Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தம்பி சீமான், .வைகோ அண்ணா . நெடுமாறன் ஐயா உங்களிடம் ஒரு வேண்டுகோள் .

Featured Replies

945648_519289454774029_653258349_n.jpg
தம்பி சீமான், .வைகோ அண்ணா . நெடுமாறன் ஐயா உங்களிடம் ஒரு வேண்டுகோள் . 

சாதி அற்ற ஒரு தமிழகத்தை கட்டி எழுப்புங்கள் எந்த சாதி கட்சியுடனும் கூட்டணி வைக்காதீர்கள். கொள்கை வேறு அரசியல் தேர்தல் கூட்டு வேறு என்று இதுவரை செய்த தவறுகளை இனி தமிழன் செய்யது இருக்கவேண்டும் தூய தமிழகத்தை உருவாக்குங்கள் 

மதுக்கடைகளை இழுத்து மூடுங்கள் . நல்ல ஒழுக்கம் கொண்ட வள்ளுவன் சமுதாய நெறிகளை பலபடுத்துங்கள் . தமிழகம் தமிழனுக்கான பாரம்பரியங்களை கட்டிக்காத்து உலகத்தின் ஒட்டுமொத்த தமிழனின் சரணாளையமாக அவன் நிம்மதியான வாழ்விடம் என்பதை உறுதி படுத்துங்கள். 

தமிழகம் ஈழம் இவ்விரண்டு தாய் நிலமும் அதன் விரிந்த ஆகாயமும் கடலும் உலக தமிழன் தமிழிச்சி ஒவ்வொருவரின் பூர்விக உரிமை என்பதை யாரும் மறுபதற்கு இல்லை . இவ்விரு தாய் மடி நிலங்களுக்கும் இன்று தமிழன் கையில் இல்லை . 

ஆனாலும் தமிழகம் ஒன்று மட்டும் தமிழனுக்கு ஓரளவு ஆறுதல் தரும் தாய்வீடாக இருக்கிறது. இருப்பினும் முழுமையான சுத்தந்திரத்தை தாயம் நீங்கி இருக்கும் என்போன்ற தமிழரால் உலகில் எங்கும் அனுபவிக்க முடிவதில்லை , தாயகம் வந்து கூட முழுமையாக அனுபவிக்க முடிவதில்லை . அதன் வேதனை எங்கள் போன்ற ஏதிலிகளுக்கே தெரியும். 

தமிழன் எங்கிருந்து எபொழுது தமிழகம் வந்தாலும் அவனை அவளை அவர் வாரிசுகளை வா என்று தமிழகம் வரவேற்று குடியமர்த்தி இந்தமண்ணில் அவன் பாட்டியும் பாட்டனும் அவர்களுக்காக விட்டுச்சென்ற அடையாளங்களை கலை பண்பாடுகளை , வீர விளையாட்டுக்களை , சடங்குகளை , சம்பிராதாய முறைகளை இன்னும் தமிழனாக அவர்கள் உளமார மகிழ்ந்து கொண்டாட விழாக்களை தனது உறவுகளுடன் தரிசிக்க மகிழ அவருக்கும் தமிழகம் உரியதாக மாறவேண்டும் வேண்டும். 

அகதி என்று வந்த தமிழனை அதிசிறப்பு முகாமில் இடுவதும் அங்கு போக இங்கு செல்ல அனுமதி இல்லை என்று வருத்துவதும் முறை அன்று . இங்கு இந்தநேரத்தில் வரவேண்டும் சமூகம் கொடுக்க வேண்டும் இரண்டு நாட்களுக்குமேல் எங்கும் தங்க கூடாது என்றெலாம் கெடுபிடிகளை தமிழன் மீது அழுத்தி அவனை துன்பத்தில் ஆழ்த்துவது மிக கொடுமை. அவனை அகதி என்று சொல்லும் நிலை மாறவேண்டும் . வெறும் 15 மைல் கடலுக்கு அப்பால் உள்ள தாய் நிலத்து தமிழன் இந்த மண்ணின் உரிமைகாரனும் கூட . அந்நியன் வந்து எம்மை இரண்டு தாயகம் ஆக பிரித்தான் , அங்கிருந்து ஒருதாய் ஆடை க்கலாம் தேடி ஓடிவந்தாள் அகதி . கைதி என்று அவளை சிறையில் அடைப்பது என்ன நியாயம் . . எங்கிருந்தோ பல் ஆயிரம் மையில் தாண்டி வந்தவருக்கெல்லாம் உல்லாசஇருப்பிடம் தொழில் செய்யும் உரிமை. என் தாய் உறவு எங்கள் இனம் இங்கு அகதியாக சீரழியும் . இந்தநிலை மாறவேண்டும் 

தம்பி சீமானே உன் வீச்சுத்தான் எம்மை எழ வைகின்றது. நாம் தமிழரின் அன்பு உறவுகளே உங்களிடமே நாம் உரிமையுடன் உறுதியாக . உலகத்தமிழர் சார்பாக உங்களுக்கு ஒரு விண்ணப்பம் வைக்கின்றோம் . உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒரு விடயத்தை சேருங்கள் .

உலகில் எங்கிருந்து தமிழர் என்று எவர் தமிழகம் வந்தாலும் அவரை தாயகம் வாருங்கள் என்று இன்முகத்துடன் வரவேற்று அவர் வாழ வழி செய்து வதிவிட உரிமை வழங்கி பின் பிரஜா உரிமை கொடுப்போம். தாயகம் மீண்டவர்களை இங்கிருக்கும் தமிழர் போல வாழும் ஒழுங்குகள் செய்வோம் என்று அறிவிக்கவேண்டும் 

உலக தமிழன் சார்பாக , ஏகாம்பரம் மணிவண்ணன் ஆகிய நான் இதை முன் மொழிகின்றேன் . உறவுகளே இதை பகிர்ந்து அமோதிக்கும்படி கேட் டுகொள்கின்றேன் . 

உங்கள் அன்புடன் 

மணிவண்ணன்

நன்றி முகனூல் 

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நோக்கம்தான்.. ஆனால் செயற்படுத்துவது கடினமானது.. வெளியுறவுத்துறையைக் கட்டுப்படுத்துவது மத்திய அரசு.. இதில் தமிழர்கள் என்ன செய்துவிடமுடியும்? ஆனால் மத்தியில் செல்வாக்கு இருந்தால் சிறப்பு ஆணை எதையாவது போடவைத்து செயற்படுத்தலாம்.. கனிமொழியிடம்தான் கேட்டுப் பார்க்க வேண்டும்.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.