Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெலிவேரிய தாக்குதற்சம்பவம் தமிழர்கள் செய்யவேண்டியது என்ன..?

Featured Replies

வெலிவேரியா! சிங்களவர்கள் மேற்கொண்ட தமிழின அழிப்பை வெளிப்படுத்தியதில் முன்னணிக் கிராமமாக மாறியிருக்கின்றது. சிறீலங்காவின் மிக முக்கியமான பேசு பொருளாகவும் இந்தக் கிராமம் மாறியிருக்கின்றது.

Veliveriya%20army.jpg

இந்தக் கிராமத்தை உலகத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதற்கு சிங்களக் கட்சிகள் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றன. ஆட்சிக் கட்டிலில் அமரத் துடித்து நீண்ட நாட்களாக எந்தவொரு இரையும் கிடைக்காத எதிராக்கட்சிகளுக்கு வெலிவேரியா ஒரு முக்கியமான இரையாகக் கிடைத்திருக்கின்றது. இனிச் சிறிது காலத்திற்கு இதனையே வைத்து அரசியல் நடத்த முடியும்.

எதிக்கட்சிகள் என்பவை திறமையாக இருக்கின்ற ஒரு நாட்டில்தான் நேர்சீரான ஆட்சி நடைபெறும். அதுவும் ஜனநாயக நாடொன்றில் எதிர்க்கட்சிகள் தான் ஆட்சியை நகர்த்திச் செல்கின்றன. ஆளும் கட்சி விடுகின்ற தவறுகளை சுட்டிக்காட்டி தட்டிக்கேட்டால்தான் ஆளும் கட்சி அந்தத் தவறுகளைத் திருத்த முடியும். உலகத்தில் உள்ள பல நாடுகளில் கடந்த காலங்களில் ஆட்சி செய்து நற்பெயர் பெற்ற பல ஆட்சியாளர்கள் தத்தமது நாடுகளில் நல்ல எதிர்க்கட்சிகள் இருந்தமையால்தான் தாங்கள் புகழ் பெற்றதாக வெளிப்படையாகவே கூறியிருக்கின்றனர்.

ஆனால், சிறீலங்காவைப் பொறுத்தவரை எதிர்க்கட்சி என்பது முதுகு உடைந்த ஒட்டகம் போன்றே உள்ளது. மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக வந்த பின்னர் எதிர்க்கட்சி என்பது இருந்தும் இல்லாதது போலவே உள்ளது. ஏனென்றால் பலமான எதிர்க்கட்சியாக இல்லாதது ஒருபுறம் போக ஆளும்கட்சியிடமிருந்து உள்ளக ரீதியாக பெரும் பணத்தைப் பெற்றுக்கொண்டு வெளியே எதிர்க்கட்சி போன்று நடிக்கின்றவர்களே இன்று எதிர்க்கட்சியின் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கின்றனர். இதனால்தான் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஆனால், சந்தர்ப்பம் வரும்போது எப்படியாவது ஆட்சியை வீழ்த்தி தாங்களும் ஆட்சிக் கதிரையில் அமரலாம் என்றே இப்போதைய எதிர்க்கட்சியினர் கருதிக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறு நீண்ட காலமாக பார்த்துக்கொண்டிருந்த எதிர்க்கட்சிக்கு இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. அதுதான் வெலிவேரியா சம்பவம். சுத்தமான குடிதண்ணீர் கேட்டு கம்பகா மாவட்டக் கிராமங்களில் மக்கள் நடத்திய போராட்டத்தின் ஓர் அங்கமாக வெலிவேரியாவிலும் மக்கள் தண்ணீர் போராட்டங்களை நடத்தினர். இந்தப் போராட்டத்தை அடக்குவதற்கு படையினர் கையாண்ட அராஜக முறைகளைத் தொடர்ந்து மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும்போது உயிரிழந்தனர்.

இந்த நிலையில், மேற்படி சம்பவத்திற்கு பின்னர் தான் சிறீலங்காவின் எதிர்க்கட்சிகளின் உள்ளக குணாம்சத்தை தமிழ் மக்களால் புரிந்துகொள்ள முடிந்துள்ளது. அதாவது, மேற்படி வெலிவேரிய சம்பவத்தை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் அனைத்துமே கண்டித்திருந்தன. குறிப்பாக முஸ்லிம் கட்சிகளும் இந்தக் கண்டன அணியில் இணைந்துகொண்டன. இதில் வேடிக்கை என்னவென்றால், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பல சிங்கள அரசியல்வாதிகள் மேற்படி சம்பவத்தை முள்ளிவாய்க்காலுடன் ஒப்பிட்டதுடன் சர்வதேச விசாரணையைக் கோரியிருக்கின்றமையாகும்.

வெலிவேரியாவில் ஏதோ ஓரிரு படையினரின் துப்பாக்கிச் சூட்டில் மூன்று சிங்களப் பொதுமக்கள் உயிரிழந்தனர். அதற்காக அந்த இழப்பை நாங்கள் எள்ளி நகையாடவில்லை. ஆனால், முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான படையினரின் கண்மூடித்தனமான தாக்குதல்களால், அதுவும் நவீன இரசாயன ஆயுதங்களின் தாக்குதல்களினால் முள்ளிவாய்க்காலில் மட்டும் முப்பதாயிரம் வரையான தமிழ் மக்கள் கொல்லப்பட்னர். இந்த மக்கள் ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்டபோது வாய்மூடி மௌனிகளாக இருந்த சிங்கள எதிர்க்கட்சிகள், தென்னிலங்கையில் மூன்று சிங்களவர்கள் கொல்லப்பட்ட போது சர்வதேச விசாரணை கோருகின்றன. இதிலிருந்தே, இந்த நாட்டில் தமிழ் மக்கள் வாழத் தகுதியற்றவர்கள். அவர்கள் எப்படியும் போகலாம். அவர்களை யாரும் அழிக்கலாம். ஆனால், சிங்கள மக்கள் மட்டும் தான் மனிதர்கள் என்ற நிலையிலேயே தென்னிலங்கை அரசியல்வாதிகள் திகழ்கின்றமை வெட்ட வெளிச்சமாகத் தெரிகின்றது.

இதற்கு மேலாக இந்த விடயத்தில் சிங்கள ஊடகவியலாளர்களின் அவதானிப்புகளும் வெளிப்பாடுகளும் வெட்கப்படவேண்டியனவாக இருந்திருக்கின்றன. ஊடகவியல் என்றால் என்ன என்று தெரியாதவர்களா இவர்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது. அதாவது, வெலிவேரிய சம்பவத்தில் சில ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டனர். இது ஏற்றுக்கொள்ள முடியாததுதான். அது கண்டிக்கப்பட வேண்டியதான். ஆனால், சம்பவத்திற்கு மூன்று தினங்களின் பின்னர் கொழும்பில் உள்ள ஊடக அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுகூடி பெரும் கூட்டம் ஒன்றை நடத்தின. இராணுவத்தினர் வெலிவேரியாவில் மக்களைச் சுட்டுக்கொன்றமைக்கு இவர்கள் கண்டனம் தெரிவித்ததுடன், தெற்கிலேயே படையினர் இப்படியென்றால் வடக்கில் இத்தனை வருடங்களாக தமிழ் மக்களை என்னபாடு படுத்தியிருப்பார்கள் என்பது இதிலிருந்தே புரிகின்றது என்றனர்.

நாட்டில் நடைபெறுகின்ற சம்பவங்களை அறிந்து தினந்தோறும் அறிக்கையிடுகின்ற இதே ஊடகவியலாளர்கள்தான் கடந்த 2008, 2009 ஆம் ஆண்டுகளில் வன்னியில் நடைபெற்ற யுத்தத்தை அறிக்கையிட்டவர்கள். இந்த யுத்தத்தின் போது சிங்களப் படையினரின் இரசாயனக் குண்டுகள், கொத்துக் குண்டுகளின் தாக்குதல்களினால் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அதைவிட அதிகமானோர் காயமடைந்தனர். மக்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. உடைமைகள் நாசமாக்கப்பட்டன. பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர். சமாதானம் பேச வந்த தளபதிகள் குரூரமாகக் கொல்லப்பட்டனர். இவைகள் அனைத்தும் நேற்று நடந்ததைப் போன்று இறுதி யுத்தத்தில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வெலிவேரியாவில் மூன்று உயிர் போனதைப் பற்றி நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில்தான், சிறீலங்கா படையினர் தெற்கில் இப்படியென்றால் வடக்கில் எப்படி தமிழ் மக்களை வதைத்திருப்பர் என்று சந்தேகம் வெளியிடுகின்றனர்.

இதிலிருந்தே வடக்கில் நடைபெற்ற தமிழின அழிப்பு தொடர்பாக தென்னிலங்கை ஊடகங்கள் அப்போது எந்தவிதமான உண்மைச் செய்திகளையும் வெளியிடவில்லையென்பது அம்பலமாகியியுள்ளது. எனவே, சிறீலங்காவின் நிலமைகள் தொடர்பில் ஆராய்கின்ற வெளிநாட்டவர்கள் இந்த விடயத்தில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். முள்ளிவாய்க்காலில் சர்வதேச இராஜதந்திரிகளும் இந்த விடயத்தை கூர்ந்து அவதானிக்க வேண்டும். வெலிவேரியாவில் மூன்று சிங்கள மக்கள் கொல்லப்பட்டபோது கொதித்தெழுந்து சர்வதேச விசாரணையைக் கோருகின்ற பிரதான எதிர்க் கட்சியினர், கடந்த யுத்த காலத்தில் தமிழ் மக்களின் இழப்புகளையும் அவலங்களையும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

வெலிவேரிய மக்கள் சுத்தமான தண்ணீர் கேட்டு மட்டுமே போராட்டம் நடத்தினர். ஆனால், வன்னி மக்கள் குடிப்பதற்கு கழிவு நீரேனும் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் அலைந்தபோது கொல்லப்பட்டனர். இவைகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி வாயே திறக்கவில்லை. நாட்டு மக்கள் கொல்லப்பட்டபோது ஐக்கிய தேசியக் கட்சியும் ஏனைய சிங்களவர்களும் இனவேறுபாடு பார்த்து வாழாவிருந்தனர். இதே போன்றே சிங்கள ஊடகங்களும் அப்போது பேசாமல் இருந்திருக்கின்றன.

ஆனால், தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பது போன்று இப்போது தென்னிலங்கையில் சிங்கள இனத்திற்கு ஆபத்து என்றவுடன் தமிழர்களுக்கு பரிவு காட்டுவது போன்று நாடகமாடுகின்றனர். இனியாவது சர்வதேசம் ஒரு கருத்தை ஆழமாக கணிப்பிட வேண்டும். தமிழர் தாயத்தில் இடம்பெற்றது திட்டமிட்ட இன அழிப்பு என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சியங்கள் தேவையாவுள்ளன என்பதை சர்வதேசம் வெளிப்படுத்த வேண்டும்.

ஒரு நாட்டில் நடைபெறுகின்ற வன்முறைகள் மற்றும் அழிவுகளை வெளியே எடுத்துக்கூறி அதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது ஊடகங்களின் தலையாய கடமை. ஆனால், தென்னிலங்கை ஊடகங்கள் அந்தப் பணியைச் செய்யாமல், வன்னியில் தமிழ் மக்களின் அழிப்பை சிங்கள மக்களுக்கே மறைத்திருக்கின்றனர். இதன் மூலம் இன அழிப்புக்கு துணைபோயிருக்கின்றனர்.

எனவே, சிறீலங்காவிலுள்ள சிங்களவர்கள் தமிழ் மக்களை அழிப்பதற்கு மிகுந்த திட்டமிடல்களுடனேயே செயற்பட்டார்கள் என்பதை சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டிய முக்கிய பொறுப்பு புலம்பெயர்ந்த உறவுகளையே சாரும். புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மேற்படி வெலிவேரிய சம்பவம், அந்த சம்பவம் இடம்பெற்ற பின்னர் சிங்கள தேசத்திலுள்ள பிரதான அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள் கருத்துக் கூறிய விதம் போன்றவற்றை ஆவணப்படுத்தி தத்தமது நாடுகளின் இராதந்திரிகளுக்கு அனுப்ப வேண்டும்.

சிறீலங்கா அரசாங்கம் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உட்பட சிங்களவர்களின் பூரண ஒத்துழைப்புடனேயே தமிழர்களை அழித்தொழிக்கும் படலத்தை அரங்கேற்றியது என்பதை சர்வதேசத்திற்கு நிறுவிக் காட்ட வேண்டியது புலம்பெயர் தமிழ் மக்களின் முக்கியமான கடமையாகும். இதற்கான களத்தையே வெலிவேரியா அமைத்துத் தந்திருக்கின்றது. 

- தாயகத்தில் இருந்து வீரமணி  

நன்றி: ஈழமுரசு

http://www.sankathi24.com/news/32334/64//d,fullart.aspx

ivvalavayum parthukondu 'ucch' kottikondu irukum oru kevalamana tamil natu tamilanagavay irukirom nanum en thaatha kalaignarum

  • கருத்துக்கள உறவுகள்

ivvalavayum parthukondu 'ucch' kottikondu irukum oru kevalamana tamil natu tamilanagavay irukirom nanum en thaatha kalaignarum

 

இவ்வளவையும்  பார்த்துகொண்டு  உச்   கொட்டிக்கொண்டு  இருக்கும்  ஒரு  கேவலமான  தமிழ் நாட்டு   தமிழனாகவே  இருக்கிறோம்  நானும்  என்  தாத்தா கலைஞரும்  
 
பாலா, இது தான் சொல்ல வந்திருப்பீர்கள். உங்கள் ஆங்கில பதிவுகளையே தமிழ் தருகின்றது: https://translate.google.co.uk/
 
From பகுதியில் தமிழ் செலக்ட் பண்ணி, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்வது எல்லாம் தமிழில் விழும். பின்னர் copy and paste.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.