Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணை மனுவை நிராகரித்தது ஏன் பேரறிவாளன் மீண்டும் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன் தனது கருணை மனு குறித்து பல்வேறு விவரங்களைக் கோரியுள்ளார்.

வீடியோ கான்ஃப்ரென்சிங் மூலம் மாநிலத் தகவல் ஆணையத்திடம் தனது கருணை மனு குறித்து பல்வேறு விவரங்களைக் அவர் இன்று கோரியுள்ளார் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் லீனா மேரி ஜார்ஜ் என்ற ஆராய்ச்சியாளருக்கு தன்னை சிறையில் பேட்டி எடுக்க அனுமதி மறுக்கப்பட்டது ஏன் எனவும் தான் தெரிந்து கொள்ள விரும்புவதாக கேட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேலூர் சிறைக் கண்காணிப்பாளர் அறையிலிருந்தே காணொளி இணைப்பின் மூலம் மாநிலத் தகவல் ஆணையருடன் இன்று காலை தொடர்பு கொண்டு பல்வேறு தகவல்களை அவர் கோரினார் என்றும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய சந்திப்பில் மாநில சிறைத் துறை சார்பில் அதிகாரி ஒருவரும் பங்கேற்றிருக்கிறார்.

விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுதாரியால் 1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.

அப்போது பேரறிவாளன் 1999ஆம் ஆண்டு ஜூன் முதல் தனது கருணை மனுமீது என்னவெல்லாம் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன, குடியரசுத்தலைவர் தனது மனுவினை நிராகரித்தது தொடர்பான விவரங்கள், தன்னைக் கடந்த ஆண்டு சந்திக்க வந்த ஆராய்ச்சியாளர் லீனா ஜார்ஜுக்கு சிறைத்துறை அனுமதி மறுத்தது குறித்த தகவல்கள், தனது உடல் நிலை குறித்த ஆவணங்கள் எனப் பலவற்றை கோரியிருக்கிறார்.

கோரப்படும் தகவல்களை அரசுத் துறைகள் மறுக்குமானால் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் ஆணையரை அணுகலாம் என்ற விதியின் கீழேயே பேரறிவாளனின் தற்போதைய முயற்சிகள் வந்துள்ளன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அவரது கோரிக்கைகளை மிகவும் அனுசரணையுடன் மாநிலத் தகவல் ஆணைய அதிகாரிகள் கேட்டதாகக் கூறிய பேரறிவாளனின் தரப்பினர், ஆணையத்தின் உத்தரவு பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தனர்.

 

http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/79771-2013-08-21-14-25-32.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.