Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிபிசி தமிழோசையின் நடு நிலமை என்னும் வேடம் கிழிகிறது

Featured Replies

புலிகளை (மட்டும்) விமர்சித்து நடுநிலைமையை பேணுவோம் :

முல்லைத்தீவில் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இலங்கை அரசின் விமானத் தாக்குதலால் கொல்லப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 61 இதனை கண்காணிப்பு குழுவினரும், யுனிசெப் அதிகாரிகளும் சென்று பார்வையிட்டதுள்ளதுடன். கண்காணிப்பு குழுவின் தலைவர் ஹென்றிஹீசன் 61 குழந்தைகள் கொல்லப்பட்டதையும், 123 மேற்பட்ட குழந்தைகள் காயப்பட்டதையும் உறுதிசெய்திருப்பதோடு குறிப்பிட்ட செஞ்சோலை சுற்றுவட்டாரத்தில் புலிகளின் ஆயுத முகாம்களோ, எந்தவொரு ஆயுதப் பயிற்சி நிலையங்களோ இல்லை என உறுதிப்படுத்தியுமுள்ளார்.

ஆனால் அரசாங்க பேச்சாளரான ஹெகலிய ரம்புக்வெல்ல திரும்ப திரும்ப அது புலிகளின் பயிற்சி முகாமெனவும், புலிகளினால் கட்டாயமாக பிடித்து வரப்பட்ட சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட இடமெனவும் சாதித்து வருவதோடு அது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் அரசாங்கத்திடம் உள்ளதாகவும், அது சர்வதேச சமூகத்திடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் பி.பி.சி தமிழோசையிடம் கூறி வருகின்றார். அமைச்சரைப் பேட்டி கண்ட பி.பி.சியின் செய்திச் சேவையாளரோ கண்காணிப்புக் குழுவின் கருத்துப் பற்றி எந்தவொரு கேள்வியையும் அமைச்சரிடம் கேட்காமல் அhசாங்கத்தின் நம்பகத்தன்மையை வழமை போல் காப்பாற்றியுள்ளார். அவர் நினைத்திருந்தால் கண்காணிப்பு குழு இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது எனக் கூறி உலக மக்களுக்கு சில உண்மைகளை தெரியவைத்திருக்கலாம். அல்லது கண்காணிப்புக்குழு தலைவர் மற்றும் யுனிசெப் அதிகாரிகள் யாரிடமாவது இந்த சம்பவம் பற்றி கருத்துக் கேட்டிருந்தாவது பி.பி.சி. தமிழோசை தனது நடுநிலமையை பேணியிருக்கலாம். ஆனால் பாருங்கள் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையனை மட்டும் அவர் மடக்கி கேள்வி கேட்கப் பட்டபாடு சொல்லித் தெரியாது, இந்த இணைப்பில் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் :

http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_promo.shtml

அடபரவாயில்லை அரசாங்கத்தை பி.பி.பி. தமிழோசை காப்பாற்றிவிட்டது. அமைச்சரை கேள்வி கேட்டு சங்கடப்படுத்துவது சரியில்லைதானே..(?)

புலிகளின் குறிப்பிட்ட நிலைகளில் குறிதவறாமல் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது(பி.பி.சி. செய்தியின்படி நான் ஊகித்த செய்தி இதுதான்)இதுவே புலி செய்திருந்தால் எத்தனை அழுகுரல்கள் பி.பி.சியில் எத்தனைபேட்டிகள், நடுநிலமை என்றால் பக்கம் சாராமல் என்பது பொருள் என நினைக்கின்றேன். (வேறு ஏதேனும் உள்ளதா…(?)

பொதுமக்கள் அரச செய்திகளையும், புலிகளின் இணையத்தள செய்திகளையும், புலியெதிர்ப்பு இணையத்தள செய்திகளையும் பார்த்தும் கேட்டும் படித்தும் எது உண்மை, எது பொய்யென்று அறியாமல் குழம்பியிருக்கும் இத்தகைய வேளைகளில் பி.பி.சி. போன்ற பொறுப்பு வாய்ந்த ஊடகங்கள் தங்கள் பக்கச்சார்பின்மையை உறுதிப்படுத்த வேண்டும். இந்த ஒரு சம்பவம் மட்டுமே பி.பி.சியின் நடுநிலமையை கேள்விக்குறியாக்கவில்லை ஏற்கனவே பி.பி.சி. தமிழோசை அளித்த பல செய்திகளையும் கருத்தில் கொண்டே இதனை சொல்கின்றேன்.

படத்தையும் ஏனைய செய்திகளையும் இணைத்துப் பார்க்கும் ஒரு சாதாரண பார்வையாளனால் கூட குறிப்பிட்ட இடம் பாடசாலையா, இல்லை பயிற்சி முகாமா என விளங்கிக்கொள்ளக் கூடிய நிலையில் இலங்கை அரசாங்கத்தினது முயற்றி முழுப் பூசனிக்காயினை சோற்றில் மறைப்பதுபோல்தான் உள்ளது.

பார்க்க படங்களையும் :

http://sankathi.org/news/index.php?option=...w&id=8&Itemid=1

http://www.eelampage.com/?cn=28175

http://www.eelampage.com/?cn=28187

http://www.eelatamil.com/sensolai/

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19228

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19224

இங்கு நடுநிலமையாக எழுதும் வலைப்பதிவாளர்களான சனநாயகவாதிகளே, மற்றும் நடுநிலைச் செய்திகளை மட்டுமே வழங்கும் புலி எதிர்ப்பு இணையத்தளங்களே, இந்திய ஊடகங்களே, புலிகளை எதிர்ப்பது மட்டுமே நடுநிலமை என நீங்கள் கருதுகின்றீர்களோ தெரியவில்லை..? அல்லது இதுவும் புலிகளால் நிகழ்ந்த கொடூரம் என சொல்லப்போகிறீர்களா..? தயவு செய்து புலிகளை எதிர்ப்பது உங்கள் தனிப்பட்ட உணர்வுகள், மற்றும் உங்கள் மனநிலை, நீங்கள் சார்ந்திருக்கும் புறச்சூழல் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். அதற்காக இப்படிப்பட்ட உண்மைகளையும் திசைமாற்ற நினைக்க வேண்டாம்.

புலிகளை எதிர்ப்பதற்காக எதையெல்லாம் எழுதுகிறீர்கள், இந்தப் படுகொலையை கண்டித்து ஒரு வார்த்தையாவது திருவாய் மலர்ந்தருள்வீர்களாக..

நாங்கள் படும் பாட்டை திசைமாற்ற வேண்டாம், அப்படித்தான் உங்களுக்கு மனம் வரவில்லை என்றால் வழமைபோன்று புலிகள்மீது குற்றத்தைசாட்டித்தானும் இந்த அவல நிலையை உலகுக்கு தெரியப்படுத்துங்கள்.

இந்த நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொறுப்பு புலிகளிடமே உள்ளது. புலிகள் பொதுவாக ஊடகங்களுடன் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட உறவினை பேணுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. புலிகள் வடக்கு கிழக்கில் நிகழும் இத்தகைய கொடூரங்களை ஏனைய ஊடகங்களுக்கும் உடனுக்குடன் புகைப்பட வடிவிலேனும் கிடைக்கச் செய்தல் வேண்டும். ஏனெனில் ஒரு செய்தி சாதாரண எழுத்தோடு வருவதைவிடு ஒரு புகைப்படத்தோடு வெளியானால் அதன் தாக்கம் சொல்லித்தெரியத்தேவையில்லை, வரலாற்றை மாற்றிய புகைப்படங்களே சான்று.

http://onlinetamil.blogspot.com/

நாங்களும் ஊடகங்கள் என்று வானொலி தொலைக்காட்சி இணையங்கள் பத்திரிகைகள் என்று எத்தனை வைத்திருக்கிறம்.

இதில் யாராவது பிபிசி போன்று சம்பந்தப்பட்டவர்களை நேர்காணல்களை செய்து செய்திகளை வெளியிடுகிறார்களா? எமது ஊடகங்களிற்கு இதை செய்வதற்கு என்ன தொழில்நுட்ப தட்டுப்பாடா இல்லை தொலைபேசியால் நேர்காணல் செய்ய பெருளாதார வசதிகள் இல்லையா? கொழும்பில் உள்ள தனியார் வானொலிகள் தொலைக்காட்சிகள் தரத்திற்காவது எமது புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்கும் ஊடகங்கள் இருக்கா?

எம்மவர்கள் ஊடகங்கள் என்று போட்டு ஒரு செய்தி நிறுவனம் பலதரப்பட்ட இன்னல்களிற்கு மத்தியில் செய்தியாளர்களை வைத்து அறிந்து கொள்ளும் செய்தியை பிரதி செய்து வடிவங்களை மாற்றி வெளியிட்டால் காணும் என்ற திருப்த்திகரமான வட்டத்தில் நிக்கிறம். ஊடகங்கள் என்றால் ஒருவருடமையை மற்றவர் காப்புரிமை மரியாதை இல்லாது பிரதி பண்ணி போடுவது அல்ல என்று கேட்டால் ஏதோ செய்திகள் சென்றடைந்தால் காணும் தானே என்று வியாக்கியானப்படுத்திறம். இப்பொழுது விளங்கிறதா எமது ஊடகங்கள் பல பல பெயர்களில் வடிவங்களில் பெயரளவில் இருந்தாலும் அவர்கள் சுயமான ஆய்வுகளை தேடல்களை நடத்தாது பிரதிபண்ணி வடிவத்தை மாற்றி போடுவதில் திருப்த்தி அடைவதால் வரும் ஊடகவியல் வறட்டுத்தன்மை?

எமது ஊடகங்கள் பல பெயர்களில் வடிவங்களில் (இணையத்திலோ, வானொலியாகவே, தொலைக்காட்சியாகவோ, அச்சடித்துவரும் பத்திரிகையாகவே) இருந்தாலும் ஒருவரை ஒருவர் பிரதி பண்ணுவதால் கருத்தியல் நிலையின் எந்தவிதமான மேலதிக பங்களிப்பையும் செய்யவில்லை. முதலில் சக ஊடகங்கள் சேகரித்து வழங்கும் செய்திகள், ஆய்வுகளிற்கு தகுந்த மதிப்பளித்து அதற்குரிய காப்புரிமையை ஏற்று நடப்பவர்களிற்குதான் அந்த பங்களிப்புகளின் பெறுமதி தெரியும். அவற்றை மதிக்க முதலில் தெரிந்தவர்களிற்கு அடுத்தபடியாக அந்த தரத்தில் தானும் பங்களிக்க வேண்டும் என்ற உத்வேகம் வரும். எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் களவெடுத்துப் போட்டுவிட்டு தேசியம் என்ற சொல்லை உச்சரித்து தப்பிப்பவர்களால் தனித்துவமாக ஊடகத்துறையில் பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணம் வராது ஏன் என்றால் மற்றவர்களின் ஆக்கங்கள் பங்களிப்புகளிற்கு மதிப்பளிக்கத் தெரிந்தவர்களிற்கு தான் எவ்வாறு சுயமாக தனித்துவமாக பங்களிக்க வேண்டும் என்ற தெளிவு பிறக்கும்.

எமது ஊடகங்கள் தரமாக நடந்து கொண்டால் அவற்றை தரமாக நடக்குமாறு விமர்சித்து திருத்தி வந்திருந்தால் இந்த கேவலம் இப்பொழுது எமக்கு இருக்காது. ஆங்கிலத்தை விடுங்கள் தமிழிலாவது தனித்துவமாக வானொலியில் தொலைக்காட்சியில் இணையத்தில் நடக்கிறார்களா எமது ஊடகங்கள்? செய்தி நேரம் என்றவுடன் ஏதோ கடமைக்கு 1வர் இருப்பார் களவெடுத்தவற்றை வாசிக்கிறது. ஆய்வு என்றால் எந்த விடையம் என்றாலும் தங்கடை கூட்டுக்குடும்பத்து அங்கத்தவர்களை கூப்பிட்டு வைத்து குசு குசுப்பது. ஆனால் சினிமா, பாட்டுக்கு பாட்டு, சினிமா கேள்வி பதில், புதிர், பாடல் நிகழ்ச்சிகள் என்ற இழவுகளிற்கு மாத்திரம் பலவிதமான ஆக்கள் இருக்கினம் விதம் விதமாக தனித்துவமாக சிந்தித்து புதிய புதிய கோணங்களில் நிகழ்சிகளை நடத்துவினம்.

எங்களை நோக்கி எமக்காக உருவாக்கப்பட்ட ஊடகங்களிடம் சில நேர்மையான கேள்விகளை கேப்பம். பிபிசி மாற்றான் கூடகம். அவர்களின் தரத்தை விஞ்சி செய்யிறதுக்கு வசதிகள் இருந்தும் எங்கள் கவனம் சினிமா பொழுது போக்கு போட்டிகளில் தான் இருக்கு.

தமிழ் ஒளி இணையத்தின் செய்திப்பிரிவு எத்தனை பேர்களை கொண்டது? அவர்களுடைய சினிமா மற்றும் ஏனைய பொழுது போக்கு நிகழ்ச்சிகளிற்கு எத்தனை பேர் வேலை செய்கிறார்கள்? பலர் பகுதி நேரமாக வேலை செய்கிறார்கள் என்றால் மொத்த வேலை நேரத்தில் எத்தனை வீதம் செய்திப்பிரிவில் செலவிடப்படுகிறது. இதில் இருந்து தெரியவரும் எதற்கு இந்த ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன என்று.

இதே கேள்விதான் IBC, TVI, CMR இக்கும்.

இவர்கள் விளம்பரப்படுத்தும் போது அறிவிப்பாளார்கள் வேண்டும் என்கிறார்களே அன்றி ஊடகவியலாளர்கள், செய்தி ஆய்வாளர்கள் ஆசிரியர்கள் வேண்டும் என்று இருந்திருக்கா? ஏன் களவெடுத்ததை தலையங்கத்தையும் ஒரு சில வசனங்களை மாத்திப்போட்டு சுருக்கமாக வாசிக்க அறிவிப்பாளர்கள் தகமை போதும் தானே.

  • தொடங்கியவர்

குருக்ஸ் உமது ஆதாங்கம் விளங்குகிறது,ஆனால் நாங்கள் சில நடை முறை விடயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.பிபிசி நடாத்தப்படுவது பிரித்தானிய மக்களின் வரிப் பணத்தில் அதற்கு பல கோடிகள் நிதி மூலாதாரம் உண்டு.தமிழ் ஓசைக்கு வேலை செய்பவர்கள் முழு நேர ஊழியர்கள் அவர்களுக்கு சம்பளம் வழங்கப் படுகிறது.ஆனால் எமது ஊடகங்களின் நிலை என்ன.தொலைக்காட்சிகளை எடுத்துக் கொள்வோம் தொலைக் காட்சிகளுக்கு கட்டணம் செலுத்தும் மக்கள் தொகையினர் எதினை பேர்,தொலைக் காட்சி ஒளி பரப்புச் செய்ய செய்மதிக்குக் குடுக்க வேண்டிய தொகை என்ன? இதில் வேலை செய்பவர்களுக்கு சம்பளமும் குடுத்து இதனை நடாத்த முடியுமா? வேலை செய்பவர்களில் அனேகமானவர்கள் எந்த வித ஊதியமும் இன்றி தமது வேலை நேரம் போக மீதி நேரத்தில் தான் வேலை செய்கின்றனர்.அதற்காக நீங்கள் சொன்னவற்றைக் கருத்தில் அவர்கள் எடுக்க வேண்டாம் என்றில்லை, விமர்சிக்க முதல் இதில் உள்ள நடை முறைப் பிரச்சினைகளையும் நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.முழு நேர செய்தியாளர்களைப் பணிக்க மர்த்தி அவர்களால் இவற்றை நடாத்தமுடியாது அதற்கான நிதி ஆதாரம் எம்மிடம் இல்லை.மேலும் தமது சுற்று வட்டாரத்திலுள்ளவர்களையே நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்ற வைக்கமுடிகிறது.கனடாவிலோ ஐரோப்பாவிலோ அல்லது ஈழத்திலோ இருக்கும் ஆய்வாளர்களால் தொலை பேசி ஊடாகத் தான் தொடர்புகளை ஏற்படுத்த முடியும்.

இருக்கும் வளங்களைக் கொண்டும் தமது பகுதி நேரத்திலயே பலர் இன்று இணயச் சேவைகளை தமது சொந்த நிதி மூலாதாரத்தில் இருந்து செய்கின்றனர்.இப்படிச் செய்ய வேண்டும் என்ற கட்டாயமும் அவர்களுக்கு இல்லை.மற்றவர்களைப் போல் தமது சொந்த நலங்களை பார்த்துக் கொண்டு இருக்கலாம்.ஆகவே விமர்சனம் அதுவும் குறிப்பாக தன்னார்வமாக இவற்றைச் செய்பவர்களை நோக்கி பகிரங்கமாக வைக்கும் போது கவனம் எடுப்பது அவசியம். இவற்றில் உண்மயாகவே முன்னேற்றம் வேண்டும் என்றால் நேரடியாக சம்பந்தப் பட்டவர்களை அணுகி உங்கள் ஆலோசனைகள்,உதவிகளை வழங்கலாம் அதுவே சரியான நடை முறையாக இருக்கும்.

  • தொடங்கியவர்

மற்ற இன்னொரு விடயம் எமது ஊடகங்கள் ரம்புக்கலவிடம் பேட்டி வேணும் என்றால் அவர்கள் குடுக்கவா போகிறார்கள்.பேட்டி எடுப்பதற்கு பேட்டி எடுக்கப் பட உள்ளவர் முதலில் உடன் பட வேண்டும்.பிபிசி தமிழ்ச் சேவை தமக்குச் சார்பானது என்பதால் தான் பேட்டி குடுக்கிறார்கள்.

நாரதர் தமிழ் ஒளி இணையம், IBC, TVI, CMR போன்றவை தன்னாவலர்களால் நடத்தப்படவில்லை. சம்பளம் வழங்கப்படுகிறது.

இணைய செய்தித்தளங்கள் எல்லாம் தன்னார்வமாக தொழிற்படவில்லை. ஆனால் அப்படி தொழிற்படுகிறவர்களிற்கும் வெட்டி ஒட்டும் போது "நன்றி இந்த செய்தியின் மூலம் ..." என்று எழுதும் அடிப்படை ஊடக தர்ம்மத்தை கடைப்பிடிப்பதற்கு என்ன வில்லங்கம் என்று விளங்கவில்லை. இதற்கு எந்தளவு அதிக நேரம் தேவை storage bytes தேவை?

தன்னாவலர்கள் என்பதால் விமர்சனத்திற்கு அப்பால் இருக்க வேண்டும் என்று அல்ல. இது பற்றி பலமுறை பலரும் விவாதித்தாயிற்கு ஆனால் இந்த நன்நடத்தையை பின்வற்றுவதில் இருக்கும் கடினம் விளங்கவில்லை.

இன்று கூட புதினக்காரர் தமிழ்நெற் இன் பல செய்திகளை மொழிபெயர்த்து போடுறார் எந்தவித கூச்சமும் இன்றி. சங்கதி, பதிவும் அதை செய்கிறது நிதர்சனம் செய்கிறது. இலங்கை அரசாங்கம் எவ்வாறு குற்ற உணர்வின்றி தமிழரை படுகொலை செய்கிறதோ அதே குற்ற உணர்வின்றித்தான் இவர்களும் தங்களிற்குள் மாறி மாறி வெட்டி ஒட்டுகிறார்கள். எல்லோராலும் எல்லா செய்திகளையும் முதலில் எப்பவும் பெற்றுக் கொள்ள முடியாது என்பது யதார்த்தம். இதை ஏன் ஏற்றுக் கொண்டு ஒருதருக்கு ஒருதர் மதிப்பளித்து உதாரணத்திற்கு சங்கதி முதலில் வெளிக் கொண்டுவரும் செய்தியை சங்கதியை மேற்கோள் காட்டி போடுவதில் பதிவிற்கு தயக்கம், தமிழ்நெற்றின் செய்தியை மொழிபெயர்த்துப் போடும் புதினத்திற்கு அதை பின்குறிப்பாக போட தயக்கம்.

ஏல்லாரும் தேசியத்திற்கு வேலை செய்வதானால் ஏன் ஒருவருடைய பங்களிப்பை மற்றவர் மதிப்பளித்து அது தான் மூலம் என்று போடாததற்கு பல்வேறு பட்ட வியாக்கியானங்களை எழுதுறம்? இந்த நன்நடத்தையை என்று கற்றுக் கொள்ளப் போகிறம்?

இதைப்பற்றி தேசிய ஊடகங்களிற்கு இடையிலான ஒத்துளைப்பில் முன்னர் கூட எழுதியிருந்தேன்.

விமர்சனம் செய்வது அவர்கள் முன்னேறி அடுத்த நிலைக்கு சென்று ஒரு மதிப்பிற்குரிய ஊடக நிலையை அடைய வேண்டும் என்றே.

goodsrilanka, lankasri, lankasritv, newstamilnet இவர்கள் எல்லாம் என்ன தன்னாவலர்களா?

ஏன் தமிழ் ஒளி இணையத்தாருக்கு தமது இணையத்தை ஒழுங்கமைத்து சில முக்கிய நிகழ்ச்சிகளை 1...2 நாட்கள் இடைவெளியில் பார்க்கக்கூடியதாக செய்ய முடியாது உள்ளது. ஏன் அவற்றை 3...4 தன்னாவலர்கள் தமக்கு விரும்பிய படி களவெடுத்து இணையத்தில் விட வேண்டி இருக்கு? இதற்கு அவர்களிடம் பொருளாதாரம் இல்லையா இல்லை தொழில்நுட்பம் தெரியாதா? பிபிசி சிஎன்என் போன்ற சிறந்த ஊடக கட்டமைப்பு உதாரணங்கள் இருந்தும் ஏன் தம்மை ஒழுங்கு படுத்துவதில் பின்நிக்கிறார்கள்?

நேர்காணலிற்கு அணுகி யாரும் மறுத்தால் அதைப்பற்றி ஊடகங்கள் தெரிவிப்பது வழமை. இதை நான் இதுவரை எந்த தமிழ் ஊடகங்களிலும் கண்டதில்லை. அதாவது தாம் அரசதரப்பு கருத்துக்களை அறிய இன்னாருடன் தொடர்பு கொண்டோம் ஆனால் அவர்கள் மறுத்துவிட்டார்கள் என்று.

இதில் வேடிக்கையானது என்ன எண்றால் சந்தேசிய சிங்கள சேவை தமிழ் சேவையிலும் பார்க்க நடு நிலமையாக இருக்கிறது.... அந்த பாணியிலேயே செய்திகளையும் பேட்டிகளையும் எடுக்கின்றது....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்களும் ஊடகங்கள் என்று வானொலி தொலைக்காட்சி இணையங்கள் பத்திரிகைகள் என்று எத்தனை வைத்திருக்கிறம்.

இதில் யாராவது பிபிசி போன்று சம்பந்தப்பட்டவர்களை நேர்காணல்களை செய்து செய்திகளை வெளியிடுகிறார்களா? எமது ஊடகங்களிற்கு இதை செய்வதற்கு என்ன தொழில்நுட்ப தட்டுப்பாடா இல்லை தொலைபேசியால் நேர்காணல் செய்ய பெருளாதார வசதிகள் இல்லையா? கொழும்பில் உள்ள தனியார் வானொலிகள் தொலைக்காட்சிகள் தரத்திற்காவது எமது புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்கும் ஊடகங்கள் இருக்கா?

யோவ் குறுக்ஸ்...

ரி.ரி.என் சரியான பிஸியாம்!!!!!!! ...

1) கியூவிலை சினேகா, மும்தாஸ், நாமீதாக்களை பேட்டி கண்டு கொண்டிருக்கினமாம்!!

2) சினிமா அறிவுச் சமருக்கு பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கினமாம்!!

3) ....

..... இப்படி பல பல அரிய தமிழ் மக்கள் எதிர் பார்க்கும் சேவையில் ரி.ரி.என் ஈடுபட நேரமோ???? அல்லது நீர் சொன்ன மாதிரி பேட்டி காண நேரமோ????

அவையளுக்கு நேற்று பின்னேரம் மட்டும் செஞ்சோலையில் எத்தனை சிறார்கள் செத்தது என்று தெரியாதாம், ஏதோ முதலில் வந்த தகவல்களைத் தான் ற்க்கோட் கிழிய கிழிய போட்டவையள்!!!!! இங்கு லண்டனிலிருந்து தான் பலர் சொல்லித் தெரியுமாம்!!!!! ... கேட்டால் பீம்பாம், பூறிசு எல்லாம் விடுவினம்!!!! ... நாட்டிலிருந்து உறுதி செய்து வராவிட்டால் நாம் போட முடியாது என்பார்கள்!!!! ...... உதைக் கதைத்து ஒன்றும் ஆகப் போவதில்லை!!!!! கோஓஒதாஆஆரீஈஈ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிபீசி தமிழோசையின் இந்த நிலைக்கு காரணம் யார் என்பதை ஒரு இணையத்தளம் புட்டு புட்டுவைக்கிறது. இவர்களுக்கள் கலகம் வந்ததால் பல உண்மைகள் வெளிவருகிறது.

http://www.THENEE.ca/

உவை நடத்திற விதம் விதமான சினமா பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிற்கு நாட்டிலை இருந்து அனுமதி எடுத்தே நடத்தினமாம்?

உவையை தேசிய ஆதரவு ஊடகம் என்று எல்லா சனமும் விமர்சனம் இன்றி கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு குடுத்து அவைக்கு நல்லா கொழுப்பு வைச்சிட்டுது. கொழும்பில இருக்கிற MTV கண்காணிப்பு குழு தலைவரை பேட்டி கண்டு போடுது. அவங்களுக்கு அந்தளவு துடிப்பு இருக்கு. அதை இவை சொல்லிற கேவலத்தில இருக்கினமே அன்றி; இவையாலை செய்ய முடியுது இல்லை.

மாலை 7 மணிக்கு சொல்லப்பட்ட செய்தி முன்னோட்டத்தில் பலாலியில் புலிகளின் எறிகணைத் தாக்குதலில் ஓடுபாதை மற்றும் கட்டுப்பாடு கோபுரம் பாரிய சேதம் அடைந்திருக்கு என்று பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ அதிகாரி கொழும்பில் இருந்து சொல்லி இருக்கிறாராம். இந்த இராணுவ அதிகாரியோடு தமிழ் ஒளி இணையத்தார் நேரடியாக தொடர்பு கொண்டு தகவலை பெற்றனரா? இல்லை நாட்டிலிருந்து புலிகள் இவர்களிற்கு அறிவித்தார்களா? தமிழ்நெற்றை மேற்கோள் காட்டி கூறுவதற்கு என்ன வில்லங்கம் இவர்களிற்கு?

யாரை ஏமாத்துகிறார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிபீசி தமிழோசையின் இந்த நிலைக்கு காரணம் யார் என்பதை ஒரு இணையத்தளம் புட்டு புட்டுவைக்கிறது. இவர்களுக்கள் கலகம் வந்ததால் பல உண்மைகள் வெளிவருகிறது.http://www.THENEE.ca/

வாவ்... வாவ்.. வாவ்வ்வ்வ்வ்வ்வ்....

உந்தக் ஜேர்மன் கூலியின் செமினியின் கும்பலுக்குள் உடைவோ??? நாறுதூஊஊஊஊ.....

ஈ.. பீ... பேய்... என்றால் உதெல்லாம் சகஜம் தானோ???

செமினி செமினி கவனி கவனி!!!! :D :mrgreen: :smile2:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.