Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம்

Featured Replies

இராமாயண காலத்துக்கு முற்பட்டதாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் இன்று புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.தீர்த்தம், தலம், விருட்சம் ஆகியனவற்றை ஒருங்கே கொண்டு பன்னெடுங்காலமாக அருளாட்சி செய்துவரும் மாமாங்யேஸ்வரர் ஆலயம் தானாக தோன்றியதன் காரணமாக சுயம்பு ஆலயமாகவும் போற்றப்பட்டுவருகின்றது.

இராவணேஸ்வரனால் வழிபட்ட ஆலயமாகவும் இராவணன் அனுமானின் வாலில் கொழுத்திய தீயை அணைத்த இடமாகவும் ஆலயம் சிறப்பு பெற்றது.

இராம பிரானின் தண்டாயுதத்தால் உருவான தீர்த்தக்கேணியே மாமாங்கர் ஆலய தீர்த்தக்கேணியென கர்ண பரம்பரைக்கதைகள் கூறுகின்றன.

இத்தனை சிறப்புகளைக்கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் இந்த தீர்த்த உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இந்த தீர்த்த உற்சவத்தில் விசேடமாக பிதிர்க்கடன் தீர்க்கும் நிகழ்வு சிறப்பு பெறுகின்றது.தாய்,தந்தையர்களை இழந்தவர்கள் அவர்களின் ஆத்மசாந்திவேண்டி பிதிர்கடன் செலுத்துதல் இந்த தீர்த்தத்தின் சிறப்பாகும்.

இதேவேளை ஆடி அமாவாசையையொட்டி இன்று அதிகாலை முதல் கீரிமலை தீர்த்தக்கேணியில் யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்தவர்கள் பிதிர்கடன் நிறைவேற்றுவதற்கு கீரிமலை திர்த்தக்கரையில் கூடியமை குறிப்பிடத்தக்கது

D054545454540.jpg

http://irruppu.com/?p=33195

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.