Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே 19ஐ வெற்றிநாளாக கொண்டாட வேண்டுமாம் – சிறிலங்காவில் அழைப்பு விடுத்த சுப்பிரமணியன் சுவாமி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ss.swamy-srilanka.jpg

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட மே மாதம் 19ம் நாளை தீவிரவாதம் ஒழிக்கப்பட்ட வெற்றி நாளாக அனைவரும் கொண்டாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. 

சிறிலங்கா இராணுவம் ஏற்பாடு செய்திருந்த, பாதுகாப்புக் கருத்தரங்கில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

‘போருக்குப் பிந்திய சிறிலங்கா – சவால்களும் பிராந்திய உறுதிப்பாடும்‘ என்ற தொனிப்பொருளில் சுப்பிரமணியன் சுவாமி நிகழ்த்திய உரையில்,

“ஜனநாயக நாடு ஒன்று வெளிநாட்டு உதவிகளின்றி தீவிரவாதத்தை தோற்கடிக்க முடியும் என்று வழிகாட்டிய நாடு சிறிலங்கா. 

இதற்காக பிராந்திய நாடுகள் சிறிலங்காவுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளன. 

இஸ்ரேல் இராணுவத்தின் வினைத்திறனை மிஞ்சும் அளவுக்கு சிறிலங்கா இராணுவம் திறமையானதாக மாறியுள்ளது. 

சிறிலங்கா தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் செய்திகளை பார்க்கும் போது, முழு இந்தியாவும் சிறிலங்காவை எதிர்ப்பதான உணர்வு ஏற்படலாம். ஆனால், உண்மையான நிலைமை அதுவல்ல.

swamy-daya.jpg

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது பிரதான தளபதிகளும் 2009 மே மாதம் 19ம் நாள் கொல்லப்பட்டதுடன், மூன்று பத்தாண்டுகளாக இரத்தஆறு பெருக்கெடுக்கக் காரணமான போர் முடிவுக்கு வந்தது. 

எனவே, மே மாதம் 19ம் நாளை தீவிரவாதம் ஒழிக்கப்பட்ட வெற்றி நாளாக அனைவரும் கொண்டாட வேண்டும். 

சிறிலங்கா போரில் வெற்றி பெறுவதற்கு இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் உதவி செய்தன. 

இதற்கென இந்தியாவுடன் பேச்சுக்களை நடத்தி ஒத்துழைப்பை பெறுவதற்காக, இருதரப்பிலும் தலா மூவரைக் கொண்டதாக - ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 

இந்தக் குழு மிகவும் இரகசியமான முறையில் போர் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்த போது உடனுக்குடன் தீர்மானங்களை எடுத்து அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றியது. 

தமிழ்நாட்டின் அப்போதைய முதல்வரான கருணாநிதிக்கு போரின் முன்னேற்றம் பற்றி அடிக்கடி எடுத்துக் கூறப்பட்டது. 

பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் கொல்லப்படுவது கூட கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது. 

கருணாநிதி மதிநுட்பத்துடன் நிலைமையை உணர்ந்து இந்த விடயத்தில் தலையிடவில்லை. 

சிறிலங்காவின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடும் என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை. }

ஐ.நாவின் கீழ் அல்லது சார்க் அமைப்பின் கீழ் ஏதாவது இருதரப்பு உடன்பாடுகள் நிறைவேற்றப்படும் போது மட்டுமே இந்தியா இவற்றில் சம்பந்தப்படும். 

தமிழர்களும் சிங்களவர்களும் இருவேறு மொழிகளைப் பேசினாலும் இன ரீதியாக ஒன்றுபட்ட சமூகம் என்ற நிலைப்பாட்டிலேயே இந்தியாவில் உள்ள நானும் என்னைப் போன்ற பெரும்பாலானோரும் இருக்கின்றனர்.

இதனை மரபணுப் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தலாம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

http://www.puthinappalakai.com/view.php?20130906108998

மழை விட்டாலும் தூவானம் விடாது போல  

இது தேர்தலில் கருணாநிதியை போட்டுக்கொடுக்கும் வேலை. அது அவசியமான தொண்டொன்று. காங்கிரஸ் அல்லது பா.ஜ.க வருங்காலத்தில் எப்படி தமிழர் விவகாரங்களை கையாள வேண்டும் என்ற பாடங்களை படிக்க வேண்டுமாயின் தி.மு.க திரும் 2014ல் மண் கவ்வ வேண்டும். பா.ஜ.கா தமிழ் நாட்டில் எதுவும் செய்ய முடியாது. மேலும் இவரை சேர்த்திருப்பதால் மிச்சம் தேடிக்கொண்டுள்ளது.

 

"இந்தியா தலையிடாது" கதையை இவர் பிரதானமாக சொல்வது சம்பந்தரின் பேச்சுக்கு பதிலாகவே. சம்பந்தர் கூட்டமைப்பு தேர்தலில் வென்றால் இந்தியா தான் முன்னல் சென்று 13ம் திருத்தத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி தந்திருப்பதாக அண்மையில் பேசினார். இவர் அந்த பேச்சில் உண்மையில் இல்லை என்று நிறுவ முனைகிறார். தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களிக்க விரும்பது அவர்கள் 13ம் திருத்தத்தை நிறைவேற்றுவார்கள் என்ற குறுகிய நோக்கத்தால் அல்ல. தமிழரின் உரிமை போராட்டம் தொடர வேண்டும் என்பதற்காகவே. எனவே தேர்தலின் பின்னர் மக்கள் 13ம் திருத்தம் மீது பெரிய நம்பிக்கைவைத்து கூட்டமைப்பிடம் கேள்விகள் கேட்கப் போவதில்லை. சில அரசியல் செய்வார்கள். அது கூட்டமைப்பை பாதிக்காது.

 

இவரை மகிந்த தேவையான வரைக்கும் பாவித்துவிட்டு பின்னர் மேர்வின் சில்வாவை பூட்டும் வண்டியில் பூட்டிவிடுவார். இவர் சிங்கள ராஜதந்திரம் என்றால் என்ன என்பது தெரியாமல் புயத்துபவர். இந்த தேர்தலில் காங்கிரஸ் போக 13ம் திருத்தம் போகும். அப்போது பதவியில் பா.ஜா.க இருந்தால் இந்தியா சர்வதேச மட்டதில் மிக பெரிய அவமானத்தை சந்திக்கும்.

சூசாமி கொஞ்சம் ஓவரா போறாப்பிலே தெரியுது....

தமிழக மீனவர்கள் பிரச்சினை : இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் சுப்பிரமணியசாமி ஆலோசனை

Written by Tamil   // September 6, 2013   //

 

rt.jpgராமேசுவரம் பகுதியில் இருந்து கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முன்னாள் மத்திய மந்திரியும் பாரதீய ஜனதா கட்சி தலைவர்களுள் ஒருவருமான சுப்பிரமணியசாமி நேற்று கொழும்பில் இலங்கை அதிபர் ராஜபக்சேயை சந்தித்து பேசினார்.

அப்போது சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக அவர் ராஜபக்சேயுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி ஜி.எல்.பெரீஸ், நிதி மந்திரி அமுனங்கமா ஆகியோர் உடன் இருந்தனர். சந்திப்புக்கு பின்னர் சுப்பிரமணியசாமி கூறுகையில்

‘அனைத்து மீனவர்களும் இலங்கை சட்டவிதிகளுக்குட்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள் என ராஜபக்சே தன்னிடம் உறுதி அளித்து உள்ளதாக’ தெரிவித்தார். இலங்கை அதிபர் ராஜபக்சே கூறுகையில் ‘மீனவர்களை உடனடியாக விடுதலை செய்து விடுவோம்.

ஆனால் சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடி படகுகளை விடுவிக்கமாட்டோம். மீன்பிடி படகு அதிபர்கள் மீனவர்களை தவறாக வழிநடத்தி இலங்கை கடல்பகுதியில் மீன்பிடிக்க கட்டாயப்படுத்துகிறார்கள்’ என்றார்.

http://news.tamilstar.com/archives/47305

சுப்பிரமணிய சாமியின் பலவீனம் வெளியாகத் தொடங்குகிறது. இந்த கிடங்கில்தான் கிருஸ்ணா, சல்மான் குர்சித், மனமோகன் சிங், கருணாநிதி, ஜெயலலிதா, சுதர்சனநாச்சியப்பன், சுஸ்மா எல்லோரும் விழுந்து எழும்பியது. மகிந்தாவுடனும் மற்றயவர்களுடனும் பேசிவிட்டு இவர்கள் பத்திரிகைகளில் கொடுத்த எந்த அறிக்கையும் நடக்கவில்லை. இதில் கனிமொழி மகிந்தாவுடன் பேசிவிட்டு ஏதாவது நம்பிக்கை கொடுத்தாவா தெரியவில்லை. இதன் பின்னர் "சுன" அடங்கிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

சூசாமி கொஞ்சம் ஓவரா போறாப்பிலே தெரியுது....

 

சுப்பிரமணியசாமியை....

டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான், போன்ற ஆக்கள் தான் ஒவரா... போகவிட்டது,

ஒட்டகத்துக்கு... இடம் குடுத்து... முழுத் தமிழினத்தையும் அழித்து விட்டார்கள் ஒட்டுக் குழுக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.