Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் தமிழின உணர்வாளர்களின் எதிர்ப்பினையடுத்து "மெட்ராஸ் கபே" திரையிட திரையரங்குகள் மறுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

tamilnadu%202533.jpg

தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களையும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பையும், ஈழ மக்களையும் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள "மெட்ராஸ் கபே" படத்தை திரையிட தமிழகத்தில் திரையரங்குகளின் அதிபர்கள் மறுப்பு தொிவித்துள்ளனர்.

இந்தியில் தயாரான "மெட்ராஸ் கபே"  படத்தை தமிழிலும் மொழி மாற்றம் செய்துள்ளனர். இந்த தமிழ்ப் பதிப்புக்கு தமிழகத்தின் தணிக்கை குழுவினர் இன்னும் அனுமதி அளிக்கவில்லை.

"மெட்ராஸ் கபே" படத்தில் விடுதலைப் புலிகளையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி இருப்பதாக தமிழ் அமைப்பினர் எதிர்த்தனர். இதையடுத்து சில தினங்களுக்கு முன் பிரத்யேகமாக படத்தை அவர்களுக்கு திரையிட்டு காட்டினர். படம் பார்த்த செந்தமிழ் சீமான், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் முழுக்க தமிழர்களுக்கு எதிரான படம் இது என கொந்தளித்தனர்.

விடுதலைப்புலிகள், ஈழத்தமிழர்களை மட்டுமே படத்தில் கொச்சைப்படுத்தி உள்ளனர் என்றும், சிங்களர்கள் பற்றியோ, சிறீலங்கா ராணுவத்தினர் தமிழர்களை கொன்று குவித்தது பற்றியோ எந்தவொரு காட்சியும் இடம் பெறவில்லை என்றும் அவர்கள் கூறினர். இந்தியா முழுவதும் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று வைகோ வற்புறுத்தினார். மீறி திரையிட்டால் தியேட்டர்களில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தார். 

நேற்றய தினம் யாழ்.குடாநாட்டு மக்கள் பேரவையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராகவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவும் தமிழினத்தின் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை இழிவுபடுத்துவதாகவும் தயாரிக்கப்பட்டுள்ள மெட்ராஸ் கபே திரைப்படத்தை வெளியீடு செய்து தமிழ் மக்களின் மனங்களில் நீங்காத வடுவை ஏற்படுத்த வேண்டாம் என்றும், இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு அனுமதி வழங்கி உலகம் பூராகவும் உள்ள தமிழ் மக்களின் எதிர்ப்புக்களை சம்பாதிக்க வேண்டாம் என்றும் அசம்பாவிதங்கள் ஏற்பட இடமளிக்க வேண்டாம் என்றும் தமிழக அரசிடம் மிகவும் விநயமாக நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் தொிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மதுரை உயர் நீதிமன்றில் மெட்ராஸ் கபே படத்துக்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர் பி.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் ராஜேசுவரன், மதிவாணன் ஆகியோர் விசாரித்தனர். படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.ஆர்.ராஜா கோபால் இலங்கையில் நடந்த உண்மையான சம்பவத்துக்கும், படத்தில் கூறப்பட்டுள்ள கதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றார். நீதிபதிகள் படத்தை வெளியிட தடை எதுவும் விதிக்கவில்லை. இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக காவல்துறை டி.ஜி.பி. மத்திய திரைப்பட தணிக்கை குழு ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

விசாரணையை அடுத்த மாதம் 3–ந் தேதிக்கு தள்ளி வைத்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் நேற்று மாலை சென்னையில் அவசர கூட்டம் நடத்தினார்கள். சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார்.

இதில் ''மெட்ராஸ் கபே'' படத்தை திரையிடுவதா, வேண்டாமா என்பது குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. அதில் ''மெட்ராஸ் கபே படத்தை திரையிடுவதா வேண்டாமா என‌ அந்தந்த திரையரங்கு உரிமையாளர்களே முடிவு செய்து கொள்ளலாம்'' என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இது பற்றீ திரையரங்கு அதிபர் ஒருவர் கூறும் போது, ''மெட்ராஸ் கபே படத்தை திரையிடக்கூடாது என தமிழ் அமைப்புகள் எதிர்த்து உள்ளன. முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறியுள்ளனர். தியேட்டர்களுக்கு இது போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதால் மெட்ராஸ் கபே படத்தை திரையிட மாட்டோம்'' என்று கூறினார்.

திரையரங்கு முகப்புகளில் வைக்கப்பட்டு இருந்த மெட்ராஸ் கபே பட விளம்பரப்பலகைகளும் அகற்றப்பட்டு விட்டன.

 

http://www.sankathi24.com/news/32461/64//d,fullart.aspx

மீறி திரையிடும் திரையரங்குகளுக்கு  உரிய பாடத்தை படிப்பிக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.