Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகத் தமிழ்ப்பரப்பின் மென்வலுவில் புகலிட ஈழத்தவர் திரைத்துறையின் நம்பிக்கை தரும் முயற்சிகள் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
world-tamil-250813-seithy-150.jpg

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இடம்பெற்று வரும் ஈழத்தவர் திரைப்படங்களின் சங்கமமாக பரிஸ் தமிழ் திரைவிழாவும், கனடா மொன்றியல் உலகத் திரைப்பட விழாவில் பங்கெடுத்துள்ள A Gun and Ring திரைப்படமும், புகலிட ஈழத்தவர் திரைத்துறையில் நம்பிக்கை தரும் முயற்சிகளென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடக அமைச்சின் செய்திக்குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட என்னுள் என்ன மாற்றமோ எனும் திரைப்படம் உட்பட கனடா, சுவிஸ், அவுஸ்றேலியா ஆகிய நாடுகளில் உருவாக்கப்பட்ட ஈழத்தவர் படைப்புக்களின் மூன்று நாள் நிகழ்வாக பரிஸ் தமிழ்திரைவிழா இடம்பெற்று வருகின்றது.

  

சமவேளை சீனாவின் சங்காய் திரைவிழாவில் பங்கெடுத்து உலகத் தமிழர்களின் கவனத்தினைப் பெற்றிருந்த கனேடிய மண்ணில் உருவாக்கப்பட்ட ஈழத்தவர் படைப்பான A gun and Ring திரைப்படம் கனாடாவின் மொன்றியல் உலகத் திரைப்பட விழாவில் பங்கெடுத்துள்ளது. இவ்விரு முயற்சிகளும் புகலிட ஈழத்தவர்களின் நீண்ட தொரு திரைப்பட முயற்சிகளின் நம்பிக்கை கீற்றுக்களாக அமைந்துள்ளதென ஆர்வலக்களின் கருத்தாக அமைந்துள்ளது.

 

2009ம் ஆண்டுக்கு பின்னரான தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தின் புறச்சூழலில் பிரதானதொரு அரசியல் தளமாக புலம்பெயர் தமிழ்சமூகம் உள்ள நிலையில், இச்சமூகப் பரப்பின் அனைத்து துறைசார் விடயங்களும் முறைசார்ரீயில் வளர்தெடுக்கப்படுவதானது , உலக அரங்கில் ஈழத்தவர்களின் மென்வலு நிலைபெறுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகத்துறை அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.

 

world-tamil-250813-seithy%20(1).jpg

 

 

world-tamil-250813-seithy%20(2).jpg

 

 

world-tamil-250813-seithy%20(3).jpg

 

 

world-tamil-250813-seithy%20(4).jpg

 

 

world-tamil-250813-seithy%20(5).jpg

 

 

world-tamil-250813-seithy%20(6).jpg

 

 

world-tamil-250813-seithy%20(7).jpg

 

 

world-tamil-250813-seithy%20(8).jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=91096&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டிருக்கும் திரைவிழாவின் இன்றைய நாழுக்கு செல்லக்கிடைத்தது.. எனது ரசனையை அவ்வளவு மட்டமாக நினைத்து என்னை நிகழ்வுக்கு அழைத்தீர்களா என்று நண்பர்களிடம் கடிந்துகொள்ளுமளவுக்கு இன்று நான் பார்த்த யாழ்ப்பாணத்தில் எடுத்த படத்தின் தரம் இருந்தது... மனசுக்கு கஸ்டமாக இருந்தாலும் பொய்யாக பாராட்டமுடியவில்லை.. இதைப்பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்... பல ஈழத் திரைப்பட துறையில் ஈடுபாடு கொண்டிருப்பவர்களை சந்திக்க கிடைத்தது மகிழ்ச்சியான விடயம்.. நிறையக்கனவுகளுடனும் தாகம்களுடனும் ஈழ சினிமா இருக்கிறது.. ஒருகாலம் கண்டிப்பாய் தன் பெயரை நிலை நிறுத்திக்கொள்ளும் என்ற நம்பிக்கை ஒரு சில படைப்பாளிகளுடன் பேசுகையில் கிடைத்தது..

Edited by சுபேஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.