Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2020 ஒலிம்பிக்போட்டி டோக்கியோவில்! - இரகசிய வாக்கெடுப்பில் முடிவு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

130806085421_2020_olympics_candidates_30

எந்த நகர் வெற்றி பெறும்?

இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடக்கும் என்பது இன்று முடிவாகிறது.

போட்டியில் மூன்று நகரங்கள் உள்ளன.

இதற்கான வாக்கெடுப்பு அர்ஜெண்டினா நாட்டின் தலைநகர் போனஸ் ஏரிஸ் நகரில் லண்டன் நேரம் இரவு 7.45 க்கு நடைபெற்று முடிவுகள் ஒன்பது மணிக்கு அறிவிக்கப்படும்.துருக்கி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் நாட்டு தலைநகரங்களான இஸ்தான்புல், டோக்யோ மற்றும் மட்ரிட் ஆகிய நகரங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

மூன்று நகரங்களும் தங்களது தரப்பு வாதங்கள், ஏற்பாடுகள் ஆகியவற்றை படக்காட்சியாக சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் முன்னர் காட்டி வருகின்றன.

கடும் போட்டி

130907133238_istanbul_olympics_presentat

துருக்கியில் இதுவரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றதில்லை

2020 ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பைப் பெற நடைபெறும் போட்டி மிகவும் கடுமையானதாக இருக்கிறது என்று சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெறும் அரங்கில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.

எனினும் மூன்று நகரங்களும் தமது பக்கமுள்ள சாதகங்களை முன்வைத்தாலும், பாதகமான அம்சங்களும் இருக்கவே செய்கின்றன.

துருக்கியத் தலைநகர் இஸ்தான்புல், ஐரோப்பா மற்றும் ஆசியாவை இணைக்கும் ஒரு தனித்துவமான பகுதியில் இருப்பதை ஒரு சாதகமான அம்சமாக முன்வைத்துள்ளது. ஆனால் இந்த ஆண்டின் முற்பகுதியில் அங்கு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது அரசு கடுமையாக நடந்து கொண்டது ஒரு தடையாக இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

"பாதுகாப்பான கைகள்"

130903034523_tokyo_olympic_304x171_afp_n

டோக்யோ நகரில் 1964 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன.

டோக்யோவைப் பொருத்தவரையில், போட்டியை நட தும் வாய்ப்பு தமக்கு கிடைத்தால் அது பாதுகாப்பானவர்களின் கைகளில் இருக்கும் என்று வாதிடுகிறது.

எனினும் ஃபுக்குஷிமா அணுமின்நிலையத்திலிருந்து கசியும் கதிரிவீச்சுகள் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.

ஸ்பெயினின் தலைநகரான மட்ரிடில் போட்டிகளை நடத்தக் கோருபவர்கள் அங்கு ஏற்கனவே பல அரங்குகள் தயார் நிலையில் உள்ளதாக கூறி வாக்கு கேட்கிறார்கள்.

பொருளாதாரக் கவலைகள்

130907150643_madrid_2020_304x171_ioc_noc

அரங்குகள் தயார் ஆனால் பொருளாதாரம்?

 

ஆனால் மறுபுறம் ஸ்பானிஷ் பொருளாதாரம் அதன் வாய்ப்புகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

இன்னும் ஆறு ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெறும் என்பது சனிக்கிழமை இரவு தெரிந்துவிடும்.

போன்ஸ் ஏரிஸில் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் கூட்டத்தில் அதன் அடுத்த தலைவருக்கான தேர்தலும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

 

http://www.bbc.co.uk/tamil/sport/2013/09/130907_2020_olympic_city.shtml

Edited by தமிழரசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
olympic-8913-150.jpg

2020ல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த டோக்கியோ தேர்வாகியுள்ளது. இதற்கான ரகசிய வாக்கெடுப்பு நேற்று மாலை அர்ஜென்டினாவில் உள்ள பியூனோஸ் ஏர்ஸ் நகரில் சர்வதேச ஒலிம்பிக் குழு நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் டோக்கியோ, இஸ்தான்புல் மற்றும் மாட்ரிட் ஆகிய நகரங்களுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இதில் டோக்கியோ தேர்வாகியுள்ளது. இது 125 வது சீசன் ஆகும். இதன் மூலம் ஜப்பான், 2வது முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவுள்ளது. ஏற்கனவே 1964ல் ஜப்பான் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது 93 நாடுகள் போட்டிகளில் பங்கேற்று இருந்தது.1964ல் ஜப்பானில் நடந்தபோது ஆசிய நாடு அப்போதுதான் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்த தேர்வானது என்பது குறிப்பிடத்தக்கது.

  

ஜப்பான் பிரதம் ஷின்‌ஷோ அபே கூறுகையில் புகுஷிமா அணு உலை இங்கு இருந்தாலும் டோக்கியோ நகரம் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த பாதுகாப்பாகவே உள்ளது. அணு உலை, டோக்கியோவிலிருந்து 150 மைல் ‌தொலைவில் உள்ளது.2011-ல் பூகம்பம் மற்றும் சுனாமி ஜப்பானின் வட-கிழக்கு பகுதிகளை தாக்கியது.ஆனால் அது போல இங்கு நடக்காது. டோக்கியாவில் எந்தவித ‌பாதிப்பும் ஏற்படாது என்றும் புகுஷிமா அணு உலையால் எந்தவித கதிரியக்க நீர் கசிவும் ஏற்படாது என அவர் தெ‌ரிவித்துள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=92312&category=WorldNews&language=tamil

 

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தமுறை டில்லி அல்லது அம்பாந்தோட்டையில் நடத்த முயற்சிக்க வேணும்..

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா அம்பாந்தோட்டை கடலுக்கு அடியில் Olympics நடாத்தி மகிந்த குழு புதிய சாதனையை படைக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் இந்தியாவில் நடந்த கொமன்வேல்த் போட்டிகளைப் பார்த்து ஒரு நாடும் இந்தியாவில் கொமன்வெல்த் போட்டிகளை நடாத்தவே ஆதரவு தரமாட்டார்கள். ஒலிம்பிக் போட்டியைப் பற்றி நினைத்தே பார்க்க முடியாது. சிறிலங்காவைப் பொறுத்தவரையில் அதிகபட்சம் ஆசிய நாடுகளுக்கு இடையிலான போட்டிகளை நடாத்த சந்தர்ப்பம் கிடைத்தாலே கிடைக்குமே தவிர ஒலிம்பிக் பற்றி நினைத்துக் கூடப்பார்க்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன்பு, ஜேர்மனியில்... எமது நகரத்தில் ஒலிம்பிக் நடத்துவதற்கு ஆதரவு தேடி...
என்னென்ன திட்டங்கள் உள்ளது என்பதை விளக்க... ஜேர்மன் பூராகவும் உள்ள பெரிய தொழிற்சாலைகள், பாடசாலை மாணவர்கள், சமூக அமைப்பினர் என்று பல்வேறு துறைகளையும் சார்ந்தவர்கள் விளம்பரத்துக்கு மட்டும் பல மில்லியன் ஐரோக்களை தண்ணியாக செலவழித்தார்கள்.
அதனைப் பார்த்த போதே... பிரமிப்பாக இருந்தது. ஒரு ஒலிம்பிக் நடக்கும் இடத்தில் நிற்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.
அந்த வாய்ப்பு பின்... கிரேக்கத்துக்கு கொடுக்கப்பட்டது.
அப்படியான நிலையில்... ஆசியாவில் உள்ள லஞ்சம், ஊழல் நிறைந்த‌ ஏழை நாடுகளால்... ஒலிம்பிக்கை நினைத்தும் பார்க்க முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.