Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்ட 3வது கட்ட போராட்டம் குறித்து தெளிவுப்படுத்த வேண்டும்- அரசாங்கம் :

Featured Replies

CV_CI.jpg
 
 
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், தேர்தல் பின்னர் மூன்றாவது கட்ட போராட்டத்தை முன்னெடுக்க போவதாக கூறியுள்ளதாகவும் அந்த போராட்டம் என்ன என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 
குருணாகல் மெல்சிறிபுர நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.  இலங்கை சிறிய நாடு என்ற போதிலும் மிகவும் சிரேஷ்ட வரலாற்றை கொண்ட நாடு.  போரை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் அமைதியை நிலை நாட்டிய பின்னரே இந்த கௌரவமான வரலாற்றை பற்றி பேசுவதற்கு எமக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
 
 
வெளிநாட்டு அழுத்தங்களை எதிர்கொள்ள கூடிய பலம் இன்று எதிர்க்கட்சிக்கு இருக்கின்றதா என்பது கேள்வி குறி.  எதிர்க்கட்சி நாட்டை ஆட்சி செய்த போது ஏற்பட்ட வெளிநாட்டு அழுத்தங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள விதம் எமக்கு நினைவில் உள்ளது.
 
2004 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சி வராமல் போயிருந்தாலும் அதற்கு பின்னர் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படாதிருந்தால், இன்று வடக்கில் தனி ஈழம் உருவாகி இருக்கும். வடக்கில் அரச தலைவராக வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்திருப்பார். இலங்கை இரண்டு நாடுகளாக பிளவுப்பட்டிருக்கும்.
 
எந்த நாட்டின் தலைவரும், பயங்கரவாதிகளுடன் உடன்படிக்கைகளை மேற்கொண்டு நாட்டை காட்டி கொடுத்ததில்லை.  அப்படி செய்த ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே.  விடுதலைப்புலிகளுடன் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டு  நாடடின் ஒரு பகுதியை அவர்களுக்கு கொடுத்தார். நாட்டை பிளவுப்படுத்த செய்து கொண்ட உடன்படிக்கை காரணமாக நாடு எந்தளவுக்கு பின்நோக்கி சென்றது.
 
இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடக்கப்பட்டனர்.  விடுதலைப்புலி உறுப்பினர்கள் முகாம்களுக்கு எதிரில் வந்து சிறுநீர் கழித்தனர். சாரத்தை தூக்கி பினபுறத்தை காட்டினர். இராணுவத்தினர் வாகனத்தில் ஏறி செல்லும் போது, புலிகள் ஊ சத்தமிட்டனர். அப்படி நடக்கும் போது, இராணுவத்தினரை வாயை மூடிக் கொண்டு இருக்குமாறு ரணில் கூறினார் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். 
இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடக்கப்பட்டனர்.  விடுதலைப்புலி உறுப்பினர்கள் முகாம்களுக்கு எதிரில் வந்து சிறுநீர் கழித்தனர். சாரத்தை தூக்கி பினபுறத்தை காட்டினர். இராணுவத்தினர் வாகனத்தில் ஏறி செல்லும் போது, புலிகள் ஊ சத்தமிட்டனர். அப்படி நடக்கும் போது, இராணுவத்தினரை வாயை மூடிக் கொண்டு இருக்குமாறு ரணில் கூறினார் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். 

 

சிங்கள மோடையாக்களுக்கு என்ன சொன்னால் எழும்பும் என்றது சிறிசேனாவுக்கு தெரிகிறது.

  • தொடங்கியவர்

விக்கி போன்றவர்களுக்கு 2 பக்கமும் அடிதான்  :icon_idea:

விக்கினேஸ்வரனும் அளவுடன் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்!

 

பேச்சுக்கு முன் செயல் இருக்க வேண்டும்!

Edited by Sayani

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி போன்றவர்களுக்கு 2 பக்கமும் அடிதான்  :icon_idea:

 

 

அதன்  மூலமே

அவர்  தன்னை தரமுயர்த்தமுடியும்

தமிழ் மக்கள் ஆவலுடன்  எதிர்பார்த்திருப்பது அதுவே

துலங்குவாரா?

துருப்பிடிப்பாரா?

காலம்   சொல்லும்

அதுவரை  நாம்  பொறுமை  காப்போம் :icon_idea:

பேச்சுக்கு முன் செயல் இருக்க வேண்டும்!

 

தடுமாறிக் கொண்டிருக்கும் சிங்களவனுக்கு பொல்லைக் குடுத்து அடிவாங்கக் கூடாது!

Edited by Sayani

சம்பந்தர் ராஜதந்திர போர் என்றார். விக்கினேஸ்வரன் 3ம் கட்டப் போர் என்றார். அவர் 3ம் கட்டப் போர்  என்று சொன்ன அதே பேச்சிலேயே, மூன்றாம் கட்டப் போர்  என்றால் என்ன என்பதை விளங்கப்படுத்தி இருந்தார்.  மோடைய மந்திரி இன்று "போராட்டம் என்றால் என்ன?" என்று இந்த கேள்வி எழுப்ப முதல் விக்கினேஸ்வரனின் விளக்கத்தையும் கேட்டிருந்தார். இந்த மோடைய மந்த்திரிக்கு அந்த விளக்கம்தான் வயிற்றை கலக்குகிறது. அவர் நேராகவேதான் சொல்லியிருந்தார் மாகாண சபைக்கு சட்டப்படியாக ரஜீவ்- JR சர்வதேச ஒப்பந்தப்படி  எழுத்தில் இருக்கும் அதிகாரங்களை தராவிட்டால் தாங்கள் சர்வதேசத்திடம் போவார்கள் என்றிருந்தார்.  

 

SJV யை பயங்கரவாதியாக அழைக்கும் சிங்கள மோடையாக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை வைத்து வடக்கில் தேர்தல் பிரசாரம் நடத்த வேண்டும் என்பதில்லை.

 

 

இந்த மந்திரிக் கோமாளி சிங்கள மோடையாக்களுக்கு 

  விடுதலைப்புலி உறுப்பினர்கள் முகாம்களுக்கு எதிரில் வந்து சிறுநீர் கழித்தனர். சாரத்தை தூக்கி பினபுறத்தை காட்டினர். இராணுவத்தினர் வாகனத்தில் ஏறி செல்லும் போது, புலிகள் ஊ சத்தமிட்டனர். அப்படி நடக்கும் போது, இராணுவத்தினரை வாயை மூடிக் கொண்டு இருக்குமாறு ரணில் கூறினார் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். 

 

 

என்று சிங்களத்தேர்தல் பற்றி பேசும் போது

 

சம்பந்தர்  தமிழர்களுக்கு ஒரு மணித்தியாலம் ஒரு சொல்லில் தவறு வரமால் தமிழ் தேர்தல் பற்றி அரசியல் பேசியிருக்கிறார்.

 

இந்த இரண்டு பேச்சுக்களையும் ஒப்பிட்டு பார்ப்பவர்களுக்கு, செய்த பிணங்களை புணர்வது சிங்கள ஆமிக்கடைகளா அல்லது சாரத்தை உயர்த்தி பின் வளத்தைக்காட்டுவது உலகின் ஒழுக்கத்தில் உயர்ந்திருந்த இயக்கமான புலிகளா என்பது. 

 

மோடையாக்களுக்கு சோல்பரியின்  பாராளுமன்ற ஆட்சியில் இருந்த நாட்டை தாம் என்ன பேசி அரசர் ஆட்சிக்கு கொண்டுவந்தார்கள் என்பது இனித்தன்னும் விளங்கினால் இப்படி எல்லாம் பேசுவார்களா?

 

பஞ்ச தந்திரத்தில் ஒரு கதை உண்டு. ஒரு புல்வெளியில் ஒரு குதிரை சிலகாலம் தான் மட்டும் தனியே மேய்ந்து வந்தது. ஒருநாள் அங்கே ஒரு கலைமான் தென்பட்டது. பொறாமை மேலீட்டால் குதிரை கலைமான் அருகில் சென்று தன் பின்வளத்தை கலைமான் பக்கம் திருப்பி கலைமானை எட்டி உதைத்தது. குதிரையின் சேட்டையால் வெகுண்ட கலைமான் தன் கூரிய கொம்புகளாள் குதிரையை குத்தி குத்தி புல்வெளிக்கு  வெளியே துரத்திவிட்டது. நொந்து கெட்டு போன குதிரை கலைமானை பழிவாங்க துடித்தது. அந்த பக்கம் ஒரு மனிதன் வந்தான். குதிரையைப் பார்த்து "கொளுமளு என்று நல்ல குதிரையாக இருக்கிறதே எப்படி இதைப் பிடிக்கலாம்" என்று மனதுக்குள் ஏங்கினான்.  பழிவாங்கத் துடித்த குதிரயின் மனத்தில் அது புரியவில்லை. அது தானாகவே மனிதனிடம் சென்று கலைமானைப்பற்றிச் சொல்லி அதை ஓட்ட உதவி கேட்டது. அப்போது மனிதன் சொன்னான் " அது இலகுவானது. நீ நான் தரும் கடிவாளத்தை வாயில் காவிக்கொள்ளு. அப்போது நான் உன் முதுகில் ஏறி  கலைமானை துரத்தி பிடித்து விடுகிறேன்' என்றான். குதிரை கடிவாளத்தை ஏற்றுக்கொள்ள மனிதன் அதன் மூதுகில் இருந்து கொண்டு கலைமானை வேட்டை ஆடினான்.  வேட்டை முடிய, குதிரை தனக்கு கடிவாளம் நோவதால் அதை நீக்கும் படி மனிதனிடம்  கேட்டது. "அது ஒன்றும் நீக்குவதற்கு இல்லை. நான் கலைமானை ஓட்டியதற்கு கூலியாக நீ  இன்றுமுதல் என் தோட்டத்தில் வேலை செய்ய வேண்டும்" என்று கூறி விட்டு குதிரையை இழுத்துச்சென்று தன் லாயத்தில் கட்டிவிட்டான். இலங்கை சீனாவிடம் மாட்டுப்பட்டிரும் விதம் அதன் கணனனிகளை சுதந்திரமாக உபயோகிக்க முடியவில்லை அல்ல நாட்டின் மிகப்பெரிய துறைமுகத்தை கூட தன்ன்னுடன் வைத்திருக்க முடியவில்லை.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கதை மல்லை..

சுயநிர்ணய உரிமையை அடைந்தே தீருவோம் – சி.வி.விக்னேஸ்வரன்

 

[ திங்கட்கிழமை, 26 ஓகஸ்ட் 2013, 08:53 GMT ] [ யாழ்ப்பாணச் செய்தியாளர் ]

CVV-jaffna.jpg

நம்மை நாமே ஆளும் வகையிலான சுயநிர்ணயஉரிமை என்ற தூரநோக்கு இலக்கை நாம் அடைந்தே தீருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில், நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது, வடக்கு மாகாணசபைத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “தமிழன் அவ்வளவு சுலபமாக துவண்டு விடமாட்டான், வருவது வரட்டும் என முன்னேறுவோம். 

புதிய பரிணாமத்தில் எங்கள் போராட்டத்தை நடத்த வல்லவர்கள் நாங்கள் என்பதை உலகத்திற்கு சொல்ல நாங்கள் முயற்சிக்கிறோம். 

பிரிந்து நின்ற தமிழ்பேசும் மக்கள் வடக்கு மாகாணசபை என்ற அலகின் கீழ் எமது ஒற்றுமையை உலகறியச் செய்வோம். 

அதற்கான மிகச் சிறந்த வாய்ப்பாக வடக்கு மாகாணசபைத் தேர்தல் அமைந்துள்ளது. 

எங்கள் ஒற்றுமைக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் அரசாங்கத்துடன் இணைந்திருப்பவர்களே. 

TNA-jaffna%20.jpg

தேர்தல் காலத்தில் மட்டும் தேனாகப் பேசி, தேர்ந்தெடுக்கப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசதரப்பினர் முன்வருகிறார்கள். 

அதன்பின் எங்களை மறந்து விடுகிறார்கள். வாக்குரிமை என்பது அவர்களுக்கு ஒருவித பண்டமாற்றாகி விட்டது. 

நாங்கள் இதைத் தருகின்றோம். நீங்கள் அதைத் தாருங்கள் என்கிறார்கள். 

ஆனால் தருவது அவர்களா? ஒரு போதும் இல்லை. 

இந்த நாட்டு மக்களை எதிரிகளாகக் கருதி கொடும் போரை நடத்தி, எமது மக்களின் வாழ்வாதாரங்களை நிர்மூலமாக்கி, எமது மக்களின் உயிர்களை கொய்தெறிந்து, உடல்களைச் சின்னா பின்னமாக்கி விட்டு தற்பொழுது இராணுவத்தை வைத்து எம்மை அடக்குமுறைக்குள் அகப்படுத்தியிருக்கும் அரசின் தூதர்களே இத்தகைய பண்டமாற்றில் ஈடுபட்டுள்ளார்கள். 

உங்களுக்குத் தெருக்கள் தந்தோம், வீதிகள் தந்தோம், இன்னும் தருவோம் உங்கள் வாக்குகளை எமக்குத் தாருங்கள் என்கிறார்கள். 

தெருக்கள் போட்டார்களே, அதுவும் அவசர அவசரமாகப் போட்டார்களே, அது யார் பணத்தில்? 

பாதிக்கப்பட்ட எமது மக்களின் இன்னல்களைப் பார்த்துப் பரிதாபப்பட்டு அண்டை நாடுகள் எமக்கனுப்பிய பணத்தைக் கொண்டு தான் தெருக்கள் போடப்பட்டன. 

இதில் வேலை வாய்ப்பு யாருக்குக் கிடைத்தது? எமது மக்களுக்கா அல்லது தெற்கில் இருந்து வந்த சிங்கள மக்களுக்கா? 

1956 ம் ஆண்டிலிருந்து 2009 ம் ஆண்டு வரை இந்தப் பக்கம் தலை வைத்தும் பார்க்காத ஆட்சியாளர்கள், ஏன் தெருக்களைப் போட்டார்கள்? 

வீடிழந்து, வேலையிழந்து, உற்றார் உறவினரைப் பறிகொடுத்து தமது பாரம்பரிய காணிகளுக்குள் செல்ல முடியாது இராணுவக் கெடுபிடிக்குள் அல்லலுறும் எமது மக்களுக்காகவா இந்த தெருக்கள் அமைக்கப்பட்டன? 

இராணுவம் வடமாகாணத்தின் எந்தப் பகுதியையும் உடனேயே சென்றடைய வேண்டும், தமிழ் பேசும் மக்களை அடக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே தெருக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

அது மட்டுமல்ல,வடமாகாண விவசாயி வியர்வை சிந்திப்பெறும் விளைச்சல்களை எல்லாம் நேரடியாக விவசாயிகளிடம் இந்த வீதி வழி சென்று குறைந்த பணம் கொடுத்து வாங்கிப் போய் கூடிய விலையில் தெற்கில் விற்கவும் தான் அவை அமைக்கப்பட்டன. 

எமது தமிழ்பேசும் அமைச்சர்களை தன்னிடம் வைத்துக் கொண்டே, எமக்கெதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

எம்மை கொண்டே, எமக்கு குழிபறிக்க பெரும்பான்மையின அரசு பின் நின்றதில்லை. 

டக்ளஸ் தேவானந்தா, தவராசா, அங்கஜன் ஆகிய மூவரும் தமிழ் பேசும் சகோதரர்கள். அவர்கள் போகும் பாதை தவறு என்பது எங்கள் கருத்து. 

எங்கள் அரசியல் வரலாற்றை ஆராய்ந்தால், எங்களை வைத்துக் கொண்டு எங்களை அழித்தார்கள். 

மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு துயரம். 2009ம் ஆண்டு நடந்த துயரம் என முக்கியமான சம்பவங்கள் பலவற்றின் போது அரசாங்கத்தில் தமிழ் அமைச்சர்கள் அங்கம் வகித்திருந்தார்கள். 

எம்மவர்களைக் கொண்டே எங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். 
 

TNA-jaffna1.jpg

நாம் பண்டமாற்று அடிப்படையிலான அரசியல் செய்ய விரும்பவில்லை. 

எங்கள் அரசியலும், நிர்வாகமும் மக்களுடைய நலன்களை அடிப்படையாகக் கொண்ட ஊழலற்ற உயிருள்ள நிர்வாகம். 

அதன்மூலம் சட்டத்தின், நீதியின், ஆட்சியை நிலை நிறுத்துவோம். அதிகார துஸ்பிரயோகத்திற்கு இடமில்லை. 

உலகத்தின் உதவிகளுடன் ஜனநாயக வழியில் சென்று எங்கள் இலக்குகளை அடைவதற்கான ஒரு வழியாகவும் இந்தத் தேர்தல் அமைகிறது. நாம் எமக்கென ஒரு அரசை நிறுவி எம்மவரை இணைத்து முன்னேறுவதே காலத்தின் தேவையாக இருக்கிறது. 

எமது வடமாகாணத்துக்கு தமிழ் பேசும் எம்மால் அரசு ஒன்று நிறுவப்பட வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். 

இந்தப் போராட்டத்தில் ஒவ்வொருவரும் பங்காளிகள், போராளிகள் என்பதை மனதிற் கொண்டு செயற்பட வேண்டும். 

நாம் இருநோக்குகளைக் கொண்டிருக்கின்றோம். ஒன்று தூரநோக்கு, மற்றயது கிட்டிய நோக்கு. 

தூரநோக்கு என்பது தமிழ் மக்கள் பாராம்பரியமாக வாழ்ந்த அவர்களது பூர்வீகமான வாழ்விடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். 

நாம் ஒரு தேசிய அலகு என்ற அடிப்படையில் எம்மை நாமே ஆளும் வகையிலான சுயநிர்ணய உரிமை எமக்குரித்தாகிறது என்பதே அந்தத் தூரநோக்கு, அதனை நாம் அடைந்தே தீருவோம். 

கிட்டிய நோக்கை பொறுத்தவரையில் உடனடித் தேவைகளை கருத்தில் கொண்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடைய நலன் சார்ந்த நடவடிக்கைகளை நாம் உடனடியாக மேற்கொள்வோம், 

காணாமல்போனோர் பிரச்சினை, நிலப்பறிப்பு பிரச்சினைகள் போன்றவற்றுடன், இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்குவது. படிப்படியாக எங்கள் மண்ணிலிருந்து முழுமையாக இராணுவத்தை அகற்றுவது போன்றவற்றிலும் நாம் கவனம் செலுத்துவோம். 

அதற்காக மத்திய அரசுடன் நம்பிக்கை அடிப்படையில் புரிந்துணர்வை வளர்க்க வேண்டும். 

அதேபோன்று இளைஞர், யுவதிகளின் தொழில் வாய்ப்பு, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுடைய மறுவாழ்வு போன்றவற்றுடன் கல்வி, பொருளாதாரம் என சகல துறைகளிலும் எங்கள் சமுகத்தை வளர்த்தெடுக்கப் உழைப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20130826108940

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.