Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பற்றி எரியுமா கற்பூரப் புல்வெளி?

Featured Replies

கற்பூரப்புல்வெளி இது வன்னி மக்களின் விடுதலை உணர்வோடு ஒன்றிக் கலந்து சங்கமித்துவிட்ட ஜீவபூமி. இது ஆயிரமாயிரம் தமிழ் வீரர்களின் குருதியால் சிவந்து கனிந்து போயுள்ள வரலாற்று மண்.

கிராமத் தலைவன் ஒருவரின் அனுசரணையுடன் முள்ளியவளை கமுகு மரங்களைத் தறித்து ஒல்லாந்தர் கொள்ளையிட முயன்றபோது கிளர்ந்தெழுந்த அந்த மண்ணின் மைந்தர்கள் கற்பூரப் புல்வெளியில் தான் எதிரிகளை முகம் கொண்டனர்.
துப்பாக்கியுடன் குமிறி வந்த டச்சுப் படைகளை வாளாலும் வேலாலும் எதிர்த்துப் போரிட்டு விரட்டியடித்து வீர வரலாறு படைத்தனர்.
முல்லைத்தீவுக் கோட்டையிலிருந்து முன்னேறி வன்னியை விழுங்க வந்த ஒல்லாந்தரை மாவீரன் பண்டாரவன்னியன் கற்பூரப் புல்வெளியில் வைத்தே, தோற்கடித்து விரட்டினான் அதுமட்டுமன்றி முல்லைக் கோட்டையையும் கைப்பற்றி சாதனை படைத்தான்.
குளக்கோட்ட மன்னன் காலத்திலிருந்து எவருக்கு வணங்கா மண்ணாக முள்ளியவளைப் பற்று, கரைதுறைப்பற்று, தென்னமரவாடிப்பற்று, வெருகல்பற்று என வன்னிமைகள்  தலை நிமிர்ந்து நின்றன.
சங்கிலி மன்னனின் தந்தையான பராஜசேகரன் தன் கடைசி நாள்களில் அரண்மனையமைத்து முள்ளியவளையில் வாழ்ந்தமைக்கு ஆதரமாக இன்றும் பரராஜசேகரமேடு காட்சியளிக்கிறது. அந்த மன்னனின் மெய்ப் பாதுகாவலர்களான கற்கோளப் படையினரின் வாரிசுகள் இன்னும் முள்ளியவளையில் வாழ்கின்றனர்.
கற்கோளப் படையினரே போரில் கொடியேற்றி முன் செல்லும் வீரமறவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வன்னி வீரர்களும், கற்கோளப் படையினரும் கரங்கோர்த்து நின்று அந்நியரை ஓட ஓட விரட்டியடித்த வரலாற்றை கற்பூரப் புல்வெளியின் ஒவ்வொரு புல் நுனியும் புல்லடி வேர் முனைகளும் பொருத்தி வைத்துள்ளன.
அத்தகைய மகத்துவம் பெற்ற வீரக்களவெளியைக் கபளிகரம் செய்து தமிழனின் விடுதலை வரலாற்றை துடைத்தழிக்க முயல்கின்றனர். சில சிங்கள பௌத்த பேரினவாதிகளின் பாதந்தாங்கிகள்.
ஆம்! இன்று முஸ்லிம் மக்களைக் குடியேற்றும் முகமாக கற்பூரப் புல்வெளி கனகர வாகனங்கள் மூலம் அழிக்கப்படுகிறது.
கற்பூரப் புல்வெளி வன்னி மக்களின் உணர்வுகளில் ஒன்றிவிட்ட ஜீவநிலம். இதைத் தீண்டுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் வன்னி மக்களின் தன்மானத்தில் வீரவரலாற்றில் விடுதலை உணர்வில் கை வைக்கிறார்கள் என்பதுதான் அர்த்தம்.
இதை வீரம் செரிந்த வன்னி மக்கள் எந்தக் காரணம் கொண்டு அனுமதிக்கப் போவதில்லை. வன்னியில் தமிழ் மக்களுடன் சகோதரர்களாக வாழ்ந்த முஸ்லிம் மக்களும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.
ஆனால் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் அவரின் ஆதரவாளர்களும் தமிழ் முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகளையும் மோதல்களையும் ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளும் ஒரு நீண்ட நிகழ்ச்சி நிரலில் இது ஒரு பகுதியென்றே வன்னி மக்கள் திட்டவட்டமாக நம்புகின்றனர்.
ஏற்கனவே தமிழ் மக்களுக்குச் சொந்தமான முள்ளியவளை செல்வபுரம் பகுதியில் முஸ்லிம் மக்களைக் குடியேற்ற எடுக்கப்பட்ட முயற்சிகள் மக்கள் எதிர்ப்பின் காரணமாக முறியடிக்கப்பட்டன. பதிலடியாக தமிழ் மக்களின் சில குடிசைகள் இரவோடிரவாகத் தீக்கிரையாக்கப்பட்டன.
எனினும் தமிழ் மக்கள் பொறுமை காத்து மோதல்களைத் தவிர்த்தனர். பின்பு வனப்பரிபாலன இலாகாவாலும் விடுதலைப் புலிகளாலும் வனவளத்தைப் பாதுகாக்கும் நோக்குடன் நீரூற்றி பாதுகாத்து வளர்க்கப்பட்ட தேக்கம்காட்டில் அதை அழித்து முஸ்லிம்களைக் குடியேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்போது கற்பூரப் புல்வெளி இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கிய பிரச்சினை முஸ்லிம்களின் மீளக்குடியேற்றம் என்ற பேரில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முயற்சிகளும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மோதல்களை ஏற்படுத்தும் வகையில்இருப்பதாகும்.
எப்போதுமே இலங்கை அரசு தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையே முரண்பாடுகளையும் மோதல்களையும் ஏற்படுத்துவதில் தீவிர அக்கறை காட்டி வருகிறது.
இரு தரப்பினரும் அடக்கியொடுக்கப்படும் சிறுபான்மையினர் என்ற வகையிலும் தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் ஐக்கியப்பட்டு விடக்கூடாது என்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது அரசு. அந்த வேலைத் திட்டத்தை நிறைவு செய்ய சில முஸ்லிம் தலைவர்கள் முன்னின்று செயற்பட்டு வருகின்றனர்.
அவர்களில் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு முக்கிய இடம் உண்டு. ஏற்கனவே முஸ்லிம் காங்கிரஸைப் பிளவுபடுத்தி முஸ்லிம் சமூகத்தைப் பலவீனப்படுத்தி அரசுக்கு வலுச் சேர்த்த பெருமை இவருக்குண்டு.
அண்மைக்காலமாக முல்லை மாவட்டத்திலும் மன்னார் மாவட்டத்திலும் சிங்களக் குடியேற்றங்கள் மூலம் வடக்கை சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவற்றைத் தடுத்து நிறுத்த எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
மாறாக தமிழ் மக்களின் நிலங்களில் முஸ்லிம்களைக் குடியேற்றும் முயற்சிகள் மூலம் சிங்களக் குடியேற்றங்களிலிருந்து முஸ்லிம் மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே அவர் முயற்சிக்கிறார். தமிழ் முஸ்லிம் முரண்பாடுகளை உருவாக்க முயல்கிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது.
அண்மையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் மன்னார் முசலிப் பிரதேசத்தில் 6,000 சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றுவது தொடர்பாக ஓர் ஆலோசனைக் கூட்டம் இடம்பெற்றதாகச் சில தகவல்கள் வெளிவந்துள்ளன.
முசலிப் பிரதேசத்தில் முள்ளிக்குளம், மடிச்சுக்கட்டி, சிலாவத்துறை என்பன தமிழ் முஸ்லிம் மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழும் பிரதேசங்கள். இவற்றில் பெரும் பகுதி ஏற்கனவே கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு அவர்களின் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன.
ஆனால் அந்த நிலங்களின் பாரம்பரிய குடியிருப்பாளர்களாகிய தமிழ், முஸ்லிம் மக்கள் தங்கள் சொந்தக் காணிகளில் குடியேற அனுமதிக்கப்படவில்லை. இப்படியான நிலையிலேயே அந்தப் பகுதியில் சட்டபூர்வமாக 6,000 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்படவுள்ளன.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அதுபற்றி வாய் திறக்காமலே தமிழ் மக்களின் காணிகளில் முஸ்லிம்களைக் குடியேற்ற முயற்சி கள் மேற்கொண்டதை மறந்துவிட முடியாது.
மணலாற்றில் கொக்கிளாய், மண்கிண்டி ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களின் காணிகள் சிங்களவரால் அபகரிக்கப்படுகின்றன. அதுபற்றியெல்லாம் அமைச்சர் கண்டு கொள்வதேயில்லை.
ஆனால் முள்ளியவளையிலும் கற்பூரப் புல்வெளியிலும் முஸ்லிம் மக்களைக் குடியேற்ற முனைகிறார். முல்லை மாவட்டத்தில் ஊற்றங்கரையிலோ நீராவிப்பிட்டியிலோ நகரப் பகுதியிலோ முஸ்லிம்கள் மீளக்குடியமர்வதை எந்த ஒரு தமிழனும் எதிர்க்கவில்லை. எதிர்க்கப் போவதுமில்லை.
ஏனெனில் அது முஸ்லிம்கள் ஏற்கனவே குடியிருந்த இடங்கள். ஆனால் வேண்டுமென்றே தமிழ் மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மோதல்களை ஏற்படுத்தும் வகையில் தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது தொடர்பாக முஸ்லிம் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
அதிலும் கற்பூரப் புல்வெளி தமிழர்களின் தன்மான உணர்வுடன் ஒன்றிவிட்ட ஒரு மையம். இதில் முஸ்லிம் மக்களைக் குடியேற்ற முயல்வது நிச்சயமாக நல்ல நோக்கத்துடன் இருக்க முடியாது.
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டமை மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் ஊர்காவற்படையினர் சிறப்பு அதிரடிப் படையினடன் இணைந்து கூட்டம் கூட்டமாக தமிழ் மக்களைக் கொன்று குவித்தமை போன்ற விரும்பத்தகாத சம்பவங்களால் தமிழ் முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்ட கசப்புணர்வு நீங்கி மீண்டும் தமிழ் பேசும் மக்களாக நாம் ஐக்கியப்பட்டு வரும் நிலையில் சிங்கள இன ஒடுக்குமுறையாளர்களின் கையாள்களான சிலரால் மீண்டும் முரண்பாடுகள் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவை தொடர்பாகத் தமிழ், முஸ்லிம் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
கற்பூரப் புல்வெளி தமிழ் மக்களின் பாரம்பரிய அடையாளச் சின்னம் என்பது மட்டுமல்ல. விடுதலையை விரும்பும் சகல மத இனத்தவர்களுக்கும் ஓர் உணர்வு மையமாகும்.
அதைப் பாதுகாப்பது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம் மக்களுக்கும் கூட ஒரு முக்கிய உரிமையாகும். கற்பூரப் புல்வெளி தீயிடப்பட்டு அது பற்றியெரியுமானால் அதன் ஒவ்வொரு பொறியும் தமிழ் மக்களின் நெஞ்சில் பெரும் காட்டுத்தீயாகக் கொழுந்துவிட்டெரியும். அது சாதாரண தீயாக அமையாது.
சகல நயவஞ்சங்களையும் கொடுமைகளும் சுட்டெரிக்கும் புனித வேள்வித் தீயாகவே அது அமையும். கற்பூரப் புல்வெளி வன்னி மக்களின் உணர்வுகளில் ஒன்றிவிட்ட ஜீவநிலம்.
இதைத் தீண்டுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் வன்னி மக்களின் தன்மானத்தில் வீரவரலாற்றில் விடுதலை உணர்வில் கை வைக்கிறார்கள் என்பதுதான் அர்த்தம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.