Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவிபிள்ளை கொடுக்கப்போகும் அறிக்கை சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு வழிகோலும் : சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நவிபிள்ளை கொடுக்கப்போகும் அறிக்கை சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு வழிகோலும் : சீமான்

 

இன அழித்தலுக்கான நியாயத்தை வழங்கக்கூடிய சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு வழிகோலும் வகையில், ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அறிக்கை வழங்குவார் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்க்கை நிலையை நேரில் கண்டறிவதற்காக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வந்துள்ளார். இவர், இறுதிக்கட்ட போர் நடத்தப்பட்ட கிளிநொச்சி, முல்லைத் தீவு உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று மக்களை சந்திப்பார் என்ற தகவல் மிகுந்த ஆறுதலாக உள்ளது.

தமிழினம் திட்டமிட்டு இன அழித்தலுக்கு உள்ளாக்கப்பட்டதையும், தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றம் செய்யப்பட்டிருப்பதையும், தமிழர் நகரங்களின் பெயர்கள் சிங்கள பெயர்களாக மாற்றப்பட்டிருப்பதையும் காணும் வாய்ப்பு இதன்போது அவருக்கு கிடைக்கும்.

போருக்குப் பிறகும் தமிழர்களின் பூர்வீக மண்ணில் ஒரு திட்டமிடப்பட்ட இன அழித்தல் தொடர்வதை உறுதி செய்யும் சான்றுகள் பலவும் கிட்டும். அதனடிப்படையில், நவிபிள்ளை கொடுக்கப்போகும் அறிக்கையே உலகத் தமிழினம் எதிர்பார்க்கும். இன அழித்தலுக்கான நியாயத்தை வழங்கக்கூடிய சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு வழிகோலும்.
எனவே, உலகத் தமிழினம் அவரின் பயணத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் உற்று நோக்குகிறது என குறிப்பிட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சூனா பானாவின் வீட்டில் இருந்துகொண்டே இவ்வளவு நம்பிக்கையுடன் உள்ளாரே.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நவநீதம்பிள்ளையின் கவனத்தை ஈர்க்கும் கிளிநொச்சி போராட்டத்துக்கு தடை, கூடியிருந்தோர் பலவந்தமக அகற்றப்பட்டனர்; சிறிதரன்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கிளிநொச்சி விஜயத்தின்போது அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் காணாம்போனோரின் உறவினர்கள் மற்றும் அன்னையர் முன்னணியினர் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்பு போராட்டம் பொலிஸார் மற்றும் சிவில் உடை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.

வடக்கின் நிலைமைகளை அறிவதற்கென அங்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் நவநீதம்பிள்ளை நேற்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சிக்கும் பயணமானார். இதன்போது கிளிநொச்சி பரந்தன் பிரதேசத்தில் மேற்படி கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடாகியிருந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தகவல் தந்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை மேற்கொண்டுள்ள வடக்கிற்கான விஜயத்தின்போது நேற்று கிளிநொச்சிக்கும் வருகைதந்தார். இதன்போது, யுத்தகாலத்திலும் அதற்குப் பின்னரும் காணாமல்போன தமது உறவுகள் தொடர்பில் நவநீதம்பிள்ளையின் கவனத்தை ஈக்கும் விதத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரும் மற்றும் அன்னையர் முன்னணியினரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தயாராகியிருந்தனர்.

எனினும் நவநீதம்பிள்ளையின் கிளிநொச்சி வவருகைக்கு முன்பதாகவே அங்கு வந்த பொலிஸாரும் சிவில் உடை அதிகாரிகளும் அங்கு கூடியிருந்த மக்களை ்அங்கிருந்து கலைந்து செல்லுமாறு பணித்ததுடன் கூடியிருந்தவர்கள் வைத்திருந்த பதாதைகளை பறித்துக்கொண்டு அவர்களை கட்டாயப்படுத்தி பஸ்களில் ஏற்றி அனுப்பிவைத்துள்ளனர்.

இதனால் கிளிநொச்சியைச் சேர்ந்த காணாமல்போனோரது உறவினர்களின் நிலைமைகளை நவநீதம்பிள்ளைக்கு வெளிப்படுத்த முடியாத நிலை உருவாக்கப்பட்டுவிட்டது எனத் தெரிவித்தார்.

1239418_456491204449081_2031262573_n.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

https://www.facebook.com/NanaparkumUlagem?filter=3

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சந்திரசிறியினதும் விஜயலக்ஸ்மியினதும் பிரசங்கத்திற்கு பதிலளித்தார் நவ­நீ­தம்­பிள்ளை
28 ஆகஸ்ட் 2013
lg-share-en.gif
 

"வடக்கின் அபிவிருத்தியை மதிப்பிட நான் வரவில்லை"

Navipillai%204_CI.jpg

 

வட­மா­காண பகு­தி­களில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ளகட்­டு­மா­னப்­­ணிகள் மகிழ்ச்சி அளித்­தாலும் அதனைமதிப்­பீடு செய்­­தற்­காக 

நான் இலங்கை வர­வில்லை.

உள்­நாட்டில் மனித உரி­மை­களின் தற் ­போ­தையநிலை­­ரத்தை மதிப்­பீடு செய்­வதே இலங்­கைக்­கான எனதுபயணத்தின் நோக்­கமும் கட­மையும் ஆகும் என்று .நாமனிதஉரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை சுட்டிக் காட்டியுள்ளார்.

யாழ்.நூல­கத்­திற்கு நேற்று செவ்­வாய்க்­கி­ழமை (27.08.13)காலை சென்ற ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை நூல­கத்தைபார்­வை­யிட்­­துடன் வட மாகாண ஆளுநர் ஜி..சந்­தி­ரசிறிமற்றும் பிரதி செய­லாளர் விஜ­­லட்­சுமி ரமேஷ் ஆகி­யோரின்

தலை­மையில் வட மாகா­ணத்தின் அனைத்து மாவட்டசெய­லா­ளர்கள் வடக்கில் மேற்­ கொள்­ளப்­பட்­டுள்ளஅபி­வி­ருத்தி பணிகள் தொடர்பில் நவ­நீ­தம்­பிள்­ளைக்குவிளக்­­­ளித்­தார்கள்.

இதன் போது உரை­யாற்­று­கை­யி­லேயே மனித உரி­மைகள்ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார். தொடர்ந்தும் அங்கு   உரை­ஆற்­றிய அவர்

இலங்­கையின் வட­­கு­தி­களில் பல்­வேறு அபி­வி­ருத்திபணிகள் மேற்­கொள்­ளப்­பட்­டு உள்­­மையை உங்­களின்விளக்­­­ளிப்­பு­­ளூ­டாக அறிந்து கொள்­கின்றேன்குறிப்­பாக.நாஇலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­­டு­கின்ற மக்கள்மேம்­பாட்டுத் திட்­டங்­­ளையும் நாகொள்­கை­­ளையும்ஏற்­றுக்­கொண்­டுள்­ளமை மகிழ்ச்­சி­­ளிக்­கின்­றது.

மீள் குடி­யேற்றம் மற்றும் அபி­வி­ருத்தி திட்­டங்கள்தொடர்­பி­லான நட­­டிக்­கை­களும் மகிழ்ச்­சி­­ளிக்­கின்­றது.

எனினும் “இலங்­கைக்­கான எனது பயணத்தின் நோக்கம்வடக்கின் அபி­வி­ருத்­தி­களை மதிப்­பீடு செய்­­தில்லை.இலங்­கையின் மனித உரி­மைகள் நிலைவரத்தைமுழுமையாக மதிப்பீடு செய்வதும் குறிப்பிட்ட சிலதரப்புக்களையும் பொது மக்களையும் சந்தித்து உண்மைநிலைவரத்தை கண்டறிய வேண்டியதும் எனது கடமையாகும்”எனக் கூறியுள்ளார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95841/language/ta-IN/article.aspx

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகளால் துளைத்து எடுக்கும் நவநீதம் தட்டுத்தடுமாறும் அரசதரப்பு !!!!மக்களே ஜெனீவா உங்கள் காலடியில் ஜெனீவா செல்லவேண்டிய அவசியம் இல்லையே பூட்டப்பட்ட வாயை அச்சமில்லை என்ற திறப்பால் திறவுங்கள் !!!

வடக்கில் தமிழ் மொழியிலான பெயர்பலகைகளை அகற்றுவதில் இராணுவம் ஈடுபடுகின்றதா : வாசுவிடம் நவநீதம்பிள்ளை கேள்வி

வட மாகாண சபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றுமானால் அதன் பின்னர் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான அரசாங்கத்தின் விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயம் உருவாகும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

ஐ.நா. வுக்கு இலங்கை மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தனியொரு அமைப்பே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் அது தனித்து போய்விடுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் நவநீதன்பிள்ளை நேற்று திங்கட்கிழமை சமூக ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவை ராஜகிரியவிலுள்ள அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்திய போதே ஆணையாளர் நாயகம் தேசிய பிரச்சினை தீர்வு தொடர்பாக கேள்வி எழுப்பிய போதே மேற்கண்டவாறு பதிலளித்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

நேற்றுக் காலை 11.55 மணியளவில் நவநீதம்பிள்ளை ராஜகிரியவிலுள்ள சமூக ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சுக்கு வருகை தந்தார்.

அதன் போது அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆணையாளர் நாயகத்தை இரு கரங்களையும் கொடுத்து வரவேற்று அமைச்சின் கேட்போர் கூடத்திற்கு அழைத்துச் சென்றார்.

11.55 மணிக்கு வருகை தந்த ஆணையாளர் நண்பகல் பகல் 12.40 மணி வரை பேச்சுக்களை நடத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

இப்பேச்சுவார்த்தைகளின் போது அமைச்சின் செயலாளர் உட்பட உயர் அதிகாரிகளும் வெளிநாட்டமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் அடக்கு முறைகள் எதிர்க்கருத்துக்கள் தெரிவிக்கப்படுவது தொடர்பாக ஆணையாளர் நாயகம் என்னிடம் கேள்வியெழுப்பினார்.

இலங்கையில் வாழும் இனங்கள், மதங்களுக்கு எதிராக குரோதத்தை ஏற்படுத்தும் விதத்தில் கருத்துக்களை வெளியிடுவது எழுதுவது பிரசாரம் செய்வதை தடை செய்ய வேண்டுமென்றும் அவ்வாறான செயற்பாடுகள் தண்டனைக்குரிய குற்றமாக சட்டமாக்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தி புத்திஜீவிகள் நிபுணர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி அது அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு அதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தையும் கோரியுள்ளதாக தெளிவுபடுத்தினேன்.

இதன் பின்னர் தேசிய பிரச்சினை தீர்வு தொடர்பில் எமது அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பாக கேள்வியெழுப்பினார்.

அதிகாரப் பரவலாக்கல் அர்த்தமுள்ளதாக மேற்கொள்ளப்பட வேண்டுமென்றால் சிங்கள தமிழ் இரு மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அதற்கான நடைமுறை சாத்தியமான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். கட்டாயம் சிங்களம் தமிழ் மொழிகள் கற்க வேண்டுமென்ற கொள்கையை நடைமுறை சாத்தியமாக முன்னெடுக்கின்றோம். அது தொடர்பில் தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கையையும் கையளித்தோம். இப்படியான இரு மொழிக் கொள்கை கனடாவிலும் இல்லையென்றும் தெரிவித்தேன்.

இதற்கு பதிலளித்த ஆணையாளர் நாயகம் எனது கூற்றை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு தொடர்பாக ஆணையாளர் நாயகம் என்னிடம் கேள்வியெழுப்பினார். 13ஆவது திருத்தத்தின் எதிர்காலம் தொடர்பிலும் கேட்டார்.

13ஆவது திருத்தத்தில் அதிகாரங்கள் குறைக்கப்படுமா திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமா என்பது தொடர்பில் தற்போது எதனையும் கூற முடியாது. இதற்காக விசேட பாராளுமன்ற தெரிவுக் குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது.

இதில் அனைத்து கட்சிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். எனவே இதுவொரு நீண்ட கருத்துப் பரிமாற்றங்களுடனான செயற்பாடாகும். குறுகிய காலத்தில் தீர்வை எட்ட முடியாது என தெரிவித்தேன்.

வட மாகாண சபைத் தேர்தலுக்கு பின்னர் அங்கு ஆட்சியதிகாரம் உருவாக்கப்பட்ட பின்னர் அது எவ்வாறு இயங்குகின்றது என்பதை அவதானித்து மாகாண சபை முறைமை தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும்.

கொழும்பில் மும்மொழிகளிலும் பெயர் பலகைகள் காணப்படுகின்றன. ஆனால் வடக்கில் தமிழ் மொழி மூலமான பெயர் பலகைகளை அகற்றி சிங்கள மொழி மூலமான பெயர் பலகைகளை அரசாங்கம் போடுகின்றதே என்ற கேள்வியை ஆணையாளர் நாயகம் என்னிடம் எழுப்பினார்.

வடக்கில் சில இடங்களில் இராணுவம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது பிழையானதாகும். இராணுவத்துக்கு இதற்கான அதிகாரம் கிடையாது இது நிறுத்தப்பட வேண்டுமென இராணுவ தளபதிக்கு அறிவித்துள்ளதாகவும் பதிலளித்தேன்.

அத்தோடு மும்மொழி கொள்கையை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தேன்.

ராவணா பலயவுக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உரிமை உள்ளது. அன்று அமெரிக்கா வியட்நாம் மீது தாக்குதல் நடத்திய போது நாம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

ஆனால் ஐ.நா. இலங்கைக்கு எதிராக போர் தொடுக்கவில்லையே? நவநீதம்பிள்ளைக்கு எதிராக ஐ.நா.வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தும் உரிமை ராவணா பலயவுக்கு உள்ளது.

ஆனால் இந்த எதிர்ப்போடு இலங்கை மக்கள் இணைய வில்லை. ராவணா பலய தனித்து விட்டது.

வடமாகாண சபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றுமானால் அரசுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலைமை உருவாகும்.

அவ்வாறானதொரு நிலைமையில் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண அமைக்கப்பட்டுள்ள விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயம் உருவாகும் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

1005356_456035401161328_2006659934_n.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

https://www.facebook.com/NanaparkumUlagem?filter=3

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் மூடிய அறைக்குள் வெளிநாட்டு தூதுவர்களுடன் நவநீதம் பிள்ளை ஆலோசனை

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, கொழும்பிலுள்ள அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட முக்கியமான நாடுகள் சிலவற்றின் தூதுவர்களை சந்தித்து இரகசிய ஆலோசனை நடத்தியுள்ளார். 

சினமன்லேக் விடுதியில் மூடப்பட்ட அறைக்குள் நேற்று நடந்த இந்தச் சந்திப்பின் போது, மனிதஉரிமைகள் மற்றும் அதிகாரப்பகிர்வு குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிசன், இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, அவுஸ்ரேலியத் தூதுவர் றொபின் முடி, பிரெஞ்சுத் தூதுவர் கிறிஸ்ரின் றொபிசொன், ஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திர விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி ரெர்ஹி லெரினென் ஆகியோர் நேற்றுப் பிற்பகல் நடந்த இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். 

அதிகாரப் பகிர்வு தொடர்பான விவகாரங்கள் குறித்து, இந்தியத் தூதுவர் வை.கே சின்ஹாவும், சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து ஏனைய மேற்கு நாடுகளின் தூதுவர்களும் கருத்துகளை வெளியிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. 

அதேவேளை, தனது பயண நிகழ்ச்சித் திட்டம் குறித்து, வெளிநாட்டுக் தூதுவர்களிடம் நவநீதம்பிள்ளை விபரித்துக் கூறியுள்ளார்.

1238124_456034671161401_254764860_n.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

http://www.jaffnamuslim.com/2013/08/blog-post_7847.html

 

 

 

 

 

 

 

 

 

 

சூனா பானாவின் வீட்டில் இருந்துகொண்டே இவ்வளவு நம்பிக்கையுடன் உள்ளாரே.. :D

ஆம் நண்பா .பலரை நம்பி ஏமாந்தோம் ...........ஏமாற்றம் எங்களுக்கு புதியது அல்ல   .............இவரையும் பார்ப்போம் .....ஏமாத்தினால் எங்களுக்கு அது புதிய விடயமல்ல ..ஏதாவது செய்தால் அதுவே புதுமையாய் இருக்கும் ... :rolleyes:
 
நம்பிக்கையே வாழ்க்கை .. :lol: ..................நம்பிக்கை என்னும் சக்கரத்தில் வாழ்க்கை ஓடுது ....எங்கேயோ கேட்டது போல் இருக்கா .... :D
 
 
 
இன்னொரு தடவை சொல்லுங்கோ என்று மட்டும் கேட்கப்படாது மகனே .......... :D  :icon_idea:

Edited by தமிழ்சூரியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் போதனா வைத்தியசாலைக்கு நவிபிள்ளை விஜயம் : சிவில் சமூகத்தினருடன் இன்று சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வடக்கு மற்றும் கிழக்கிற்கான மதிப்பீட்டு விஜயத்தை ஆரம்பித்தார். இதன் முதற்கட்டமாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு நேற்று திங்கட்கிழமை மாலை விஜயம் செய்த ஆணையாளர் நவநீதம்பிள்ளை வைத்தியர்களை சந்தித்து உரையாடியுள்ளார்.

இன்று காலை சிவில் சமூகத்தினரையும் ஆளுநர் உள்ளிட்ட அரச அதிகாரிகளுடன் பல்வேறு சந்திப்புக்களை முன்னெடுக்க உள்ளதுடன் மாலை இறுதி யுத்தம் இடம்பெற்ற புதுமாத்தளன் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய உள்ளதுடன் மீள்குடியேற்றப்பட்ட மக்களையும் சந்திக்கவுள்ளார்.

அத்துடன், காணாமல் போனவர்களின் உறவுகள் யாழிலும் பரந்தனிலும் கவனயீர்ப்பு போராட்டங்களை மேற்கொள்ள உள்ளனர். மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வடக்கில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் நவநீதம்பிள்ளையின் வருகையும் இடம்பெறுவதால் நிலைமை சூடு பிடித்துள்ளது.

இதன் பிரகாரம் இன்று காலை 8 மணிக்கு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறியை அவரது அலுவலகத்திலும் அதன் பின்னர் பொது நூலகத்தில் அரச அதிபர் மற்றும் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்திக்கவுள்ளார். அதேபோன்று காலை 10 மணியளவில் யாழில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்தில் சிவில் சமூகத்தினரை சந்திக்கவுள்ளார். இதன் பின்னர் 11.30 மணியளவில் இறுதிக் கட்ட போர் இடம்பெற்ற கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன் பிரகாரம் மக்கள் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதுடன் புதுமாத்தளன் பகுதிக்கு விஜயம் செய்து நிலைமையை கண்டறிய உள்ளார். அதேபோன்று முல்லைத்தீவில் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய உள்ளதுடன் சூரியபுரம் மற்றும் கேப்பாபிலவு பகுதிகளுக்கு விஜயம் செய்து மக்கள் சந்திப்புக்களையும் மேற்கொள்ள உள்ளார். மேலும் கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் உள்ள இந்திய வீடமைப்பு திட்டங்களையும் பார்வையிட்டதன் பின்னர் மாலை மாலை 5.30 மணியளவில் இரணைமடுவிலிருந்து திருகோணமலைக்கு செல்ல உள்ளார்.

இதற்கு இடைப்பட்ட காலப் பகுதியில் யாழ். நகரிலும் பரந்தனிலும் அன்னையர் முன்னணி மற்றும் சிவில் அமைப்புக்கள், காணாமல் போன உறவுகளை தேடித் தருமாறு வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுக்கவும் உள்ளனர்.

1187168_456033501161518_432321545_n.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

http://www.virakesari.lk/article/local.php?vid=6671

 

இவரது சந்திப்புக்களை பார்க்கும்போது ,அவை உண்மையாக ஊடகங்கள் கூறினால் .......அர்த்தமுள்ள ,தேவையான சந்திப்புக்கள் போல இருக்கு ......பொறுத்திருந்து பார்ப்போம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.