Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த முன் பதவியேற்றமைக்கு ஒபாமாவுக்கான தமிழர் கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த முன் பதவியேற்றமைக்கு ஒபாமாவுக்கான தமிழர் கண்டனம்

 


தமிழ் மக்கள் விக்னேஸ்வரனுக்கு அமோக ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்தது, ஜனாதிபதி மஹிந்தவைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவேயன்றி, ஜனாதிபதியைக் காப்பாற்றுவதற்கு அல்ல என்றும், ஜனாதிபதி முன்னால் சத்தியப் பிரமாணம் செய்வது தமிழ் மக்களின் முதுகில் குத்தும் செயல் என்றும் கண்டித்துள்ள ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு, பதவியேற்ற ஒக்ரோபர் 7 ஆம் திகதியைத் துக்க நாளாக அனுஷ்டிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு தெரிவித்துள்ளதாவது:

பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்தும், தாய்க்குலத்தை மானபங்கப்படுத்திய மஹிந்த முன்பாக விக்னேஸ்வரன் சத்தியப்பிர மாணம் செய்வது ஜனாதிபதியை போர்க் குற்றங்களிலிருந்து தப்புவிக்கும் நடவடிக்கைகயே.

தமிழ் மக்கள் விக்னேஸ்வரனுக்கு அமோக ஆதரவு அளித்து வெற்றிபெறச் செய்தது, ஜனாதிபதியைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கே அதனை விடுத்து ஜனாதிபதியைக் காப்பாற்றுவதற்கு அல்ல.

ஜனாதிபதி முன்னால் சத்தியப் பிரமாணம் செய்வது தமிழ் மக்களின் முதுகில் குத்தும் செயல்.

நம்பி வாக்களித்த மக்களை நடு ஆற்றில் விடும் நடவடிக்கை. ஜனாதிபதி குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவோம் என்று மார்தட்டி வீரம் பேசிய விக்னேஸ்வரனின் வார்தையை நம்பியே தமிழ் மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள்.

தமிழ் மக்களின் தன்மானத்தை அடகு வைத்து, தமிழர்களை வெட்கித் தலைகுனிய வைப்பதற்குத் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை. விக்னேஸ்வரன், போர்க் குற்றவாளியான மஹிந்த முன் தமிழர்களின் தன்மானத்தை அடகு வைத்து சத்தியப் பிரமாணம் செய்த நாளை தமிழ்மக்கள் துக்க நாளாகவே அனுஷ்டிக்க வேண்டும் என்றுள்ளது.


- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=400262348508390790#sthash.QamfM949.dpuf

நுளம்புக்கு மருந்தடிகிறதுக்கு வந்தவை குடுத்த பில்ட் அப்பிலை எதிர்ப்பார்ப்பு அள்ளிச்சு...   புலிகளுக்கு நிகராக இவர்களை  விபரிச்சவையும் கொஞ்சம் ஓவர் டோஸ்  குடுக்க ...   வந்த எதிர்ப்பார்ப்பு இப்படி தான் கண்டனங்களிலை முடியும்... 

 

எந்திரன் படத்துக்கு குடுத்த பில்டப்பை குசேலன் படத்துக்கு குடுத்தால் இப்படிதான்...  

 

 

எது அவர்களுக்கு முடியுமோ அதை சொல்லி இருக்க வேண்டும்...  அதை விட்டு போட்டு... 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.