%20002.jpg

கடந்த மே மாதம் 25ம் திகதி பூரணை தினமான சிங்களவர்களுக்கான வெசாக் தினத்தன்று தமிழர்க்குச் சொந்தமான மாடு ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டு சிங்களவர்களினால் அன்னதானம் வழங்கப்பட்டதாக பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நான்கு மாத கன்று ஒன்றின் தாய் மாடு இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மஞ்சள் ஆறு பகுதி தமிழர்களுக்கான கால்நடைக்காக ஒதுக்கப்பட்ட இடமாகும். தற்போது அந்த பகுதியில் அத்துமீறி குடியேறியதுடன், நாளாந்தம் தமிழர்களின் கால்நடைகளை கொன்று குவித்துவருவதாக தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான முறைப்பாடுகளை யாரிடம் சொல்வது, எங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதனால் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யவில்லை எனப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்னரும் பலமுறை மாடுகள் சுடப்பட்டமை தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆனால், ஆயுதப் படைகளில் உள்ளவர்கள் இரவு வேளையில் வந்து முறைப்பாடு செய்தவர்களை அச்சுறுத்துவதாக தெரிவிக்கின்றனர். இதனால் இம்முறை நாங்கள் முறைப்பாடு செய்யவில்லை எனப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்தார்கள்.

கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட இப்பகுதியில் அத்துமீறிச் சேனைப் பயிர்ச் செய்யும் அனைத்து சிங்களவர்களும் துப்பாக்கிகள் வைத்துள்ளனர். சட்டவிரோதமாகத் துப்பாக்கி வைத்திருப்பவர்களை கைது செய்யும் காவல்துறையினர், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் அத்துமீறி தமிழர்களுக்குச் சொந்தமான நிலப்பரப்பைக் கைப்பற்றிக் குடியேறியுள்ள ஒவ்வொரு சிங்களவர்களும் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி வைத்திருந்த போதிலும் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும் பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வெளிப்படையாகவே ஆயுதம் வைத்திருப்பது தெரிந்தும் எங்களை இனம் காட்டுமாறு கோருவது ஒரு ஏமாற்று நடவடிக்கையாகும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் சிங்களவர்களின் உறுப்பினர்களில் ஒருவர் காவல்துறை, இராணுவம், ஊர்காவல் படையைச் சேர்ந்தவர்களாக இருக்கும் போது, அவர்களின் உதவியினுடாக ஆயுதங்களைப் பெற்று இவ்வாறான குற்றச் செயல்களை மேற்கொண்டுவருகின்றனர்.

மாடுகளை சுட்டுக் கொன்றவர்களே உங்களின் மாடு நோய் காரணமாகத்தான் இறந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். தமிழர்கள் மாடு மேய்ப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் மாரி காலத்தில் வேளாண்மைச் செய்கையிலும், கோடை காலத்தில் பயிர்ச் செய்கையிலும் ஈடுபடுவதினால் கால்நடைகளை மேய்க்க முடியாத நிலையில் பண்ணை உரிமையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

இந்நிலையில், கால்நடைகளை அடைத்து வளர்க்குமாறு அத்துமீறி குடியேறியுள்ள சிங்களவர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக கொழும்பு அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர்கள், கொழும்பு அரசாங்கம் சார்ந்த மாகாண சபை உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டும் பண்ணை உரிமையாளர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முறைப்பாடு செய்தால், அவர்களை இனங் கண்டு ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் மிரட்டிவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு புறம் பெரும்பான்மையினர் தமிழர்களின் பூர்விக நிலங்களை கொழும்பு அரசாங்கத்தின் அரசியல் பின்புலத்தில் சட்டவிரோதமான முறையில் அபகரிக்கும் அதேசமயத்தில், மகிந்த அரசாங்கத்தின் பின்புலத்தில் இயங்கும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் அப்பாவி முஸ்லிம்களை உசுப்பேத்தி, இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

2007 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முன்னாள் அமைச்சரும், தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான அமீர் அலி தலைமையிலான குழுவினர், தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றார். 2007 ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வாறு இரு சமூகங்களுக்கும் இடையில் இது தொடர்பில் இப்பகுதியில் முறுகல் நிலையேற்படும் போது இராணுவத்தினர் தலையிட்டு தற்காலிகமாக நிறுத்திவிடுவார்கள்.

எனினும், முஸ்லிம்களினால் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டும் அத்தமீறிய குடியேற்றங்களை தடுப்பதற்கு இதுவரையில் காவல்துறையினர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. போர் இடம்பெற்ற காலத்திலும், தமிழர்களுக்குச் சொந்தமான காணிகளில் குடியேற்றங்களை மேற்கொண்டு, அவர்களுக்கென தனியான நிர்வாகப் பிரிவுகளை கொழும்பு அரசாங்கத்தின் பின்புலத்தில் அமைத்துக் கொண்டனர்.

தற்போது, மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேசத்திற்கும் மட்டக்களப்பு மாநகரசபைக்கும் சொந்தமான சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலப் பரப்பையுடைய எருமைத்தீவு பிரதேசத்தை காத்தான்குடி நகர சபையுடன் இணைத்து காத்தான்குடி மாநகரசபையை உருவாக்க காத்தான்குடியில் உள்ள அரசியல்வாதியருவர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய விவசாய நிலமான மேற்படி எருமைத்தீவு பிரதேசத்தை தமிழ் விவசாயிகளிடம் இருந்து பெருந்தொகை பணம் கொடுத்து வாங்கிவரும் முஸ்லிம்கள் இதுவரை சுமார் 150 ஏக்கர் காணிகளை தங்களுக்கு சொந்தமாக்கியுள்ளதுடன், தொடர்ந்தும் காணிகளை பணம் கொடுத்து வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில் காத்தான்குடி அரசியல்வாதி ஒருவர் முஸ்லிம் நாடுகளின் நிதியுதவியுடன் மேற்படி எருமைத் தீவுக்கான பாலத்தினை அமைத்து அதனை காத்தான்குடி நகரசபையுடன் இணைத்து காத்தான்குடி மாநகரசபையை உருவாக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இவரின் இந்த நடவடிக்கையானது இனமுரண்பாட்டை தூண்டும் நடவடிக்கை என்பதால் உடனடியாக இதனை நிறுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக இதுகுறித்து மட்டக்களப்பு சிவில் சமூகம் கவனம் செலுத்துவதுடன் இனமுரண்பாட்டை தோற்றுவிக்கும் இது

போன்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

- கிழக்கில் இருந்து  எழுவான்  

நன்றி: ஈழமுரசு

http://www.sankathi24.com/news/31889/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் பொது பல சேனாவுடன் கூட்டணி அமைக்கும் காலம் வந்துவிட்டது....

தமிழர்கள் பொது பல சேனாவுடன் கூட்டணி அமைக்கும் காலம் வந்துவிட்டது....

 

எதுக்கு? மாட்டைச் சுட்டுக் கொள்ளவோ?

 

மாட்டைச் சுட்டுக் கொல்லவோ?

  • கருத்துக்கள உறவுகள்

சீ நான் அவர்களை அப்பிடி சொல்ல மாட்டன்....:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.