Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் ஆர்வர்த்துடன் வாக்களிக்கின்றனர்! புலனாய்வுப் பிரிவினர் ஆங்காங்கே திரிகின்றனர்!

Featured Replies

EleDay.jpgமூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

குறிப்பாக தமிழர்களின் முழுமையாக கவனம் வடக்கு மாகாணத்தில் குவிந்துள்ளது.

வடக்கின் இறுதி யுத்தம் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்டத்திலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துச் செல்வதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இராணுவத்தினரோ அல்லது இராணுவ வாகனங்களுக்கோ எக்காரணத்திற்காகவும் வெளியில் வரக்கூடாது என உயர் தரப்பினர் உத்தரவிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எனினும், ஆங்காங்கே சிவில் உடையில் புலனாய்வுப் பிரிவினர் நடமாடுவதை அவதானிக்க முடிந்ததாகக் குறிப்பிட்டார்.

உள்ளுர், வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்கியுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு வரை வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்த நிலையில் இன்று காலை 7 மணி முதல் வாக்களிப்பு நடைபெற்று வருகிறது.

யாழ்ப்பாணத்திலும் மக்கள் வாக்களித்து வரும் நிலையில் குறிப்பிடத்தக்க சம்பவங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை.

தொடர்ந்தும் கள நிலவரங்களை எதிர்பாருங்கள்

http://tamilworldtoday.com/home

பொலிஸ் உடையில் இருப்பதும் ஆமிதான், ஆமி உடையில் இருப்பதும் ஆமிதான். சிங்களமும் ஒடுக்குழுக்களும் ஆமி மட்டுமே.

வடமாகாண சபை தேர்தலுக்கான வாக்களிப்புக்கள் மன்னார் மாவட்டத்தில் சுமூகமான முறையில் இடம்பெற்று வருகின்றது.

மன்னார் மாவட்டத்தில் 70 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மன்னாரில் 75 ஆயிரத்து 737 பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர்.

5 வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக 12 கட்சிகள் மற்றும் 8 சுயேட்சைக்குழுக்களைச் சேர்ந்த 160 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

இன்று காலை 7 மணி முதல் நண்பகல் வரை 30 வீதமான வாக்குகள் பாதிவாகியுள்ளது. இதே சபையம் அரச தரப்பு வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களினால் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

மாவட்டத்தில் பல இடங்களுக்கு வாக்களர்களை ஏற்றி வாக்குச்சாவடி அமைந்துள்ள இடங்களுக்கு இறக்கி விடுவதற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்;த தனியார் போக்குவரத்து சேவைகள் பலவற்றை பொலிஸார் தலையிட்டு நிறுத்த முயற்சி செய்து வருவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் மன்னார் மாவட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

mannar1.JPG

mannar2.JPG

mannar3.JPG

mannar4.JPG

mannar5.JPG

mannar6.JPG

http://www.virakesari.lk/article/local.php?vid=7200

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.