Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் காந்தியை கொல்லவே நினைத்தேன் – விஜித ரோஹண விஜிதமுனி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விஜித ரோஹண விஜிதமுனியை நீங்கள் மறந்திருக்கலாம். இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்காக இலங்கை சென்ற ராஜீவ்காந்தியை தாக்கிய கடற்படை வீரர்.

அந்த தாக்குதலுக்குப் பின் இருவேறு விதமாய் அவர் நினைவூகூரப்பட்டார். ஒரு பக்கம் அவரை கைது செய்து சிறையிலடைத்தார்கள்.

ஆனால் தேசிய வெறியர்களால் ஒரு தேசிய நாயகராக சிங்கள மக்களிடம் மேன்மைப்படுத்தப்பட்டார். சிங்கள மக்களிடம் நிலவும் இந்திய வெறுப்பின் அடையாளமாக நிலை நிறுத்தப்படும் விஜிதா ரோஹண இன்று வரை ராஜீவ்காந்தியை தாக்கியதற்காக வருந்தவில்லை என்பதோடு இச்செயலுக்காக மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகிறார்.

தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு என்று இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்வதற்காக ராஜீவ் காந்தி 1987-ம் ஆண்டு இலங்கை சென்றிருந்தார். இந்த ஒப்பந்தத்தை சிங்களர்களோ, தமிழர்களோ, புலிகளோ இறுதி வரை ஏற்றுக் கொள்ளவில்லை.

Rajeev_Attacked-in-SL.jpg

சகல தரப்பையும் மிரட்டி அநீதியான முறையில் இந்த ஒப்பந்தம் கைச்சாதானது. இந்த ஒப்பந்தத்திற்காய் 1987 – ஜூலை 30-ம் தேதி அவருக்கு அளிக்கப்பட்ட கடற்படை அணிவகுப்பு மரியாதையின்போது துப்பாக்கியின் பின்புறத்தால் ராஜீவ் காந்தியை தாக்கினார் விஜிமுனே.

ஏற்கனவே பல முறை இதே கருத்தை கூறியிருந்தாலும் சம்பவித்து 26 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையிலும் விஜிதாவின் கருத்து இதுதான் ‘‘ ஒப்பந்தத்தில் இலங்கையை நிர்பந்தப்படுத்தி கையெழுத்திடுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க இத்தகைய தாக்குதலை மேற்கொண்டேன்.

இந்த செயலுக்காக நான் சந்தோஷப்படுகிறேன். தாக்குதலுக்குப் பிறகு நான் நிறைய சிரமங்களை அனுபவித்துவிட்டேன். ஆனாலும், இந்தச் செயலுக்காக நான் ஒருபோதும் வருத்தப்படவில்லை.

ராஜீவ்காந்தியை கொல்ல வேண்டும் என்பதுதான் என் நோக்கமாக இருந்தது ஏனென்றால் இலங்கை மிக மோசமாக சிதைவுற அவர் காரணமாக இருந்தார்.தான் இந்தியாவுக்கு எதிரானவன் அல்ல, ஆனால் அதே நேரம் இலங்கை மீது இந்தியா செல்வாக்கு செலுத்துவதை எதிர்ப்பதாகவும். இந்திய இலங்கை ஒப்பந்தம் முழுமையாக ரத்து செய்யவே தான் போராடி வருகிறேன்’’ என்கிற விஜிமுனே இந்திய இலங்கை ஒப்பந்த எதிர்ப்பியக்கத்தை தலைமையேற்று நடத்துகிறார்.

Tamil-Tigers-surrender-Ra-015.jpg

இதே 26 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர் தரப்பும் ஒப்பந்தத்தை எதிர்த்தது. ஆனால் இன்று இந்த ஒப்பந்தத்தின் சில ஷரத்துக்கள் மட்டுமே தமிழர்களுக்கு எஞ்சியிருக்கும் வாய்ப்புகள். ஆகவே ஒப்பந்தத்தை அமல் செய்யுங்கள் என்றெல்லாம் கோருகிறார்கள் தமிழர் தரப்பினர்.

 

http://tamil24news.com/news/archives/92301

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.