Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத் தமிழர்களின் வரலாற்றை மூடி மறைப்பது சிங்கள பௌத்த பேரினவாதிகள் மட்டுமல்ல தமிழர்களும்தான்

Featured Replies

தமிழீழம் என்பது ஒரு கோசமோ,சலுகையோ காகிதத்தில் எழுதப்பட்ட விட்டுக்கொடுப்புக்களுக்கு உள்ளாக்கக் கூடிய வெற்று அரசியல் கோரிக்கையோ அல்ல. அது இலங்கைத் தீவில் வரலாற்றக்கு முற்;பட்ட காலம் தொட்டே பல்லாயிரம் தலைமுறைகளாக தொடர்ச்சியாக வாழ்ந்துவரும் தமிழ் மக்களுடைய மறுக்க முடியாத வரலாற்று உரிமையும் இறைமையும் உள்ள ஒரு நாடாகும்.
இலங்கைத் தீவில் வாழும் இறைமையுள்ள இனம் என்று சொல்வதற்கு சிங்கள மக்களுக்கு உள்ள உரிமையைவிட தமிழீழத் தமிழ் மக்களுக்குள்ள உரிமை அதிகமாகும்.ஏனெனில் தமிழ் மக்கள் சிங்கள இனம் இலங்கைத் தீவில் தோற்றம் பெறுவதற்கு முன்பிருந்து அங்கு வாழ்ந்து வருபவர்களாகும்.
இதற்கான தொல்லியல் மானிடவியல் சான்றுகள் நிறையவே இருக்கின்ற போதிலும் தமிழர்களுடைய அரசுகள் என்கின்ற போது கி.பி.13 ம் நூற்றாண்டில் தோன்றிய யாழ்ப்பாண ஆரிய சக்கரவர்த்திகளுடைய அரசையும் அதன் பின்னால் தோன்றிய வன்னிய சிற்றரசுகளையும் மட்டுமே கேடிட்டு காட்டுமளவுக்கு திட்டமிட்ட வரலாற்று மோசடி ஒன்று நடந்திருக்கிறது.
கி.பி.6ம் நூற்றாண்டில் சிங்கள இனம் ஒரு தனித்துவமான இனமாக தோற்றம் பெறுவதற்கு முன்பே இலங்கைத் தீவில் வாழ்ந்த தமிழர்களுக்கு அரசு என்ற ஒன்று இருக்கவில்லையா?
அப்படி இருந்திருந்தால் அவை எந்த அரசுகள்? ஏன் அந்த அரசுகளை நாங்கள் இனங்காணவும் எங்களுடைய வரலாற்று சான்றாதாரமாக அவற்றை உலகத்திற்கு காண்பிக்கவும் எங்களால் முடியாமல் இருக்கிறது?
இதற்கான ஆய்வுகள் ,இவற்றை இனங்காண்பதற்கான முயற்சிகள் ஏன் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை?
ஏன் நாங்கள் யாழ்ப்பாண அரசை மட்டும் எங்களுடைய அரசு என்று சொல்லிக்கொள்வதன் மூலம் கி.பி 13 ம் நூற்றாண்டுக்குப் பின்பு தான் நாங்கள் ஒரு பிரதேசத்தை கைப்பற்றி ஆட்சி செய்தோம் என்ற சிங்கள பௌத்த பேரினவாத வரலாற்றாசிரியர்களின் வரலாற்று திரிப்புக்கு துணை போகிறோம்? 
இந்தக் கேள்விகளுக்கு விடை தெரிந்தால் தயவு செய்து யாராவது சொல்லுங்களேன்;;;……?

https://www.facebook.com/groups/191129747729027

http://sivasinnapodi.wordpress.com/2013/08/07/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2/


தமிழீழத் தமிழர்களின் வரலாற்றை மூடி மறைப்பது சிங்கள பௌத்த பேரினவாதிகள் மட்டுமல்ல தமிழர்களும்தான் 2

இலங்கையின் புராதன அரசாக அடையாளம் காணப்படும் அனுராதபுர அரசு கி.மு.4 ம் நூற்றாண்டில் இருந்து கி.பி 9 ம் நூற்றாண்டுவரை இலங்கைத்தீவில் வலிமை மிக்க அரசாக இருந்தது.இந்த அரசை எல்லாளன் சேனன் குந்திகன் முதலான தமிழ் மன்னர்களும் ஆட்சி செய்ததாக பிற்கால சிங்கள வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.ஆனால் கி;பி. 6 ம் நூற்றாண்டில் பாளி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சத்தின் மூல நூலில் இவர்கள் பௌத்தர் அல்லாத ஆட்சியாளர்கள் என்றே குறிப்பிடப்படுகிறது.
இவர்களுக்கு முன் பாண்டுகாபன் மூத்த சிவன் தேவநம்பிய தீசன் முதலான பௌத்த மதத்தை சாராத அரசர்களும் அனுராதபுரத்தை ஆட்சி செய்திருக்கிறார்கள். அவர்களும் சிங்களவர்களோ பௌத்தர்களோ அல்ல என்பதற்கு மகாவம்த்சதிலும் ஏனைய ஆரம்பகால பௌத்த வரலாற்று நூல்களில் சான்றுகள் உள்ளன.
ஏறக்குறைய ஆயிரத்து முன்நூறு ஆண்டுகளுக்கு ; மேற்பட்ட வரலாறு கொண்ட அனுராதபுரத்தில் முதல் இரண்டு நூற்றாண்டுகள் வைதீக மயமாக்கலுக்கு உள்ளகாத சைவமும் 1100 ஆண்டுகள் பௌத்தமும் அரச மதங்களாக இருந்திருக்கின்றன.
பௌத்த மதத்திலும் தேரவாதம் மகாஜானம் என்ற இரண்டு பிரிவுகள் அங்கே இருந்திருக்கின்றன.அதிலும் மகாஜான பிரிவு கிபி 6ம் நூற்றாண்டு வரை அங்கே செல்வாக்குடன் இருந்திருக்கிறது.
அனுராதபுரத்தை ஆட்சிசெய்த அத்தனை மன்னர்களும் அன்றைய தமிழக நிலப்பரப்பிலிருந்து சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்களுடன் மண உறவுகள் உட்பட நெருங்கிய உறவுகளை கொண்டவர்களாகவே இருந்தனர்.பௌத்த மதத்தின் இரண்டு பிரிவுகளும் கூட அன்றைய தமிழகத்தின் பௌத்த மையமாக இருந்த காஞ்சிபுரத்துடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தது.
அனுராதபுரக் காலம் முழுவதும் பெரும்பான்மை மக்களால் பேசப்பட்ட மொழியாகவும் அரசவை மொழியாகவும் தமிழே இருந்தது.
தேரவாத பௌத்ததின் எழுத்து மொழியாக பாளி மொழியும் மகாஜான பௌத்தத்தின் எழுத்து மொழியாக தமிழும் சமஸ்கிரதமும் இருந்தது.
கிபி 6ம் நூற்றாண்டில் தமிழகத்தில் எழுந்த பக்தி இயக்க பேரலையில் பௌத்த மதம் வேரறுக்கப்பட்டு பௌத்த பிக்குகள் கழுவேற்றி கொல்லப்பட மாகாயான பௌத்தம் வைதீக இநதுமதத்துடன் சமரசம் செய்து கொண்டு அதன் வைஷ;ணவப்பிரிவுக்குள் ஐக்கியமாகி கரைந்து போகிறது.
ஏற்கனவே மகாஜான பௌத்தத்துடன் இருந்த முரண்பாடும் பௌத்த மதத்துக்கு விரோதமாக செயற்பட்ட தமிழகத்தின் மீதான வெறுப்பும் அனுராதபுரத்தில் இருந்த தேரவாத பிரிவினரை வைதீக மத விரோத தமிழ் விரோத போக்குடன் பாளி மொழியை முதன்மைப்படுத்தி தங்களை தேரவாத பௌத்த சமூகமாக ஒருங்கிணைய வைத்தது.இந்த ஒருங்கிணைவு தான் சிங்கள மொழியின் தோற்றத்துக்கு காரணமாக அமைந்தது.
இது நடத்த காலகட்டத்தை கிபி 6 ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி என்று வரையறுத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு தேரவாத பௌத்த சமூகமாக ஒருங்கிணைந்தவர்கள் அனுராதபுர அரசின் குடி மக்களாக இருந்தவர்களில் சிறு பகுதியினரேயாகும்.கி;பி; 8ம் நூற்றாண்டுவரை அனுராதபுர அரசின் எல்லைக்குள் வாழ்ந்த மக்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழ் மொழியையே பேசினார்கள்;. கிபி 8ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்; அனுராதபுரத்திலிருந்த ஆட்சிபீடம் சிகிரியாவுக்கும் தம்புள்லைக்கும் இடம்மாறிய போது அந்த நகரம் தனது செல்வாக்கை இழக்கிறது.
இந்த காலகட்டத்தில் அதுவரை தேரவாத பௌத்த சமூகமாக இருந்த இனக்குழுமம் பௌத்த சிங்கள இனமான உருப்பெறுகிறது.
கிபி 10 ம் நூற்றாண்டில்; நடைபெற்ற இராஜ ராஜ சோழனின் படையெடுப்பில் அனுராதபுரம் முற்றாக அழிக்கப்படுகிறது.அங்கிருந்த தமிழர்களின் பெரும்பகுதியினர் சோழர்கள் புதிதாக உருவாக்கிய சனநாத மங்களம் என்ற பொலநறுவையிலுள்ள புதிய தலை நகரத்துக்கு இடம்பெயருகின்றனர்.ஒரு சிறு பகுதியினர் மட்டும் அழிந்து போன அந்த நகரத்தின் எல்லைக் கிராமங்களில் வாழ்ந்து வந்தனர்.
கிபி 10ம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து 18 ம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை அந்த நகரம் காடு மண்டிப் போய் அதன் சிறப்பும் வரலாறும் தெரியாத அளவுக்கு மறைந்து போய் இருந்தது.
18 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட பௌத்த மறுமலர்ச்சி இயக்க காலத்திலேயே அனுராதபுரம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு புனரமைக்கப்படுகிறது.
18 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்த பௌத்த சிங்கள தேசிய வாதிகள் அந்த நகரம் புராதன பௌத்த நகரம் என்பதை அடிப்படையாக வைத்து அதன் வரலாற்றை சிங்கள மயப்படுத்தினர்.
இனத்துவம் தேசிய இனங்கள் என்ற வரையறைகள் தோற்றம் பெறாத இன்னும் குறிப்பாகச் சொன்னால் சிங்கள இனமே தோற்றம் பெறாத கிமு.2ம் நூற்றாண்டில் பௌத்தன் அல்லாத எல்லாளனுக்கும் பௌத்தனான துட்டகைமுனுவுக்கும் நடந்த யுத்தத்தை தமிழ் சிங்கள யுத்தமாக அடையாளப்படுத்தி வரலாற்றை திரிபு படுத்தினர்.அனுராத புரத்திலிருந்த பிராமி கல்வெட்டுகளை ஆரம்ப சிங்கள மொழி கல்வெட்டுக்கள் என்று கூறி பொய்யான அர்த்தம் கொடுக்க முற்பட்டனர்.அங்கிருந்த கிபி இரண்டாம் முன்றாம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டுக்களை அழித்தனர்.ஆரம்பகால பௌத்தர்;கள் அனைவரும் தமிழர்களே என்பதையும் தமிழும் பாளி மொழியும் கலந்து கிளை மொழியாக திரிவு பட்டே சிங்கள மொழி தோன்றியது என்பதையும் மூடி மறைத்தனர்.
பௌத்த சிங்கள தேசியவாதிகளின் இந்த வரலாற்ற மோசடியை கட்டுடைத்து பௌத்தத்தின் வரலாறு சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல என்பதையும் அனுராதபுரத்துக்கு உரித்துடையவர்கள் தமிழர்களே என்ற சான்றுகளோடு நிரூபிப்பதற்கும் தமிழீழத் தமிழர் தரப்பில் யாருமே இருக்க வில்லை.அன்றைய கால கட்டத்தில் தங்களை வரலாற்றாசியர்கள் ஆராட்சியாளர்கள் என்று சொல்லிக்கொண்ட அனைவருமே ‘சைவம்-தமிழ்’ என்ற கறுப்புக் கண்ணாடியை அணிந்து கொண்டு தமிழர்களுடைய வரலாற்றை பார்த்தார்கள்.
ஆரம்பகால பௌத்தர்கள் தமிழர்களே என்று ஒப்புக்கொண்டால் தங்களது மேலாண்மைக்கு பங்கம் வந்துவிடும் என்று பௌத்த சிங்கள தேசியவாதிகள் நினைக்க….
அன்றைய தமிழ் தேசியவாதிகளோ தமிழர்கள் பௌத்தர்களாக இருந்ததை ஒப்புக்கொண்டால் சைவ மேலாண்மைக்கு இழுக்காகிவிடும் அஞ்சினார்கள்
இதன் விளைவு அனுராதபுர நகரம் சிங்களவர்களின் வரலாற்றதொட்டிலாக உருவகப்படுத்தப்பட அந்த அரசின் குடிமக்களாக இருந்த தமிழர்களின் 100 வது 200 வது தலைமுறையினர் சிங்களவர்களாக மாற்றப்பட்டார்கள்.

 

Edited by navam

  • 2 weeks later...

instead of shouting here, just go to wikipedia and other similar sites and update the records as u say.

 

my words may me little bit harsh, but sorry to say that.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.