Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு படுகொலை

Featured Replies

kumaraswamy20060817.jpg

முல்லைத்தீவில் சிறிலங்காவின் வான்குண்டுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமை குறித்து ஐ.நா.வின் இனச் சிக்கலில் சிறார்கள் என்ற அமைப்பின் சிறப்பு பிரதிநிதியான ராதிகா குமாரசுவாமி அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

"இனப்பிரச்ச்னையில் சிறார்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் என்பதை வெளிப்படுத்தும் விதமான அண்மைய அதிர்ச்சியான சம்பவங்கள் அமைந்துள்ளன" என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் இருதரப்பினரும் போர் நடவடிக்கைகளைக் கைவிட்டு பேச்சு மேசைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

http://www.eelampage.com/?cn=28249

  • தொடங்கியவர்

முல்லைத்தீவு படுகொலை மன்னிக்க முடியாத கொடூரம்: "தினமணி" நாளேடு கண்டனம்

Logo.gif

சிறிலங்கா விமானப் படையின் விமானத் தாக்குதலில் முல்லைத்தீவில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமை மன்னிக்க முடியாத கொடூரம் என்று தமிழகத்திலிருந்து வெளியாகும் "தினமணி" நாளேடு கண்டனம் தெரிவித்துள்ளது.

"தினமணி" நாளேட்டின் இன்றைய நாளிதழில் (ஓகஸ்ட் 17) "மன்னிக்க முடியாத கொடூரம்" என்ற தலைப்பில் வெளியாகி உள்ள தலையங்கம்:

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏற்பட்டு வரும் மோதல் அந்நாட்டில் மீண்டும் முழு வீச்சில் போர் ஏற்படும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் நடத்தி வரும் செஞ்சோலை ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் மீது இலங்கைப் போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் 61 மாணவிகள் அங்கேயே உடல் சிதறி இறந்துள்ளனர்.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் பெற்றோர்களை இழந்து, ஆதரவற்று நிர்க்கதியாக உள்ள குழந்தைகள்தான் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளைக் கொல்வது எந்தவிதமான போர் விதிமுறைகளுக்கும் எதிரானது. ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு விடுதலைப் புலிகள் பயிற்சியளிப்பதாக இலங்கை இராணுவத்தினர் கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்ட யுனிசெப் மற்றும் நார்வே போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் தமிழகத்திலும் பரவலாக அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய நிகழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று தமிழக முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க மத்திய அரசு இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தி உள்ளனர்.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதைத் தடுத்து நிறுத்துவதற்கு இலங்கை அரசை இந்தியா நிர்பந்திக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

"இலங்கையில் இருதரப்பினரும் போர்நிறுத்த உடன்பாட்டை மதித்து சமரசப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும். இலங்கையின் சீர்குலைவு, தமிழ்நாடு மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அப்பாவிப் பொதுமக்களைக் கொல்வதற்கு இந்திய அரசு ஆதரவு அளிக்கும் என இலங்கை இராணுவமும் அரசும் கருத இடம் அளித்துவிடக் கூடாது'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளதையும் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தின் மீது குண்டுவீச்சு, அதைத் தொடர்ந்து கொழும்பில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதல்களையடுத்து கொழும்பிலும் பீதி நிலவுகிறது. வடகிழக்குப் பகுதிகளில் கொந்தளிப்பான சூழ்நிலை காரணமாக வீடுகளை விட்டு வெளியேறி பொது இடங்களில் தமிழர்கள் அகதிகளாகத் தஞ்சம் புக வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டுள்ளது. எனவே போர் நிறுத்தம் செய்து மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் கோபி அன்னான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் சண்டை கடுமையானால் அதன் விளைவுகள் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்பதை மத்திய அரசு மறந்துவிடக் கூடாது.

இலங்கைப் பிரச்சினையில் கடந்த காலத்தைப்போல இந்தியா நேரடியாகத் தலையிட வாய்ப்புகள் குறைவு என்றாலும் வெறும் பார்வையாளர்போல மௌனமாக இருந்துவிட முடியாது.

இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டு சம உரிமையுடன் தமிழர்களை வாழச் செய்வதற்கான நடவடிக்கைகள் மூலமே இலங்கையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த முடியும். பரஸ்பரத் தாக்குதல்கள் மூலம் எந்த வெற்றியையும் பெற்று விட முடியாது என்பதை இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

உள்நாட்டுப் போரில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது அப்பாவிப் பொதுமக்களே. போர் நிறுத்தத்தை உடனடியாக அமல்படுத்தி இருதரப்பினரும் திறந்த மனத்துடன் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதன் மூலமே இலங்கையில் தற்போதைய பதற்ற நிலையைத் தணிக்க முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

முல்லைத்தீவு படுகொலை: அமெரிக்க காங்கிரஸ்மான் டெனி கே. டேவிஸ் கடும் கண்டனம்

முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படையின் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமைக்கு அமெரிக்க காங்கிரஸ்மான் டெனி கே. டேவிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

என்னை கவலைக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கும் வகையில் இலங்கைக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்றிருந்த போது முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற இளம் சிறார்கள் காப்பகத்துக்குச் சென்றிருந்தேன். அந்த காப்பகம் மீது சிறிலங்கா அரசாங்கப் படைகள் குண்டு வீசிய கொடூரத்தை அறிந்தேன்.

40-க்கும் மேற்பட்ட சிறார்கள் கொல்லப்பட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். நான் அந்த இல்லத்தைப் பார்வையிட்ட போது அந்த இளம் பெண்கள் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் நம்பிக்கையோடும் இருந்தனர்.

யுனிசெஃப்பின் நிர்வாக இயக்குநர் ஆன் எம்.வெனெமன் மற்றும் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வயிட்டு அந்த காப்பகம் அருகே இராணுவ நிலைகள் இல்லை என்று உறுதி செய்துள்ளனர். மன்னிக்க முடியாத இந்த வன்முறைச் சம்பவத்தை நானும் கண்டனம் செய்கிறேன். இந்தக் பயங்கரமான தாக்குதலை நியாயப்படுத்தும் முயற்சிகளை நிராகரிக்கிறேன்.

அனைத்துத் தரப்பினரும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மதித்து சிறார்கள் உயிர் வாழவும் கற்கவும் விளையாடவுமாக பாதுகாப்பளிக்க வேண்டும் என்றார் டெனி கே. டேவிஸ்.

http://www.eelampage.com/?cn=28252

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாகரிகமற்ற- காட்டுமிராண்டித்தனமான - மனிதாபிமானம் - சிறிதுமற்ற - கொடுமை நிறைந்தது இலங்கை இராணுவத்தின் முல்லைத்தீவு படுகொலை என்று தமிழ்நாடு சட்டப்பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா வான்படை நடத்திய கொடூர வான்குண்டுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஆவுடையப்பன் கண்டனத் தீர்மானத்தை வாசித்தார்.

தீர்மான விவரம்:

14.8.2006 அன்று இலங்கையில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனாதைக் குழந்தைகள் காப்பகத்தின் மீது இலங்கை இராணுவத்தினர் சரமாரியாக குண்டுகளை வீசித் தாக்கியதன் காரணமாக 61 மாணவிகள் உயிரிழந்தது குறித்தும் 150க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்தது குறித்தும் இப்பேரவை அதிர்ச்சியும் ஆற்றொணா துயரமும் கொள்கிறது.

மனிதநேயத்தில் தோய்ந்துள்ள எவராயினும் அவர்களால் மன்னிக்க முடியாத இந்த நிகழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. இந்த நாகரிகமற்ற காட்டுமிராண்டித்தனமான மனிதாபிமானம் சிறிதும் அற்ற கொடுமை நிறைந்த இலங்கை இராணுவத்தின் இச்செயலை இப்பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.

நிலையான வாழ்க்கை முறைகளுக்கும் நிலைத்த பாதுகாப்புக்கும் போராடி வரும் இலங்கை வாழ் அப்பாவித் தமிழ் மக்களை கொன்று குவித்து வரும் இந்தப் போர் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இலங்கை அரசை இந்திய அரசு கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் இந்தியப் பிரதமரிடம் வற்புறுத்தி இருக்கிறார்.

இலங்கை இராணுவத்தின் இக்கொடிய கொலைவெறியாட்டத்தில் உயிரிழந்த பள்ளிக் குழந்தைகளுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் இப்பேரவை தெரிவித்துக் கொள்கிறது.

மறைந்த இந்தப் பள்ளிக் குழந்தைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணித்துளிகள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்தார்.

அதன் பின்னர் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்றி தங்களது அகவணக்கத்தைச் செலுத்தினர்.

puthinam.com

சட்டசபை தமிழகமக்களின் ஓர் அரசு .அந்த அரசு கண்டணத்தீர்மானம் நிறைவேற்றி இரங்கல் தெரிவிப்பது தமிழக மக்களே ஒட்டுமொத்தமாக செய்த மரியாதையாகும்.

நன்றி தமிழகமே .உணர்வுடன் இணைவோம் தமிழர்களாக

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்திற்கு நன்றிகள்!

  • தொடங்கியவர்

முல்லைத்தீவில் இடம்பெற்ற வான்வழித் தாக்குதலில் சிக்கி பலியான பாடசாலைச் மாணவர்களின் உயிரிழப்புக்கு தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ள அமெரிக்கா வின் புஷ் நிர்வாகம்இ மோதல்களில் ஈடுபட்டுள்ள இருதரப்பும் யுத்தநிறுத்த ஒப்பந்தத் தைக் கடைப்பிடித்து அதற்கமைய ஒழுகவேண்டும் எனவும் கோரியுள்ளது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் பேச்சாளர் சீன்மக்கொமாக் மேலும் தெரிவிக்கையில்: அண்மைக்காலமாக இலங்கையில் வன் முறை அதிகரித்து வருவதாகவும்இ இந்த வன்முறைகளுக்கு பெரும்பாலும் இலக்காகுவது அப்பாவிச் சிறுவர்கள்தான் எனவும் தெரிவித்தார். இலங்கையில் இடம்பெற்றுவரும் இத் தகைய வன்முறைகள் அமெரிக்காவிற்கும் பெரும் அதிர்ச்சியையும்இ வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

யுத்தநிறுத்தத்தைக் கடைப்பிடிக்க சம்பந்தப்பட்ட இருதரப்பும் அர்ப் பணிப்புடன் செயற்படவேண்டும். அது விடயத்தில் அமெரிக்கா உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார். இது தொடர்பில் அமெரிக்கா தனது முயற்சிகளை எடுத்து வருகிறது. தொடர்ந்தும்இ இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் தலையிட்டுள்ள அனைத்து சர்வதேச சக்திகளுடனும் இணைந்து அமெரிக்கா தனது முயற்சியை எடுக்கும் என்றார் அவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.