Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரச ஒடுக்கு முறையும் மக்கள் துயரமும்

Featured Replies

இருபத்தியொராம் நூற்றாண்டின் முதன்மை அடையாளமாக இனத்தேசியம் (ETHNIC NATIONALISM)ஏற்றுக்கொள்ளப் படுகின்றது. பெரும்பாலான உள்நாட்டுப் போர்கள் இன விடுதலைக்காகவே நடைபெறு கின்றன. பல்லின நாடுகளில் எண்ணிக்கை யில் கூடிய இனம் சிறுபான்மையினரை அடக்கி ஆள விளையும்போது விடுதலைப் போர் வெடிக்கின்றது. சிங்கள இனத்தவர் தம்மை 'மகா ஜாதிய' என்றும் தமிழரை 'சுளு ஜாதிய' என்றும் அழைக்கின்றனர். இதே துவேச மனப்பான்மை வேறுபல நாடுகளிலும் காணப்படுகிறது. ' வெள்ளை நிறவெறி' உடற் தோல் அளவு ஆழமானது. சிங்கள இனவெறி உடலை ஊடுருவி ஆன்மாவரை செல்கிறது', என்றார் முன்னாள் கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் சி.கதிரவேற்பிள்ளை. சிங்கள அரசியல் கட்சிகளுக்கிடை யில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை முன்னெடுக்கும் போட்டாபோட்டி நடக்கிறது. இதைச் சர்வதேச ஆய்வாளர்கள் கவனத்தில் எடுத்துள்ளனர். நியூயோர்க் பல்கலைக் கழகத் தைச் சேர்ந்த நீல் டெவொற்றா இப்போட்டி யைப் பகிரங்க ஏலவிற்பனைக்கு ஒப்பிடுகிறார். சிறிலங்காவின் பிரிவினைக் கோரிக்கைக்கு சிங்களக் கட்சிகள் தம்மிடையே நடத்தும் ஏலவிற்பனைக்கு நிகரான சூடான போட்டி தான் காரணம் என்கிறார் நீல் டெவொற்றா. (FROM ETHNIC OUTBIDDING TO ETHNIC

CONFLICT: THE INSTITUTIONAL BASIS FOR SRILANKA’S SEPARATIST WAR BY NEIL DEVOTTA, POLITICAL SCIENCE DEPARTMENT, HARTWICK COLLEGE, NEWYORK, 2005)

தமது வன்முறைகள் மூலம் தமிழர்களைப் பிரிந்து செல்லும்படி தூண்டும் சிங்கள ஆட்சியாளர்கள் பிரிவினையைத் தடுப்பதற்காக இராணுவ நடவடிக்கையையும்

நடத்துகிறார்கள் என்று அவர் கூறுகின்றார். சுதந்திரம்பெற்ற நாட்தொட்டு இன்றுவரையி லான இத்தீவின் வரலாறாகவும் இது அமைகிறது. பிரிவினைக்குத் தூபமிடும் நான்கு முக்கிய அம்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன - அரசியல் கட்டமைப்பு, தூர நோக்கற்ற அரசியல்வாதிகள், சிறுபான்மை

யினரின் போர்க்குணம், அவர்கள் வாழும் தனித்துவமான தரைப்பரப்பு ஆட்சியைப் பிடிப்பதற்காக அரசியல்வாதிகள் செய்யும் நிறைவேற்ற முடியாத மேடைப் பேச்சுக்கள் சிறுபான்மையினரை விழிப்படையைச் செய் கின்றன. இதன் காரணமாக அவர்கள் உரிமைப்போர் செய்யத் துணிகின்றனர். நாடு உருக்குலைந்து சீரழிவதற்குத் தமிழர்களின் சம்மதமின்றி உருவாக்கப்பட்டு அவர்கள் மீது

திணிக்கப்பட்ட 1972, 1978ஆம் ஆண்டுகளின் அரசியல் சாசனங்கள் காரணம் என்று உணரப்பட்டுள்ளது.

உருப்படியான சீர்திருத்தம் செய்யப்படாத காரணத்தால் பிரிவினைக் கோரிக்கை வலுப்பெறுகின்றது. ஒரு தலைப்போரில் மிகக் கூடுதலான பாதிப்படைபவர்கள் பொதுமக்களே.எதிரிப்படைகள் பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துகின்றனர். வெற்றிக்கான வேகமான குறுக்குவழி பொது மக்களை மிரட்டிப் பணியவைப்பதே என்று இராணுவம் நம்புகிறது. போரில் ஈடுபடாத சிவிலியன் மக்கள் என்று ஒருவரையும் ஒதுக்கிவிட முடியாது என்று விடுதலைப்போர் நடத்துவோர் நம்புகின்றனர். பார்வையாளர் களாக ஒருவரும் விலகி இருக்கமுடியாது. விடுதலைப்போர்

என்று வந்துவிட்டால் விரும்பியோ விரும்பாமலோ ஒவ்வொருவரும் தமது பங்களிப்பைச் செய்தே ஆகவேண்டும். புராதன காலந்தொட்டு போர்க்காலத்தில் பொதுமக்களின் துயரம் உச்சமடைகிறது. நாடு நகரத்தை முற்றுகை யிட்டு உணவு, நீர் போன்றவற்றை மக்கள் பெறுவதைத் தடுக்கும் நடைமுறை அன்றே தொடங்கிவிட்டன. இன்றைய பொருளாதாரத் தடையும், பயணத்தடையும் அதன் தொடர்ச்சி யாக நடைபெறுகின்றன. பொருளாதாரத் தடையால் இராணுவமோ அரசியல் தலை மையோ பாதிப்படைவதில்லை. பெருவிலை கொடுப்பவர்கள் பொதுமக்கள்தான். அமெரிக்காவும், பிரித்தானியாவும் ஐ.நா ஊடாக ஈராக் மீது முன்பு விதித்த பொருளாதாரத்தடை, மருந்து, பால்மா தடை என்பன காரணமாகப் பல்லாயிரம் குழந்தைகளும் சிறுவர்களும் உயிரிழந்தனர். எமது விடுதலைப்போர் தொடங்கிய பின் சிங்கள அரசு ஈழத்தமிழர்கள் மீது பொருளாதாரத் தடையையும் பிரயாணத் தடையையும் இறுக்கியுள்ளது. இன்னும் ஏதோ வொரு வகையில் இத்தடைகள் நீடிக்கின்றன.

(POLITICAL VIOLENCE)வன்முறை) என்ற சொற்தொடர் 1960கள் தொடக்கம் சர்வதேச அரங்கில் பாவிக்கப்படு

கிறது. உள்நாட்டில் அரசு க்கும் ஆயுதம் தரித்த விடுதலைப் போராளி களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் நடக்கும்போது நிகழும் வன்முறைகள் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன.தொடக்கத்தில் அரசியல் வன்முறை என்ற சொற்தொடர் அரசுக்கு எதிரான போராட்டம், அரசுத் தலைவர்களின் படுகொலை, அரச இயந்திரத்தைச் செயற்படாமல் தடுத்தல் போன்றவற்றைக் குறிப்பிட்டது. பின்பு அரசியல் வன்முறை என்பது அரசின் ஒடுக்குமுறைகள் தனது குடிமக்களுக்கு எதிரான படுகொலைத் தாக்குதல்கள், காணாமற்போகச் செய்தல், மர்மக் குழுக்கள் மூலமான படுகொலைகள் போன்றவற்றையும் உள்ளடக்கியது. இத்தொடரில் ''அரச பயங்கரவாதம்'' (STATE TERRORISM) என்ற சொற்கள் அரசு குடிமக்கள் மீது நடத்தும் எல்லாவகை வன்முறைகளையும் குறிப்பிட உதவுகின்றது. அதே சமயத்தில் விடுதலை இயக்கத்தின் தாக்குதல் நடவடிக்கைகள், தற்காப்பு நடவடிக்கையாக இருப்பினும் 'பயங்கரவாதம்'(TERRORISM)

எனப்படுகிறது.பயங்கரவாதம் என்றால் என்னவென்று சரிவர வரையறை செய்யப்படாத நிலையில் சில உலக நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனம் செய்திருப்ப தானது வேதனை அளிப்பதாயுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சகத்தின் முன்னாள் ஆலோசகரும் தற்போதைய ஐ.நா பணியாளருமான அம்றித்றோகான் பெரேரா தனது கலாநிதி பட்டத்திற்காக எழுதிய நூலில் (INTERNATIONAL TERRORISM

BY AMRITH ROHAN PERERA: VIKAS PUBLISHING HOUSE, NEW DELHI 1997) தமிழீழ விடுதலைப்புலிகளை கடுமை யாகச் சாடியுள்ளார். 27, ஜுன் 1997 புரொன்ட் லைன் சஞ்சிகையில் இந்த நூலை ஆய்வு செய்த ஏ.ஜீ.நூராணி பின்வருமாறு கூறுகின்றார்.''உலகின் எந்தவொரு நாடாகிலும் பயங்கரவாதம் பற்றிய நிலையான கொள்கையைக் ண்டிருக்கவில்லை. பயங்கரவாதம், மனித உரிமை பற்றியெல்லாம் பேசும் அமெரிக்கா தானும், தனது கூட்டாளிகளும் செய்யும் அத்து மீறல்களைக் கணக்கில் எடுப்பதில்லை'' பயங்கரவாதப் பிரச்சினை நெடிய வரலாற்றைக் கொண்டது எனினும் வசதிக்கேற்ப பயன்படும் சொற் பிரயோகமாகவே அது இன்றுவரை பயன்படுகிறது.

மக்கள் ஆதரவை இழந்த அல்லது ஆதரவைப்பெறாத ஆட்சியாளர்கள் தமது ஆட்சியை இராணுவ பலத்தின் மூலம் நடத்துகின்றனர். வடக்குக் கிழக்கில் நிலைகொண்டுள்ள சிங்கள இராணுவம் கொழும்பின் பிரதி நிதியாகவும் சிங்கள ஆதிக்கத்தின் நீட்சியாகவும் இடம்பெறுகின்றது. பூகோள மேலாதிக்கச் சிந்தனையைக்கொண்ட சக்திகள் ஆயுத தளபாட உதவி, இராணுவப் பயிற்சி, பொருளாதார ஒத்துழைப்பு என்பனவற்றை அதற்கு வழங்குகின்றன. இதனால் ஆக்கிரமிப்பு தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு ஆக்கிர மிப்பு இராணுவம் மக்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு இராணுவப் புலனாய்வு அமைப்பை நம்பியிருக்கிறது. மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் தேசவிரோத கும்பல்களை இனங்கண்டு தம்மோடு இணைத்

துக்கொள்வதில் இராணுவப் புலனாய்வுத்துறையினர் முனைப்புக் காட்டுகின்றனர். தென் ஆபிரிக்கா, குவத்தமாலா போன்ற நாடுகளில் மிகவும் கொடிய கொலைக்குழுக்களை (DEATH SQUADS) இராணுவம் பயன்படுத்தியதை நாம் நன்கு அறிவோம். இப்படியான குழுக்கள் 'கருணா குழு','ஷறாசீக் குழு' என்ற பெயர்களில் இராணுவ ஆதரவோடு தமிழீழத்தில் இயங்குகின்றன. ஈ.பி.டி.பி அமைப்பினரும் இராணுவத் துணைப்படையாகவும் மேற் கூறிய கொலைக் குழுவாகவும் செயற்படுகின்றனர். இவர்கள் செய்யும் அட்டூழியங்களால் பொதுமக்கள் படும் அவலம் கொஞ்ச நஞ்சமல்ல. கருணா, றாசீக் போன்ற பெயர்களைத் தாங்கியபடி இராணுவத்தினரே மறைமுகமாகச் செயற்படும் வாய்ப்பு நிறைய இருக்கிறது.

இக்குழுக்களும் சிங்கள இராணுவமும் ஒரு பொதுவேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன. இராணுவப் புலனாய்வு அமைப்பு மக்களைக் கண்காணிப்பது, மக்கள் சம்பந்தமான தகவல்களைச் சேகரிப்பது, தேவைப்படும் போது மக்களை நேரடியாகவோ தமது கொலைக்குழுக்கள் மூலமாகக் கொன்றொழிப்பது போன்ற மூன்று முக்கிய கருமங்களைச் செய்கின்றது. தகவல் சேகரிப்பு அதன் பிரதான இலக்காக இருக்கிறது. அதிலிருந்து மற்றவை விரிவடைகின்றன. ஆட்சிக்கு உறு துணையாக இருக்கும் புலனாய்வு அமைப்பு அதன் கண்ணும், காதுமாகவும், எதிர்ப்பை முறியடிக்கும் சக்தியாகவும் செயற்படுகிறது.தன்னிடமுள்ள வளங்கள் யாவற்றையும் ஒன்றுதிரட்டி இப்பணியில் அது ஈடுபடுகிறது. மக்கள் மத்தியில் கிளர்ச்சி, குழப்பம், எதிர்ப்பு மற்றும் மாற்று அபிப்பிராயம் தோன்றாமல் பார்த்துக்கொள்ளல், ஊடகத்துறையினர் மீது தாக்குதல் நடத்துவது மூலம் செய்தித் தணிக்கை அமுலாக்கம் செய்தல், ஆட்சி யாளர் விரும்பும் அபிப்பிராயங்களைக் கட்டி யெழுப்புதல் என்பன இராணுவப் புலனாய்வுத் துறையினரின் நடவடிக்கைகளாகும்.

இவை அனைத்தையும் இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள

தமிழீழத்தில் இன்று காணலாம். வெள்ளை நிறவெறி அரசின் காலத் தில் செயற்பட்ட கொலைக் குழுவின் தலைவன் இயூஜீன் திகொக் எழுதிய சுயசரிதையில் கொலைக்குழுக்களின் நடவடிக்கைகள் விவரிக்கப்பட்டுள்ளன.(A LONG NIGHT'S DAMAGE, AUTOBIOGRAPHY: EUGENE DE KOCK. 1998)இவர் தென்னா பிரிக்கப் பொலிஸ்படையில் கேணல்தர அதிகாரியாகப் பணியாற்றியவர். கறுப்பின அரசு நிறுவப்பட்டபின் (1994) வர் மீது 107 கொலை, சித்திரவதை மற்றும் கொள்ளைக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.இவர் தலைமை வகித்த கொலைக்குழுவின் பெயரான விளாக்பிளாஸ் (VLAKPLAS)

அப்போது வெளிவந்தது. வெள்ளை ஜனாதிபதிகளான பி.டபிள்யூ.போத்தா (P.W. BOTHA),தீ கிளேர்க் (DE KLERK) ஆகியோருக்கு விளாக்பிளாசின் நடவடிக்கைகள் பற்றி நன்கு தெரியும் என்று சொக் தனது நூலில் தெரிவித் துள்ளார். தனது அணியினர் லிசொத்தோ, சுவாசிலாந்து ஆகிய பகுதி களுக்குள் ஊடுருவி அங்கு தலைமறைவாக வாழ்ந்த ஏ.என்.சி தலைவர்களையும் ஆதரவாளர்களையும் கொன்றதையும் நூல் தெரிவிக்கிறது.மண் போன்றவற்றை அள்ளிப்போட உதவும் ஷசவள்தான் (SHOVEL) தன்னுடைய

கொலைக்கருவி, உடலில் இருந்து தலையைப் பிரிப்பதற்கு அதைப் பயன்படுத்தியதாக இயூஜீன் தீ கொக்கின் நூல் கூறுகிறது.

விசாரணை நடத்திய நீதிமன்றம் இவருக்கு 262வருட சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. முதலாம் உலகப்போர் முடிந்தபின் ஜேர்மன் தென்மேற்கு ஆபிரிக்கா, அதாவது நபீபியா தென் ஆபிரிக்க நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் விடப்பட்டது. தமது சுதந்திரத்திற்காக நபீபிய மக்கள் சாம் நுஜோமா தலைமையிலான சுவப்போ (SOUTH WEST AFRICA PEOPLES ORGANIZATION - SWAPO)

  • தொடங்கியவர்

அமைப்பின் கீழ் இருபத்திநான்கு வருடம் போராடினர். 21 மார்ச்சு 1990 இல் நபீபியா சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த மக்கள்மீது தென்னாபிரிக்கப் படைகள் சொல் லொணாத் தாக்குதல்களை மேற்கொண்ட னர். இவ்வருடம் (2006) முதல் மாதத்தின் முற் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொது மக்களின் புதைகுழிகள் வட நபீபியாவில் கண்டுபிடிக்கப்பட்டன. ஓரிடத்தில் பல சடலங்கள் படுகொலை செய்யப்பட்டபின் புதைக்கப்பட்ட இடம் 'மாஸ்கிறேவ்ஸ்' அதாவது கூட்டுப் புதைகுழிகள் என்று அழைக்கப்படுகின்றன. கூட்டுப் புதை குழிகள் இராணுவ ஆட்சியின் பரிசாகப் பார்க்கப்படுகின்றன. செம்மணிப் புதைகுழி, புன்னாலைக்கட்டுவன் மகாவித்தியாலயப் புதைகுழி, யாழ்.துரையப்பா விளையாட்டரங்குப் புதைகுழி என்பன பிரபலமானவை. தென் தமிழீழத்திலும் எண்ணற்ற புதைகுழிகள் உண்டு. சத்துருக்கொண்டான் பனிச்சையடியில் 187 தமிழர்களின் புதைகுழி இருக்கிறது. படைமுகாம்கள் வடகிழக்கில் எங்கிருந்தாலும் அவற்றிற்கு அருகில் புதைகுழிகளும் எலும் புக் கூடுகளும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. அரசுகள் தமது குடிமக்களுக்கு எதிராகச் செய்கின்ற கொடூரங்கள், அநீதிகள் என்பனவற்றிற்கு எதிராக அனைத்துலக அபய ஸ்தாபனம் 1998இல் வெளியிட்ட அறிக்கையில் சிறிலங்கா இடம்பெறுகிறது. இந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்ட குற்றங்கள் இன்றும் நீடிக்கின்றன. சிறுபான்மைத் தமிழர் களுக்கு எதிரான அராஜகம், சட்டத்திற்குப் புறம்பான கைதுகள், விசாரணையின்றிய படுகொலைகள், இராணுவத்தினரின் பாலியல் வல்லுறவுகள் போன்றவை பட்டியலில் அடங்குகின்றன. சித்திரவதைகள், படு கொலைகள் கைதுசெய்தபின் காணாமற் போதல் போன்ற மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் 141 நாடுகளில் சிறிலங்காவும் ஒன்று என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 1998இல் வெளிவந்த மேற்கூறிய அறிக்கை 2006ஆம் ஆண்டிற்கும் பொருத்தமாகவுள்ளது. ஈழத் தமிழர்களின் ன்ப வரலாறு தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஜேர்மனியில் அடொல்ப் ஹிற்லரின் சர்வாதிகார ஆட்சி நிலவிய காலத்தில் நடுநிசிக் கைதுகளும் படுகொலைகளும் வீட்டுக் கதவைத் தட்டுதல்(KNOCK ON THE DOOR) என்று பூடகமாக அழைக்கப்பட்டன. இந்த நான்கு ஆங்கிலச் சொற்களும் இன்று அரச பயங்கரவாதத்தின் குறியீடாகக் கருதப்படு கின்றன. இராணுவமும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களும் பொதுமக்களின் வீட்டுக்கதவை தட்டித் திறக்கச் செய்தபின் உள்நுழைவார்கள். அடுத்ததாக வீட்டில் இருப்பவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள் அல்லது அங்கேயே கொல்லப்படுவார்கள். இது இ;ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வழமை யாகிவிட்டது. அதேபோல் தெருக்களில் செல்வோர் பட்டப்பகலில் 'இலக்கத் தகடற்ற' வெள்ளை வானில்(WHITE MOTOR - VANS WITHOUT NUMBER PLATES) கடத்திச்

செல்லப்படுகிறார்கள். அதன்பின் கடத்தப் பட்டவர்கள் காணாமற் போனவர்களாகி விடுகிறார்கள். தமிழர்கள் மத்தியில் வெள்ளை வான் என்ற சொற்களைக் கேட்டதும் பயமும் பீதியும் ஏற்படுவது இயற்கை.ஆட்கடத்தலுக்காக இலக்கத் தகடற்ற வெள்ளை வானைப் பயன்படுத்தும் நடைமுறையை 1992 - 1993 காலப்பகுதியில் மேஜர் ஜெனரல் ஜானகபெரேரா மட்டக்களப்பில் பணியாற்றும்போது ஆரம்பித்துவைத்தார். இப்போது இது சிறிலங்கா இராணுவத்தின் பாரம்பரிய நடைமுறையாக மாறிவிட்டது. தமிழர் படுகொலையில் சாதனை படைக்கும் சிங்கள இராணுவத் தளபதிகளுக்கு வெளிநாட்டுத் தூதுவர் பதவி வழங்கும் பாரம் பரியத்தை சிறிலங்கா அரசு கடைப்பிடிக்கிறது. செம்மணிப் படுகொலைகளோடு நேரடித் தொடர்புடைய மூன்று தளபதி களான ஜானக பெரேரா, சிறிலால் விஜயசூரிய, றொகான் தளுவத்த கியோர்முறையே இந்தோனேசியா, பாகிஸ்தான்,பிறேசில் ஆகிய நாடுகளில் றிலங்காத் தூதுவர்களாக இப்போது பணியாற்றுகின்றனர்.

சிறிலங்காவின் வரலாறு காணாத தமிழர்களுக்கு எதிரான படுகொலைத் தாக்குதல்கள் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அரசினால் திட்டமிட்டு 1983ஆம் ஆண்டில் நடாத்தப் பட்டது. அவை ஜுலை மாதத்தில் நடை பெற்ற காரணத்தால் தமிழர்கள் அந்த மாதத்தை கரிஜுலை என்று

குறிப்பிடுவர். தமிழர்களுக்கும் அவர்கள் தம் டுதலைப்போருக்கும் எதிர்நிலை எடுக்கும் கூல் குடும்பத்தைச் சேர்ந்த இராஜன் கூல் 1983 ஜுலைச் சம்பவங்கள் பற்றியதொரு ஆய்வுநூல் எழுதியுள்ளார். (SRILANKA, ARROGANCE OF POWER BY RAJANHOOLE)

தமிழர்களுக்கு எதிரான படுகொலைத் தாக்கு தல்களுக்குத் தலைமை தாங்கிய யூ.என்.பி. பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல் 2001ஆம் ஆண்டு பிரசுரமான இந்நூலில் தரப்பட்டுள்ளது. பட்டியலில் இப் போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவின் பெயர் இடம் பிடித்துள்ளது. மனித உரிமை அமைப்பான மார்கா அமைப்பின் தலைவர் கொட்பிறே குணத்திலக்கா பற்றியும் இதில் குறிப்புக்கள் காணப்படுகின்றன. 'அரசு சார்பாக இயங்குவதிலும் சம்பவங்களுக்கு 'வெள்ளை வர்ணம்' பூசுவதிலும் மார்காத் தலைவர் ஈடுபடுபவர்' என்பது நூலாசிரியரின் தீர்ப்பு.பிந்தினுவேவாவில் டுப்புக்காவலில் வைக்கப்பட்ட 25 தமிழ் இளைஞர்கள் சிங்கள

ஆயுததாரிகளால் பொலிஸ்படையின் உதவி யோடு ஒக்ரோபர் 25, 2000ஆம் நாள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கொட்பிறே குணத்திலக்கா மூடிமறைக்க உதவினார் என்பதை நூலாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க ஆதரவோடு இராணுவ ஆட்சி நடைபெற்ற தென் அமெரிக்காவின் குவத்தமாலாவில் 1954 தொடக்கம் கொந்

தளிப்பு நிலை காணப்படுகிறது. 11மில்லியன் மக்கள் தொகையில் 60 வீதமானோர் சுதேசி களான மாயா இந்தியர்கள் அமெரிக்காவின் வாழைப்பழத்தோட்டம் என்றும் வர்ணிக்கப்பட்ட இந்த நாட்டில் சுதேசிகளின் உரிமை அடியோடு மறுக்கப்பட்டது. இராணுவ ஜெனரல்கள் அமெரிக்காவின் பாரிய பெருந்தோட்ட நிறுவனங்களோடு இணைந்து ஆட்சியைத் தமது கைகளில் வைத்திருந்தனர்.

சிலகாலம் சிவில் நிர்வாகம் நடைபெற்றபோது ரைமறைவில் இராணுவம் செயற்பட்டது. 1960தொடக்கம் 1996வரை யிலான 36வருடகாலம் உள்நாட்டுப் போர் நடைபெற்றபோது பெருமளவு நிதி மற்றும் இராணுவ உதவிகளை அமெரிக்கா குவத்தமாலா ஆட்சியாளர்களுக்கு வழங்கியது. தென் அமெரிக்காவின் மிக நீண்டகாலம் நீடித்த இந்த உள்நாட்டுப்போரில் 150,000 சிவிலியன்கள் கொல்லப்பட்டனர். ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் ஏதிலிகளாகினர். கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுக்கும் இடையில் அமைதிப் பேச்சுக்களை 1994இல் ஐ.நா தொடங்கியது.ஆனால் போர் தொடர்ந்தது. டிசெம்பர் 29, 1996இல் ஒரு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டாலும் இன்றுவரை உண்மையான அமைதி ஏற்படவேயில்லை. தென் அமெரிக்க விவகாரங்களில் கொலைக்குழுக்களை முதன் முறையாகப் பயன்படுத்திய வரலாறு குவத்தமாலா ஆட்சியாளருக்கு உண்டு. இதை கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கை (COUNTER - INSURGENCY) என்று ஆய்வாளர்கள் கூறுவர்.

(THE BATTLE FOR GUATEMALA: REBELS, DEATH SQUADS AND U.S.POWER BY SUSANNE JONAS. BOULDER, COLO, USA 1991)

பேச்சுவார்த்தையில் ஈடுபடும் அரசு அதை இரகசியமாகக் குழப்பும் தந்திரோபாயத்திற்கு உதாரணமாகத் தென் ஆபிரிக்காவில் நடந்தவற்றைக் குறிப்பிடலாம்.பெப்பிரவரி 1990இல் நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்பட்ட பின் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான 40வருட தடையும் நீக்கப்பட்டது. அதன்பின்தீ கிளேர்க் தலைமையிலான வெள்ளை அரசுக்கும் கறுப்பினத் தலைவர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. ஜனாதிபதி தீ கிளேர்க் இழுத்தடிப்பு உபாயத்தைக் கடைப்பிடித்ததோடு ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்கள் மீதான படுகொலைத் தாக்குதல்களுக்கும் மறைமுக அனுமதி வழங்கினார். இன்காதா சுதந்திரக் கட்சியினர் அவருடைய ழ்ச்சி வலையில் வீழ்ந்தனர். ஒரு மில்லியன் றான்ற் பணம் இக்கட்சிக்கு அரசினால் வழங்கப்பட்டது.பாரம்பரிய ஆயுதங்களை பகிரங்கமாக எடுத்துச்செல்லும் உரிமையும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஜுலை 1990இல் தாக்குதல் கள் ஆரம்பமாகின. வெள்ளைநிறப் பொலிசார் தாக்குதல் அணிகளுக்குப் பாதுகாப்பு வழங்கினர். இதுபற்றி பொலிஸ் ஆணையருக்கு முறைப்பாடு செய்யப்பட்டபோது அவர்யாதொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. நவம்பர் 1990இல் அதே மாதிரியானதொரு இன்றுமோர் தாக்குதல் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்களின் குடியிருப்புக்கள் மீது நடத்தப்பட்டது. இம்முறையும் நிராயுத

பாணிகளான பல அப்பாவிகளும், பெண்களும் சிறுவர்களும் கொல்லப்பட்டனர்.

பேச்சுவார்த்தைகள் இழுபறிப்பட்டுக் கொண்டிருந்தபோது பல நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்கள் நடைபெற்றன. பேச்சுக்கள் முறியும் கட்டத்தை நெருங்கியது. தாக்குதலின் பின்னணியில் அரசு செயற்படுவதாக நெல்சன் மண்டேலா ஜனாதிபதி தீ கிளேர்கமீது குற்றஞ் சுமத்தினார். அத்தோடு பாதுகாப்பு அமைச்சர், சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பான அமைச்சர் ஆகியோரைப் பதவிநீக்கம் செய்யும் படி அவர் கேட்டார். தாக்குதல்களை வழி நடத்தும் இரகசியக் குழுக்களைக் கலைக்கும் படியும் மண்டேலா கேட்டார்.அரசு அசையவில்லை. ஜுன் 17, 1992இல் மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை இன்காதாக்கள் அரசின் பாதுகாப்போடு நடத்தினர். ஒரே வாரத்தில் நடத்தப்பட்ட நான்காவது படுகொலைத் தாக்குதலாக அது அமைந்தது. பொலிசார் நடவடிக்கை எடுக்க மறுத்தனர். பேசுவதில் பயனில்லை என்பதை மண்டேலா உணர்ந்தார். 'THERE WAS NO POINT INTALKING'என்று அவர் தனது சுயசரிதையில் எழுதியுள்ளார்.

(LONG WALK TO FREEDOM: NELSON MANDELA: LITTLE BROWN & CO NEW YORK, LONDON 1994/1995) பேச்சு வார்த்தை களில் பங்குபற்றுவதை நிறுத்திக்கொள்வதாக ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அரசுக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்தது. ஆகஸ்து 3,4,1992 தென்ஆபிரிக்க வரலாற்றின் மிகப் பெரிய வேலைநிறுத்தம் நடைபெற்றது.4 மில்லியன் கறுப்பினத்தவர்கள் இதில் பங்கு பற்றினர்.அரச இயந்திரம் ஸ்தம்பிதம் அடைந்தது.அதற்குப்பின் படிப்படியாக வெள்ளை நிறவெறி அரசு தனது நாசகார வேலைகளை நிறுத்தியது. ஆபிரிக்க தேசிய காங்கிரசுக்கும் இன்காதா சுதந்திரக்கட்சிக்கும் இடையில் ஒரு உள்நாட்டுப் போரைத் தொடக்கிவிடுவதுமூலம் கறுப்பினத்தவர்களின் உரிமைகளை வழங்காமல் வெள்ளைநிற அரசைத் தொடரலாம் என்ற திட்டம் நிறைவேறவில்லை. 1994 இல் கறுப்பினத்தவர் ஆட்சி மண்டேலா தலைமையில் உதயமாகியது. கிட்டத்தட்ட மேற்கூறியவற்றை ஒத்தநிகழ்ச்சிகள் மைதிப்பேச்சுக்கள் தொடங்கிய 2002இல் இருந்து சிறிலங்காவில் நடைபெறுகின்றன. நிழல்யுத்தமாக ஆரம்பித்தது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நவம்பர் 2005இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலோடு தமிழ்ப் பொதுமக்கள் உயிரிழப்பு பன்மடங்காகியுள்ளது. ஆட்கடத்தல், காணாமற்போதல், வீடு புகுந்து சுட்டுக்கொல்லுதல் போன்றவையும் பாலியல் வல்லுறவுகளும் இணைந்து தமிழர் வாழ்வை நரகமாக்கியுள்ளது. இராணுவ ட்சி மீண்டும் யாழ்.குடாவில் தொடங்கியுள்ளது.

இராணுவத்திற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் என்று அரச அதிபர் கிராமசேவையாளர்களுக்கு விடுத்த சுற்று நிருபம் இதற்குச் சாட்சியாகிறது. யாழ்.செயலகம் இராணுவத்தின் கீழ் இயங்குவதை மறுப்பதற்கில்லை. தமிழீழத்தில் நிலைகொண்டுள்ள சிங்கள இராணுவத்தினரும் அவர்களுடன் இணைந்து செயற்படும் தமிழ் ஒட்டுக்குழுக்களும் இப்போது தமது முகங்களைக் கறுப்புத் துணியால் சுற்றிக் கட்டி மறைத்துள்ளனர். ஆகஸ்து 30,1999இல் கிழக்கு திமோரில் நடந்த கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் 78.5வீதத்தினர் சுதந்திரத்திற்காக வாக்களித்தனர். அதன்பின் இந்தோனேசியப் படைகள் ஏவிய கொலைக்குழுக்கள் கிழக்குத் தீமோரில் வெறியாட்டம் ஆடிப் பெரும் உயிரிழப்புக்களையும் சொத்தழிவுகளையும் ஏற்படுத்தினர். இக்குழுக்களைச் சேர்ந்த அனைவரும் தமது முகத்தைக்கறுப்புத் துணியால் டியிருந்தனர்.

உலகில் இன்று முனைப்புப் பெற்றுள்ள தேசிய இனங்களின் பிரச்சினையில் சிறிலங்கா விவகாரம் முதலிடம் பிடிக்கிறது.

சிறிலங்கா அரசின் நிலைப்பாடு இராணுவத் தீர்வாக இருக்கிறது. ஆனால் அரசியல்தீர்வை நாடும் போக்கை இது வெளிக்காட்டுகிறது. சர்வதேச சமுதாயம் இராணுவத்தீர்வை ஏற்க மாட்டாது என்பதே இப்போக்கின் காரணம். கூர்ந்து நோக்கும்போது அரசின் உள்நோக்கம் தெளிவாகத் தெரிகிறது.எதுவரினும் பாதிப்புக்களைச் சுமப்பவர்கள் அப்பாவிப் பொதுமக்கள் மாத்திரமே.

http://www.viduthalaipulikal.com/file/docs...6/02/128-09.pdf

  • தொடங்கியவர்

''உலகின் எல்லா விடுதலைப் போராட்டங்களிலும் ஒடுக்கு முறையின் நெருப்பில் குளிப்பது பொது சனங்களே''

- தமிழ் ஈழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள்-.

''உலகின் எல்லா விடுதலைப் போராட்டங்களிலும் ஒடுக்கு முறையின் நெருப்பில் குளிப்பது பொது சனங்களே''

- தமிழ் ஈழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள்-.

அடக்கு முறைக்கு உட்படாத மக்கள் கிளர்ந்து எழுந்ததும் இல்லை....

புலிகள் ஒண்றும் வானத்தில் இருந்து வரவில்லை மக்களில் இருந்து உருவானவர்கள்தான் அத்தனை துன்பங்கள் அனுபவித்த மக்களின் குரல்கள் செயல்கள் ஆனதன் வெளிப்பாடுதான் போராட்டம்.....! போராட்ட வடிவத்துக்கு போர்த்தான் தமிழீழ விடுதலைப்புலிகள்... அந்த போராட்டத்தில் இருந்து விலகும் போது அவர் தனிமனிதனாயோ இல்லை பொது சனமாக மாறி விடுகிண்றார்கள்....

''உலகின் எல்லா விடுதலைப் போராட்டங்களிலும் ஒடுக்கு முறையின் நெருப்பில் குளிப்பது பொது சனங்களே''

::::சொன்னவர் தலைவர் பிரபாகரன்::::

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த நெருப்பிற்கு எதிரிக்கு எண்ணை எடுத்துக்கொடுப்பது சில துரோகிகளே, அதன் மூலம் குளிர்காய்வதும் அப்புல்லுருவிகளே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கு யாழ் களத்தில யாராவது உதாரணமா இருக்கினமோ. இருந்தா மெல்லமா சொல்லுங்கோ.

:lol::):D:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.