Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலஸ்தீனியர்கள் அன்றுவிட்ட தவறை தமிழ் மக்கள் இன்று விடக்கூடாது. – பி. ஏ. காதர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலஸ்தீனியர்கள் அன்றுவிட்ட தவறை தமிழ் மக்கள் இன்று விடக்கூடாது. – பி. ஏ. காதர்
 

பலஸ்தீனியர்கள் அன்று 1948 ல்- தாம் விட்ட தவறுக்காக – தமது மண்ணை விட்டு ஓடியதற்காக 65 வருடங்களாக இன்றுவரை போராடுகிறார்கள். இன்னும் அந்த மண்ணுக்கான போராட்டம் முடிவுக்கு வருவதற்கான அறிகுறி தென்படவில்லை. இன்று அவர்களது போராட்டம் சாராம்சத்தில் தாம் வாழ்ந்த 94 சதவீதமான பலஸ்தீன மண்ணை பறிகொடுத்து விட்டு அதில் 22 சத வீதத்தை மீளப் பெற்று நிம்மதியாக வாழ நினைப்பதற்கான போராட்டமாகவும் – அந்த 22 சத வீத சிறு நிலபரப்பிலிருந்து மீண்டும் விரட்டப்படாமல் நின்றுபிடிப்பதற்கான போராட்டமாகவுமே மாறியிருக்கிறது. பல நாடுகளில் இன்னும் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் பலஸ்தீனர்கள் தமது தாயகத்திற்கு திரும்புவதற்காக ஏங்கிக் கொண்டிருக்கும் போது ,தமது மண்ணிலேயே -காசாவி லும் மேற்கு கரையிலும் அகதிகளாக ஒவ்வொரு நிமிடமும் இஸ்ரேலிய விமானம் குண்டு மழை பொழியுமா இஸ்ரேலிய டாங்கிகள் ஊடுருவி தாக்குமா என அஞ்சியபடி தமது எதிரியான இஸ்ரேலினூடாக அல்லது அதன் கண்காணிப்பின் கீழ் வழங்கப்படும் நிவாரண – சகாய – உதவிகளுக்காக கையேந்தி வாழ வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

எமது மண்ணில் இன்று நடப்பதுதான் அன்று பலஸ்தீனத்தில் நடந்தது.
பலஸ்தீனத்தில் இஸ்ரேலிய நில அபகரிப்பு அனுபவத்தை ,குடியேற்றங்களை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தும் சகல நாடுகளும் கற்கின்றன. – ஸ்ரீ லங்கா உட்பட பல நாடுகள் அதன் நிபுணத்துவ ஆலோசனையைப் பெறுகின்றன. எனவே இஸ்ரேலின் அனுபவத்தை நாம் அறிந்து கொள்வது அவசியம். இவ்வகையில் அயர்லாந்து அனுபவத்திலிருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்நாடுகளில் நடந்தது – நடந்து கொண்டிருப்பது தான் எமக்கும் இனி நடக்கும்.

இருவகை குடியேற்றங்கள்:

குடியேற்றங்கள் இரண்டு வகைப்படும். ஓன்று இயல்பான மக்கள் குடியேற்றம். (natural or spontaneous settlement or colonies) மற்றது அரசியல்-இராணுவ pl-02நோக்கத்திற்காக செயற்கையான முறையில் அமைக்கப்படும் குடியேற்றங்கள்(artificial settlements or colonies created for politico-military reasons)
 


மனித குலம் உருவானதிலிருந்து மக்கள் குழுக்களில் இடப்பெயர்வும் புதிய குடியேற்றங்களும் நடைபெற்ற வண்ணமே உள்ளது. இத்தகைய இயல்பான மக்கள் குடியேற்றங்கள் மனித குலங்களுக்கிடையில் பரஸ்பர நல்லெண்ணத்தையும நல்லுறவையும் ஏன் சுயமான இரண்டறக்கலத்தலையும் ஊக்குவித்து மனிதகுல நாகரிகத்தை மேம்படுத்தியுள்ளன. ஒரு மக்கள் கூட்டம் திரட்டிவைத்துள்ள பாரம்பரிய அனுபவங்களையும் திறன்களையும் அறிவையும் கலாச்சாரத்தையும் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டு அவற்றை புதிய பரிணாமத்திற்கு எடுத்து செல்வதற்கு அவை உந்துசக்தியாக அமைந்திருக்கிறன.

ஆனால் அரசியல்- இராணுவ நோக்கங்களுக்காக வெளியிலிருந்து ஒரு அரசு இரண்டாவது வகையான திட்டமிட்ட குடியேற்றங்களை மற்றொரு மக்கள் கூட்டத்தின் மீது திணிக்கும் போது ,அத்தகைய குடியேற்றங்கள் இன நல்லுறவைப் பாதிக்கின்றன. இத்தகைய நவீன அரசியல் நோக்கங் கொண்ட குடியேற்றங்களை புராதன ரோமர் காலத்திலும் பின்னர் அலெக்சாந்தர் காலத்திலும் தாம் வெற்றி கொண்ட நாடுகளில் ஏற்படுத்திய குடியேற்றங்களிலிருந்து வேறுபடுத்தி பார்க்க வேண்டும்.

அயர்லாந்து அனுபவம்:

இதற்கான நல்ல உதாரணமாக அயர்லாந்து அமைகிறது. 1550 – 1576 காலப்பகுதியில் இங்கு பெருந்தோட்டங்களும் குடியேற்றங்களும் முதன் முதன்முதலாக பிரித்தானிய அரசினால் உருவாக்கப்பட்டது. முதலில் சிறுசிறு முன்னுதாரண பெருந்தோட்டங்கள் “exemplary plantation“இங்கு நிருவப்பட்டன. இதற்கு உதாரணமாக கோர்க் நகரத்தின் அருகில் அமைக்கப்பட்ட கெரிகுறிஹி (Kerrycurrihy) குடியேற்றத்தைக் குறிப்பிடலாம். இதன் நோக்கம் சிறியளவிலான பிரித்தானியர் குடியேற்றப்பட்டு அவர்களால் அமைக்கப்படும் சிறு அளவிலான முன்னேற்றகரமான பயிர்த்தோட்டங்களை முன்னுதாரணமாகக் கொண்டு -அவற்றிலிருந்து கற்ற அனுபவத்தைக் கொண்டு – தமது சொந்த பயிர்தோட்டங்களை சுதேசிகளான அயர்லாந்துகாரரை அமைக்கச் செய்வதாகும். இத்தகைய முன்னுதாரண குடியேற்றங்கள் இருதரப்பினருக்கும் நற்பயனைத் தந்தது. ஆனால் இத்தகைய குடியேற்றங்கள் விரைவிலேயே அரசியல் நோக்கம் கொண்ட குடியேற்றங்களால் மூழ்கடிக்கப் பட்டுவிட்டன.

1556 ல் இரண்டாவது வகையிலான குடியேற்றம் ஆரம்பிக்கப் பட்டதிலிருந்து அயர்லாந்தின் வரலாறு குடியேற்றவாசிகளுக்கும் அயர்லாந்து மக்களுக்கு மிடையிலான இரத்தந்தோய்ந்த வரலாறாக மாறிவிட்டது. இன்றும் கூட அதன் தாக்கத்தை வட அயர்லாந்து அனுபவித்து வருகிறது. 1956ல் மன்னனினதும் மகாராணியினதும்; மாநில பெருந்தோட்டம் (Plantation of King’s County and Queen’s County) என்ற பெயரில் – பிரித்தானிய அரசுக்கெதிராக கிளர்ச்சி செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவதற்காக – அவர்களது நிலங்களை அபகரித்து பிரித்தானிய பெருந்தோட்ட குடியேற்றங்களை நிருவினர். இக்குடியேற்றத்தின் மீதான அயர்லாந்து மக்களின் தாக்குதல்கள் அடுத்த 40 வருடங்கள் நீடித்தது.

இரு தரப்பிலும் குரூரமான படுகொலைகள் இடைவிடாது நடைபெற்றன. ஸ்கொத்லாந்திலிருந்து கூலிப்படைகள் வரவழைக்கப்பட்டு மிலேச்சத்தனமாக சுதேசிகள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போதும் சுதேச கோத்திரங்களின் தாக்குதல்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. மலைகளுக்கு பின்வாங்கிய அவர்கள் திடீர் திடீர் தாக்குதல்களை நடத்தினர். அவர்களை போரிட்டு வெற்றி கொள்ள இயலாத பிரித்தானியர் நயவஞ்சகமான முறையில் அவர்களை நசுக்க திட்டமிட்டனர். 1574ல் எசெக்ஸ் பிரபுவைக்கொண்டு ஒரு விருந்தை ஏற்பாடு செய்து அதில் கலந்து கொண்ட தோத்திர தலைவனான(Brian MacPhelim O’Neill) பிரைனையும் அவனது மனைவியையும் அவர்களுடன் வருகை தந்திருந்து 200 உறவினர்களையும் படுகொலை செய்தனர். 1578 ல் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்து எஞ்சியிருந்த பெரும்பாலானோரை மிருகத்தனமாக வேட்டையாடினர். அவர்களின் தலைவனான றோரி ஓக் ஓ மூர் (Rory Óg Ó Moore) என்பவரும் அதே ஆண்டு கொல்லப்பட்டார். ஆயினும் கூட அக்குடியேற்றம் எதிர்பார்த்த பயனைத்தரவில்லை.

அதனை அடுத்து 1586ன் பின்னர் உருவாக்கப்பட்ட முன்ஸ்டர் பெருந்தோட்ட குடியேற்றத்திற்கும் (Munster Plantation) இதே கதிதான் நேர்ந்தது. டெஸ்மன்ட பிரபு என்பவரின் தலைமையில் வெடித்த கிளர்ச்சியை நசுக்கிய பிரித்தானியர் அக்கிளர்ச்சியாளர்களை தண்டிப்பதற்காக அவர்களது நிலத்தைப் பறித்தெடுத்து டெஸ்மன்ட வம்சத்தை அழித்தொழித்து இக்குடியேற்றத்தை நிருவினர். ஆயினும் 1590 களில் மீண்டும் வெடித்த ஒன்பது வருட அயர்லாந்து கிளர்ச்சி 1598ல் இந்த பெருந்தோட்ட பகுதிக்கும் பரவியது. பெரும்பாலான குடியேற்றவாசிகள் விரட்டியடிக்கப்பட்டனர். அக்கிளர்ச்சி குரூரமான முறையில் நசுக்கப்பட்ட பின்னர் மீண்டும் அக்குடியேற்றம் புதுப்பிக்கப்பட்டது. 1606 களின் பின்னர் உருவாக்கப்பட்ட அல்டார் பெருந்தோட்ட குடியேற்றமும் (Ulster Plantation) இதேவிதமாக இரத்தகரை தோய்ந்தது தான். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட குடியேற்றவாசிகளுக்கெதிரான தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமே இருந்தன.

அயர்லாந்து புரட்சியாளர்களான டான் பரீன்(Daniel “Dan” Breen 1894 –1969) போன்றவர்கள் குடியேற்றவாசிகள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி அவர்கள் குடியேறுவதை அதைரியப்படுத்துவதற்காக அவர்களைப் பிடித்து அவர்களது காதை அல்லது மூக்கை அறுத்து விடுவதை ஒரு வேலைத்திட்டமாக செய்துவந்தனர். இவ்வாறு அங்கம் அறுக்கப்பட்டவர்களைப் பார்த்து சக குடியேற்றவாசிகளும் நடுங்கினர்.

1169 மே முதலாந் திகதி அயர்லாந்து மீதான பிரித்தானியரின் ஆக்கிரமிப்பு தொடங்கியது. ஆனால் பிரித்தானியாருக்கு எதிரான விடுதலை போராட்டம் அங்கு பிரித்தானிய குடியேற்றம் நிருவப்பட்ட 1550களில் இருந்துதான் உருவானது. அயர்லாந்து மக்கள் சுமார் 500 வருடங்கள் பிரித்தானிய குடியேற்றத்திற்கு எதிராக இடைவிடாது நடத்திவந்த நீண்ட போராட்டத்தின் விளைவாகத்தான் வட அயர்லாந்து தவிர்ந்த ஏனைய 26 மாவட்டங்களைக் கொண்ட பெரும் பகுதி – இறுதியாக அயர்லாந்து குடியரசு சேனை (Irish Republican Army (IRA) நடத்திய மூன்று வருட கொரில்லா தாக்குதலினதும் சின்பேனின் Sinn Féinபுரட்சிகர ஜனநாயக போராட்டமும் இணைந்ததன் விளைவாக – 1922ல் சுதந்திரம் பெற்றது.

மண்ணுக்கான போராட்டமே அயர்லாந்து மக்களின் விடுதலையாக பரிணமித்து அவர்களின் விடுதலைக்கான அடிதளமானது. ஆயினும் வட அயர்லாந்தை அவர்கள் பறிகொடுத்திருக்கிறார்கள். அது ஐக்கிய இராச்சியத்தின் கீழ் ஒரு தனிமாநிலமாக சமரசம் செய்து கொள்ளப்பட்டிருக்கிறது. அன்று ஏற்படுத்தப்பட்ட வெளியார் குடியேற்றங்கள் அயர்லாந்தை இரண்டாக கூறுபோடுவதற்கு காரணமாயமைந்தது.



பலஸ்தீனியர்களின் அனுபவம்:

ஐ.நா. ஜூன் 1946 முதல் மே 1948 வரையிலான காலப்பகுதியில் பலஸ்தீனத்தில் வாழ்ந்து அதன் பின்னர் வெளியேற்றப்பட்டவர்களை பலஸ்தீன அகதிகள் என அழைக்கிறது.

1947ல் பலஸ்தீன பிரிவினையை ஐ.நா. அங்கீகரித்த பின்னர் தொடங்கிய பலஸ்தீன படுகொலைகளை அடுத்து குறிப்பாக 1948 இஸ்ரேல் – அரபு யுத்தத்தை தொடர்ந்து 85 வீதமான பலஸ்தீனயர்கள் தமது நாட்டை விட்டு வெளியேறினர்.

ஐ.நா.வின் உத்தியோகபூர்வமான புள்ளிவிபரப்படி பலஸ்தீனர்களின் மொத்த சனத் தொகையில் 30 சத வீதமான மக்கள் – அதாவது 4,966,700 பேர் – தற்போது ஜோர்தானிலும் (1979580 பேர்) லெபனானிலும் (436154 பேர்) சிரியாவிலும் (486946) காசாவிலும்(1167572) மேற்கு கரையிலும் (1167572 பேர்) உள்ள 58 அங்கீகரிக்கப்பட்ட அகதிகள் முகாம்களில் அகதிகளாக இருக்கின்றனர்.

இன்று பலஸ்தீனியர்கள் நடத்தும் போராட்டம் கூட தங்கள் தாய்மண்ணில் அரசியல் நோக்கத்திற்காக அமைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலிய குடியேற்றத்தை அப்புறப்படுத்துவதற்கான – அக் குடியேற்றங்களுக்கு எதிரான தாய் மண்ணுக்கான போராட்டமாகும்.

அன்று அவர்கள் தமது மண்ணைவிட்டு ஓடியதற்காக இன்று கூட அவர்கள் போராட வேண்டியுள்ளது.

கீழே தரப்பட்டுள்ள தேசப்படம் பலஸ்தீன நில அபகரிப்பின் குரூர முகத்தை நன்குபுலப்படுத்துகிறது.

jews_stealing_palestine.png


பலஸ்தீனத்தினத்தில் காலகாலமாக யூதர்கள் வாழ்ந்த போது அராபியர்களுக்கும் அவர்களுக்கு மிடையில் மோதல் நிலைமை இஸ்லாமியர்களின் ஆட்சிகாலத்தில் பெரும்பாலும் இருக்கவில்லை – இருசாராரும் சமாதான சக ஜீவனம் நடத்திவந்தனர். ‘சியோன் அழைக்கிறது’ என்ற வாசகம் அவர்களது மதத்தோடு இணைந்த கோஷமாக இருந்த போதும் அது ஒரு ஆன்மீக எண்ணமாகவே இருந்தது – அரசியல் கோஷமாக இருக்கவில்லை. யூத அரசுபற்றிய எண்ணம் அராபியர் மத்தியில் வாழ்ந்த யூதர்கள் மத்தியிலிருந்து உருவாகவில்லை.

துருக்கியின் ஒட்டோமன் சாம்ராச்சியத்தின் கீழ் இருந்த பலஸ்தீனம் நிலபிரபுத்துவ தன்மை மிகுந்ததாகவும் பின் தங்கியதாகவும் இருந்தது. நவீன முதலாளித்துவத்தின் தாக்கம் மந்தமாகவே இருந்தது. முதலாளித்துவ சித்தாந்தமான தேசியவாதத்தின் பாதிப்பு இங்கு குறைவாகவே இருந்தது. இதனாற்றான் மத்திய கிழக்கிற்கு வெளியே முதலாளித்துவ வளர்ச்சி பெற்ற ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து தேசியவாத சித்தாந்தத்தில் பழக்கப்பட்ட யூதர்களின் மத்தியிலிருந்து அரசியல் சியோனிசம் உருவானது. மேற்கு ஐரோப்பாவில் யூதவிரோத சித்தாந்தம் (anti- Semitism) தீவிரமடைந்து யுதர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி யூத படுகொலைகள் நடைபெறத்தொடங்கிய போதே தமக்கென தனியான நாடு வேண்டும் என்ற எண்ணத்தை அடிப்படையாக் கொண்ட அரசியல் சியோனிசம் (Political Zionism) மேற்கு ஐரோப்பாவில் உருவானது.

19ம் நூற்றாண்டின் முடிவிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ரஷ்யாவில் அடிக்கடி இடம் பெற்ற இனப்படுகொலைகளும் யூதர்கள் மீது பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் விதித்த குடியேற்ற கட்டுப்பாடுகளும் அதிகரித்து வந்த யூதவிரோத போக்கும் யூத வெளியேற்றத்தை ஊக்குவித்தது. 1882 முதல் 1903 வரையிலான இக்காலப்பகுதியில் சுயமான பலஸ்தீனத்திற்கு பாதுகாப்பு தேடி சென்ற யூதகுடிப் பெயர்வு முதலாவது அலியாஹ் (First Aliyah) எனப்படுகிறது. இவ்வாறு பாலஸ்தீனம் சென்றவர்களின் தொகை 25000 முதல் 35000 வரை இருக்கலாம் என ஆய்வாளர்கள் கணிப்பிட்டிருக்கிறார்கள். இத்தகையவர்கள் சிறு சிறு கூட்டங்களாக அங்கு சென்றதாலும் அவர்களிடம் அரசியல் நோக்கு இல்லாததாலும் – யூதர்களின் எண்ணிக்கை சில பகுதிகளில் அதிகரிப்பது அங்கு வாழ்ந்த மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திக் கொண்டு வந்த போதும் கூட- அவர்களுக்கு அங்கு பெரிய எதிர்ப்பு இருக்கவில்லை.

இனமோதல்கள் மிக அரிதாகவே அக்காலப்பகுதியில் ஏற்பட்டது. பென்னி மொரிஸ்Benny Morris என்பவர் மேற்கொண்ட ஆய்வின்படி 1882 டிசெம்பரில் தான் அராபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையிலான ஒரு சிறு இனமோதல் முதற்தடவையாக பதிவாகியிருக்கிறது. அதுகூட தற்செயலாக ஏற்பட்ட ஒரு சிறிய சம்பவமே. Safed என்ற இடத்தில் உருவாக்கப்பட்ட ஒரு பதிய யூத குடியேற்றத்தை காவல் செய்து கொண்டிருந்த யூதன் ஒருவன் ஒரு அராபியனை தற்செயலாக சுட்டு கொன்றுவிட்டான். இதனால் ஆத்திரமடைந்த சுமார் 200 அராபியர்கள் அந்த யூத குடியேற்றத்தைத் தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தினர். ஆனால் உயிர் சேதம் ஏற்படவில்லை. தொடர்ந்தும் அந்த யூத குடியேற்றம் அங்கு இருந்தது. இதனை விட சற்று மேசமான – ஆனால் சிறிய -இன்னொரு சம்பவம் 1886 மார்ச் மாதம் பெட்டா டிக்வாக் Petach Tikvag பகுதியில் இடம்பெற்றது. அதில் ஐந்து யூதர்கள் காயமடைந்தனர் அவர்களில் ஒரு வயோதிப மாது நான்கு நாட்கள் கழித்து மாரடைப்பால் மரணமடைந்தார்.

யூதர்களுக்கென ஒரு தனியான அரசு ஜெருசலத்தை மையமாகக் கொண்டு பலஸ்தீனத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முதன் முதலாக முன் வைத்தவர் வியன்னாவில் வாழ்ந்த ஒரு யூத பத்திரிகையாளர். அவரது பெயர் தியோடர் ஹேர்சல் (Theodor Herzl). இவர் 1896 ல் எழுதிய ‘யூத அரசு’(Der Judenstaat) என்ற நூலில் முன்வைக்கப்பட்ட யூதர்கள் தம்மைப்பாது காத்துக் கொள்வதற்கு தமக்கென தனியான ஒரு அரசு தேவை என்ற கருத்தை ஆராய்வதற்காக முதலாவது சியோனிச மாநாடு 1897 ல் சுவிட்சலாந்திலுள்ள பாசல் நகரில் கூடியது. இம்மாநாடு பலஸ்தீனத்தில் இஸ்ரேலை உருவாக்குவதற்கான திட்டத்தை பாசல் வேலைத்திட்டம் என்ற பெயரில் தீட்டியது. இது வகுத்த திட்டமிட்ட குடியேற்ற திட்டமே படிப்படியாக யூத- பலஸ்தீன உறவை மோசமடையச் செய்தது.

இத்தகை திட்டமிட்ட குடியேற்றங்கள் Second Aliyah - இரண்டாவது அலியாஹ் என்றழைக்கப்படுகிறது.

ஆயினும் ஒரு வித்தியாசம் இக்குடியேற்றங்கள் இஸ்ரேல் என்ற நாட்டை மே 14 ந் திகதி 1948 – தனது மென்டேட் முடிவுக்கு வருவதாக பிரித்தானியா அறிவிப்பதற்கு ஒரு நாள் முன்பதாக – டேவிட் பென் குறியன் David Ben-Gurion பிரகடனப்படுத்தும் வரை எந்த அரசாலும் மேற் கொள்ளப்படவில்லை. அவை யாவும் மிகவும் திறமையான முறையில் தமது நவீன அறிவாற்றலைப் பயன்படுத்தி நுட்பமான முறையில் வெளிநாடுகளில் வசித்த யூதர்களால் அமைக்கப்பட்ட , JNFஎன சுருக்கமாக அழைக்கப்படும் -Jewish National Fund யூத தேசிய நிதியம் என்ற சியோனிச தொண்டர் நிருவனத்தினூடாவும் யூத கலனியல் டிரஸ் Jewish Colonial Trust என்ற வங்கியினூடாகவுமே மேற்கொள்ளப்பட்டது. யூத தேசிய நிதியத்தைப் போன்ற மற்றொரு அமைப்பை உலக வரலாற்றில் வேறெங்கும் காணமுடியாது. இதன் மறுபக்கம் குரூரம் கபடத்தனம் சூழச்சிகள் வன்மம் அனைத்தையும் கொண்டது.

திட்டமிட்ட அரசியல்ரீதியான குடியேற்றங்கள் அமைக்கப்படத் தொடங்கிய பின்னர் இன உறவு அங்கு படிப்படியாக மோசமடைந்து தீவிரவடித்தை எடுக்கத் தொடங்கியது. 1908 ல் ஏற்பட்ட தேசியவாத தன்மைவாய்ந்த மோதலில் 13 யூதர்களும் 4 அராபியர்களும் கொல்லப்பட்டனர். இது யூத அராபிய இன உறவு மோசமடைவதன் தொடக்கத்தைக் குறித்தது. யூத குடியேற்றத்திற்கு எதிராகவே அராபு தேசியவாதம் உருவானது.

1908ல்; ஹய்பாவில் பிரசுரமான முதலாவது அரபு பத்திரிகையான அல் கார்மில் (al-Karmil) யூதர்களுக்கு நிலத்தை விற்பனை செய்யவேண்டாம் என்ற கருத்தை வெகுவாக பிரச்சாரம் செய்தது.

1918 நவம்பர் மாதம் ஜபாவிலுள்ள கிறிஸ்தவர்களும் முஸ்லீம் களும் ஒரு கூட்டமைப்பை யூதர்களின் தனிநாட்டு கோரிக்கைக்கு எதிராக ஆரம்பித்தனர்.

1920 பெப்ரவரி 27 ந்திகதி கிழக்கு ஐரோப்பாவிலிருந்து பெருமளவில் வரத்தொடங்கிய யூதர்களின் வருகையைக் கட்டுப்படுத்தக் கோரி ‘எமது நாடு எமக்கே’ என்ற கோஷத்தின் கீழ் ஆயிரத்துக்கும் அதிகமாக அராபியர்கள் ஜெருசலேத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

இதற்கு பிரித்தானிய உரியமுறையில் செவி சாய்க்காததால் மார்ச் முதலாம் திகதி டெல் ஹாஜ் என்ற யூத குடியேற்றத்தின் மீது அராபிய இராணுவத்தினர் தாக்குதல் தொடுத்தனர். இதில் எட்டு யூதர்கள் கொல்லப்பட்டனர். மீண்டும் மார்ச் மாதம் 8ல் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டம் ஒன்று யூத குடியேற்றத்திற்கு எதிராக ஜெருசலத்தில் நடைபெற்றது.

இச்சமயத்தில் அகண்ட அராப். மத-தேசியவாதியான (Pan- ArabIslamic Nationalist) முகம்மது அமின் அல்ஹ+_சைனி Muhammad Amin Al-Husayniயின் ஆதரவாளர்கள் அதே ஆண்டு ஏப்ரல் 4 முதல் 7 வரை நான்கு நாட்கள் யூதர்களுக்கெதிரான வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 46 யூதர்கள் கொல்லப்பட்டனர். இது நிபி மூசா அரபு கலவரம் Nebi Musa” Arab riots”என்றழைக்கப்படுகிறது. இதுவே யூதர்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்வதற்காக ஆயுதரீதியில் தயாராக வேண்டும் என்ற சிந்தனையை தோற்றுவித்து. தம்மைப்பாதுகாத்துக் கொள்வதற்கான ஹெகானாHaganah என்ற ஆயுத குழு தோன்றுவதற்கு இக்கலவரம் காரணமாயமைந்தது.

1921 மே 1முதல் 7 வரை ஜபாவில் துயககய) நடைபெற்ற இனகலவரத்தின் போது 47 யூதர்களும் 48 அராபியர்களும் கொல்லப்பட்டனர். ஹெகானா ஆயுதக குழு அராபியர்களைத் திருப்பி தாக்கியது. ஆயினும் அதனால் தாக்கு பிடிக்க முடியவில்லை. எனவே ஆயிரக்கணக்கான யூதர்கள் எண்ணிக்கையில் கணிசமான சக யூதர்கள் வாழ்ந்த டெல் அவிவுக்கு தற்காலிகமாக இடம் பெயர்ந்தனர்.



Jewish National Fund - யூத தேசிய நிதியமும் -யூத குடியேற்றமும்

இந்த யூத தேசிய நிதியம் யூத கலனியல் டிரஸ்டுடன் கை கோர்த்தவாறு எவ்வாறு யூத குடியேற்றங்களை நிருவியது – அது கடைபிடித்த யுக்திகள் என்ன -என்பதை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.



Jewish National Fund - யூத தேசிய நிதியம்

1884 போலந்திலுள்ள கட்டேவைஸ் Katowice என்ற நகரில் நடைபெற்ற சியோனிச மாநாட்டில் பேராசிரியர் சிவி ஹேர்மன் சபீறா Prof. Zvi Herman Shapira என்பரே இப்படியான ஒரு அமைப்பின் அவசியத்தை முதன் முதலாக முன் வைத்தவராவர்.1901ல் சுவிட்சாலாந்திலுள்ள பாசல் நகரில் நடைபெற்ற ஐந்தாவது சியோனிச மாநாட்டில் இவரது இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டு பரிட்சாத்திகமாக இயங்கியது. 1907 ஏப்ரல் மாதம்;World Zionist Organization (WZO) உலக சியனிச அமைப்பின் கீழ் இயங்கும் “Jewish National Fund”” யூத தேசிய நிதியம் ஒரு பிரித்தானிய கூட்டுத்தாபனமாக பலஸ்தீனிர்களின் நிலங்களை வாங்கி யூத குடியேற்றங்களை அமைத்து படிப்படியாக இஸ்ரேல் நாட்டை தோற்றுவிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டது. இதற்கான நிதியை பல நாடுகளில் பரந்து வாழ்ந்த யூதர்களிடமிருந்து நன்கொடையாகத் திரட்டினர். இதற்கு பெரும் தனவந்த யூதர்கள் முதல் சாதாரண யூத தொழிலாளர்கள் வரை சகல மட்டத்தவரும் நன்கொடை வழங்கினர்.



Jewish Colonial Trust யூத காலனியல் டிரஸ்ட்:

யூத காலனியல் டிரஸ்ட் 1899 மார்ச் மாதம் லண்டனில் பதிவு செய்யப்பட்டது. அது 27 பெப்ரவரி 1902 ல் Anglo-Palestine Company அங்கலோ- பலஸ்டைன் கம்பெனியை உருவாக்கியது. இவ்விரு நிருவனங்கயையும் ஓரே இயங்குனர் சபையே நிர்வகித்தது. அதனால் நாளடைவில் டிரஸ்ட் கலைக்கப்பட்டு அதன் பணியையும் கம்பெனியே மேற்கொண்டது. 1931 ல் அது அங்கலோ- பலஸ்டைன் வங்கி Anglo-Palestine Bank என பெயர் மாற்றம் பெற்றது. 1951ல் Bank Leumi Le-Israel (National Bank of Israel) இஸ்ரேல் தேசிய வங்கி என மீண்டும் அதன் பெயர் மாற்றம் பெற்று இஸ்ரேலின் மிகப்பெரிய வங்கியாக தற்போது திகழ்ந்து வருகிறது.

யூத தேசிய நிதியம்; பிரதான கடமை பலஸ்தீனத்திலுள்ள நீர்வளமுள்ள செழிப்பான நிலங்களை தெரிவுசெய்து மலிவான விலைக்கு வாங்கி யூதர்களை குடியேற்றி அவர்களது நலன்களை கவனிப்பதாகும். இதன் ஒரே குறிக்கோள் நாளடைவில் தனியான யூத அரசு ஒன்றை அமைப்பதற்கான அடிதளத்தை அமைப்பதாகும். எனவே பாதை வசதியுள்ள யூத குடியேற்றங்களை தொடராக அடுத்தடுத்து அல்லது அருகருகே அமைப்பதில் அது கவனம் செலுத்தியது.

தம்மை வரவேற்று தமக்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கையையும் ஜீவாதாரத்தையும் வழங்குவதற்கு ஒரு அமைப்பு அங்கிருக்கும் போது அங்கு சென்று குடியேற -பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்ந்த – ஐரோப்பிய யூதர்கள் – குறிப்பாக ரஷ்யாவிலிருந்தும் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் செல்லத் தொடங்கினர். இவர்களை அங்கு அனுப்பிவைப்பதற்கு சகல சாத்தியமான வழிவகைளையும் உலக சியனிச அமைப்பு கடைபிடித்தது. சட்டவிரோதமாக யூதர்களை சிறிய படகுகளில் கடத்தி பலஸ்தீனத்தில் குடியேற்றினர். இவ்வாறு யூதர்களைக் கடத்தும் படகுகள் கடலில் பிடிபடும் போது அவை சைப்ரஸ் தீவுக்கு திருப்பியனுப்பப்பட்டு தடுத்து வைக்கப்பட்டன.

பிற்காலத்தில் சட்டவிரோதமாக யூதர்களை கடத்துவதற்காக அது சொந்தமான கப்பல்களையும் பயன்படுத்தியது. உதாரணமாக அதன் பட்றியா Patria என்ற கப்பல் ஐரோப்பாவிலிருந்து சட்டவிரோதமாக யூதர்களை ஏற்றிக்கொண்டு பலஸ்தீனம் வந்தபோது அதனை ஹய்பா துறைமுகத்தில் பிரித்தானியா – அராபியர்களின் எதிர்ப்பு காரணமாக -தடுப்பு காவலில் வைத்தது. அவர்களை மொரிசியஸ் நாட்டுக்கு நாடுகடத்த முயன்ற போது யூத துணைப்படையான Haganah ஹெகானாஅக்கப்பலுக்கு வெடி குண்டு வைத்து சிறு சேதத்தை ஏற்படுத்த முயன்றது. அவ்வாறு சேதமுற்ற கப்பலால் பயணத்தை தொடர முடியாது அதிலுள்ள யூதர்கள் கரையிறக்கப்படுவார்கள் என அது நம்பியது. ஆனால் அது பெரும் விபத்தை ஏற்படுத்தி அதனால் 1940 நவம்பர் 25ந் திகதி கப்பலில் இருந்த 252 யூதர்கள் கொல்லப்பட்டனர்.

யூத தேசிய நிதியம் மிகக்கவனமாக பலஸ்தீன நிலங்களை தெரிவு செய்தது. அதுமாத்திரமல்ல மலைப் பாங்கான இடங்களிலும் விளைச்சலற்ற தரைகளையும் அது வாங்க வில்லை. வளமாக நிலங்களை மாத்திரமே வாங்கியது. (இன்று இலங்கையில் தமிழ் பகுதியில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றமும் இவ்வாறே தமிழ் மக்களின் பொருளாதார வாழ்வை சீரழிக்கும் நோக்குடனேயே செய்யப்படுகிறது)

அதற்கு காணிகளை வாங்கும் உரிமை இருந்ததே தவிர விற்பதற்கான உரிமை இருக்கவில்லை. எனவே அது யூதர்களுக்கு தாம் வாங்கும் காணிகளை குத்தகைக்கு கொடுத்தது அல்லது பண்ணைகளை அமைத்து அதில் யூதர்களை குடியேற்றியது. காணிகள் வாங்கும் போது அராபியர்களை ஆத்திரப்படுத்தாமல் இருப்பதில் மிகக் கவனமாக இருந்தது. இடைத்தரகர்களாக அராபியர்களை ஏஜெண்டுகளை நியமித்து அவர்களினூடாகவே காணிக்கு பேரம் பேசுதல் ,அளத்தல், சட்ட ஆவணங்கள் தயார் செய்தல் போன்ற வெளிப்படையான காரியங்களைச் செய்வித்தது.

யூத தேசிய நிதியம் பலஸ்தீனியர்களிடமிருந்து வாங்கும் நிலத்தில் அவர்கள் குடியிருப்பதையும் அவற்றில் யூதர்கள் அல்லாதோரை வேலைக்கு அமர்த்துவதையும் அனுமதிப்பதில்லை. எனவே யூதர்களால் யூதர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் இனவாத செயற்பாட்டை economic racisim ‘பொருளாதார இனவாதம்’ என ஆய்வாளர்கள் வர்ணிக்கிறார்கள்.

அது தனது முதலாவது நிலக்கொள்முதலை 1903 ல் ஹெடேரர் (Hadera) என்ற இடத்தில் தொடங்கியது. ஐசக் என்ற வள்ளல் வழங்கிய 50 ஏக்கர் காணியில் அதன் முதலாவது குடியேற்றத்தைத் தொடங்கியது.1909 ல் முதலாவது கிபுட்ஸ் (Kibbutz) பண்ணை குடியேற்றத்திற்கான அத்திவாரம் இடப்பட்டது.

பலஸ்தீனம் ஒட்டோமன் சாமராச்சியத்தின் கீழ் (1516 ம் ஆண்டு முதல் 1917 வரை) 500 வருடங்களுக்கு மேலாக இருந்துவந்தது. 1923 செப்தம்பர் 29 முதல் 1948 மே 15 வரை பிரித்தானிய மென்டேட் அரசாக இருந்துவந்தது. ஒட்மோமன் சாம்ராச்சியத்தின் கடைசிகாலத்தில் அது ஏனைய சாம்ராச்சியங்களை விட மிகவும் பின்தங்கி இருந்தது. நவீன இயந்திர கைத்தொழிலையும் விஞ்ஞானத்தையும் ஏற்று வளர்ச்சிபெறக்கூடிய கட்டமைப்பையும் சமூக நிலைமைகளையும் அது கொண்டிருக்கவில்லை.

பலஸ்தீன நில உரிமையை உறுதிப்படுத்தக் கூடிய சட்ட ஆவணங்கள் நிலத்தின் அளவு அவற்றின் எல்லைகள் போன்ற அடிப்படை விடயங்களைக் கூட pl-01முறையாக செய்யப்பட்டிருக்கவில்லை. தனியாருக்கு சொந்தமான நிலம்/ முல்க்/ என்றழைக்கப்பட்டது. அரசுக்குரிய நிலம்miri எனப்பட்டது. இவை பெரும்பாலும் குத்தகைக்கு விடப்பட்டன. மத நிறுவனங்களுக்கு சொந்தமான காணிகளும் இருந்தன. காணிவிவகாரங்களை tapu டப்பூ என்ற அலுவலகம் கவனித்து வந்தது. பெரும் பகுதி நிலம் பதிவு செய்யப்படாமல் இருந்தது. அதன் நில அளவு முறையான dunums டும்னம்ஸ் இடத்திற்கு இடம் மாறுபட்டது. அத்துடன் மத்தியப்படுத்தப்படாத பலஸ்தீனத்தின் நிலங்கள் பெரும்பாலும் அராபிய கோத்திரங்கறுகளுக்கே சொந்தமாக இருந்தது. ஒரு சில பெரும் நிலபிரபுகளே அங்கிருந்தனர். அவர்களில் பெரும்பாலான வெளியார்- நிலபிரபுக்கள் absentee landlords பலஸ்தீனத்திற்கு வெளியில் வாழ்ந்தனர்.

பிரித்தானியர் ஆட்சிகாலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலநிர்வாக சீர்திருத்தங்களைப் புரிந்து கொள்ளும் அறிவும் அனுபவமும் பலஸ்தீனயர்களிடம் குறைவாகவே காணப்பட்டது. ஆனால் மேற்குலகத்திலிருந்து வந்து குடியேறிய யூதர்களால் ஆன – பலஸ்தீன நிலங்களை காசுக்கு வாங்குவதையே குறிக்கோளக் கொண்டிருந்த- யூத தேசிய நிதியம் -நிலத்தைக் கொள்முதல் செய்வது அளப்பது சட்டரீதியாக ஆவணங்களை தயாரிப்பது போன்ற விடயங்களில் அனுபவம் பெற்ற நிபுணர்களையும் சட்டத்தரணிகளையும் கொண்டிருந்தது. அவர்கள் பிரித்தானிய அதிகாரிகளுடன் ஆங்கிலத்திலும் பலஸ்தீனிய நிலஉடமையாளர்களுடன் அரபு மொழியிலும் பேசக்கூடிய ஆற்றலை வளர்த்துக்கொண்டனர்.

அத்துடன் பலஸ்தீனத்தில் நடைமுறையிலிருந்து நில பரிமாற்றம் தொடர்பான விவகாரங்களிலுள்ள ஓட்டைகள் அனைத்தையும் அறிந்து அதனைப் பயன்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றனர். உதாரணமாக 1929 ல் யூத தேசிய நிதியம் 30 ஆயிரம் டும்னம்ஸ் நிலத்தைEmek Hepher ஹெப்பர் என்ற கிராமத்தில் வாங்கியது. அதனை அரசாங்கத்துக்குரிய நில வரியை குறைத்து செலுத்துவதற்காக 5000 டும்னம்ஸ் என அளவை குறைத்து நிலப்பதிவு இலாகாவில் பதிவு செய்தது.

1924 ஆண்டாகும் போது பலஸ்தீன நிலம் பற்றியும் அவற்றின் பயன்பாடு தொடர்பாகவும் தகவல் திரட்டுவதற்குரிய தனியான ஆவண காப்பகம் ஒன்று யூத தேசிய நிதியத்தில் உருவாகிவிட்டது. அவர்கள் காரியங்களை விஞ்ஞானபூர்வமாக செய்தனர்.

பலஸ்தீனர்களுக்கு விவசாயம் அப்போது அதிக லாபம் தரும் தொழிலாக இருக்கவில்லை. அவர்கள் வறுமை நிலையில் இருந்தனர். இந்நிலையில் அங்கலோ- பலஸ்டைன் வங்கிஅவர்களின் காணிகளை மிக கவர்ச்சிகரமான நிபந்தனைகளை வழங்கி அடமானம் பிடித்து காசு கொடுத்தது. பலஸ்தீன விவசாயிகளால் குறிப்பிட்ட காலத்துக்குள் தமது நிலத்தை மீட்க முடியமாற் போய் காணியை இழக்க நேர்ந்தது. இவ்வாறு அங்கலோ- பலஸ்டைன் வங்கி கபளிகரம் செய்த காணிகள் யூத தேசிய நிதியத்திடம் கைமாறின. 1930 ஜூன் மாதம்; வரை யூத தேசிய நிதியம் கொள்முதல் செய்த 90 வீதமான காணிகள் தாம் பட்ட கடனுக்காக விற்கப்பட்ட காணிகளாகும்.

யூதரின் டிரஸ்ட என்ற அடையாளத்தை துறந்து -யூத நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கு Anglo-Palestine Company அங்கலோ பலஸ்டைன் கம்பெனி – (பின்னர் அங்கலோ பலஸ்டை வங்கி) என 1902 லேயே பெயர் மாற்றம் செய்துவிட்டமையானது பெரிதும் சாதகமாக இருந்தது. ஆங்கில கம்பெனி ஒன்று தமக்கு கடன் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு பலஸ்தீன அராபியர்கள் அதனிடம் தமது காணிகளை அடமானம் வைத்து அதன் பொறிக்குள் வீழந்தனர். இதன் கிளைகள் முக்கிய நகரங்கள் எங்கும் திறக்கப்பட்டன. (இன்று தமிழ் பகுதிகளில் கிராமந்தோறும் அமைக்கப்பட்டு வரும் வங்கிகளின் நோக்கத்தை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்)

யூத தேசிய நிதியம் பலஸ்தீன நிலத்தை வாங்கி குடியேற்றங்களை நிருவி அதனூடாக ஒரு யூத அரசை உருவாக்குவதை ஒரே நோக்கமாகக் கொண்டு செயற்படுவதில் சிறப்பான வெற்றியை ஈட்டியதற்கான ஐந்து பிரதான காரணங்களை பின்வருமாறு கூறலாம்:

1. ஒட்டோமன் காலத்து நில பங்கீடு நில அளவை நிலப் பதிவு ஆகிய விடங்கள் தொடர்பாக அவர்கள் வளர்த்துக் கொண்ட அறிவு.

2. பலஸ்தீன அராபிய சமூகத்தின் பலம் பலவீனம் ஆகியவற்றை நன்கு புரிந்து கொண்டமை.

3. அராபு மொழியில அராபியர்களுடன் பரிவர்ததனை செய்யவும்; பேசவும் அதேசமயம் ஆங்கிலேயருடன் ஆங்கிலத்தில் பேசி காரியத்தை சாதித்துக் கொள்வதற்கும் கற்றுக் கொண்டமை.

4. பிரித்தானிய உயர்அதிகாரிகளுடன் உறவை வளர்த்துக்கொண்டு பிரித்தானியாவில் எடுக்கப்படும் தீர்மானங்களையும் அவற்றினால் தமக்கு ஏற்படக்கூடிய நன்மை தீமைகளையும் முன்கூட்டியே அறிந்து கொண்டமை.

5. பிரித்தானியரின் மென்டேட் 29 செப்தம்பர் 1923 ல் ஆரம்பிக்க முன்னரே பலஸ்தீன நிலம் சம்பந்தமான அறிவைவை கொண்டிருந்தமையும் பிரித்தானிய அதிகாரிகளுக்கு தமக்குப் பாதகமான தகவல்களை வழங்காமல் மறைத்தமையும்.



Haganah ஹெகானா துணைப்படை.

இஸ்ரேலின் உருவாக்கம் பலர் கருதுவதைப்போல ஏகாதிபத்தியம் செயற்கையான முறையில் ஏற்படுத்தப்பட்டதல்ல. சிலர் நினைப்பதைப் போல ஒரு சில நாட்களுக்குள் உருவாக்கப்பட்ட ஒன்றும் அல்ல. சுமார் அறை நூற்றாண்டு காலமாக சியோனிஸ்டுகள் ஒவ்வொரு விடயத்தையும் திட்டமிட்டு செய்து வந்ததன் விளைவாகவே அது உருவானது.

அவர்களது தரப்பிலிருந்து கூறுவதாக இருந்தால் அவர்கள் தமது சுயமுயற்சியால் இஸ்ரேலை உருவாக்க படிப்படியான இடைவிடாத திட்டமிட்ட செயற்பாடுகளை நகர்த்திக் கொண்டிருக்கும் வேளையில் வல்லரசுகள் உதவிக்கு வந்தன. அந்த சந்தர்ப்பத்தை சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்டு தமது தேவைக்கேற்ற படியான பலம் பொருந்திய அரசை ஒன்றை உருவாக்கிக் கொண்டனர் என்று கூறலாம். மறுபுறத்தில் பொது நிலையிலிருந்து கூறுவதனால் யூதர்கள் தமது சுயமுயற்சியால் உருவாக்கிக் கொண்டிருந்த இஸ்ரேலை ஏகாதிபத்தியங்கள் தமது தேவைக்காக துரிதப்படுத்தி – தமது தேவைக்காக -தம்மில் தங்கியிருக்கும் ஒரு நாடாக மாற்றியமைத்துக் கொண்டனர்.

எனினும் ஒரு விடயத்தை மறந்து விடலாகாது. இரண்டாம் உலக மாகா யுத்த முடிவில் அரும்பு நிலையில் ஒரு இஸ்ரேலை சியோனிஸ்டுகள் உருவாக்கியிருந்தார்கள் யூத தேசிய நிதியம் ஹெகானா துணைப்படை. ஆகிய இரண்டும் இல்லாமல் அவற்றின் பங்களிப்பு இல்லாமல் இஸ்ரேல் உருவாகியிருக்க முடியாது.

1900 ஆண்டின் போது பலஸ்தீனத்தின் சனத்தொகையில் 96 சத வீதத்தினர் பலஸ்தீன அராபியர்கள், 4சத வீதத்தினரே பலஸ்தீன யூதர்கள். 1948 ம் ஆண்டாகும் பலஸ்தீனியர்களின் இத்தொகை – யூத தேசிய நிதியத்தின் செயற்பாடு காரணமாக- 30 சதவீதமாக அதிகரித்திருந்தது. 1900 ஆண்டில் 1 சத வீத நிலத்தை மாத்திரமே கொண்டிருந்த பலஸ்தீன யூதர்கள்- யூத தேசிய நிதியத்தின் செயற்பாடு காரணமாக- 1948 ல் 6 சதவீதமான நிலத்தை கொண்டிருந்ததனர். இது வெளிப்பார்வைக்கு சிறிய வீதமாக இருப்பினும் அவர்கள் விரிவுபடுத்திய நிலபரப்பு மிகவும் வளமானது கேந்திர முக்கித்துவம் வாய்ந்தது.

இஸ்ரேலியர்களின் ஆயுத குழுக்களும் கூட சுயமாகவே வெளிநாட்டுகளிலிருந்து வரத்தொடங்கிய யூதர்களால் உருவாக்கப்படன. சுதேச யூதர்களுக்கு அவற்றை அமைப்பதற்கான தேவை இருக்கவில்லை. வெறுமனே காவல்புரியும் சிறு குழுக்களாக ஆரம்பித்து முறையான பயிற்சிபெற்ற 30 ஆயிரம் பேரைக்கொண்ட வலிமை மிக்க இராணுவமாக யூத ஆயுத குழுக்கள் வளர்ச்சி பெற்றிருக்காவிட்டால் – யூத தேசிய நிதியத்தின் செயற்பாடு காரணமாக ஒரு நில அடிதளம் உருவாகியிருக்கா விட்டால் – இஸ்ரேல் என்ற நாடு 1948ல் உருவாகியிருக்க முடியாது.

1907 ல் Bar-Giora பார் கிஓரா என்ற பெயரில் சிறு ஆயுத குழுக்களை தமது புதிய குடியேற்றங்களை காவல்புரிவதற்காக பலஸ்தீன யூதர்கள் உருவாக்கினர். அது காவல்புரியும் பணியிலேயே பெரும்பாலும் ஈடுபட்டது. வெளியார் தாக்க வரும்போது குடியேற்றவாசிகளை எச்சரித்து அவர்கள் ஓடி ஒளிவதற்கு இவை உதவி செய்தன. பாதுகாப்பு பிரச்சினை அதிகரித்த போது 1909 ல் Hashomer ஹசாமர் என்ற ஆயுதந்தரித்த காவற்படை உருவாக்கப்பட்டது.

1921ல் முதலாவது பாரிய ஜப்பா இனக்கலவரம் the Jaffa riots வெடித்தபோது தான் தற்காப்பு படையாக ஹெகானா உருவாக்கப்பட்டது. 1929 வரை அது மத்தியத்துவப் படுத்தப்படாத அமைப்பாகவே இருந்தது. யூத விவசாயத்தையும் குடியேற்றத்தையும் கிபுட்ஸையும் பாதுகாப்பதற்கான தனித்தனி ஆயுத குழுக்களாகவே அவை செயற்பட்டன.(இஸ்ரேலியர்களின் ஆலோசனைப்படி இலங்கையில்ஊர்க்காவல் படை இதனைத் தழுவியே உருவாக்கப்பட்டது).

1929 ல் வெடித்த பலஸ்தீன கலவரத்தின் போது ஹெகானா வலிமைமிக்க – மத்தியப்படுத்தப்பட்ட ஆயுத குழுவாக பரிணமித்தது. கைகுண்டுகளைத் தயாரிக்கும் இரகசிய தொழில் பட்டறைகளையும் வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களை கடத்திவரவும் அவற்றைக் கையாளவதற்கான பயிற்சியை வழங்குவதற்கும் அது கட்டமைப்புகளை உருவாக்கிக் கொண்டு இரகசிய இராணுவமாக செயற்படத் தொடங்கியது.

பாசிச அச்சுறுத்தல் உருவாகியிருந்த வேளையில் தான் பிரித்தானியர்களுக்கும் யூத குடியேற்றங்களுக்கும் எதிரான 1936 – 1939 பாரிய அராபிய கிளர்ச்சியின் வெடித்தது. இத்தறுணத்தில் பிரித்தானியர் ஹெகானா வின் உதவியைப்பெற வேண்டியதாயிற்று. ஹெகானா இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இராணுவ பயிற்சி பெற்று தன்னைப் பலப்படுத்திக் கொண்டது.இரண்டாம் உலக மகாயுத்தம் வெடித்த போது – 1940 முதல்- யூதர்களை பிரித்தானிய இராணுவம் தனது அணியில் சேர்க்கத் தொடங்கியது.

ஆயினும் ஹெகானா பிரித்தானியரை மாத்திரம் தனது வளர்ச்சிக்கு தங்கியிருக்கவில்லை. பிரித்தானியா அச்சு நாடுகளால் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டால் அந்த நிலைலையை சமாளிப்பதற்காக 1941 மே 4ந் திகத அது தனது கொமாண்டோ பிரிவான Palmach பலமாச்சை உருவாக்கிக் கொண்டது. இதில் இணைந்த இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் கொரில்லா பயிற்சி வழங்கப்பட்டது. 1942 முதல் 43 வரை பிரித்தானிய இராணுவம் இதற்கு விசேட பயிற்சி வழங்கியது.

1943ல் 5000 படைவீரர்களைக் கொண்ட தனியான யூத பிரிக்கேட் குழு Jewish Brigade Group பிரித்தானிய ஒன்றை இராணுவம் இனஅடிப்படையில் அமைத்தது. இப்படைப் பிரிவு இத்தாலி போன்ற நாடுகளில் பிரித்தானிய படையுடன் இணைந்து யுத்தத்தில் ஈடுபட்டு அனுபவம் பெற்றது. இரண்டாவது யுத்த முடிவில் இவ்வாறு 30000 க்கும் அதிகமான பலஸ்தீன யூதர்கள் பயிற்சி பெற்றிருந்தனர்.இஸ்ரேல் உருவாக்கத்தில் இவ்வாறு பயிற்சி பெற்ற இராணுவம் வகித்த முக்கிய பாத்திரம் பிரித்தானிய ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.இஸ்ரேல் உருவாக்கப்பட்ட இரு வாரங்களுக்குள் 28 மே 1948ல் ஹெகானாIsraeli Defense Forces இஸ்ரேலிய பாதுகாப்புப்படையாக மாற்றமடைந்தது.

பலஸ்தீனியர்களைப் பொருத்தளவில் இவற்றை எல்லாம் தெரிந்து கொள்ளும் அறிவுகூட இல்லாமல் மத முல்லாக்களின் பிடியில் ஆன்மீக மயக்கத்தில் இருந்தனர். இறைவன் தங்களைக்கு துணையிருக்கிறான் என்ற நம்பிக்கையில் அவர்கள் வேறு எதையும் பற்றியும் கவலைப் படவில்லை. இஸ்ரேலியர்கள் அராபியர்களை விட மத நம்பிக்கை மிகுந்தவர்களாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் தமது மதம் சார்ந்த இலட்சியங்களை விஞ்ஞானரீதியில் அடையும் முயற்சியை திட்டமிட்ட முறையில் மேற்கொண்டார்கள்.

மறுபுறத்தில் பிரித்தானிய ஏகாதிபத்தியம் பலஸ்தீனர்களை இராணுவ ரீதியில் சுயமாக பலம் பெறுவற்கு அனுமதிக்கவில்லை. உதாரணமாக 1930 களில் யூத குடியேற்றங்களுக்கு எதிராக “கருப்புக் கரம்”Black Hand என்ற இஸ்லாமிய ஆயுத குழு சிரிய நாட்டவரான (Shaykh Izz ad-Din al-Qassam) அல் காசிம் என்பவரின் தலைமையில் உருவாகி யூத குடியேற்றங்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்தது. இதற்கு அஞ்சி பிரித்தானியா யூதர்களின் வருகையை சிறிதுகாலம் கட்டுப்படுத்தியது. அன்றைய செல்வாக்கு மிக்க தலைவனான ஹ_சைனியின் ஆதரவாளராக அல் காசிம் திகழ்ந்த போதும் அவர் வன்முறை அரசியல் மீது அதிகம் நம்பிக்கை கொண்டிருந்தார். நாளடைவில்– பள்ளிவாசல்களைத் திருத்தும் வேலைக்காக வரும் நிதியை ஆயுதங்களுக்கு தரமுடியாது என அல் காசிமுக்கு ஹ_சைனி கூறிவிட்டார். இது ஹ_சைனியின் அரசியல் தெளிவற்ற தன்மையைப் புலப்படுத்துகிறது. ஒரு புறத்தில் அவர் யூதர்களுக்கு எதிரான வன்செயலைத் தூண்டினார். மறுபுறத்தில் ஒரு இஸ்லாமிய ஆயுத குழு உருவாவதை அவர் விரும்பவில்லை. எனினும் அல் காசிம் தனது போக்கை கைவிடவில்லை. அவர் யூத குடியேற்றங்களை தாக்குவதை நிறுத்தவில்லை. அதனால் அவர் யூதர்களின் சிம்மசொப்பனமாக மாறிவந்தார். ஆயினும் அவருக்கு சர்வதேச சியோனிஸ்ட்களைப் போன்ற ஒரு பின்புலம் ஆதரவாக இருக்கவில்லை.

கடைசியில் 20 நவம்பர் 1935 ந் திகதி பிரித்தானிய பொலிசார் அல் காசிம் ஜெனின் பகுதியில் பதுங்கியிருந்த குகையை சுற்றிவளைத்த போது ஏற்பட்ட துப்பாக்கி சமரில் உயிரிழந்தார். அவர் இறந்த பின்னர் அவரது இயக்கமும் செயலிழந்தது ஆனால் அதன் உறுப்பினர்கள் 1936-39 கலவரத்தில் பங்கு கொண்டனர்.


பலஸ்தீனியர் வெளியேற்றம்:

————————————————-

இஸ்ரேல் உருவான பின்னணியும் அதனை ஏகாதிபத்தியங்கள் போசித்து வருவதற்கான காரணங்களும் பின் இணைப்பாக தரப்பட்டுள்ளது.

1947 நவம்பர் 29ந் திகதி பலஸ்தீனத்தை இரண்டாகப் பிரிக்கும் 181ம் இலக்க தீர்மானத்தைUN Partition Resolution (GA 181) நிறைவேற்றியதை அடுத்து கொந்தளிப்பான நிலைமை தேன்றியது. 1948 மே மாதம் அராபுநாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் முதலாவது யுத்ததம் மூண்டதை அடுத்து 85 வீதமான 750000 பலஸ்தீனயர்கள் தமது நாட்டை விட்டு வெளியேறி அப்போது ஜோர்தானின் கீழ் இருந்த மேற்கு கரைக்கும் எகிப்தின் கட்டுப்பாட்டில் இருந்த காசா பகுதிக்கும் லெபனானுக்கும் சிரியாவுக்கும் ஏனைய பல அராபிய நாடுகளுக்கும் அகதிகளாகச் சென்றனர்.

சியோனிச ஊடகங்கள் பலஸ்தீனயர்கள் வெளியேற்றம் பற்றி பல்வேறு பிரச்சாரங்களைச் செய்து வருகின்றன. அவற்றுள் பிரதானமானது அராபிய நாடுகள் புதிதாக உருவாகிய இஸ்ரேலை அழித்தொழிப்பதற்கான யுத்தத்தை நடத்தப்போவதாக அறிவித்து அதற்கு வசதியாக வழிவிட்டு -யுத்தத்தில் அகப்பட்டு அழியாமல் இருப்பதற்காக – பலஸ்தீனத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே பலஸ்தீனியர்கள் வெளியேறினர் என்பது பிரதானமானது. அது உண்மையானால் அவ்வாறு வெளியேறியவர்களை மீண்டும் உள்ளே வர இஸ்ரேல் அனுமதிக்காது ஏன் என்ற கேள்வியும் அவ்வாறு வெளியேறிய 85 சத வீதமானவர்களின் நிலத்தையும் உடடமைகளையும் கொள்ளையடித்து வைத்து கொண்டது ஏன் என்ற வினாவும் எழுகிறது.

உண்மை என்ன வென்றால் அன்று மேற்கொள்ளப்பட்ட வானொலி அறிவித்தல்களிலோ பத்திரிகை செய்திகளிலோ அதற்கான எந்த ஆதாரமும் கிடையாது. அதற்கு மாறாக நாட்டைவிட்டு ஓடவேண்டாம் என அராபிய தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தற்கான பல ஆதாரங்கள் உள்ளன.

பலஸ்தீனியர்கள் வெளியேறிதற்கு பல காரணங்கள் இருந்தன. அவர்கள் நம்பிய அவர்களது அரசியல் ஆன்மீகத் தலைவர் ஹ_சைனி இரண்டாம் உலக மாகாயுத்தத்தின் போது அரசியல் தூரநோக்கு இன்றி ஹிட்லரையும் ஜேர்மனி தலைமையிலான அச்சு நாடுகளையும் ஆதரித்தார்.; (பார்க்க இணைப்பு) யுத்த முடிவில் அச்சு நாடுகள் தோற்கடிக்கப்பட்டு ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட பின்னர் ஹ_சைனியின் தலைமை கடைபிடித்த தந்திரோபாயம் தோல்வியுற்று பலஸ்தீனியர்களை அரசியலில் நிராதரவாக்கிவிட்டது. மறுபுறத்தில் பிரித்தானியா சார்பு அராபு தலைவர்கள் பிரித்தானியா தங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் எதுவித தயாரிப்பும் செய்யாமல் கண்மூடித்தனமாக இருந்தனர். (இதே மனநிலையில் சர்வதேசம் எம்மைப்பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் நாம் எமது மண்ணையும் பெண்களையும் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்). பலஸ்தீன பிரிவினையை ஐ.நா. அறிவித்தபோது அதனை ஏற்பதற்கான மனநிலையோ அதனை தடுத்து நிறுத்துவதற்கான பலமோ அவர்களிடம் இல்லாமற் போய்விட்டது. எல்லா விடயங்களும் திடீரென நடந்துவிட்டன. அந்த நிலைமைக்கு ஈடு கொடுப்பதற்கு இஸ்ரேல் மாத்திரமே தயாராக இருந்தது.

அப்போது உருவாகியிருந்த யுத்த சூழலில் – தம்மை பாதுகாப்பதற்கு ஒரு அரசோ இஸ்ரேலியர்களிடமிருந்ததைப் போன்ற ஹெகானா போன்ற ஒரு அமைப்போ ஆயுதமோ இல்லாத நிலையில் அவர்கள் செய்வதறியாது திகைத்தனர். இச்சூழலில் தான் யூதர்கள் பீதியூட்டும் உத்தியைக் கையாண்டு பலஸ்தீனர்களை படுகொலை தாக்குதலைத் தொடங்கினர். டெயர் யாசின், ராம்லி , லிட்டா போன்ற நகரங்களில் நிராயுதபாணியான அப்பாவி பலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டமை இதற்கான சில உதாரணங்கள். இவ்வாறான பீதியான நிலையில் – பலஸ்தீனியர்கள் மத்தியில் செலவாக்கு செலுத்திய மதகுருமாரும் வசதிபடைத்தவர்களும் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு வெளியேறத் தொடங்கியமை இவர்களது நிலைமையை மேலும் பலவீனப்படுத்தியது. அவர்களைப் பின்பற்றி 85 சத வீதமான – சுமார் 750000 -பலஸ்தீனர்கள் வெளியேறினர்.

அப்போது இஸ்ரேலிடம் நன்கு பயிற்றப்பட் கட்டமைப்புடன் கூடிய ஹெகானா துணைப்படையும் (para military group) இரண்டாம் உலக மாகாயுத்தத்தின் போது பிரித்தானியாரால் முறைப்படி பயிற்றப்பட்ட இராணுவமும் இருந்தது. பிரித்தானியர் வழங்கிய ஆயுதங்களை விட அவர்கள் சட்டவிரோதமாக ஆயுதங்களை கடத்தி வந்தார்கள். அதற்கான கட்டமைப்பை அவர்கள் கொண்டிருந்தார்கள். பலஸ்தீனியர்களிடம் இத்தகைய எதுவுமே இருக்கவில்லை.

அம்மண்ணை விட்டு வெளியேறாமல் இருந்த பலஸ்தீனியர்கள் 1966 வரை 20 வருடகாலம் martial law இராணுவ அவசரகால சட்டத்தின் கீழ் குரல்வளை நசுக்கப்ட்ட நிலையில் வாழ்ந்தனர். அவர்கள் சம அந்தஸ்துள்ள பிரஜைகளாக கருதப்படவில்லை. இவர்கள் வாழும் கிராமங்கள் பல இன்றளவும் “unrecognized”” ‘அங்கீகரிக்கப்படாதவை” என பிரகடனப்படுத்தப்பட்டு மின்சார விநியோக உரிமை மறுக்கப்படுகிறது. இஸ்ரேலிய கூட்டுறவு சங்கங்களில் யூதர்கள் அல்லாதவர்கள் அங்கத்துவம் வகிக்க இயலாது. இவ்வாறு பல வழிகளில் அவர்களுக்கு பாகுபாடு தொடர்கிறது. (இதே பாணியில் ஸ்ரீ லங்கா அரசாங்கம் தமி;ழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் வாழும் மக்களை இரண்டாந்தர பிரஜைகளாக நடத்தி வருகிறது.)

இதைவிட பலஸ்தீனியர்களின் நூலகங்களிலிருந்த 70000 க்கும் அதிகமான நூல்களை கொள்ளையடித்து அவற்றை இஸ்ரேல் தேசிய வாசிகசாலையின் சொத்துக்களாக பிரகடனப்படுத்தியது. அதனை விட அளவுக்கதிகமான நூல்கள் காணாமற்போயின. 1960 அறிமுகப்படுத்தப்பட்ட பட்டியலிடும் முறையின் cataloguing system கீழ் பல நூலாசிரியர்களின் பெயர்களும் நூல்களின் பெயர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு“AP” (“Abandoned Property”) என குறிக்கப்பட்டன. இது தொடர்பாக “The Great Book Robbery” “மகா புத்தக திருட்டு” என்ற பெயரில் 2012 ல் Benny Brunner பென்னி புரூனர் இயக்கிய திரைப்படம் ஒன்று வெளியானது.பலஸ்தீனியார்களை வெளியேற்றிய பின்னர் அவர்கள் வாழ்ந்த பௌதீக – கலாச்சார தடயங்களை அழிக்கும் பணியை இஸ்ரேல் தீவிரமாக முன்னெடுத்தது. பலஸ்தீன கிராமங்களின் பெயர்கள் யூத பெயர்களாக மாற்றப்பட்டு அவற்றின் பலஸ்தீன தடயங்கள் அரசாங்க ஆவணங்களிலிருந்து நீக்கப்பட்டது. (தமிழ் மண்ணில் இன்று நடப்பதும் இதுதான்)

வனபாதுகாப்பு மரம் நடுதல் சுற்றாடலை பாதுகாத்தல் போன்ற நவீன முற்போக்கு வேலைத்திட்டங்களும் சுலோகன்களும் இங்கு இனசுத்திகரிப்பிற்காக மிகவும் சாதுர்யமாக பயன்படுத்தப்பட்டன. உதாரணமாக யூத தேசிய நிதியம் மேற்கொள்கின்ற pine trees பைன் மரநடுகை திட்டம் பலஸ்தீன மக்கள் வாழ்ந்ததற்கான தடயத்தை இல்லாமற் செய்யும் திட்டமாகவும் அவர்கள் மீண்டும் அங்கு வந்து குடியேறுவதற்கான வாய்ப்பை அறவே இல்லாமற் செய்யும் திட்டமிட்ட நடவடிக்கையாகவும்மாற்றப்பட்டுள்ளது. (மலையகத்தில் பைன்மர நடுகை வனபாது காப்பு சுற்றாடல் பாதுகாப்பு ஆகிய போர்வையில் நடைபெற்றுக்கொண்டிருப்பது இதுதான்.)


எமது மண்ணில் நடப்பது:

—————————————-
 
 

அன்று பலஸ்தீனில் நடந்தது தான் -இஸ்ரேலின் ஆலோசனையின் படி அல்லது அதனைப் பின்பற்றி- இன்று எமது மண்ணில் நடந்து கொண்டிருக்கிறது. அதன் நோக்கங்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1. எமது மண்ணில் எமது எண்ணிக்கை பலத்தில் மாற்றத்தை செய்து demographic character மண்ணின் இனகலாச்சார தன்மையை அல்லது pl-03அடையாளத்தை மாற்றுவது.

2. அங்கு வாழும் மக்களை பல்வேறு வழிகளில் வெளியேற்றி காலச்சார தடயங்களை அழித்து கலாச்சார ஆக்கிரமிப்பின் மூலம் இன சுத்திகரிப்பை மேற்கொள்வது.

3. எமது மக்கள் எண்ணிக்கைப் பலத்தை குறைத்து எம்மைப் பலவீனப்படுத்துவதன் மூலம் எமது அரசியல்ரீதியாக பலவீனப்படுத்துவது.

4. சிங்கள மேலாதிக்கத்தை எம்மீது அரசியல்ரீதியாகவும் பௌதிகரீதியாகவும் நிலை நாட்டுவது.

5. சிங்கள ஆதிக்க அரசியல் யாப்பையும் அதனைப் பேணும் தேர்தல் முறையையும் தனக்கேற்றவகையில் பயன்படுத்தி எமது அரசியல் குரலை நசுக்குவது.

6. சிங்கள இராணுவம் நிரந்தரமாக நிலைகொண்ட எமது அன்றாட சமூக வாழ்க்கையை சீர்குலைப்பது.

7. எமது மண்ணின் வளமாக பகுதிகளையும் மூல வளங்களையும் அபகரித்து எமது அடிப்படை ஜீவாதாரத்தை எம்மிடமிருந்து பறித்தெடுத்து எம்மை வறிய நிலைமைக்கு மேலும் தள்ளுவதன் மூலம் சிங்கள அரசுக்கும் சிங்கள குடியேற்றவாசிகளுக்கும் சேவகம் புரிபவர்களாகவும் அவர்களை அண்டி வாழ்பவர்களாகவும் எம் மக்களை மாற்றுவது.

எமது கடமை.

இதன் பின்னணியில்,எமது கடமை என்ன?

எமது புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் அரசியல் உணர்வு மிக்கவர்கள். விடுதலை தீபத்தை அணையவிடாமல் காத்து எமது பிரச்சினையை சர்வதேசமயமாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற் கொண்டு வருகிறார்கள்.

ஆயினும் ஒரு குறை,

எம் மத்தியிலுள்ள அமைப்புகள் சில வரையறுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை வகுத்துக் கொண்டு அவற்றில் மாத்திரமே கவனம் செலுத்தி வருகின்றன. அவை பெரும்பாலும் எமது கடந்த கால போராட்டத்தை நினைவு கூர்வதற்கும் கடந்த காலத்தில் நடைபெற்ற அவலங்களை மறக்காமல் செய்வதற்கும் உதவுகின்றன. அவற்றை மாத்திரமே எமது போராட்ட கடமையாகக் கருதி செயற்பட்டுக் கொண்டிருந்தால் இன்னும் சில வருடங்களில் அவை அஞ்சலி செலுத்தும் வைபவங்கiளாக ஆகிவிடலாம்.

நாம் எமது மண்ணைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை எமது காலஅட்டவணை படியான செயற்பாடுகளுடன் இணைக்காவிட்டால் – எமது மண்ணில் உருவாகிவிட்ட மண்ணைக்காப்பதற்கான போராட்டங்களுக்கு ஆதரவாக நாம் இங்கு போராட்டங்களை நடத்தாவிட்டால் – எமது தாயகத்திற்கான போராட்டம் கூடியவிரைவில்; தாயகத்தைப் பறிகொடுத்தவர்களின் ஒப்பாரியாக மாறி சமய அனுஷ்டானத்தைப் போல ஆக்கப்பட்டுதான் போகும்.

தொழிற் சங்கங்களால் கூலி உயர்வுக்காக போராட்டங்கள் மாத்திரமே நடத்தப் பட்டுக்கொண்டிருந்த மலையகத்தில் கூட நிலத்துக்காக அவர்கள் நடத்திய போராட்டம் தான் அவர்களை தலை நிமிர வைத்தது. சிவனுலட்சுமனின் வீரச்சாவு இன்றளவும் அங்கு நினைவு கூறப்படுகிறது.

மலையகத்தில் 12500 சிங்களவர்களை குடியேற்றுவதற்காக 25 ஆயிரம் தோட்ட காணிகளை அபகரிகக்கப் போவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கிறது. கிழக்கில் காணி அபகரிப்பு எதிரான போரட்டம் தமிழ் மக்கள் மத்தியிலும் முஸ்லீம் மக்களின் மத்தியிலும் நடந்த வண்ணமுள்ளது.

கிழக்கில் வடக்கில் மலையகத்தில் ஏன் கொழும்பில் கூட மண்ணுக்காக எம்மக்கள் போராடுகிறார்கள். இத்தகைய மண்ணுக்கான போராட்டமே தமிழ் பேசும் மக்களை இணைக்கக் கூடியது. சாராம்சத்தில் மண்ணுக்கான போராட்டமே எமது அனைத்து உரிமைக்குமான அடிநாதமாகும்.



————————————————————————————————————————————————————————————————————————————————

இணைப்பு – 1

மத்திய கிழக்கு நாடுகளினதும் இஸ்ரேலினதும் உருவாக்கம்:


முதலாம் உலக மகாயுத்தத்தின் போது துருக்கி-ஒட்டோமன் சம்ராச்சியத்தை வீழ்த்துவதற்கு தமக்கு சார்பாக கிளர்ச்சி செய்வதற்காக அராபியர்களுக்கு சுதந்திரம் வழங்குவதாக [1915 Husayn-McMahon Correspondence] உறுதி கூறிய பிரித்தானியா இரகசியமாக யூதர்களின் பலஸ்தீனத்தில் மீதுள்ள தாயக உரிமையை அங்கீரிப்பதாக [1917 Balfour Declaration] வாக்குறுதியளித்தது. மறுபுறத்தில் அராபியர்களின் முதுகுக்குப் பின்னல் திரைமறைவில் ஒட்டோமன் சாம்ராச்சியத்தை தமக்குள் பகிந்து கொள்வதற்கான சைகியஸ் பைகொட் ஒப்பந்தத்தை (1916 Sykes – Picot Agreement) பிரான்சுடன் செய்து கொண்டது. இவ்விடயம் 1917 அக்டோபர் சோசலிச புரட்சியின் மூலம் ரஷ்யாவில் ஆட்சிக்கு வந்து போல்ஷ்விக் அரசாங்கத்தால் அம்பலப்படுத்தப்பட்ட போது பிரித்தானியாவும் பிரான்சும் தர்மசங்கடத்துக்குள்ளாயின. அதன் பின்னர் அராபியர்களை திருப்திபடுத்துவதற்காக பலஸ்தீன யூதர்களின் தாயக உரிமை என்பது யூதர்கள் இன்றிருப்பதைப் போல் தொடர்ந்தும் வாழ்வதற்குரிய உரிமையை மாத்திரமே தனது பல்போர் பிரகடனம் குறிக்கிறது என விளக்களித்த அதே வேளை சியேனிஸ்ட்டுகளுக்கு இஸ்ரேலை உருவாக்குவதற்கு உதவுவதாக இரகசியமாக கூறியது





(1922 The Churchill White Paper, 1922).


இவ்வாறு முதலாம் உலக மகாயுத்தம் முடிவுற்ற பின்னர் அப்போது உருவாக்க்கப்பட்டிருந்த – தற்போதைய ஐ.நா.வின் முன்னோடியான உலக சபை - League of Nations- மேற்படி ஒப்பந்தப்பந்தத்தின் அடிப்படையில் 1923 செப்தம்பா 29 ந் திகதி பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கும் பிரான்ஸ் ஏகாதிபத்தியத்திற்கும் அதிகார பிராந்திய - மென்டேட்’ [mandate] – நாடுகள் என்ற பெயரில் மத்திய கிழக்கை பிரித்துக் கொள்ள அனுமதியளித்தது. இதன்படி லெபனானும் சிரியாவைவும்; பிரான்சுக்கு வழங்கப்பட்டது. பலஸ்தீனம் – இன்றைய ஜேர்தான் இஸ்ரேல் மேற்குகரை (West Bank) பிரதேசங்கள் – பிரித்தானியாவுக்கு வழங்கப்பட்டது.

(குறிப்பு: அதன்பின்னரே மத்திய கிழக்கில் உலகபடத்தில் அதுவரையில்லாத புதிய நாடுகள் ஏகாதிபத்திய தேவைக்காக செயற்கையான முறையில் உருவாக்கப்பட்டன. தற்போது 23 அராபிய நாடுகளும் அராபியர்கள் அல்லாத ஈரானும் இஸ்ரேலும் இங்குள்ளன.)

மென்டேட் காலப்பகுதியில் மத்தியகிழக்கில் பெற்றோலிய வளம் பெருமளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மத்திய கிழக்கின் முக்கியத்துவம் அதிகரித்தது. (பார்க்க இணைப்பு). அத்துடன் வேறு இரு காரணிகளும் இஸ்ரேல் உருவாவதற்கு சாதமான சூழ்நிலையை தோற்றுவித்தன. உலகமாக யுத்தத்தின் போது ஒட்டோமன் சாம்ராச்சியத்தை வீழ்த்துவதற்கு அராபியர்களது ஆதரவைப் பெறுவதற்காக அவர்களது சுதந்திரத்திற்கு உதவிசெய்வதாக உறுதியளித்த பிரித்தானிய ஏகாதிபத்தியம் அதன் வாக்குறுதியை நிறைவேற்றாததாலும் மறுபுறத்தில் பலஸ்தீன யூதர்களின தனி நாட்டு கோரிக்கை தொடர்பாக வழுவல் நழுவலாக – ஆனால் யூதர்களுக்கு சார்பாக – நடந்து கொண்டதாலும் அராபியர் மத்தியில் அதிருப்தி நிலவிவந்தது. இதனை தனது பிரித்தாளும் தந்திரத்தின் மூலம் ஓரளவுக்கு சமாளித்து வந்தாலும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தால் தான் விரும்பியவாறு காரியங்களை முன்னரைப் போல செய்ய முடியவில்லை.

ஒரு புறத்தில் ரஷ்யாவில் வெடித்த1917 அக்டோபர் சோசலிச புரட்சியினை அடுத்து உருவான சோசலிச முகாமுக்கு அஞ்ச வேண்டியிருந்தது. உலகில் ரஷ்யாவில் மாத்திரமே உருவாகியிருந்த சோசலிச ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு உலக ஏகாதிபத்தியங்கள் தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருந்த சமயத்தில் முதலாம் உலக மகாயுத்தத்தின் அழிவிலிருந்து மீள்வதற்காக பகிரத பிரயத்தனம் செய்து கொண்டிருந்த சோசலிச ரஷ்யவால் மத்திய கிழக்கில் அதிகம் கவனம் செலுத்த முடியவில்லை.

போப் ஆண்டவருக்கு நிகரான கலீபா என்ற உலக இஸ்லாமிய ஆன்மீக அரசியல் தலைவர் பதவி 632ல் முகம்மது நபி காலமடைந்த காலத்திலிருந்து சிற்சில மாற்றங்களுடன் நீடித்து வந்தது. 1924 மார்ச் 3ந் திகதி கலீபா முறை நேச நாடுகளின் தூண்டுதலால் நீக்கப்பட்ட பின்னர் அதற்கு எதிராக கலீபா முறை மீண்டும் நிலை நாட்டப்படவேண்டும் என்ற இயக்கங்கள் உருவாகத் தொடங்கின.

இச்சூழலில் பிரித்தானிய ஏகாதிபத்தியம் சோசலிச முகாமின் செல்வாக்கு மத்திய கிழக்கில் பரவுவதை தடுக்கவும் கலீபைட்டுகளின் அதிருப்தியை சாந்தப்படுத்துவதற்கும் இரு காரியங்களைச் செய்தது. உலக முஸ்லிமகளின் பிரதான புனிததளமான மக்காவையும் அதற்கடுத்த புனித தளமான மதினாவையும் தனது கைப்பாவையான அப்துல் அசீஸ் இப்ன் அல் சவுத் மன்னனிடம் 08 ஜனவரி1926 ந் திகதி ஒப்படைத்து சவுதி என்ற புதிய நாட்டை உருவாக்கி 1927 மே 20 ல் அதனை அங்கீகரித்தது.

அடுத்து அராபியர்கள் மத்தியில் பெரிதும் செல்வாக்கு பெற்றிருந்த ஹாஜ் அமின் அல் ஹ_சைனி ( 1897 – 1974) என்பவரை வளர்க்கத் தொடங்கியது. இவர் ஜெருசலத்தின் மகா முஃப்தி Grand Mufti of Jerusalem யாக பிரித்தானியாவால் நியமிக்கப்பட்டார். இப்பதவியை 1921 மே 10ந் திகதி முதல் 1937 வரை இவர் வகித்தார். 1922 ஜனவரி மாதம் இவர் சுப்ரீம் முஸ்லிம் கவுன்சில் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இவருக்கு சிரியாவை தலைமையாகக் கொண்ட அகண்ட அராபிய பேரரசுpan-Arab Kingdom ஒன்றை உருவாக்கி அதன் அரசியல் ஆன்மீகத் தலைவராக வரவேண்டும் என்ற ஆசை இருந்தது. மறுபுறத்தில் இவர் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான மனோபாவத்தையும் அதனை விட யூதவிரோத எண்ணத்தையும் கொண்டிருந்தார்.

பலஸ்தீன விடுதலை இயக்கம் 1964 ல் உருவாகும் வரை இவரே பலஸ்தீன மக்களுக்கு தலைமை கொடுத்தார். முழு அராபியர்களதும் அரசியல் ஆன்மீகத் தலைவனாக வேண்டும் என்ற ஆசைக்கும் பலஸ்தீன போராட்டத்திற்கு தலைமை கொடுக்க வேண்டிய கடமைக்குமிடையே இவர் ஊசலாடத் தொடங்கினார். அவர் அராபியர்களின் கூட்டு முயற்சியால் மாத்திரமே யூத அரசு உருவாவதை தடுக்க முடியும் எனக்கருதினார். 1948ல் இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்ட பின்னரும் அவர் அராபிய நாடுகள் கூட்டாக போர்தொடுத்து இஸ்ரேலை அழிக்க வேண்டும் என நினைத்தார். பலஸ்தீன மக்களின் போராட்டம் பலஸ்தீனயரால்தான் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்து ஏற்படுவதற்கு இவரது அகண்ட அராபு கனவு ஒரு தடையாக அமைந்தது.

பிரித்தானியர் தாம் உருவாக்கிய ஹ_சைனிக்கு தாமே பயப்பட வேண்டிய சூழல் விரைவில் உருவானது. 1930 களில் ஹிட்லரின் நாசிசம் ஜெர்மனியில் தலைதூக்கிய சமகாலத்தில் மத்திய கிழக்கில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான 1936 – 1939 அராபிய கிளர்ச்சி பெரும் அச்சுறுத்தாலாக அமைந்தது. இக்கிளர்;ச்சி முதலில் அராபிய மேட்டுக் குடியினரால் தலைமை தாங்கப்பட்டது. அவர்களுடன் சில அரசியல் விட்டுக்கொடுப்புகளைச் செய்து பிரித்தானியா சமரசம் செய்து கொண்டது. ஆனால் அக்கிளர்ச்சி தொழிலாளர்களாலும் விவசாயிகளாலும் முன்னெடுக்கப்பட்ட போது பிரித்தானிய இராணுவம் அதனை கொடூரமான முறையில் நசுக்கியது. வாலித் காலிதி என்பவரின் கணிப்பீட்டின் படி 5032 அராபியர் அக்கிளர்ச்சியின் போது கொல்லப்பட்டனர் 14760 பேர் காயமடைந்தனர். இக்கிளர்ச்சியின் போது யூதர்களின் ஆயுதக்குழுக்கள் பிரித்தானியருடன் கைகோர்த்து நின்றனர். இவர்களால் கொல்லப்பட்ட அராபியர்களின் தொகை சுமார் 1200 என மதிப்பிடப்பட்டுள்ளது.

இக்கிளர்ச்சி தோல்வியுற்றதும் அதில் முக்கிய பங்கு வகித்த ஹ_சைனி பிரித்தானியரால் தேடப்படும் ஒருவரானார். பிரித்தானியரிடம் அகப்படாமல் அவர் 1937 ல்லெபனானுக்கு தப்பிச்சென்று அங்கிருந்து நாசி ஜேர்மனிக்கு சென்று ஹிட்லரோடு கூட்டு சேர்ந்தார். இரண்டாவது உலக மாகயுத்தம் நடைபெற்ற போது அவர் அங்கிருந்து அராபியர்களுக்காக ஒரு தனியான வானொலி சேவையை நடத்தினார். அதன் மூலம் அராபியர்கள் யூதர்களை கொல்வதும் பிரித்தானியர்களை தூக்கி எறிவதும் அதற்காக ஹிட்லரை ஆதரிப்பதும் அல்லாஹ்குக்கு ஆற்ற வேண்டிய கடமை என பிரசாரம் செய்தார்.

இரண்டாம் உலக மகாயுத்த நிலைமை பலஸ்தீன யூதர்களுக்கு மற்றொரு வரப்பிரசாதமாக அமைந்து விட்டது. தோல்வியடைந்த அராபு கிளர்ச்சியின் பின்னர் அராபியர்களை பிரித்தானியர் அதிகம் நம்பவில்லை. மண்ணிலிருந்து மக்களைப் போராட்டத்திற்கு தயார் செய்யாமல் மற்றொரு ஏகாதிபத்தின் துணையோடு தமது விடுதலையைப் பெற நினைத்த ஹ_சைனியின் ஹிட்லருடனான கூட்டு மேலும் நிலைமையை மோசமடையச் செய்தது. அராபியர்கள் ஹிட்லரை ஆதரித்து விடுவார்கள் என்ற பயத்தில் பலஸ்தீன யூதர்களை பிரித்தானியர் நம்பத் தொடங்கினர். அவர்களை தமது படையில் இணைத்துக் கொண்டு முறையான போர்ப்பயிற்சியளித்தனர். அராபியர்கள் மத்தியில் இதனால் அதிருப்தி ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காக சிறிய அளவு எண்ணிக்கையிலான அராபியர்களுக்கும் இராணுவ பயிற்சி வழங்கப்பட்டது. ஆயினும் அவர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படவில்லை.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பலஸ்தீன யூதர்கள் பிரித்தானியாவினதும் நேச நாடுகளினதும் நம்பிக்கையைப் பெற்றனர். உதாரணமாக அவர்களது அங்லோ பலஸ்டைன் வங்கி யுத்த காலத்தில் பிரித்தானிய இராணுவத்திற்கு தேவையான அனைத்து பாவனைப் பொருட்களையும் தடையின்றி விநியோகிப்பதற்கு அவசியமான தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு நிதி உதவி செய்தது.

இரண்டாம் உலக மகாயுத்த முடிவில் பலஸ்தீனத்தில் குடியேறிய யூதர்களின் எண்ணிக்கை அதிகரித்து அவர்களது சனத்தொகை பெருகியிருந்தது. முறையான இராணுவம் ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. புதிதாக உருவாக்கப்ட்டிருந்த அராபி நாடுகள் அதனோடு ஒப்பிடுகையில் இராணுவரீதியில் வெகுதூரம் பின்னால் இருந்தன.

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் பலவீனப்பட்டு போயிருந்த பிரித்தான்pய ஏகாதிபத்தியம் மத்திய கிழக்கில் ஏற்பட்டிருந்த குழப்பகரமான நிலைமைக்கு ஈடு கொடுக்க முடியாமல் 1947 பெப்ரவரி மாதம் பலஸ்தீனம் தொடர்பாக தீர்மானம் எடுக்குமாறு அப்போது உருவாக்கப்பட்டிருந்த ஐக்கிய நாடுகள் தாபனத்தைக் கேட்டுக்கொண்டது. இதன் படி 1947 மே மாதம் ஐ.நா. பலஸ்தீன பிரச்சினை பற்றி ஆராய்வதற்காக விசேட ஆணைக்குழு ஒன்றை நியமித்தது. அதன் சிபரிசின் அடிப்படையில் 1947 நவம்பர் 29ந் திகதி பலஸ்தீனத்தை இரண்டாகப் பிரிக்கும் 181ம் இலக்க தீர்மானத்தை UN Partition Resolution (GA 181) ஐ.நா. நிறைவேற்றியது.

இப்பிரிவினை திட்டத்தின் படி சனத்தொகையில் 30 வீதமான பலஸ்தீன யூதர்களுக்கு பலஸ்தீனத்தின் 56.47 சதவீதமும் சனத்தொகையில் 70 வீதமான பலஸ்தீன அராபியர்களுக்கு 43..53 சதவீதமும் வழக்கப்படுவதாக இருந்தது. 1948 மார்ச் மாதம் உத்தியோகப் பற்றற்ற யூதஅரசாங்கம் Provisional Jewish government டெல் அவிலில் பிரகடனப்படுத்தது. பிரித்தானியாவின் ஆதரவின்றி இவையாவும் சாத்தியமில்லை.

ஐ.நா. பலஸ்தீன பிரிவினை பற்றி அறிவித்ததை தொடர்ந்து மத்திய கிழக்கில் கொந்தளிப்பு நிலைமை உருவானது. கலவரங்கள் வெடிக்கத் தொடங்கின. பிரித்தானியருக் கெதிரான கிளர்ச்சிகள் ஈராக்கில் தீவிரமடைந்தது.. இப்படியான குழப்பகரமான நிலைமையை மேலும் சிக்கலாக்கும் விதத்தில் பிரித்தானியா மே 15 ந் திகதி தனது மென்டேட்டை கைவிடுவதாக முன் கூட்டியே அறிவித்தது. பிரித்தானியாவின் மென்டேட் முடிவுக்கு வருவதற்கு ஒரு நாள் முன்பதாக 1948 மே 14 ந்திகதி இஸ்ரேல் சுதந்திர பிரகடனம் செய்தது. அதே தினம் அமெரிக்கா அதனை அங்கீகரித்தது. அமெரிக்காவே இஸ்ரேலை அங்கிகரித்த முதலாவது நாடாகும். அடுத்து சோவியத் யூனியன் மே 17 ந் திகதி அதனை அங்கீகரித்தது.

மே 15ந் திகதி பிரித்தானியா தனது மென்டேட்டை முடிவுக்கு கொண்டுவந்தவுடன் எகிப்து சிரியா ஈராக் லெபனான் ஜோர்தான் சவுதி அராபியா ஆகிய நாடுகள் இஸ்ரேல் மீது போர்பிரகடனம் செய்தன. ஆனால் இவற்றிடம் பலம் பொருந்திய இராணுவமோ கூட்டாக தாக்குதலை நடத்தக் கூடிய கட்டமைப்போ அனுபவமோ இருக்கவில்லை. பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருந்த யுத்தம் தொடங்கிய முதல் நாள் வரைக்கும் – அதாவது அதன் மெண்டேட்; முடிவுக்கு வந்த 1948 மே 15 வரை – பிரித்தானிய இராணுவம் அராபு நாடுகளின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்தது. அராபு நாடுகளிடம் சம்பிரதாயத்துக்கான – முறையாக பயிற்றப்படாத – சிறிய எண்ணிக்கையிலான இராணுவமே இருந்தது. ஆனால் இஸ்ரேலிடம் முழு அராபிய நாடுகளின் இராணுவத்தினதும் ஒட்டுமொத்த எண்ணிக்கையை விட எண்ணிக்கையிலும் பலத்திலும் மிக அதிகமான இராணுவம் இருந்தது. தாம் பலவீனமாக இருக்கும் போது பலமான இஸ்ரேல் மீது போர் பிரகடனம் செய்தமை இஸ்ரேலுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. இராணுவ பலத்திலும் போரை நடத்துவதற்கான இராணுவ கட்டமைப்பையும் கொண்டிருந்த இஸ்ரேல் தனது இன சுத்திகரிப்பையும் நில ஆக்கிரமிப்பையும் கேட்ப்பார் பார்ப்பார் இன்றி தன்னிஷ்டபடி செய்து முடித்தது.

1948 மே முதல் 1949 ஜூன் வரையிலான யுத்தம் நடைபெற்ற இடைக்காலத்தில் சுமார் 750000 பலஸ்தீனியர்கள் விரட்டிக்கப்பட்டனர். அவர்களுக்கு சொந்தமான சுமார் 475 பலஸ்தீன கிராமங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அவற்றுள் சுமார் 385 அடையாளம் தெரியாமல் புல்டோசர் போட்டு அழித்தொழிக்கப்பட்டன. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் யூத குடியேற்றங்கள் நிருவப்பட்டன. இவ்வாறு பலஸ்தீனியர்களின் குருதி மீது எழுதப்பட்டது தான் இஸ்ரேலிய அரசின் வரலாறு.

குறிப்பு: ஹிட்லரின் நாசிசம் ஒருவிதத்தில் இஸ்ரேல் உருவாவதற்கான அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தியது. பாசிசத்தால் படுகொலை செய்யப்படுவதற்கு பயந்து யூதர்கள் பெருமளவில் பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெளியேறினர். இவர்களை ஏற்க அமெரிக்காவும் ஏனைய மேற்கு ஐரோப்பிய நாடுகளும் மறுத்த அல்லது குடிவரவுக்கான கடுமையான கட்டுப்பாடு விதித்த பின்னணியில் பெருமளவு யூதர்கள் பலஸ்தீனத்திற்கு குடிபெயர்ந்தனர். இவர்களை குடியமர்த்தும் திட்டங்களை உலக யூத அமைப்பு திறமையாகச் செய்தது.

யூதர்கள் ஹிட்லரால் படுகொலை செய்யப்பட்டமை சம்பந்தமாக இன்றளவும் சர்ச்சை நடந்தவண்ணமுள்ளது. இதில் ஐந்து விடயங்களை மறுப்பதற்கில்லை. ஒன்று யூத படுகொலை உண்மையில் இடம் பெற்றது. இரண்டு: பாசிஸ்டுகளால் படுகொலை செய்யப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை நம்பகரமானதல்ல. மூன்று யூதபடுகொலை பற்றிய பிரச்சாரம் சியோனிஸ்டுகளால் தமது சியோனிச தேவைக்காக உயிரோடு வைக்கப்பட்டிருக்கிறது. அதனை ஏகாதிபத்திய ஊடகங்கள் ஆதரித்து போசித்து வருகின்றன. நான்கு: அன்று நடைபெற்ற யூத படுகொலைக்கும் பலஸ்தீனியர்களுக்கும் எதுவித தொடர்பும் கிடையாது. ஐந்து: இஸ்ரேல் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்கு இந்த பிரச்சாரம் யூத லொபியால் நன்கு பயன்படுத்தப்படுகிறது.

—————————————————————————————————————————————————————————————————————————–

இணைப்பு – 2

மத்திய கிழக்கின் சர்வ தேச முக்கியத்துவமும் ஏகாதிபத்தியங்களின் இஸ்ரேல் மீது காட்டும் அக்கறைக்கான காரணமும்.


பத்து வருட பணியின் முடிவில் செயற்கையாக உருவாக்கப்பட்ட சுயஸ் கால்வாய் நவம்பர் 1869ல் திறந்து வைக்கப்பட்டதை அடுத்து மத்திய கிழக்கின் கேந்திர முக்கியத்துவத்துவம் பெரிதும் அதிகரித்தது. மேற்கையும் கிழக்கையும் இணைக்கும் கடல் மார்க்கத்தின் மையமாக அது மாறியது.

1895ல் அமெரிக்காவின் (Titusville, Pennsylvania) பென்சில்வேனியாவிலுள்ள டைடுஸ்வைல் என்ற இடத்தில் உலகின் முதலாவது நவீன பெற்றோலிய எண்ணெய்க் கிணறு அகல்வு வேலை வெற்றி பெற்றமை பெற்றோல் யுகம் தொடங்கி விட்டதை உலகிற்கு பறைசாட்டியது. அதைத் தொடர்ந்து உலகம் முழுவதற்கும் பெற்றோலிய பொருட்களை விற்பனை செய்யும் ஒரே நாடாக அமெரிக்கா கால் நூற்றாண்டுக்கு மேலாகத் திகழ்ந்தது. இதனால் அமெரிக்கா மேலும் செல்வ வள நாடாக மாறியது. முதலாம் உலக மாகாயுத்தத்தின் போது நேச நாடுகளின் பெற்றோலிய தேவையின் 90 சத வீதம் அமெரிக்காவிடமிருந்தே பெறப்பட்டது.

அமெரிக்காவின் பெற்றோலிய ஏகபோகம் மத்திய கி;ழக்கில் இருந்த பிரித்தானியாவின் செல்வாக்கு பிரதேசங்களில் பெற்றோலியம் கண்டு பிடிக்கப்பட்ட பின்னரே இல்லாமற் போனது.(Masjid Suleiman – 1) என்ற முதலாவது எண்ணைக்கிணறு மத்திய கிழக்கில் – ஈரானில் – தனது பெற்றோலிய விற்பனையை 1908 மே மாதம் 26ந் திகதி தொடங்கியது. அதன் பின்னர் ஈரானின் எண்ணெய் உற்பத்தி நீண்டகாலம் பிரித்தானியரது கட்டுப்பாட்டிலிருந்தது. பெற்றோலிய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் ஈரானுக்கு உரிமையிருக்கவில்லை. விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு டொன்னுக்கும் மிகவும் சிறிய அளவு தொகை ஈராக்கிற்கு வழங்கப்பட்டது.

இதனையடுத்து மத்திய கிழக்கில் பல பகுதிகளில் குறிப்பாக சவுதியில் எண்ணை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 1932ல் பரசீகக் குடாவிலுள்ள பாஹ்ரேனில் முதலாவது எண்ணைக்கிணறு தனது உற்பத்தியைத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மத்திய கிழக்கின் முக்கியத்துவம் பெரிதும் அதிகரித்தது.

எண்ணெய் வளத்தையும் சுயெஸ் கால்வாயையும் கொண்ட மத்திய கிழக்கு முழுவதும் முஸ்லிம் நாடுகளால் நிரம்பியிருக்கும் போது அங்கு தமக்கு நம்பிக்கையான காவலரணாகவும் நம்பிக்கைக்குரிய பலத்தளமாகவும் செயற்படக் கூடிய ஒரு மாற்றினம் – யூதர்கள்- அங்கு இருந்தமை ஏகாதிபத்திய நாடுகளுக்கு நிம்மதியைத் தந்தது. இராணுவ முகாமை அமைத்து அதனைப் பாதுகாப்பதை விட அதற்கு செலவளிப்பதை விட சுற்றிவர எதிரிகளை உருவாக்கி அவர்கள் மத்தியில் தம்மைப் பாதுகாதுகாத்துக் கொள்வதற்காக தீரத்துடன் போராடத்தயாராயுள்ள ஒரு மாற்றினம் தனக்கென ஒரு தனிநாட்டை அமைத்துக் கொள்ள முயலும் போது அதனை ஆதரித்து பராமரிப்பது லாபகரமானது செயற்பூர்வமானது என்பதை பிரித்தானியா உணர்ந்திருந்தது. ஆகவே இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்க அரசியல் சியோனிஸ்டுகள் மேற்கொண்ட முயற்சியை அது ஆதரித்தது – அதற்கான உதவிகளை மறைமுகமாகச் செய்தது.

எண்ணைய் வளமிக்க பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகள் – முதலாம் உலக மகாயுத்தம் முதல் இரண்டாம் உலக மகாயுத்தம் முடியும் வரை – பிரித்தானியர்வசம் இருந்ததால் அதனால் அராபியர்களின் ஆத்திரத்தை தூண்டும் விதத்தில் பலவிடயங்களை வெளிப்படையாகச் செய்ய முடியவில்லை. இத்தகைய பல காரியங்களை பிரான்ஸ் செய்தது அல்லது பிரான்சைக் கொண்டு செய்வித்தது. பிரான்ஸ்தான் இஸ்ரேல் உருவான பின்னர் அதற்கான ஆயுதங்களை வழங்கிய பிரதான நாடாக அப்போது திகழ்ந்தது.

1967 யுத்தத்தில் இஸ்ரேல் அடைந்த பெரும் வெற்றியை அடுத்தே அமெரிக்கா முழுமையாக இஸ்ரேலை ஆதரிக்கத் தொடங்கியது. இன்று இஸ்ரேல் என்பது அமெரிக்காவின் மற்றொரு விதமான நவீன இராணுவ முகாமாகும். இன்று உலகிலேயே மிக நவீனமான தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்கும் – அமெரிக்காவுக்கு அடுத்தபடியான – பலம்பெருந்திய இராணுவத்தை இஸ்ரேல் கொண்டிருக்கிறது. இஸ்ரேலை பராமறிப்பதற்காக அமெரிக்கா நாளொன்றுக்கு 9 மில்லியன் டெலர்களை செலவழித்து வருகிறது. இதனை விட இராணுவ தளபாடங்களையும் பொருளாதார நிபுணத்துவ தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கிவருகிறது.

“வெட்கப்படவேண்டிய தீவு: தியுகோ கார்சியவின் அமெரிக்க இராணுவ முகாமின் இரகசிய வரலாறு”[island of Shame: The Secret History of the U.S. Military Base on Diego Garcia (Princeton University Press, என்ற பிரசித்தி பெற்ற நூலை எழுதிய வசிங்டனிலுள்ள அமெரிக்க பல்கலைகழகத்தைச் சேர்ந்த துணைப்பேராசிரியரான டேவிட் வைன்David Vine என்பவரின கூற்றுப்படி ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியே குறைந்தது 1000 இராணுவ முகாம்களை அது கொண்டுள்ளது. இவற்றைப் பராமறிப்பதற்கு 1.8 டிரிலியன் முதல் 2.1 டிரிலியன் வரை வருடாந்தம் செலவழிக்கிறது. இதனோடு ஒப்பிடுகையில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு வருடமொன்றுக்கு வழங்கும் 3.25 பில்லியன் மிகச்சிறிய வீதமே. எனினும் அதன் செயற்திறனும் அதனால் கிடைத்து வரும் அரசியல் பொருளாதார இலாபமும் மிக மிக அதிகம்.

மற்றொரு புறத்தில் இஸ்ரேலையும் மறுபுறத்தில் அராபிய நாடு அல்லாத ஈரானையும் பூச்சாண்டிகளாக வைத்துக் கொண்டு அமெரிக்கா பெருமளவு ஆயுதங்களை மததிய கிழக்கிலுள்ள அராபு நாடுகளுக்கு விற்று பெருந்தொகைப் பணத்தை சம்பாதித்து வருகிறது. இதனால் இன்று உலகின் மிகவும் இராணுவ மயமாக்கப்பட்ட பகுதியாக மத்திய கிழக்கு திகழ்கிறது. 2011 ஆண்டு சிஆர்எஸ் வெளியிட்ட அறிக்கையின் படி மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆயுத விற்பனையின் மூலம் 66 பில்லியன டொலர்களை அது சம்பாதித்துள்ளது. இதில் பாதி சவுதிக்கே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இத்தொகையோடு ஒப்பிடுகையில் இஸ்ரேலுக்கு அது வழங்கும் நன்கொடை சுமார் 5 சதவீதமே.

அமெரிக்காவில் வாழும் கிறிஸ்தவர்களில் ஒருசாரர் யூதபடுகொலை இன்று முஸலீம்களால் மேற்கொள்ளப்படுவதாக நினைத்து சியோனிச பிரச்சாரத்தை நம்பி நிதி உதவி செய்கிறார்கள். ஆனால் கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் இஸ்ரேலை ஆதரித்து பணத்தை அள்ளிக் கொடுப்பதற்கான காரணம் வேடிக்கையானது. அவர்கள் பைபிளில் கூறப்படும் யேசுநாதரின் இரண்டாவது வருகை தனியான யூத அரசு ஒன்று உருவான பின்னரே நிகழும் என்று நம்புகிறார்கள். அவ்வாறான ஒரு யூத தனிநாடு அமைந்து முஸ்லீகளுக்கும் யூதர்களுக்கமிடையில் யுத்தம் மூண்டு அதில் ஒருபகுதி யூதர்கள் கொல்லப்பட்ட பின்னர் எஞ்சிகின்ற யூதர்கள் கிறிஸ்தவர்களாக மாறிவிடுவர் அதன் பின்னரே யேசுவின் இரண்டாவது வருகை நடைபெறும் என்று நினைக்கிறார்கள்.

இந்த நம்பிக்கையை அமெரிக்க ஏகாதிபத்தியம் நன்கு பயன்படுத்திக் கொண்டு இஸ்ரேலுக்கு உதவுகிறது. எனவே இஸ்ரேலின் அட்டூழியங்களுக்கு பெரிய எதிர்ப்பு அமெரிக்காவில் உருவாகவில்லை.

00000000000000000000000000
 
http://eathuvarai.net/?p=4092

Edited by கிருபன்

நன்றி கிருபன்.
மிக முக்கியமான ;கட்டுரை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனம் அழிந்து கொண்டு போவது பற்றியோ அல்லது அவர்களது நிலம் பறிக்கப்படுவது பற்றியோ இந்த உலகம் அக்கறை காட்டாது என்பதற்கு மேலே கூறப்பட்ட உதாரணங்கள் பொருந்தும்.பயங்கரவாதிகள் என பட்டம் கொடுக்க மட்டும்  நீ முந்தி நான் முந்தி என முண்டியடித்துக்கொண்டு வந்து விடும் உலகில் வாழ்கிறோம்.

நான் தேடிக்கொண்டிருந்த சில தகவல்களை இக்கட்டுரையில் பெறக்கூடியதாக இருந்தது. பல காத்திரமான தகவல்களை உள்ளடக்கி எழுதப்பட்டிருக்கின்றது.

இணைப்புக்கு மிக்க நன்றி கிருபன்...! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.