Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழம்-சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் - சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்
Francis Harrison

 

100-00-0000-797-0_b.jpg

Francis Harrison பல ஆண்டுகள் பிபிசியின் அயல் செய்தியாளராக ஆசியாவில் பணியாற்றினார். 2000 - 2004 வரை பிபிசியின் இலங்கைச் செய்தியாளராக செயல்பட்டார். இவர் எழுதி ஆங்கிலத்தில் வெளிவந்த Still Counting the Dead எனும் நூலின் தமிழாக்கமே இந்த நூல்.

 

புத்தகம் படிப்பதே தமிழர்களிடத்தில் குறைந்து வரும் நிலையில் இது போன்ற எமது வரலாற்றை தாங்கி நிற்கும் நூல்களை புலம்பெயர்ந்த இளம் சமூகம் வாசித்திருக்க சந்தர்ப்பங்கள் குறைவு என்றே நான் நினைக்கின்றேன். எமது கதையை எமக்காக வேறினத்தவர் ஒருவர் எழுத வேண்டிய துர்பாக்கிய நிலையில் தமிழினம் உள்ளது என்பது வருந்ததக்கது. இந்த கதைக்கு சொந்தக்காரர்கள் யாரையாவது நாம் சந்தித்தால் எம்மால் அவர்களிற்கு "அவர்களிற்கு நாம் இருக்கின்றோம்" என்ற உணர்வை கொடுப்பது எமது கடமை என்பதை மறந்துவிடாதீர்கள். இனியாவது நாம் எமது கடமைகளை செய்வோம்.  

 

Gordon Weiss கூண்டு புத்தகத்தில சொல்லபடாத அல்லது சொல்லவிரும்பாத பல சோகங்களை Francis Harrison போட்டுடைத்தது மட்டுமல்லாமல் Gordon Weissஇன் "நடுநிலையாளர்" முகத்திரையும் இந்நுலில் லேசாக கிளிந்து தொங்கவிட்டுள்ளார். Gordon Weiss மற்றும் Francis Harrison இருவருமே ஒரே இடத்தில் ஒரே சம்பவத்தை  வேறு கண்ணோட்டத்துடன் விபரித்துள்ளார்கள். 

 

இந்நூல் பற்றி எங்கே தொடங்கி எங்கே முடிப்பதென்றே தெரியவில்லை. ஒவ்வொரு சாட்சியத்தின் கதைகளும் மிக கொடூரமானவை. திரைப்படங்களில் போடுவது போல் "கர்பிணிப்பெண்கள், குழந்தைகள் இந்த புத்தகத்தை படிக்காதீர்கள்" எனும் அளவிற்கு அனுபவங்கள் உள்ளன. 

 

இது தமிழர்கள் மட்டும் தோற்ற யுத்தமல்ல.  ஐ.நா. மற்றும் முழு சர்வதேசமுமே தோற்ற யுத்தம் என்பது ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டுவிட்டது. போரில் நடப்பவைகளை பற்றி பேசிய தஙகளது பணியாளர்களை ஐ.நா. பேசுவதை நிறுத்தச் சொன்னது (நடுநிலையை கடைப்பிக்கிறார்களாம்). ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் அங்கே நடந்தவற்றை பற்றி வெளியுலகிற்கு தெரிய வைப்பதற்காக நிழற்பட அத்தாட்சிகளின் ஆதாரத்தை சமர்ப்பித்தும் ஐ.நா.வெறும் அறிக்களை மட்டுமே வெளியிட்டது. இதற்கும் ஒரு படி மேலே போய் ஐ.நா. இலங்கை அரசாங்கத்தின் மிரட்டலுக்கு அடிபணிந்ததை தைரியாமக சொல்லியுள்ளார். 

இந்த கொடூரங்களுக்கெல்லாம் போப் பாண்டவர் முடிவுகட்டுவார் என்று நம்பிக்கையில் ஒரு பாதிரியார் அவரிற்கு கடிதம் வேறு எழுதியுள்ளார். எழுதிய அந்த பாதிரியாரே பின்னர் காணாமல் போய்விட்டார் என்பதே பரிதாபம். 

 

சர்வதேசத்திற்கு ஒரு சாட்டையடியாக கொழும்பிலிருந்த பெரும்பாலான தூதுவர்கள் யுத்தத்தை எதிர்க்கவில்லை, புலிகளை பயங்கரவாதிகள் என தடைசெய்ததே அவர்கள் யுத்தத்திற்கு கொடுத்த மறைமுக ஆதரவு தான் என்றும், மனித உரிமைகள் பற்றி பேசும் இவர்கள் இலங்கை இராணுவத்திற்கு ஆயுதங்களை வழங்கிக்கொண்டுதான் இருந்தார் என்று விபரித்துள்ளார். 

 

இலங்கைக்கு யுத்த நிறுத்த காலத்திலும், யுத்தத்திற்கு தயாரான காலத்திலும் இங்கிலாந்து ஆயுதங்களை விற்றது என்ற செய்தி ஜயா Gordon Weiss அவர்களின நடுநிலமை என்ற வட்டத்திற்குள் வரமறுத்துவிட்டது. 

 

2009 ஏப்ரல் மாதத்தில் யுத்தம் கொடூரமாக நடந்துகொண்டிருக்கையில் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அளிக்கும் 1.2 பில்லியன் பவுண்ட் கடனை தாரளமாக கொடுக்கலாம் என  ஐ.நா. தீர்ப்பளித்து மறைமுகமாக ஆயுதங்கள் வாங்குவதற்கு தனது பங்களிப்பையும் செய்தது. இதே நேரத்தில் ஐ.நா.வை சேர்ந்த இரு ஓட்டுனர்களை இராணுவம் கைது செய்து சித்திர வதை செய்தது. பொதுமக்களை தான் காப்பாற்ற முடியவில்லை. தனது பணியாளர்களையும் காப்பாற்ற முடியாத அமைப்பாக ஐ.நா. இருந்தது. 

 

இந்த இனப்படுகொலையில் ஐ.நா.வும் சர்வதேசமும் கூட்டு களவாணிகள் என்பதை பார்த்தோம். 

 

---------------------------

 

லோகீசன் என்ற பத்திரிகையாளனின் சோகத்தை பார்பபோம்.

 

காயம்பட்ட லோகீசன் மருத்துவமனையில் கண்ட காட்சிகள் கற்பனை செய்துபார்க்கவே முடியாதவை. இறந்த தாயில் பால் குடித்த குழந்தை முதல் இறந்த தாயின் வயிற்றிலிருந்து எட்டிப்பார்த்த குழந்தையின் உடல் உறுப்புகள், அகதி முகாமுக்கு செல்லும் வழியில் பேரூந்தில் பெண் குழந்தை பெற்றது என்று அனைத்தையுமே அவன் கண்டிருக்கின்றான்.கருவறை கூட அங்கே பாதுகாப்பாக இருக்கவில்லை.

 

தப்பி வந்து முகாமில் அவன் கண்ட காட்சிகள் இன்னும் அசிங்கமானவை. 1980களில் ஒரு வயலில் இந்திய இராணுவத்தால் தமிழ் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை பார்த்தவனுக்கு மீண்டும் அதே காட்சி நடந்தேறுகிறது என்பதை நினைத்து விறைத்துப்போனான். விவரிக்கமுடியாத ஒரு துன்பம் அவன் தந்தையை அவனுக்கு முன்னால் நிர்வாணமாக நிற்க வைத்தது.

 

.----------------------------

 

ஒரு மருத்துவரின் வாக்குமூலம்

 

பாதுகாப்பு வலயம் அமைந்த இடம் பற்றிய மற்றவர்களின் பார்வையிலிருந்து இவரின் பார்வை வேறுபடுகிறது.

 

பாதுகாப்பு வலயத்தை வேண்டுமென்றே புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசம் இருந்த இடத்திற்கு அருகாமையில் அமைத்தது மட்டுமின்றி அது பற்றி புலிகளிற்கு அறிவிக்காமல் விட்டது மக்களை வேண்டுமென்றே கொல்வதற்கான திட்டமாகவே பார்க்கின்றார். உண்மையில் மக்களை காப்பாற்ற நினைத்திருந்தால் போர் நடைபெற்ற இடத்திலிருந்து தள்ளியே பாதுகாப்பு வலயத்தை அமைத்திருக்கலாம். 

 

மருத்துவமனைகளை மீதான தாக்குதல் என்பது திட்டமிட்டே நடபெற்றது என்பதற்கான இவரின் சாட்சி மிகவும் முக்கியமானது. தாங்கள் மருத்துவமனை இருந்த இடத்தை பாதுகாப்புத்துறைக்கு அறிவித்த சில மணிநேரங்களில் அங்கு குண்டுகள் விழுந்துவெடித்தன. எனவே தாங்கள் அதன் பின்னர் உருவாக்கிய மருத்துவமனையின் இருப்பிடங்களை செஞ்சிலுவைச்சங்கத்திற்கோ, ராணுவத்திற்கோ அறிவிக்கவில்லை. என்ன ஒரு ஆச்சர்யம்! இந்த முறை எந்த மருத்துவமனையும் தாக்குதலிற்குள்ளாகவில்லை.

 

"ஒரு நாள் பதுங்குளிக்குள்ளிருந்து வெளியே பார்த்துக்கொண்டிருந்த அவர் பனை மரம் ஒன்றிலிருந்து ஒரு பழம் விழுந்து கிடப்பதை கண்டார். அந்த பழத்தை சாப்பிடலாம். ஓடிப்போய் அதை எடுத்து வா என்று தன் உதவியாளரிடம் சொன்னார். அங்கு சென்ற அந்த இளைஞன் அது வட்டமான கறுத்த பனம்பழம் அல்ல உடம்பிலிருந்து துண்டாக்கப்பட்ட ஒரு சிறிய குழந்தையின் தலை என்று சொன்னார்"

 

இறுதியில் அவரது உதவியாளரும் காணாம் போய் அவரிற்கு என்ன நடந்ததென்று இதுவரை எதுவும் தெரியவில்லை. பல உயிர்களை காப்பாற்றிய அந்த நல்லுள்ளம் என்ன ஆனது என்று யாருக்குமே தெரியவில்லை. 

 

---------------------

 

கன்னியாஸ்திரியாக பணியாற்றியவர் இக்நோசியஸ். 

 

ஏனையவற்றிலிருந்து இவரிற்கு வேறொரு முக்கியமான சம்பவம் நடந்தது. திருச்சபையில் இருந்த சிங்களப் பாதிரியார்கள் அரசாங்கத்தை ஆதரித்த வேளை தமிழ் பாதிரியார்கள் போரை நிறுத்தும் படி கேட்டுக்கொண்டிருந்தார்கள். இந்த தமிழ் பாதிரியார்கள் சிங்கள பாதிரியார்களால் "பயங்கரவாத ஆயர்கள்" என்றும் அழைக்கப்பட்டார்கள். 

 

தலைநகரில் அவர்கள் கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் இங்கே இவர்கள் யுத்த வலையத்திற்குள் வேலை செய்துகொண்டிருந்தார்கள். 

 

யுத்த வலயத்திற்குள் பாதிரியார்கள் காயம்பட்ட வேளையில் ஒரு சிங்கள பாதிரியார் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. 

 

-----------------------------------

 

உமா என்ற காலில் காயம் பட்ட ஒரு ஆசிரியை தனது கதையை சொல்கிறார். 

 

பதுங்குழிகள் அமைப்பதற்கு இவர்கள் பயன்படுத்தியது விலையுயர்ந்த பட்டுப்புடவைகள். ஆயிரக்கணக்கான விலையுயர்ந்த பட்டுச்சேலைகள் வெறும் இருபது ரூபாய்க்கு வந்தது. 

 

ஒரு செஞ்சிலுவைச்சங்க பெண் பணியாளருடனான இவரின் விவாதம் முக்கியம் பெறுகின்றது. 

மக்கள் காயம்படும்வரை காத்திருந்துவிட்டு அதன்பின்னர் கப்பலில் காப்பாற்றுவதை விட அவர்கள் காயம்படும் முன்னரே ஏன் நீங்கள் காப்பாற்றவில்லை என்று அவர் கேட்பது சாட்டையடி. 

 

ஐ.நா.வைப்போல், செஞ்சிலுவைச்சங்கத்தை போல் கடவுளும் தங்களை கைவிட்டுவிட்டார் என்னுகிறார். 

 

-----------------------

 

முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு வெறுமனே ஐ.நாவும் சர்வதேசமும் மட்டும் பொறுப்பல்ல. புலம்பெயர்ந்த தமிழர்களாகிய நாங்களும் தான் பொறுப்பு. சர்வதேசம் தலையிட்டு  அழிவைத்தடுக்கும் என்று ஊக்கம் கொடுத்த புலி ஆதரவாளர்களும் பொறுப்பு.

 

இங்கே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிற்கு கை செலவிற்கும் கொடுக்கும் பணத்தில் அங்கே ஒரு குடும்பமே ஒரு நாள் வாழலாம். 

 

பிறந்தநாள் கொண்டாட்டங்கள், புதிய கார்கள், ஒரு முறை மட்டும் உடுக்க ஒரு சேலை, ஒற்றுமையில்லாமை, அரசியல் நோக்கம் எதுவும் இல்லாத இளைஞர்களின் குழு வன்முறை என்று அனைத்தையுமே கண்டு ஆச்சரியப்பட்டார். இதற்காகவா தாம் குடும்பங்களை பிரிந்து மாதக்கணக்கில் காடுகளிற்குள் துன்பங்களை அனுபவித்தோம் என்று மனம் வருந்துகின்றார் ஒரு போராளித்தாய். 

 

நாம் எப்படிபட்ட ஒரு சமூகம் என்பதை ஒரு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணின் பார்வையைப்பாருங்கள். எவ்வளவு கொடிய சமூகம் நாம். 

 

"தான் அனுபவித்ததை தமிழ் சமூகம் அறிந்தால் வாழ்வதில் பிரியோசனமே இல்லை"
 

தமிழ் சமூகம் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்களை களங்கப்பட்டவர்களாகவே பார்க்கிறது. பல பெண்கள் இப்படியான துன்பங்களை அனுபவித்தும் அவர்கள் இது பற்றி வெளியில் சொல்ல முன்வராததற்கு தமிழர்களாகிய நாம் தான் காரணம். அப்படி அது வெளியில் தெரியவரும் போது அவர்களை நாம் மீண்டும் ஒரு தற்கொலைக்கே தள்ளுகின்றோம். 

 

-----------------------------------

 

அனைவரும் பொதுவான ஒரு விடயத்தை சொல்கிறார்கள்.

 

விடுதலைப்புலிகள் கட்டாயமாக பதின் வயது இளைஞர்களை ராணுவத்தில் சேர்த்தாகவும் பொதுமக்கள் மீது சுட்டதாகவும். இந்த இரண்டும் தான் முக்கியமான குற்றச்சாட்டுகளாக உள்ளன. 

 

தடைசெய்யப்பட்ட குண்டுகளை ராணுவம் பாவித்ததை கிட்டத்தட்ட அனைவருவே பார்த்திருக்கின்றார்கள். 

 

---------------------------------

 

முடிவுரையில் இனப்பிரச்சனைக்கு சர்வதேசமும் இலங்கை அரசாங்கமும் எந்த முடிவையும் முன்வைக்கவில்லை என்கிறார். இன்று நாம் ஐ.நா.விடம் நீதி கேட்டு நிற்கின்றோம். ஆனால் இந்த ஐ.நா.தான் 2009 எம்மை கைவிட்டது. போர்குற்றம் என்ற சொல்லே இடம்பெறாத தீர்மானங்களையும், குற்றவாளிகள் தங்கள் குற்றத்தை தாங்களே விசாரிப்பது போன்ற கூத்துக்களையே அரங்கேற்றிவருகின்றன. 

 

இதன் மூலம் இனியொரு ஒரு போராட்டம் வெடித்தால் நாம் சிங்களவர்களை மட்டுமல்ல எம்மை கைவிட்ட  சர்வதேசத்தையும் சேர்த்தே வெறுப்போம் என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக்ககூறியுள்ளார். 

Edited by செங்கொடி

pls send me a copy either in pdf to bala_r80@yahoo.com / hard copy to R.Balaji, JE E/M, GE (Central), Agaram Post, Bangalore-560007 Karnataka, India

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

pls send me a copy either in pdf to bala_r80@yahoo.com / hard copy to R.Balaji, JE E/M, GE (Central), Agaram Post, Bangalore-560007 Karnataka, India

வணக்கம் நண்பரே

 

உங்களுடைய கேள்வி எனக்கு முழுவதுமாக புரியவில்லை. இந்த புத்தகம் எங்கே வாங்கினேன் என்று கேட்கின்றீர்களா? இந்த புத்தகம் சென்னையில் அனைத்து புத்தக நிலையங்களிலும் வாங்கலாம் என நினைக்கின்றேன். 

 

மற்றும் PDF வசதி என்னால் செய்துதர முடியாது. செய்துதரவும் கூடாது. 

 

நன்றி. 

  • 2 weeks later...

செங்கொடி avargalay, ungalathu min anjal mugavari emaku vandum, koduka eayalum endral, thayavu saiyum.

 

nandri.


allathu kuraintha patcham twitter id koduthal uthaviyaka irrukum.

nandri


allathu kuraintha patcham twitter id koduthal uthaviyaka irrukum.

nandri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செங்கொடி avargalay, ungalathu min anjal mugavari emaku vandum, koduka eayalum endral, thayavu saiyum.

nandri.

allathu kuraintha patcham twitter id koduthal uthaviyaka irrukum.

nandri

allathu kuraintha patcham twitter id koduthal uthaviyaka irrukum.

nandri

உங்களிற்கு தனிமடல் அனுப்பியுள்ளேன்.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

pls send me a copy either in pdf to bala_r80@yahoo.com / hard copy to R.Balaji, JE E/M, GE (Central), Agaram Post, Bangalore-560007 Karnataka, India

https://www.nhm.in/shop/100-00-0000-797-0.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.