Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணமல் போனோரை மீட்டுத்தரக்கோரி ஆர்ப்பாட்டம் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கலந்துகொண்டு ஆதரவு வழங்கியது

Featured Replies

ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாயம் நவநீதம் பிள்ளை அம்மையார் அவர்களது கவனத்தை ஈர்க்கும் முகமாக வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப் பகுதியிலும் அதற்கு வெளியேயும் காணாமல் போனவர்கள் தொடர்பான நியாயமான விசாரணையை வலியுறுத்தியும், அரசியல் கைதிகள் மற்றும் புனர்வாழ்வு முகாமில் உள்ளவர்களை விடுவிக்க கோரியும், இராணுவத்தினராலும், அரசினாலும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலங்கள், கிராமங்கள், வீடுகளை விடுவிக்கவும் தடுத்து நிறுத்தக் கோரியும் யாழ் பொது நூலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
 
மேற்படி ஆர்ப்பாட்த்திற்கு  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவு வழங்கி கட்சியின் தலைவர் கஜேந்திகுமார் பொன்னம்பலம் மற்றும், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், முன்னாளர் தலைவர் சின்னத்துரை வரதராசன், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தலைவர் இ.எ.ஆனந்தராசா, உட்பட கடசியின் ஆதரவாளர்களும் பெருமளவில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியிருந்தனர். 
 
காணாமல் போனோரை தேடியறியும் குழு மற்றும் பிரயைகள் குழு என்பவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி போராட்டல் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.  மேற்படி போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு தெரிவித்து அதில் கலந்து கொண்டிருந்தது. இன்று காலை 10.00 மணியளவில் யாழ் கோட்டைக்கு அண்மையில் உள்ள முனியப்பர் கோவிலடியில் ஒன்று கூடிய பொது மக்கள் அங்கிருந்து ஊர்வலமாக பொதுநூல்நிலையத்தின் முன்புற வாயிலை நோக்கிச் சென்று அங்கிருந்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
navi%20jaffna%204.JPG

மேற்படி ஊர்வலத்தினை தடுத்து நிறுத்துவதற்கு பொலீசார் முயன்ற போதும் தடையையும் மீறி பொது மக்கள் ஊர்வலம் நூல்நிலைய முன்பகுதியை சென்றடைந்தது. 

 

ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பொது நூலகத்திற்கு வருகைதந்த நவநீதம்பிள்ளை அம்மையார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்திக்க விட்டாது சிறீலங்கா அரசு தடுத்துள்ளது.
 
ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது காணாமல்போனோர் உறவுகள் சங்கம் சார்பாக திருமதி அனந்தி எழிலன், மன்னார் பிரசைகள் குழுவின் சார்பாக அருட் தந்தை செபமாலை, அருட்தந்தை நேரு, சிந்தாத்துரை, சண், ஆகியோர்  உட்பட 15 பேர் கொண்ட குழுவினர் கோவில் வீதி, நல்லூரில் அமைந்துள்ள யு.என்.எச்.சி.ஆர் அமைப்பின் அலுவலகத்திற்குச் சென்று நவநீதம்பிள்ளை அம்மையாருடன் சந்திப்பினை மேற்கொண்டிருந்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் சார்ப்பாக முன்வைக்கப்பட்ட கருத்துக்களை அக்கறையுடன் செவிமடுத்த நவநீதம்பிள்ளை அம்மையார் இவ்விடயங்கள் தொடர்பில் கூடிய கரிசனையுடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக சந்திப்பு முடிவடைந்த பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கூடியிருந்த மக்கள் மத்தியில் உரை நிகழ்த்திய அனந்தி மற்றும் அருட்தந்தை செபமாலை ஆகியோர் தெரிவித்தனர்.

http://www.sankathi24.com/news/32576/64//d,fullart.aspx

யாழில் காணமல் போனவர்கள் வீதிகளில் உருண்டு புரண்டும் அழுதுபுலம்பியும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காணமல் போனவர்களுடைய உறவினர்களை கண்டும் காணாதது போல் நவிப்பிள்ளை சென்றது மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

சில காட்சிப்பதிவுகள்

navi%20jaffna%201.JPG

navi%20jaffna%202.JPG

navi%20jaffna%203.JPG

navi%20jaffna%204.JPG

navi%20jaffna%205.JPG

navi%20jaffna%207.JPG

navi%20jaffna%208.JPG

navi%20jaffna%209.JPG

navi%20jaffna%2010.JPG

navi%20jaffna%2011.JPG

navi%20jaffna%2012.JPG

 

http://www.sankathi24.com/news/32575/64//d,fullart.aspx

உல்லாச சுற்றுலா வரும் நாட்டைவிட்டு ஓடிய பொறுபற்ற சில பேர்வழிகள் இந்த மக்களின் சோகங்களையும் மக்களின் உண்மையான நாடித் துடிப்பையும் அறியாமல்  புலம்பெயர் தேசத்தில் தமதிருப்பை நிரந்தரமாக தக்கவைக்க தேவையான பொய்களை ஊதிப் புளுகும் பயணக் கட்டுரைகளை எழுதி பிழைப்பு நடத்த முற்பட்டுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவனை குறிப்பிடுகிறீர்கள் போலுள்ளது. நான் ஏன் இனிமேல் புலம் செல்ல மாட்டேன் எனப் புலம்பியிருந்தார் அதுக்காகத்தான் சொல்லுறன்.

  • கருத்துக்கள உறவுகள்

உல்லாச சுற்றுலா வரும் நாட்டைவிட்டு ஓடிய பொறுபற்ற சில பேர்வழிகள் இந்த மக்களின் சோகங்களையும் மக்களின் உண்மையான நாடித் துடிப்பையும் அறியாமல்  புலம்பெயர் தேசத்தில் தமதிருப்பை நிரந்தரமாக தக்கவைக்க தேவையான பொய்களை ஊதிப் புளுகும் பயணக் கட்டுரைகளை எழுதி பிழைப்பு நடத்த முற்பட்டுள்ளனர்.

 

நீங்களாவது ஊருக்குப் போய் அங்குள்ள மக்களுக்கு எதாவது செய்ய முயற்சிக்கலாம்.மற்றவரைப் பார்த்து புலம்பாமல்

நீங்களாவது ஊருக்குப் போய் அங்குள்ள மக்களுக்கு எதாவது செய்ய முயற்சிக்கலாம்.மற்றவரைப் பார்த்து புலம்பாமல்

 

உங்கள் கற்பனை ஒப்பாரிகளை காரணமில்லாமல் நாட்டைவிட்டு தப்பியோடிய உங்கள் தரவளிகளுடன் வைத்துக் கொள்ளுங்கள்!

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கற்பனை ஒப்பாரிகளை காரணமில்லாமல் நாட்டைவிட்டு தப்பியோடிய உங்கள் தரவளிகளுடன் வைத்துக் கொள்ளுங்கள்!

 

 

ஓ நீங்கள் நாட்டிலா இருக்கிறீங்கள் :o அல்லது காரணத்தோடு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தப்பி ஓடி வந்தனீங்களோ :)  உங்களுக்கு ஒரு காரணம் என்டால் மற்றவனுக்கு என்னொரு காரணம் <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.