Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்த அரசாங்கத்தை நான் தான் ஆரம்பித்தேன், அது ஒரு பழைய மாணவர் சங்கத்தை போன்றது.:-கே.பி

Featured Replies

556540_234543410033026_254540043_n.jpg

நாடுகடந்த அரசாங்கத்தை நான் தான் ஆரம்பித்தேன், அது ஒரு பழைய மாணவர் சங்கத்தை போன்றது.:-கே.பி

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர்கள் பிரச்சினையில் ஒரு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான கே.பி. என்ற குமரன் பத்மநாதன் இன்று கிளிநொச்சியில் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்று கே.பி நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு பழைய மாணவர் சங்கத்தை போன்றது.

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான விஸ்வநாதன் ருத்ரகுமாரன் தலைமையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இயங்கி வருகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை நான் ஆரம்பித்தேன். அது வேறு நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட்டு வருகிறது.

புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரங்களில் சம்பந்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர்ந்த தமிழர்களில் சிலர் எனது பணிகளுக்கு ஆதரவு வழங்கி வருவதுடன் போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடபகுதி மக்களுக்கு உதவியளித்து வருகின்றனர்.

அதேவேளை சர்வதேச சமூகம் இலங்கையின் பிரச்சினைகளில் தலையிடக் கூடாது. இலங்கை அரசாங்கத்தினால் இலங்கையின் பிரச்சினைகளை சமாளிக்க முடியும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபைத் தேர்தலை பயன்படுத்தி நாட்டை பிளவுப்படுத்த முயற்சித்து வருகிறது.

இதனால் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள தேர்தலில் வடக்கு மாகாண மக்கள் கூட்டமைப்பு ஆதரவு வழங்க கூடாது என்றார்.

http://bit.ly/1a4miEx

https://www.facebook.com/photo.php?fbid=234543410033026&set=gm.577446082302654&type=1&theater

  • கருத்துக்கள உறவுகள்
தலைவர் உன்னை எங்கு தான் தவம் இருந்து எடுத்தாரோ தெரியல...
இது எல்லாம் ஒரு பிழைப்பா....
எங்கட போராட்டம் தோல்வில முடிஞ்சதுக்கும் இந்த இரனியனும் ஒரு காரனம்...
 

இது எல்லாம் ஒரு பிழைப்பா

  • தொடங்கியவர்

 

தலைவர் உன்னை எங்கு தான் தவம் இருந்து எடுத்தாரோ தெரியல...
இது எல்லாம் ஒரு பிழைப்பா....
எங்கட போராட்டம் தோல்வில முடிஞ்சதுக்கும் இந்த இரனியனும் ஒரு காரனம்...

 

தலைவர் இதை எப்பவோ ஓடு எண்டு கலைத்து விட்டார் கடைசில் காலங்களில் இது தானாய் வந்து தன பழைய தொடர்புகளை வைத்து புடுங்குறேன் என்று உல் நுழைந்து எல்லாத்தையும் சீரழித்து கடைசியா தப்பி நிண்ட நகுலன்,ராம் போன்ற தளபதிகளின் படையணிகளையும் அவர்களை காட்டி கொடுத்து புலிகளன் இருந்த மிச்ச சொச்ச தொடர்புகளையும் அரசிற்கும் காட்டிக் கொடுத்து கோத்தாவிட்கு கால் கழுவி வாழுது 

  • கருத்துக்கள உறவுகள்
அதேவேளை சர்வதேச சமூகம் இலங்கையின் பிரச்சினைகளில் தலையிடக் கூடாது. இலங்கை அரசாங்கத்தினால் இலங்கையின் பிரச்சினைகளை சமாளிக்க முடியும்.

 

 

சர்வதேசம் ஒரு நாலு வருடமாக தான் பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது.அதற்கு முதல் பல காலங்கள் கூட்டமைப்பு, புலிகளிடம் தமிழரின் பலம் இருந்த போது சிங்களம் தட்டிக்களித்தது.இப்போ சர்வதேசம் அழுத்தங்களை கொடுக்க உங்கள் மூலம் தமது அறிக்கைகளை அரசு வாசிக்க வைக்கிறது.

 

இதனால் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள தேர்தலில் வடக்கு மாகாண மக்கள் கூட்டமைப்பு ஆதரவு வழங்க கூடாது என்றார்.

 

நீங்களே அரசிடம் எப்படி வந்தீர்கள் என மர்மமாக உள்ள போது உங்கள் சொல்லை யார் கேட்கப்போகிறார்கள். உங்களை தப்ப வைத்து( புலிகளின் ஆயுத முகவராகிய உங்களை) யோகி, பாலகுமார் ,எளிலன் போன்ற அரசியல் போராளிகளுக்கு என்ன நடந்தது என அரசு ஏன் மறைக்க வேண்டும்??

 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு பழைய மாணவர் சங்கத்தை போன்றது.

 

 

பொன் சத்தியசீலனும் ஒரு தரம் மாணவர் அமைப்பை சேர்ந்தவர் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.