Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜேர்மனி அரசின் தலையீட்டினாலேயே பொட்டு அம்மானின் சகோதரரின் சடலம் விடுவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Pottu-Amman.jpgயாழ்ப்பாணத்தில் மரணமான விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டுஅம்மானின், மூத்த சகோதரரின் சடலம், ஜேர்மனி தூதரகத்தின் தலையீட்டின் பேரிலேயே, சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டு, ஜேர்மனிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இரண்டு பத்தாண்டுகளுக்கு மேலாக, ஜேர்மனியில் வாழ்ந்து வந்த பொட்டு அம்மானின் மூத்த சகோதரர், சண்முகலிங்கம் சிவஞானகுமார், இரண்டு மாதங்களுக்கு முன்னர் இரகசியமாக யாழ்ப்பாணம் திரும்பியிருந்தார். 

நல்லூர் கந்தசுமாமி கோவிலுக்கு அண்மையில் கடந்த ஓகஸ்ட் 21ம் நாள், அவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். 

மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த போதே அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமானதாக, பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக, சிறிலங்கா காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 

எனினும், பொட்டு அம்மானின் சகோதரர் என்பதால், அவரது சடலத்தை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. 

இதையடுத்து, அவரது குடும்பத்தினர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், ஜேர்மனி தூதரக அதிகாரிகள் தலையிட்டு, சடலத்தை கொழும்பில் இருந்து ஜேர்மனிக்கு அனுப்பி வைத்தனர். 

கடந்த 28ம் நாள் பிற்பகல், 1 மணியளவில் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவரது உடல், அன்றிரவு ஜேர்மனிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இரண்டு மாதங்களுக்கு முன்னர் அரியாலை திரும்பியிருந்த சிவஞானகுமார், மரணமாவதற்கு முதல்நாளான, ஓகஸ்ட் 20ம் நாள் சிறிலங்கா படையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். 

தனது பூர்வீக வீட்டைத் தேடி வந்திருந்த அவருக்கு, அதை வழங்க சிறிலங்காப் படையினர் மறுத்துள்ளனர். 

இதையடுத்தே, அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு வீதியில் வீழ்ந்து மரணமாகியுள்ளார். 

 

http://www.puthinappalakai.com/view.php?20130901108976

திருப்பியும் முதல்லே இருந்தா....

நான் நேரடியாக அறிந்தவரையில் 30ம் திகதி வெள்ளிக்கிழமை உடல் பிறேமனுக்கு வந்தது. வெள்ளியும் சனியும் உறவினர்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டார்கள். இனி எப்பொழுதோ தெரியவில்லை..

 

எதிர்வரும் 9ம் திகதி முற்பகல் 10 மணியளவில் உடல் Bremen-walle எனும் இடத்தில் தகன கிரியைகள் செய்யப்படவுள்ளது.

(கிரியைகள் செய்யும் இட முகவரி பின்னர் தர முயற்சிக்கிறேன். அவரது படம் உட்பட முழுமையாக விபரங்களுக்கு முயற்சித்தேன். அவர்களுக்கு அதில் பெரிதளவு நாட்டமில்லாமையை உணர் முடிகிறது. கிடைத்தால் இணைக்க முயற்சிக்கிறேன்.)

 

மற்றும் அவரோ அவரது மனைவியோ யேர்மன் நாட்டு பிரசைகள் அல்ல. பிள்ளைகள் மாத்திரமே இந்நாட்டு பிரசைகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தகவல்களுக்கு நன்றி சோலியன்.  

//நல்லூர் கந்தசுமாமி கோவிலுக்கு அண்மையில் கடந்த ஓகஸ்ட் 21ம் நாள், அவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். //

 

நான் நேரடியாக அவரது குடும்பத்தினரிடம் விசாரித்தவகையில் இது அப்பட்டமான பொய். அவர் கடைக்கு சென்றுவிட்டு சைக்கிளில் திரும்பி வரும்போது நெஞ்சுவலி என்று அயலவர்களிடம் தண்ணீர் கேட்டதாகவும் அவர்கள் தண்ணீரும் சுடுநீரும் பருகக் கொடுத்ததாகவும் அதற்கு வலி நிற்காததால்.. மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிர் பிரிந்ததாகவும் கூறினார்கள்.

 

அகவே சடலத்தை கண்டுபிடித்ததாக குறிப்பிடப்பட்டிருப்பதும் அப்பட்டமான பொய்யே!

 

ஏற்கெனவே ஒரு இணையத் தளத்தில் அவரது சடலம் என ஒரு படமும் இணைக்கப்பட்டிருந்தது. அது இங்கேயும் ஒரு பகுதியில் இருந்தது. அதுவும் வேறெங்கோ எடுத்த பொய்யான படம் எனவும் அவரது மனைவியார் கூறினார்.
 

(இந்த நிகழ்விலிருந்து ஒன்று நன்றாகத் தெரிகிறது.. எந்த ஒரு தமிழ் இணையத்தையும் அப்படியே நம்பவே கூடாது! செய்திக்கே இந்தக் கதி என்றால் ஏனையவற்றுக்கு..?!) :wub:

Edited by sOliyAn

புதினப்பலகையின் செய்தியில் ஏதாவது பாகம் உண்மையா இல்லையா தெரியாது சோழியன். ஆனால் அவர்கள் கொடுக்கும் விபரம் நீங்கள் சொல்வதில் இருந்து முரண்படவில்லை. 21ம் திகதி இறந்தவரின் பிரேதம் 28ம் திகதி கொடுத்து 29ம் திகதி ஜேர்மனி வநதது. ஆனால் பழை படம் யாருடையது என்பதை கண்டு பிடித்தால் நல்லது. சில கதைகள் கட்டுக்கதையா? அல்லது அரசு கையில் இருக்கும் போது இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதா என்பதை காண அது உதவும்.

 

அவர்களுக்கு உறவுகள் இலங்கையில் இருக்கும் வரை அந்த குடும்பம் சொல்லும் கதைகளையும் முழுவதாக நம்பக் கூடாது. யாழ்ப்பல்கலை கழக மாணவர்கள் கூட உள்ளே போட்டு வந்து கதையை மாற்றியவர்கள். "இலங்கையின் கொலைக்களத்தில்" தோன்றிய வைத்தியர்கள் பின்னர் அரசின் பிரதான சாட்சிகளாக 'Lies Agreed Upon" ல் தோற்றினார்கள். நவநீதம் பிள்ளையிடம் சென்றவர்கள் வலு கெதியில் "புலி ஆதரவாளரான நவநீதம் பிள்ளையின் கையாட்கள் சிலர் எங்களை மிரட்டி நவநீதம் பிள்ளையிடம் செல்ல வைத்தார்கள்" என்று அறிக்கைவிடப் போகிறார்கள் என்று கூட ஒருவர் எதிர்வு கூறலாம். அதில் தவறு இல்லை. அதுதான் இலங்கையில் நடக்கிறது. வவுனியா சிறையில் வைத்து அடிக்கப்பட்டு மூன்று நாள்( 3 என்று நினைக்கிறேன், ஆனல் கூடாவா ஞாபகம் இல்லை) ஆஸ்பத்திரியில் இருந்து இறந்தவர்கள் கூட(நிமலரூபன்) நெஞ்சு வலியால்த்தான் இறந்தார்கள் என்பதுதான் பதிவில் இருக்கும் மருத்துவ காரணம்.

Edited by மல்லையூரான்

அதன் சில தகவல்களிலுள்ள முரண்பாட்டை மட்டுமே சுட்டிக்காட்டினேன்.. அதாவது 'சடலம் கண்டுபிடிக்கப்பட்டது' எனும் விடயம். வேறு முரண்பாடுகள் அந்த செய்தியில் இல்லை.

 

ஏற்கெனவே வேறு தளங்களில் வந்த யேர்மன் பிரசை.. அந்த படம் போன்றவை பொய் என்பதை இதில் குறிப்பிட்டுனே தவிர அதற்கும் மேற்படி செய்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தகவல்களுக்கும்

பொறுப்பான  பதில்களுக்கும்

நன்றி சோழியன்.  

 

எமது இனத்துக்காக உழைத்த ஒருவரது  சகோதரன்  என்றரீதியில்  பலரும்  அக்கறைப்படுவது தப்பான செய்திகளுக்கு ஊக்கம் கொடுப்பதாக  அமைந்துவிடுவதும் எமது பலவீனமே.

Edited by விசுகு

எமது இனத்துக்காக உழைத்த ஒருவரது  சகோதரன்  என்றரீதியில்  பலரும்  அக்கறைப்படுவது தப்பான செய்திகளுக்கு ஊக்கம் கொடுப்பதாக  அமைந்துவிடுவதும் எமது பலவீனமே.

 

களுத்துறையில் சிறை சாலையிலும்  கொல்லப்பட்ட இளைஞனின் உடலை மீட்பதில் ஆனந்த சங்கரி தலையிட வேண்டியிருக்கிறது.  இதபற்றியும் உண்மையை அறிந்தவர்கள் எழுத முன் வராவிட்டல் ஆனந்த சங்கரியினால் பொய்கள் பரப்பப்ப்டுமா தெரியாது.

 

 

இன்று காலை களுத்துறை சிறைச்சாலையில் மரணமடைந்த 33 வயதையுடைய தமிழ் அரசியல் கைதி பிரான்ஸிஸ் நெல்சன் தனது இரு பிள்ளைகளையும், பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்றுள்ள தனது மனைவியின் பொறுப்பில் விட்டுச்சென்றுள்ளார். 2006ம் வருடம் முதல் ஏறக்குறைய ஏழாண்டுகள் சிறையில் தனது வாழ்க்கை காலத்தை கழித்த எம் தமிழ் உறவான அப்பாவி தமிழ் இளைஞனுக்கு வேண்டிய மருத்துவ வசதிகளை சிறை அதிகாரிகள் உரிய நேரத்தில் வழங்கியிருந்தால் குறித்த இளைஞனின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும்.

அவரின் உடலின் பல பாகங்களிலும் எறிகணை சிதறல் துண்டுகளும், துப்பாக்கி சன்னங்களின் துகள்களும் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஒரே ஒரு காரணம் மட்டும் போதும் பிரான்ஸிஸ் நெல்சனை சிறீலங்கா அரசு விடுதலை செய்வதற்கு. இந்த ஏழாண்டுகளும் உடலில் வலியை சுமந்து கொண்டு அவர் பட்ட அவஸ்தைகளும், துன்பங்களும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. சிறை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்கத்தவறியதன் விளைவாகவே இன்று இந்த துன்பியல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மனிதாபிமானமற்ற செயலால் எம் சகோதரனின் மரணம் நிகழ்ந்திருப்பதால் பிரான்ஸிஸ் நெல்சனின் மரணத்துக்கு சிறை அதிகாரிகள் பெறுப்பேற்றேயாக வேண்டும்.

குறித்த இளைஞனின் மனைவி தனது இரு பிள்ளைகளையும் பராமரிக்க முடியாத கையறு நிலையில் இன்று நிற்கின்றார். இந்த மரணச்சம்பவத்தை அந்த இரு சிறு பிள்ளைகளுக்கும் எதிராக இழைக்கப்பட்ட அநீதியாகவே, கொடூரமான செயலாகவே நான் பார்க்கின்றேன். மனிதாபிமான அடிப்படையிலேனும் தேவையான மருத்துவ வசதிகளை வழங்கியிருக்கலாம். இல்லை அவரை விடுவித்திருக்கலாம். சிறை அதிகாரிகளுக்கு இருந்த அதிகாரத்தை முறையாக பிரயோகிக்க தவறியமையால் பிரான்ஸிஸ் நெல்சனின் மரணம் சம்பவித்திருக்கிறது. எனவே சிறை அதிகாரிகளை குற்றவாளிகளாக நான் கருதுகிறேன்.

பிரான்ஸிஸ் நெல்சனின் உடலை அவருடைய மனைவி மற்றும் உறவினர்களிடம் உடனடியாக கையளிக்க வேண்டுவதோடு, அவர்களது இரு பிள்ளைகளையும் பராமரிக்க, கல்வித்தேவையை பூர்த்தி செய்ய வசதி இன்மையால் அவரது மனைவிக்கு உரிய நஸ்டஈட்டை வழங்குமாறு வலியுறுத்துகின்றேன்.

மேலும் பல தமிழ் அரசியல் கைதிகள் பிரான்ஸிஸ் நெல்சனைப்போன்றே உடலில் வெடிபொருள்களின் எச்சங்களை தாங்கியவாறு, ஜீரணிக்க முடியாத அவலங்களோடு, மருத்துவ வசதிகளுக்காக ஏங்கியவாறு இருப்பதாக தகவல் கிடைத்திருப்பதால், உடனடியாக நியாயமாக செயல்படக்கூடிய அதிகாரிகளைக்கொண்ட குழுவை நியமித்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அல்லது வேறு ஏதேனும் மாற்று நடவடிக்கைகளை எடுப்பதற்கு சிபாரிசு செய்கின்ற அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படுதல் வேண்டும்.

இனியும் இத்தகைய கொடூரமான மரணங்கள் சம்பவிக்காமல் இருக்க, தமிழ் அரசியல் கைதிகள் எனும் ஒரே காரணத்துக்காக தாம் விரும்பிய எதையும் கேட்க முடியாத நிலையில் அடக்குமுறைக்குள் வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்து, அவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமென நான் அரசை வலியுறுத்துகின்றேன்.

 

கூட்டமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவரான வீ.ஆனந்தசங்கரி தெரிவிப்பு.

 

http://tamil24news.com/news/archives/99506

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.