Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை - ஐ.நா பிரதி பொதுச்செயலரிடம் புலம்பினார் பீரிஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை - ஐ.நா பிரதி பொதுச்செயலரிடம் புலம்பினார் பீரிஸ்
[ வியாழக்கிழமை, 03 ஒக்ரோபர் 2013, 00:38 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை தொடர்பாக, ஐ.நா பிரதிப் பொதுச்செயலர் ஜான் எலிசன் மற்றும் ஐ.நாவின் அரசியல் விவகார ஜெப்ரி பெல்மனட் ஆகியோரிடம், விசனத்தை வெளியிட்டுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்.

நியுயோர்க்கில் நடக்கும், ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்துக்குச் சென்ற சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், ஐ.நா பிரதிப் பொதுச்செயலர் ஜான் எலிசன் மற்றும் ஐ.நாவின் அரசியல் விவகார உதவிச் செயலர் ஜெப்ரி பெல்மனட் ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இதன்போது. அவர், வடக்கு மாகாணசபை தெரிவு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்தும் விபரித்துள்ளார்.

சிறிலங்கா மீதான தகாத புறஅழுத்தங்கள் பயனளிக்காது என்றும், அது உள்நாட்டில் தேவையற்ற விளைவுகளைத் தூண்டிவிடும் என்றும், ஐ.நா பிரதிச் செயலரிடம் பீரிஸ் எச்சரித்துள்ளார்.

இனிமேலாவது சிறிலங்கா மீது ஐ.நா தேவையற்ற அழுத்தங்களை கொண்டு வராமல் உதவ வேண்டும் என்றும், பிரச்சினைகளை அரசியல் மயப்படுத்தாமல் சிறிலங்காவுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாணசபையுடன் இணைந்து செயற்பட சிறிலங்கா அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், ஐ.நா பிரதிச் செயலர் ஜான் எலிசனிடம், அவர் உறுதியளித்துள்ளார்.

அதேவேளை, மனிதகுலத்திற்கு பேரழிவை ஏற்படுத்திய ஒரு பயங்கரவாத இயக்கத்தின் தலைவரை, மாமனிதனாக புகழின் உச்சியில் அமர்த்துவதற்கு, வடக்கு மாகாணசபை மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் முயற்சி, சிறந்த ஆளுமைக்கான நல்ல சகுனமல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கு வாக்களித்த மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில், சில உணர்வுபூர்வமான அரசியல் பிரச்சினைகள் இணைக்கப்பட்டுள்ளது கவலைக்குரிய விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இத்தகைய பிரச்சினைகளை பொருட்படுத்தாமல், தாம் ஒன்றிணைந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

போருக்குப் பிந்திய சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஐ.நா உயர்மட்டத்தில் உள்ள இராஜதந்திரிகளும் ஏனைய நாடுகளும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் குற்றம்சுமத்துவது வேதனையை அளிப்பதாகவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20131003109177

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.