Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிராண்ட்பாஸ் விவகாரம்: அரசாங்கமும் முஸ்லிம் அமைச்சர்களின் நிலையும்

Featured Replies

 
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 12 ஆகஸ்ட், 2013 - 17:31 ஜிஎம்டி
 
130812170812_grandpass_mosque_512x288_ap

காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போது கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்கப்பட்டதாக ரிசாத் பதியுதீன் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர்

இலங்கையில், தலைநகர் கொழும்பில் கிரான்ட்பாஸ் பகுதியில் பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையால் இரண்டு இரவுகளாக நடைமுறையில் இருந்த ஊரடங்கு உத்தரவு இன்று திங்கட்கிழமை காலை தளர்த்தப்பட்டது.

ஆனால் இன்றும் அப்பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினரும் கலகத்தடுப்பு பொலிசாரும் பெருமளவு குவிக்கப்பட்டிருந்தனர். பழைய பள்ளிவாசலை புனரமைக்கும் நோக்கோடு, அதன் அருகில் இருந்த அரச மரத்தை வெட்டும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் பள்ளிவாசலை தாக்கியவர்களை கைதுசெய்ய இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் அமைச்சர்கள் மட்டுமன்றி ஐக்கிய தேசியக் கட்சியும் குற்றஞ்சாட்டியுள்ளது.

அமைச்சர் தினேஸ் குணவர்தன பேட்டி
 

 

 

பள்ளிவாசலை இனவாதிகள் தாக்கியதை இரண்டு தரப்புக்கிடையிலான மோதலாக அரசாங்கம் காட்ட முனைவதாக கொழும்பில் இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ சுட்டிக்காட்டினார்.

‘காவல்துறையினரும் சிறப்பு அதிரடிப் படையினரும் பார்த்துக்கொண்டிருக்கும் படியாக தாக்குதல் நடத்தியவர்களை கைதுசெய்யாவிட்டால் இதேமாதிரியான தாக்குதல் இன்னொரு இடத்தில் தொடரக்கூடும் என்றும்’ ஹரின் பெர்ணான்டோ கூறினார்.

'முஸ்லிம் தலைவர்கள் அரசின் பங்காளிகள்'- அமைச்சர் தினேஸ்
120924164107_rauf_hakeem_304x171_bbc_noc

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட பெரும்பாலான முஸ்லிம் கட்சிகள் அரசின் பங்காளிகளாக உள்ளன

இதற்கிடையே, கிராண்ட்பாஸ் விவகாரம் தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்களுடனும் பெளத்த தரப்புடனும் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த மூத்த அமைச்சர் தினேஸ் குணவர்தனவிடம், பள்ளிவாசல் மீதான தாக்குதல் தொடர்பில் ஏன் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்று தமிழோசை கேட்டது.

அமைச்சர் ரிசாத் பதில்
 

'பொலிசார் அவர்களின் கடமையை செய்துவருகிறார்கள். நாங்கள் மக்கள் வாழ்க்கையை பாதுகாக்கவும் அமைதியாக பிரச்சனையைத் தீர்ப்பதற்கும் முன்னுரிமை அளித்து செயற்படுகின்றோம்' என்றார் அமைச்சர் தினேஸ் குணவர்தன.

'கடந்த காலங்களில் முஸ்லிம் மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கிய காரணத்தால் தான் முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோரும் இந்த அரசாங்கத்தின் பங்காளிகளாக இன்று இருக்கிறார்கள்' என்றும் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருப்போரே தவறான பிரச்சாரங்களை முன்னெடுத்து தமது நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்த முயன்று வருவதாகவும் கிராண்ட்பாஸ் விவகாரம் தொடர்பில் முஸ்லிம், சிங்கள அமைச்சர்கள் கலந்துகொண்ட பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கிய அமைச்சர் தினேஸ் குணவர்தன கூறினார்.

'வெளியேறுவதால் எதுவும் நடக்காது'- அமைச்சர் ரிசாத்
120914174658_muslims_mahinda_rajapakse_3

'நாங்கள் அமைச்சர்களாக இருக்கும்போதே இப்படியான தாக்குதல்கள் நடக்கின்றதென்றால் வெளியேறினால் பிரச்சனை தீரும் என்பது தவறு' என்கிறார் அமைச்சர் ரிசாத்

 

இதேவேளை, முஸ்லிம் சமூகத்தின் தேவைகளைக் கருதியே தாம் அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தாா்.

இனவாத கும்பல்களுக்கு எதிராக அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்காதுள்ளமையைக் கண்டித்து முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அரசிலிருந்து வெளியேற வேண்டுமென்று சிலர் கூறுகின்ற கருத்துக்களை ஏற்க முடியாது என்றும் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதன் மூலம் பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன் கூறினார்.

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடக்கும் போது காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாகவும் அதனைக் கண்டித்தும் குற்றவாளிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரியும் சக முஸ்லிம் அமைச்சர்களுடன் சேர்ந்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

130811172948_muslim_grandpass_signatorie

கடந்த காலங்களில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்காத காரணத்தாலேயே இனவாத சக்திகள் மேலும் பலமடைந்துள்ளதாக இந்தக் கடிதத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/08/130812_grandpassgovmuslims.shtml

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

வியாபாரிகளின் கையில் சிக்கிவிட்ட இலங்கைத்தீவில் வாழும் சிறிலங்கர்களுக்கும் தமிழீழத்தவருக்கும் இனி மீட்சியே இல்லை. நாம் மீட்சிசிபெறவேண்டுமானால் இருமொழித் தேசியமும் ஒருவரை ஒருவர் ஏற்று அவர்களது சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளும்போது மட்டுமே சாத்தியமாகும். இல்லையேல் எம்மையும் எமது இறைமையையும் விற்றும் அழித்தும் கட்டப்படும் சிங்களத் தேசியமும் சிதையும் காலமொன்று உருவாகும். அப்போது எப்படிப் போத்துகேயப் பெயர்களை இலங்கையர் சூடிக்கொண்டதுபோல் சீனப்பெயர்களையும் சூடிக்கொள்ளும் நிலையொன்று ஏற்படலாம். அதன்பின் சீனாவின் ஒருமாகாணாமாகினாலும் ஆச்சரியப்பட முடியாது. சிங்களவர்கள் வடவர்கள் மேலுள்ள வெறுப்பைச் சரிக்கட்டச் சீனாவைத்துணைக்களைத்து இறுதியில் ஆப்பிழுத்த குரங்காகா நிற்கப்போகிறார்கள். சிங்கபூராவதெல்லாம் கனவாகவே முடியும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.