Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாட்டர் ஷெட் இராணுவ நடவடிக்கையும் பின்னணியும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாட்டர் ஷெட் இராணுவ நடவடிக்கையும் பின்னணியும்

கே.பி. அறிவன்-

"எல்லா சண்டைகளும் நிலத்திற்காக பிடிக்கும் சண்டைகளாகவே இருக்கின்றன. இந்த சிங்கள குடியேற்றங்களான யான் ஓயா, மல்வத்து ஓயா, மதுரு ஓயா ஆகியன நிலத்தினை பிடிப்பதற்காகவே பொலநறுவை மாவட்டத்தில் 45,000 குடும்பங்களை குடியேற்றியுள்ளோம். அதேபோல் யான் ஓயாவிலும் குடியேற்றியுள்ளோம். மூன்றாவதாக மல்வத்து ஓயவில் குடியேற்றம் செய்து கொண்டிருக்கின்றோம். இது ஈழத்தினை எதிர்ப்பதற்காக அந்தத் தாயக கோட்பாட்டிற்கு எதிராக செய்கின்றோம். யான் ஓயாவில் சிங்கள மக்களை குடியேற்றுகின்றோம். அத்துடன் மேலும் 50000 மக்களை குடியேற்றுவதன் மூலம் சிங்கள மக்களின் சனத்தொகையினை அதிகரித்து திருகோணமலையினை தமிழர்களிடம் இருந்து காப்பாற்றமுடியும்" - இது 1990 ஆம் ஆண்டு மகாவலி அமைச்சு அதிகாரி கேமன் குணரட்னவினால் கூறப்பட்டது. கடந்த 40 வருடங்களாக தமிழர்களின் பூர்வீக நிலங்களில் திட்டமிட்டு சிங்கள மக்களைக் குடியேற்றியமையும் தமிழ் மக்களை விரட்டி சொந்த மண்ணிலே அகதிகளாக்கப்பட்டமையும் அகதி முகாம்களில் போதிய உணவு மருத்துவ வசதி வழங்கப்படாமல் துன்புறுத்தி முகாம்களில் இருந்து மக்களைக் கொன்றும் கடத்தியும் ஒட்டுமொத்தமாக ஓர் பூர்வீக சமுதாயத்தினை அவர்களது சொந்த நிலத்தில் இருந்து அப்புறப்படுத்தியமையும் எந்த மனிதாபிமான வரையறைக்குள் அடங்கும் என்பதனை இன்று உள்ள மனிதாபிமானம் பேசும் அரசினதும் அல்லது சர்வதேச மனிதாபிமான அமைப்புகளாலும் நியாயப்படுத்த முடியுமா?

மாவில் ஆறு அணைக்கட்டு

இதற்கு மகாவலி கங்கையால் நீர் பாய்ச்சப்படுகின்றது. மன்னம்பிட்டி பாலத்துக்குக் கீழால் மகாவலிகங்கை வருகின்றது. கந்தன் காடு என்னும் இடத்தால் மகாவலி வருகின்றது. மாவில் ஆறு என்னும் இடத்தில் நீர்ப்பாசன திணைக்களத்தின் அருகாமையில் அணைக்கட்டு உள்ளது. இதன் அலுவலகம் கல்லார் (சோமபுர எனப் பெயர் மாற்றப்பட்டது) என்னும் இடத்தில் உள்ளது. மாவில் ஆற்றில் குளக்கட்டு மண்ணால் கட்டப்பட்டு தண்ணீர் மறிக்கப்பட்டுள்ளது. மேலதிக நீர் வெருகலுக்குப் போகின்றது. வெருகல் கோயிலுக்கு அண்மித்து கடலை அடைகின்றது. மாவில் ஆற்றில் உள்ள துரிசு *SLUICE மூலம் மூதூர் பிரதேசத்திற்கு நீர் பாய்ச்சப்படுகின்றது.

1. சோமபுரத்தில் LB channel, RB channel இடதுகரை, வலது கரை வாய்க்கால் மூலம் நீர் பாய்ச்சப்படுகின்றது. இடது கரை வாய்க்கால் LB3 லிங்கபுரம், கங்குவேலி, கிளிவெட்டி, 58 ஆம் கொலனி, பெருவெளி, மல்லிகைத்தீவு, மூதூர் போன்ற தமிழ் பிரதேசங்களுக்கு வலது கரை வாய்க்கால் மூலம் அரிப்பு ஈச்சிலம்பற்று, தோப்பூர் போன்ற பிரதேசங்களுக்கும் நீர் பாய்ச்சப்படுகின்றது. LB மூலம் சோமபுர, தெகிவத்த, நீலாபொல சுடீ மூலம் அலிஒழுவ, சேருவில போன்ற சிங்களப் பிரதேசங்களுக்கும் நீர் பாய்ச்சப்படுகின்றது. ஆனால், தமிழ்ப் பிரதேசங்களில் மக்களால் உரிய நிலங்களில் வயல் செய்யமுடிவதில்லை. காரணம் அரச படைகளின் தமிழர் மீதான தாக்குதல்கள் Profvirginiya Leary அவர்கள் 1981 ஆம் ஆண்டு தனது அரச குடியேற்றம் தொடர்பான அறிக்கையில் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றார். "அரசாங்கம் இலங்கைத் தமிழர்கள் மீது அவர்கள் அரச குடியேற்றம் மீது கொண்டிருக்கும் அதிருப்தியினை கவனத்தில் எடுக்க வேண்டும். அரச உதவியுடன் செய்யப்படும் தமிழர் நிலங்கள் மீதான குடியேற்றங்கள் இனச்சமநிலையின்மையினை தோற்றுவிக்கும். இது தமிழர்களின் பாதுகாப்பு இன்மையினையும் தமிழர்கள் மீதான சிங்கள மக்களின் சமூக வன்முறைகளையும் தோற்றுவிக்கும்." இதில் நூறு வீத உண்மை இருக்கத்தான் செய்கின்றது. கடந்த 25 வருடங்களுக்கு மேலாக குடியேற்றத்தின் பின்பு பல்வேறு இன முரண்பாடுகளும் விவசாய நிலப்பங்கீடு, நீர்ப் பங்கீடு தொடர்பான பிரச்சினைகளும் இருந்து வந்துள்ளன. தமிழ் மக்களின் பொறுமையும் சிங்கள அரசின் ஆயுத பலமும் இப்பிரச்சினைகளை ஜனநாயக மற்ற மனிதாபிமானமற்ற தீர்வுகளை தமிழ் மக்கள் மீது திணித்தனர். உதாரணமாக 1991 ஆம் ஆண்டும் இந்த அணைக்கட்டு தொடர்பாக பிரச்சினை எழுந்தபோது அன்று அரச படைகள் ஆயுதமுனையில் சென்று அணைக்கட்டினை சீர்செய்தனர். ஆனால், அடிப்படை பிரச்சினை தீர்க்கப்படவில்லை.

நீண்ட காலத்திற்கு இவை சாத்தியமற்றது. அத்துடன், பாதிக்கப்பட்ட இனம் பலமடையும் போது தமது தேவைகளையும் பிரச்சினைகளையும் முன்னிறுத்துவார்கள். இன்று மாவில் ஆறு பிரச்சினையும் அவ்வாறு தோன்றியதொன்று. இது புதிதாக தோன்றிய பிரச்சினை அல்ல. இப்போது தமிழ் மக்களும் பலமாக இருக்கின்றார்கள். ஆதலால், மீண்டும் பிரச்சினை எழுந்துள்ளது. 1985 இல் Robert Kilory silk, Rogersims ஆகிய இரு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரித்தானிய மனித உரிமை குழுவின் பிரதிநிதிகளாக இலங்கை சென்று அவதானித்த அறிக்கையில் பின்வருமாறு கூறுகின்றனர். "கிழக்குப் பிராந்தியத்தில் தமிழர்களின் வீடுகள் வெற்று வீடுகளாக உள்ளன. இராணுவம் இவர்களை விரட்டியடித்து அகதி முகாம்களுக்கு அனுப்பியுள்னர். அந்த மக்கள் தமது நிலத்தில் விவசாயம் செய்ய முடியாது அகதிமுகாம்களில் அரசாங்கத்தின் நிவாரணத்திற்காக எதிர்பார்த்து உள்ளனர்" ஆம் இன்று 2006 இலும் கூட அதே நிலைதான். திருகோணமலை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது நிலங்களில் பயிர் செய்ய முடியாது அகதி முகாம்களில் இருக்கின்றனர். சமாதான காலத்தில் கூட இந்த நிலை அவர்களுக்கிருந்தது. இலங்கை அரசோ சர்வதேச நிறுவனங்களோ இந்த 25 வருட தமிழ் மக்களின் மனித அவலத்தினை தீர்க்க முன்வரவில்லை. தற்போது கூட கிளிவெட்டிப் பிரதேசம் சேருவெல பிரதேசங்களில் மக்கள் விவசாயம் செய்ய முடியாது இருக்க, ஏனைய சமூகம் அந்த நிலங்களில் பயிர் செய்து கொண்டிருக்கும் போது தமிழ் சமுதாயத்தால் பொறுக்க முடியவில்லை. இது ஓர் நியாயமான பிரச்சினையாகும். இந்த மனிதாபிமான பிரச்சினையினை மக்கள் வெளிக்கொண்டு வர முற்பட்டனர். சமாதானம் சாகின்ற நிலையில் இனியும் இந்த பிரச்சினையினை தாம் வெளிக்கொண்டு வராவிட்டால் தமிழ் மக்களுக்கு இனி தீர்வே வராது என்ற ஏக்கம் ஒரு புறம். தற்சமயம் யுத்தம் தொடங்கினால் தாம் நிலத்தில் பயிர் செய்ய முடியாதது மட்டுமல்ல அவர்கள் எதிர்காலத்தில் அந்தப் பகுதியூடாக போக்குவரத்தும் செய்ய முடியாது. எனவே தான் அவர்களுக்கு எழுந்த அச்சமும் நம்பிக்கையீனமும் மாவில் ஆறு நீர் விடயம் ஆகும்.

தமிழ் சமுதாயத்தின் நம்பிக்கையற்ற தன்மையினையும் அவர்களின் அச்சத்தின் வெளிப்பாட்டினையும் இலங்கை அரச இயந்திரம் கடந்த காலத்தினைப் போலவே தமது ஆயுத பலம் கொண்டு அடக்க முற்படுகின்றது. உண்மையில் மாவில் ஆறு நீர்ப் பிரச்சினை 1800 குடும்பங்களுக்கான விவசாயப்பிரச்சினை ஆகும். அங்கு குடிநீர் பிரச்சினை என்பது குறுகிய காலத்திற்கு ஏற்பட வாய்ப்பில்லை. அரசாங்கம் இது விடயத்தில் பொறுமையாகவே கையாண்டிருக்க முடியும். ஆனால், இலங்கை அரசிற்கு இந்தப் பிரச்சினையினை நியாயபூர்வமாக சமரசம் செய்ய விருப்பம் இல்லை. அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. 28/07/2006 அன்று இலங்கை நீர்ப்பாசன அமைச்சரை BBC செவ்வி கண்ட போது அவர் கூறினார். மாவில் ஆறு நீர்ப்பிரச்சினைக்கும் இலங்கை விமானப் படையின் விமானத்தாக்குதல்களுக்கும் தொடர்பில்லை என்று. அதே தினம் இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கவை செவ்வி கண்ட போது அவர் மாவில் ஆற்று நீரினை திறப்பதற்காகவே இந்நடவடிக்கை எனக் கூறினார். தரைவழி நகர்வை செய்யமாட்டோம் எனக் கூறினார். இதேநேரம், பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல இது ஓர் மனித அவலத்தைத் தீர்ப்பதற்கான இராணுவ முயற்சி என்பதுடன் இறைமையுள்ள அரசின் கடமை கூட எனக் கூறினார். இங்கு இறைமையுள்ள அரசு என்பது எந்த இனத்தினுடையது? அல்லது முழு இலங்கைக்கும் உரித்தான அரசா? ஆமெனின் தமிழ் மக்களின் மனிதாபிமான பிரச்சினையினை ஏன் அணுகவில்லை. மாறாக மேலும் மேலும் அதனை அதிகரித்துச் செல்வது ஏன்? இது ஒரு பக்கம் இருக்க மாவில் ஆறு பிரச்சினைக்கும் மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு தாக்குதலிற்கும் என்ன தொடர்பு? இவற்றைப் பார்க்கும் போது இலங்கை அரசு புலிகள் மீது ஓர் வலிந்து தாக்குதலை செய்வதற்கு ஏற்கனவே தயார்படுத்தப்பட்ட ஓர் திட்டமிட்ட செயல் எனப் புரிகின்றது. இதற்கு மாவிலாறு பிரச்சினையை ஓர் கருவியாகப் பயன்படுத்தியிருக்கின்றது. தமது தரைவழித் தாக்குதலுக்கு முன்பாக புலிகளின் முக்கிய தளங்களைத் தாக்கி அழித்து அவர்களுக்கு அதிர்ச்சியினை ஏற்படுத்துவது அல்லது அவர்களை ஆத்திரமூட்டி போருக்கு அழைப்பது. இதுவே முல்லை. - மட்டக்களப்புத் தாக்குதல்களுக்கு காரணமாக இருக்கலாம். ஆனால், புலிகள் முன்னைய காலத்தினை விட பொறுமையும் அதேநேரம் ஜாக்கிரதையாகவும் செயற்படுகின்றனர் என்பதே கண்கூடு. தவிர புலிகளின் விமான தளத்தினை அழிப்பதற்கான தாக்குதல் என்பது சிங்கள மக்களை ஏமாற்றுவதும் சர்வதேசத்திற்குப் புலிகள் பற்றிய பீதியினை ஏற்படுத்துவதற்குமான ஓர் உத்தி. சிங்கள அரசு கூறுவது போல் புலிகளின் விமானத் தள அமைப்பு என்பது உண்மையல்ல. வழமையாக புலிகள் தமது உள்ளக பாதுகாப்பு நடவடிக்கைக்காக காட்டின் சில பக்கங்களை துப்புரவாக்கும் வழமையான பணியாகும். உண்மையாக விமானத்தள அமைப்பு என்றாலும் அதனைக் கட்டிய பின்பு தாக்குவதா/ கட்டிமுடிந்த பின்பு தாக்குவதா? விளைவு கூட என எண்ணுவதற்குக் கூட சிங்கள படைத்தரப்பில் ஆட்கள் இல்லை போலும். எனவே ஒட்டுமொத்தமாக புலிகள் மீது ஓர் போரைத்திணிப்பது என்பது மகிந்த அரசின் நிலைப்பாடு என்பது அனைவருக்கும் தெரியும். அவ்வாறாயின் அது ஏன்? இலங்கை அரசின் வரலாற்றினைப் பார்த்தீர்களானால் சிங்கள அரசுகள் தமது ஆட்சி நலன்கள் மற்றும் தமது ஆட்சியின் நீட்சித்தன்மை ஆகியவற்றிற்காக போர்களைச் செய்திருக்கின்றது. சில இராணுவ நடவடிக்கைகள் தனிப்பட்ட சில இராணுவ தளபதிகள், ஆயுத தரகர்கள், ஒரு சில அரசியல் வாதிகள் ஆகியோர்களுக்காக மேற்கொள்ளப்பட்டவை எனலாம். தற்போதும் மகிந்த அரசு அதே பாணியில் செயற்பட முனைந்துள்ளது. பல்வேறு பொருளாதார நெருக்கடிகள், வேலை நிறுத்தம் அயல்நாட்டுடனான முறுகல் நிலை, சர்வதேச அழுத்தம், அதே நேரம் உட்கட்சி முரண்பாடுகள் மற்றும் இனப் பிரச்சினை தொடர்பாக அனைத்தையும் சமாளித்துக் கொண்டு ஆட்சி நடத்தக்கூடிய ஒரே ஒரு மூலதனம் போர் ஆகும். இதனை ஆரம்பிப்பதற்கு மகிந்த அரசு பல்வேறு தந்திரோபாயங்களைக் கையாண்டது.

* பல்வேறு ஆயுதக்குழுக்களைப் பலப்படுத்தி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினை ஆதரித்து செயற்படும் அரசியல்/ சமூகத் தலைவர்களை அழித்தல்.

* சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளால் அரசியல் மயப்படுத்தப்பட்ட இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் மனோநிலையினைத் தாக்குதல்.

* ஆயுத ரீதியாக புலிகளைத் தாக்குவதன் மூலம் உள்ளூரில் புலிகளின் பலத்தினை குறைத்தல்.

* இதன் மூலம் புலிகளை ஆத்திரமூட்டி அவர்களை வலிந்து போருக்கு அழைத்தல்.

* வெளிநாடுகளில் புலிகளை தடை செய்யத் தூண்டுதல். இதனூடாக வெளிநாட்டில் உள்ள மக்களுக்கு அவர்களது மனோநிலையினை சர்வதேசம் மீது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துதல்.

* வெளிநாட்டில் உள்ள விடுதலைப் புலிகளுக்கு சேரும் வளங்களைத் தடுத்து நிறுத்துதல். போன்ற பல்வேறு போர் முன் ஆயத்தங்களை மகிந்த அரசு மிகவும் வேகமாக செய்து வந்தது. இந்த விடயங்களில் மகிந்த அரசு சில விடயங்களில் தற்காலிக வெற்றியடைந்துள்ளது. இதற்கு சர்வதேசமும் துணை போனது என்பதும் உண்மை. மகிந்த அரசும் அவர்களுக்குத் துணைபோன வெளிநாடுகளும் தமது இலக்கை எட்டவில்லை. அல்லது அடையவில்லை என்பதும் உண்மை. விடுதலைப் புலிகள் இந்த விடயங்களில் முன்னோக்குடன் மிகவும் சாதுரியமாக செயற்படுகின்றனர். தற்போது மகிந்த அரசு தாம் தமது இலக்கான போரைத் தொடங்குதல் என்ற நிலைப்பாட்டினை நடைமுறைப்படுத்தும் காலம் வந்து விட்டதாக எண்ணுகின்றார். அதற்காக வருகின்ற எந்தத் துரும்பினையும் பற்றிப் பிடிக்க அவர் தயார் நிலையில் உள்ளார். மாவில் ஆறு அணைக்கட்டு பிரச்சினையும் மகிந்த அரசிற்கு ஓர் கருவியாக அமைந்துள்ளது.

ஒபரேஷன் வாட்டர் ஷெட்

இது ஓர் முன்னோக்கற்ற இராணுவ அறிவற்ற அரசியல் இலாபத்திற்காக மேற்கொண்ட நடவடிக்கை. பாதிக்கப்படப் போவது சிங்கள மக்களும் சிங்கள கூலியாட்களுமே ஆகும். பூகோள ரீதியாக இது ஓர் காட்டுப்பகுதி. மரபு வழி நகர்விற்கு சாத்தியமற்ற பகுதி. வான் தாக்குதல் மற்றும் பீரங்கித்தாக்குதலை நம்பி செய்யப்பட வேண்டிய தாக்குதல் முயற்சி சிங்கள அரசு கடந்த காலங்களில் இதனை நம்பி எடுத்த பல இராணுவ நடவடிக்கைகளை புலிகள் முறியடித்து உள்ளனர். உதாரணம் அக்கினிச்சுவாலை. புலிகள் நன்கு பின்தள ஆதரவு உடைய பகுதியில் நிற்கின்றார்கள். ஆற்றின் இரு பக்கம் மற்றும் தரைப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. காட்டுப்பகுதிகளில் கூட விடுதலைப் புலிகளும் கணிசமான மோட்டார் மற்றும் பீரங்கிப்படைப் பலங்களை வைத்திருக்கின்றனர்.

-தினக்குரல்

பொதுமக்கள் 50 பேர் பலி.

------------------------

திருகோணமலை கதிர வேளி மாவிலாறு அணைக் கட்டுப் பகுதியை ஆக்கிரமிக்கும் இலங்கை ராணுவப் படையின ருக்கும், விடுதலைப் புலிகளுக் கும் இடையில் நேற்று வியாழக் கிழமை அதிகாலையில் கடும் மோதல் தொடங்கியது.

ராணுவம் ஆகாயத்தாக்கு தல், பீரங்கித் தாக்குதல் நடத்திய தில் பொது மக்கள் 50 பேர் கொல்லப்பட்டு விட்டதாகவும் 200 பேர் காயம் அடைந்து விட்டதாகவும் புலிகளின் தமிழ் நெட் இணைய தளம் தெரிவித் துள்ளது.

அதேவேளையில் புதிய மோதலில் படைவீரர்கள் ஐவர் மாண்டதாக ராணுவம் கூறியது. 45 வீரர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் இருக்கிறார் கள் என்றும் அது கூறியது.

இலங்கையில் சென்ற மாத இறுதியில் தொடங்கி மாவிலாறு மதகு காரணமாக கடும் மோதல் நடந்து 400 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

அதையடுத்து அந்த மதகு திறக்கப்பட்டது. என்றாலும் அரசாங்கம் அந்த மதகு அமைந்துள்ள வட்டாரத் தைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர புது தாக்குதலை நேற்று தொடங்கியது.

என்றாலும் அந்தப் பகுதி இன்னமும் தங்கள் கட்டுப் பாட்டிலேயே இருப்பதாக நேற்று புலிகள் அமைப்பு தெரிவித்தது. இந்த மோதலில் படைவீரர்கள் 45 பேர் காயம் அடைந்துவிட்டதாக அதிகாரி கள் சொன்னார்கள்.

இவர்கள் திருகோணமலை மாவட்ட மருத்துவமனை களில் அனுமதிப்பட்டனர். அவர்களில் ஐவர் மாண்டனர் என்றனர் மருத்துவர்கள்.

இவ்வேளையில் திருகோண மலை மாவட்டக் கடற்கரை பகுதிகளில் இலங்கை போர் விமானங்கள் நேற்று தொடர்ந்து குண்டு வீசின.

உயிர் பிழைக்கத் தப்பி ஓடிய மக்கள் மீதும் தாக்குதல் நடத் தப்பட்டது. நேற்று வியாழக் கிழமை குறைந்தது குடிமக்கள் 50 பேர் கொல்லப்பட்டனர் என்று புலிகளின் இணைய தளம் தெரிவித்தது.

மூதுìர், ஈச்சிலம்பற்றுப் பகுதி கள் மீது நடத்தப்பட்ட எறிபடை தாக்குதலுக்கு அஞ்சி உயிரைக் கையில் பிடித்தபடி அங்கிருந்து இடம் பெயர்ந்து வாகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பொது மக்கள்மீது இலங்கை விமானப் படையின் விமானங்கள் குண்டு களை வீசித் தாக்கின என்று கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் கட்டுப் பாட்டில் உள்ள மூதுìர் கிழக்குப் பகுதியில் இருந்து ஏற்கனவே சுமார் ஏழு ஆயிரம் குடும்பங்கள் மட்டக் களப்பு வாகரைப் பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.

மாவிலாறு பகுதியில் மதகு அமைந்துள்ள இடத்தைத் தன் கட்டுப் பாட்டில் கொண்டு வர ராணுவத்தின் தரைப் படை நடவடிக்கை எடுத்த அதே நேரத்தில் பாதுகாப்புப் படைகள் ஆகாயத் தாக்குதலை நடத்தின என்று இணைய தளம் குறிப்பிட்டது.

திருகோணமலை மூதுìர் ஈச்சிலம்பற்று பகுதிகளிலிருந்து 35,000-க்கும் அதிகமான பொது மக்கள் இடம் பெயர்ந்து வரும் நிலையில், அவர்கள் சென்று கொண்டிருக்கும் பாதைகளைக் குறிவைத்து இலங்கைப் படையினர் எறிபடைகளை வீசியும் விமானத் தாக்குதல் நடத்தியும் வருகின்றனர்.

இந்தப் பகுதிகளிலிருந்து பொது மக்கள் இடம் பெயர்ந்தால், தங்களது ராணுவ நிலைகளைப் பாதுகாப்பது சிரமமாகி விடலாம் என்பதால், பொதுமக்களைக் கேடயமாகப் பாவித்துவரும் ராணு வத்தினர், அவர்கள் வெளியேறி விடாமல் தடுப்பதற்கான முயற்சி யாக இந்தத் கொடூரமான தாக்கு தல்களைத் தொடுத்து வருகின்ற னர் என்று புலிகள் தரப்பில் கூறப்படுகிறது.

TAMILMURASU-SINGAPORE

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியா இன்டிப்பென்டன் பத்திரிகையில் வந்த செய்தியினை(Sri Lanka accused of killing civilians and aid workers) பிறமொழி ஆக்கத்தில் இணைத்திருக்கிறேன்.

Before the government's ground offensive, Western diplomats unanimously put the blame for the deteriorating situation in Sri Lanka on the Tigers, after a series of attacks on the Sri Lankan military, including the assassination of a senior general. Those attacks were seen as a blatant attempt to push the government back into a war, and the government was widely praised for its restraint.

But diplomats are much more reluctant to support the government after it continued its offensive despite the reopening of the water supply. The water issue looks increasingly like an excuse, with the government offensive concentrated in an area where the Tigers are known to have major military resources

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...33569d19#210470

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோபி அன்னனுக்கு பிரான்ஸ் தமிழர் மனித உரிமைக்கழகம் அனுப்பிய கடிதம்

Appeal to the UN secretary general Kofi Annan

Source: TCHR

Paris, 10 August 2006 - In an urgent letter send to the United Nations Secretary General Kofi Annan by the Tamil Centre for Human Rights – TCHR and 28 solidarity organisations around the world, urgently appeal to the Secretary General to prevent the genocide of Tamil in Sri Lanka.

The full appeal is given below.

10 August 2006

Mr. Kofi Annan

Secretary General

United Nations

New York, USA

Dear Sir,

We write to you with great urgency and very heavy hearts, regarding the current crisis in the East of the island of Sri Lanka.

The news that we are receiving about the situation in Muttur, from Trincomalee, leaves no doubt at all that the Sri Lankan government has declared war and that a full scale military operation is now taking place in Muttur.

We are very concerned that under the guidance of President Rajapaksa, well-planned ethnic cleansing of Tamils is in progress in the East, especially in Trincomalee.

In our press release (Ref: EH074/PR/2006) of 10 May 2006, we said, “Why did Rajapaksa order Air, Sea, and Land attacks especially in the Trincomalee district? What is the strategic importance of Trincomalee? Has the illegally erected Buddha statue in Trincomalee in May last year, any connection with these attacks? We have come to the conclusion that these attacks are part of the ethnic cleansing which has long been a problem.

Within the last twenty-four hours, hundreds of civilians have been massacred in every nook and corner of Muttur and once again the Sri Lanka government is using food as a weapon of war. It appears that the government feels assured that it will not be scrutinised. The impunity, which the military enjoys, has led to ever-increasing flagrant violations and atrocities, which the international community has not vociferously condemned. We are sure you will be aware of the massacre of 17 humanitarian workers of the ECOSOC NGO Action Contre la Faim by the Sri Lanka security forces in Muttur on 05 August 2006.

International NGOs working in the Trincomalee district confirmed that they were prevented by the Military from going to Muttur to carry out their mission in service to the displaced people. In Muttur, thousands of families are starving without food and shelter. Their basic needs are not being met and especially the children and babies are dying of hunger whilst artillery shells rain and aerial bombing is taking place.

A journalist, who was prevented from visiting Muttur by the Military, told us that it is a humanitarian disaster. There is no help for the People! The people are blaming the international community for bringing about such a harsh situation by taking one side in the conflict.

We are compelled to pose the question “Is the international community supporting President Rajapaksa’s ethnic cleansing of Tamils from Trincomalee district?” If not, then what is the reaction of the international community to the present massacres, economic and news blockade which are all obvious violations of international law.

The government has a duty to ensure respect for the Geneva Conventions. For it’s part, the international community must demand that international, unbiased fact-finding take place and that the government permit humanitarian relief to reach the internally displaced people. Only last month, the High Commissioner for Refugees stated, after his visit to the island that immediate relief must be given to IDPs, and that they must have the support of the international community (Sunday Leader 30-07-06).

We the Tamil Centre for Human Rights, along with 28 solidarity organisations (see attached list), urgently appeal to you on behalf of the people of Muttur to stop this deliberate war. As stated earlier, it is a war of ethnic cleansing of Tamils from Trincomalee district. Recent speeches by the politicians in the South of Sri Lanka transparently and unambiguously indicate this intention.

We kindly request you to intervene very urgently and prevent the genocide of Tamils in Sri Lanka.

Thank you

Yours truly

S. V. Kirubaharan

General Secretary

HEAD OFFICE:

Tamil Centre for Human Rights - TCHR/CTDH

9, rue des Peupliers - 95140 Garge les Gonesse - FRANCE

Contact person : S. V. Kirubaharan – General Secretary

Tel/Fax: + 33 1 42 67 54 36 - Email: tchrgs@hotmail.com / tchgs@tchr.net

TCHR-UK

Tamil Centre for Human Rights - TCHR/CTDH

PO Box 182, Manchester M16 8ED, UNITED KINGDOM

Contact person : Deirdre McConnell – Director International Programme

Fax: + 44 161 860 4609 - Email: tchrdip@hotmail.com / tchrdip@tchr.net

TCHR-NETHERLANDS

Tamil Centrum voor Mensenrechten- TCHR

Steelingmolen 43

1703 TE Heerhugowaard, THE NETHERLANDS

Contact person : Sinniah Indiran

Fax : + 31 - 72 - 57 15 801

Email : tchrholland@hotmail.com

TCHR-SWITZERLAND

Tamilen Zentrum fur Mensenrechten - TCHR

P. o. Box : 319

8172 – Niederglatt, SWITZERLAND

Contact person : Thambirajah Genegatharan

Email : tchrswitzerland@hotmail.com

தகவலுக்கு நன்றி கந்தப்பு....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.