Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் - சீ.வி.விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Vigneswaran-TNA-150.jpg

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று வட மாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழக கட்சிகள் இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று வலியுறுத்தி வருகின்ற நிலையில் விக்னேஸ்வரன் தமது கருத்தை டைம்ஸ் ஒப் இந்தியாவுக்கு தெரிவித்துள்ளார். தாம் மாநாட்டு புறக்கணிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்துக்கு இதனை செய்ய வேண்டும் என்று தமிழர்கள் வலியுறுத்த வேண்டும். இதற்கு பொதுநலவாய நாடுகள் ஒரு அரங்கமாக இருக்கும். ஏற்கனவே தேர்தல்களில் இருந்து ஒதுங்கியிருந்தமையால் கிழக்கு மாகாணத்தை தமிழர்கள் இழந்துள்ளார்கள்.

  

எனவே எதிலும் ஒதுங்கியிருக்காது இணைந்திருக்கும் போது விடயங்களை சாதிக்கமுடியும் என்று விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். தாம் இந்த விடயங்களை ஏனைய அரசியல்வாதிகளை போல பார்க்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள விக்னேஸ்வரன் தமிழகத்தின் உதவி இலங்கை தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக தேவை என்று தெரிவித்துள்ளார். நாளை நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களை பெறும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன் எனினும் இராணுவம் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

வடக்கு மாகாணசபைக்கு எதிராக வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் வாக்காளர்கள் 90 வீதமானோர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இருப்பதாக விக்னேஸ்வரன் கூறினார். போரில் கணவர்மாரை இழந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தோர் தொடர்பில் இன்னும் உரிய ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. இந்தநிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் பிரிவினையை கோருவதாக வெளியான தகவல் அரசாங்கத்தினால் வீணாக உருவாக்கப்பட்டது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

பிரபாகரன் ஒரு விடுதலை பேராட்ட வீரர். அவரை அரசாங்கமே கொடுமையானவராக கருதுகிறது. இந்தநிலையில் பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் குற்றவாளிகளாக கருதப்பட்ட கெப்பிட்டிபொல திஸ்ஸவேயின் பெயரில் இலங்கையில் வீதிகளுக்கு பெயரிடப்பட்டமையையும் விக்னேஸவரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=93292&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் விடுதலை வீரன் என்பதை இவர் சான்றுதழ் வழங்கித்தான் தெரிஞ்சுக்கனும் என்றில்லை. ஆனால் சிறீலங்கா அரசு ஒரு போர்க்குற்ற.. இனப்படுகொலை அரசு என்பதை அறிவிக்க இவராலும் முடியாது காமன்வெல்த்தில் உள்ளவர்களாலும் முடியல்ல. அதனை உலகிற்கு அறிவிக்கத்தான் பகிஸ்கரிப்புக் கோரிக்கையே தவிர.. காமன்வெல்த்தில் பங்கேற்ற பிற்பாடு.. யாரும் சிறீலங்காவிற்கு அழுத்தம் கொடுக்க முடியாது. ஏலவே ஐநா மூவர் அறிக்கையையே அமுல்படுத்த முடியல்ல.. ஐநா.. மனித உரிமை பேரவை பரிந்துரைகளையே அமுல்படுத்த முடியல்ல.. சும்மா மக்களின் வரிப்பணத்தைச் சுரண்டிக்கொண்டிருக்கும் காமன்வெல்த்தில் மட்டும் அழுத்தம் கொடுத்துப் புடுங்கிடப் போகினமாக்கும். அதிலும் ஐநாவை.. மனித உரிமைகளை.. மதிக்கத்தவறும் ஒரு நாடு.. இந்த மாநாட்டை நடத்துவதை எதிர்ப்பதும் அதைப் புறக்கணிப்பதும்.. உலகிற்கு அந்த நாட்டைப் பற்றிய நல்ல அறிவிப்பைத் தரும். அது உலக நாடுகள் இதன் மீது தீவிர நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்தும். ஏன் இதனை இவர்கள் புரிஞ்சுக்கொள்கிறார்கள் இல்லை..???!  :icon_idea:

Edited by nedukkalapoovan

என்ன துன்பமடா இது!!!!!!!!!!!!!!!!!!

"சிங்களவரும் , தமிழரும் கணவன், மனைவி உறவுமுறை கொண்டவர்கள் ( விக்னேஸ்வரனுக்கு மட்டும் ) , அதனால் தமிழ் நாட்டு தலைவர்கள், தமிழர்கள் தலையிட தேவை இல்லை :சீ.வி.விக்னேஸ்வரன்- இந்துவிற்கு வழங்கிய செவ்வியில் //

// பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும்: சீ.வி.விக்னேஸ்வரன்-டைம்ஸ் ஒப் இந்தியாவிற்கு வழங்கிய செவ்வியில்//

கம்பனுக்கு காவடி எடுத்ததை எல்லாம் அரசியலுக்கு கூட்டிற்று வந்தால் இதான் கதி.

1044425_727579143935837_2052861506_n.jpg

 

ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சக்கரை என்கிற மாதிரி இருக்குற ஒட்டுக் குழுக்கள்  ஆட்சிக்கு வரமால் தடுக்க இதுகளை நாம் ஆதரித்தால் இதுகள் பண்ணுற அலம்பல்   தாங்க முடியல  :icon_idea:

Edited by யாழ்அன்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.