Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும்! - உலகுக்கு உணர்த்தவே கிழக்கில் தீர்மானம் என்கிறார் ஹசனலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும்! - உலகுக்கு உணர்த்தவே கிழக்கில் தீர்மானம் என்கிறார் ஹசனலி

'அரசமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தைப் பலப்படுத்துவது தொடர்பான பிரேரணை கிழக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டதனூடாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டை சர்வதேசத்திற்கு நாம் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம்' என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசனலி தெரிவித்துள்ளார்.

 

 

'சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ அரசு வழிவிட வேண்டும். இனியும் எம்மைத் தனது காலடியில் அரசு விழச் சொன்னால் கிழக்கில் மட்டுமல்ல, நாடளாவிய ரீதியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவோம்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

கிழக்கு மாகாணசபையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம். ஜெமீல் சமர்ப்பித்த 13இற்கு ஆதரவான பிரேரணை நேற்றுமுன்தினம் 15 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பில் கருத்துத்தெரிவிக்கும்போதே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஹசனலி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

 

அரசமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தைப் பலப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நாம் எழுத்துமூலம் தெரிவித்திருந்தோம். அத்துடன், எமது கட்சியின் பேராளர் மாநாட்டிலும் இது தொடர்பில் தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தோம். ஆனால், எமது கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை.

 

இந்நிலையில், எமது கட்சியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அரச கட்சியின் அமைச்சர் ஒருவர் உட்பட இரு உறுப்பினர்களின் உதவியுடன் 13வது திருத்தச் சட்டத்தைப் பலப்படுத்தும் பிரேரணையை 15 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றியுள்ளது.

 

இனியும் இந்த அரசின் அநியாயங்களை நாம் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். சிறுபான்மையின மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நாம் தொடர்ந்து போராடுவோம் என்று தெரிவித்தார் ஹசனலி.

 



http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=00c2883b-9bc7-4a39-9fd0-5a11a50a9706

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13 வது திருத்தம் தொடர்பான கிழக்கு மாகாணசபையின் தீர்மானத்திற்கு சம்பந்தன் வரவேற்பு!

அரசமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தைப் பலப்படுத்துவது தொடர்பான பிரேரணை கிழக்கு மாகாண சபையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வரவேற்றுள்ளார்.

 

'சிறுபான்மையின மக்களுக்கு அதிகூடிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை பெரும்பான்மையின சிங்கள உறுப்பினர்களும் விரும்புகின்றனர் என்பது இந்தப் பிரேரணை நிறைவேற்றத்தின் ஊடாக நிரூபணமாகின்றது' என்றும் அவர் தெரிவித்தார்.

 

கிழக்கு மாகாணசபையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சமர்ப்பித்த 13வது திருத்தச் சட்டத்தை பலப்படுத்துவது தொடர்பான பிரேரணை நேற்றுமுன்தினம் கடும் அமளிக்கு மத்தியில் 15 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

 

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மேலும் தெரிவித்ததாவது:

 

கிழக்கு மாகாணசபையில் அரசமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தைப் பலப்படுத்துவது தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்து - அதனை விவாதத்திற்கு கொண்டுவரச் செய்து - வாக்கெடுப்புக்குத் தூண்டிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸினரின் செயற்பாட்டை நாம் வரவேற்கின்றோம். இவர்களுடன் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் சேர்ந்து குரல் கொடுத்துள்ளனர்.

 

இறுதியில் மு.கா. மற்றும் கூட்டமைப்பு உறுப்பினர்களின் இடைவிடா முயற்சியினால் 15 மேலதிக வாக்குகளினால இந்தப் பிரேரணை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

சிங்கள அமைச்சர் ஒருவர் உட்பட அரச கட்சியைச் சேர்ந்த இருவர்கூட இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள முஸ்லிம் உறுப்பினரும் இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார். இந்தப் பிரேரணைக்கு எதிராக அரச கட்சியைச் சேர்ந்த ஒரேயொரு உறுப்பினர் மட்டும் வாக்களித்துள்ளார்.

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

 

சிறுபான்மையின மக்களுக்கு மாகாணசபைகள் ஊடாக அதிகூடிய அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்பதையும், இதனை பெரும்பான்மையின சிங்கள உறுப்பினர்களும் விரும்புகின்றனர் என்பதையும் இந்தப் பிரேரணை நிறைவேற்றம் எடுத்துக் காட்டுகின்றது. இதனை அரசு விளங்கிக்கொள்ள வேண்டும் என சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=f554d0a1-57fa-4d23-b6fa-e1d558ded438

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.