Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழிக்கப்பட வேண்டிய கோர முகம்! - சோழ.கரிகாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

cholan%204.jpg

1941 ஆண்டு யூன் 22ம் திகதி ஜேர்மனியின் நாசி இராணுவம் ரஷ்யாவிற்குள் ஊடுருவியது. இராணும், SS எனப்படும் சிறப்புப் பாதுகாப்பு மற்றும் உளவுப்படையினர், காவற்துறையினர் என அனைத்து ரக ஜேர்மனியின் நாசிப்படைகளும் கிழக்கு நோக்கி பாரிய படுகொலைகளைச் செய்தபடி முன்னேறிக் கொண்டிருந்தது.

 

இது 1941 ஓகஸ்ட் மாதத்தில் பிரித்தானியாவின் போர்க்காலப் பிரதமரான வின்ஸ்டன் சேர்ச்சிலை ‘நாம் ஒரு பெயரிடப்படாத குற்றம் (Crime without a name) நடக்கும் காலத்திற்குள் நிற்கின்றோம்’ எனக் கூறவைத்தது. இதுவே 1941 இல் அமெரிக்கா தனது நேசநாடுகளுடன் இணைந்து ஜேர்மனியின் நாசிப் படைகளுக்கு எதிராக இரண்டாம் உலக யுத்தத்தை ஆரம்பித்தது.

 

இதே காலப்பகுதியில் போலந்தில் இருந்து 1941ம் ஆண்டு அமெரிக்காவில் அகதியாகத் தஞ்சம் புகுந்த வழக்கறிஞர் ரபெய்ல் லெம்கின், வின்ஸ்டன் சேர்ச்சிலின் உரையில் ‘ஒரு பெயரிடப்படாத குற்றம்’ என்ற சொற்பதத்திற்குப் பதிலளிப்பதாகவே ‘இனப்படுகொலை’ என்ற சொல்லை உருவாக்கினார். ரபெய்ல் லெம்கினின் இனப்படுகொலை என்ற சொல் உருவாக்கத்தினைப் பற்றி சென்ற அத்தியாயத்திலேயே பார்த்திருந்தோம்.

 

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஜேர்மனி தோற்கடிக்கப்பட்டதன் பின்னரே முதன்முறையாகப் போருக்குப் பின்னரான போர்க் குற்றவாளிகளிற்குத் தண்டனை வழங்கும் பொறிமுறை உருவாக்கப்பட்டது. 1945 நவம்பர் 20ம் திகதிக்கும் 1946 ஒக்டோபர் 1ம் திகதிக்கும் இடையில் உலகப் புகழ்பெற்ற நு£ரன்பேர்க் சர்வதேச இராணுவ நீதிமன்றத்தின் போர்க்குற்ற விசாரணை (Nuremberg Trials) நடாத்தப்பட்டது.

cholan%201.jpg

22 மிக முக்கிய நாசி இராணுவ மற்றும் முக்கிய அதிகாரிகளிற்கு சமாதானத்திற்கு எதிரான செயற்பாடுகள், போர்க்குற்றம், மனிதத்திற்கெதிரான குற்றம் மற்றும் சதிச் செயல்கள் என்பவற்றிற்காகத் தண்டனை வழங்கப்பட்டது. இதுவே முதன் முறையாக அரசியல் தலைவர்களையும் இராணுவத் தலைமைகளையும் போர்க்குற்றத்திற்காகச் சட்டத்திற்கு முன் நிறுத்திய விசாரணையாகும்.

cholan%202.jpg

இன்றைய ஹேக் சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளிற்கும் உலகின் ஏனைய போர்க்குற்ற விசாரணைகளிற்கும் இதுவே தாய் விசாரணையாகும். இங்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கூறப்பட்ட குற்றப் பத்திரிகையில் ‘இனப்படுகொலை’ என்ற சொல்லை வெறும் விவரணத்திற்காகப் பாவித்திருந்தார்களே தவிர அந்தச் சொல்லிற்கு அப்பொழுது எந்தவிதமான சட்டபூர்வமான அந்தஸ்தும் இருந்திருக்கவில்லை. ஆனால் இது இன்று சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் மிகவும் பலம் வாய்ந்த சொல்லாக இருக்கின்றது.

 

நாசித் தலைமைகள் பல்வேறு இனமக்கள் மீது குறிவைத்துத் தாக்கி அவர்களை கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்தனர். முக்கியமாக ஐரோப்பாவில் வாழ்ந்த யூத இன மக்கள் மீது பாரிய இனப்படுகொலையினை மேற்கொண்டனர். இது இனப்படுகொலை என்பதைவிட இனச்சுத்திகரிப்பு (Ethnic Cleansing) என்றே சொல்லப்பட்டது. இனச் சுத்திகரிப்பானது ஒரு குறிப்பிட்ட இனத்தையோ அல்லது குறிப்பிட்ட மதம் சார்ந்த மக்களையோ நாடுகடத்தல், வலுக்கட்டாயமாக இடம்பெயர வைத்தல், பாரிய படுகொலைகள், கொலை அச்சுறுத்தல்கள் போன்றவற்றை மேற்கொண்டு குறிவைக்கப்பட்ட ஒரு பிராந்தியத்தில் ஒரே இனமாக வாழவிடாது பிரித்து ஒரு தேசிய இனமாக உருவாக விடாமல் படுகொலைகளை அரங்கேற்றும் கொள்கை உடையதாகும். அந்தத் தேசிய இனத்தின் தேசியத்துவம், மதம், கலாச்சாரம் வரலாறு என்பவற்றையும் அழிப்பதாகும். இனச் சுத்திகரிப்பானது ஒரு குறிப்பிட்ட தேசிய இனத்தின் பௌதிக மற்றும் கலாச்சார அடையாளங்களை அகற்ற முயல்வதோடு அந்தக் குறிப்பிட்ட தேசிய இனம் வாழும் பிராந்தியத்தில் வீடுகளை அழித்தல், சமூக வளங்களை அழித்தல், பண்ணைகள், கட்டடங்கள் என்பவற்றை அழித்தல், நினைவுச் சின்னங்களை அழித்தல், வழிபாட்டு இடங்களை அழித்தல், சமாதிகளையும் மயானங்களையும் அழித்தல் என்பனவற்றையும் மேற்கொள்ளும்.

 

இனச்சுத்திகரிப்பின் போது நிகழும் குற்றங்கள் இனப்படுகொலையின் போது நடக்கும் குற்றங்களிற்கு ஈடாகவே இருக்கும். ஆனால் இனப்படுகொலை என்பது ஒரு குறிப்பிட்ட இனத்தினை முற்றுமுழுதாக தனது இலக்கில் அழித்து முடித்தலாகும். ஆனால் இனச் சுத்திகரிப்பில் குறிப்பிட்ட இனத்தின் மீது பாரிய தாக்குதலைத் தொடுத்து கூட்டுப் படுகொலைகளைச் செய்து இலக்கு வைக்கப்பட்ட பிராந்தியத்திலிருந்து அவர்களை வெளியேற்றும் இலக்கினைக் கொண்டது. ஆனால் இந்த இனச் சுத்திகரிப்பின் அடையாளங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டும் ஒரு இனத்தை தன் பூர்வீக இடத்திலிருந்து விரட்டியடித்து அதன் தேசியப் பாரம்பரியங்களை அழித்த பின்னரும் அந்த இனத்தின் மீது தொடர்ந்த படுகொலைகளை மேற்கொண்டும் அதன் ஒட்டு மொத்த வாழ்விடங்களையும் சூறையாடி இனத்தின் இருப்பை இல்லாதொழிப்பதும்  இனப்படுகொலையாகும்.

 

நாம் எமது சர்வதேசப் போராட்டங்களில் சொற்களைப் பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாகக் கையாள வேண்டும். எமது இனத்தின் மீது இனச் சுத்திகரிப்பு ஆரம்பமாகி அது அதன் கொடிய இரத்தவெறிப் பரிணாமமாகிய இனப்படுகொலையின் நிலையை என்றோ எட்டிவிட்டது. இலக்கண ரீதியில் இனச்சுத்திகரிப்பிற்கும் இனப்படுகொலைக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விளக்கத்தைக் கல்வியாளர்கள் வழங்க முற்பட்டாலும் சர்வதேசக் குற்றவியல் நீதி மன்றங்களில் இவை இரண்டும் மிகவும் வேறு பட்டவையாகவே பார்க்கப்படுகின்றது.

 

‘இனப்படுகொலைக் கண்காணிப்பகம்’ (Genocide watch) என்ற அமைப்பின் நிறுவனர் கிறெகொரி ஸ்டான்டன் இந்த இனச்சுத்திகரிப்பு என்ற பதத்தை உபயோகிப்பதைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இனச்சுத்திகரிப்பு என்ற பதம் இன்று எந்த விதமான சட்ட விவரணத்தையும் கொண்டிருக்கவில்லை. சரியான ‘இனப்படுகொலை’ சொல்லை உபயோகிக்காமல் இனச்சுத்திகரிப்பு என்ற சொல்லைப் பாவிப்பதன் மூலம் பாரிய இனப்படுகொலைகள் செய்தவர்கள் கூடத் தண்டனையிலிருந்து இலகுவாகத் தப்பி விடுகின்றனர் எனக் கூறி உள்ளார். தாம் தான் தமிழர் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டும் அரசாங்கம் என்று கூறிக்கொண்டும் திரிபவர்கள் இனப்படுகொலை என்ற சொல்லை மறந்தும் உபயோகிக்க மறுக்கின்றனர். இந்தச் சொல் சிறீலங்கா அரசாங்கத்தைக் காயப்படுத்திவிடும் என்று நோகாமலே நோன்பு கும்பிட ஆசைப்படுகின்றார்கள். ஆனால் எமது போராட்டமானது இனப்படுகொலைக்கான நீதி கோரலாகவே இருக்கவேண்டும். சர்வதேச அரங்கில் தமிழினத்தின் மீதான சிறீலங்கா இனவெறி அரசின் இனப்டுகொலையைப் பறைசாற்ற வேண்டும்.

 

நாம் எம்மீதான இனப்படுகொலையின் ஒவ்வொரு தடயங்களையும் காயங்களையும் சிறீலங்கா இனவெறி அரசின் கோர முகத்தைச் சர்வதேசத்தின் முன் கிழிக்க உபயோகப்படுத்த வேண்டும். சர்வசேத நியமங்களிலும் அனைத்துப் போர் விதிகளிலும் நினைவுச் சின்னங்கள் மற்றும் கல்லறைகள், மயானங்களை அழிப்பதென்பது பாரிய போர்க்குற்றமும் இனப்படுகொலையின் ஒரு பாரது£ரமான அங்கமுமாகவே பார்க்கப்படுகின்றது. எம் இனத்தின் விடுதலைக்கனவை மட்டுமே மனதில் நிறுத்தித் தேசியத்தலைவர் காட்டிய வழியில் தமிழீழ விடுதலைக்காய் எதிரியுடன் சமர்க்களம் புகுந்து எதிரியை அழித்து எம் மண்ணிற்கு விதையாய் வீழ்ந்த எம் மாவீரர்களின் கல்லறைகள் இன்று சிங்கள இனவெறி அரசால் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன.

 

சர்வதேச விதிகளின்படி எந்த ஆக்கிரமிப்பு இராணுவங்களும் போரில் வீழ்ந்தவர்களின் கல்லறைகள், மயானங்கள், நினைவுச் சின்னங்களைத் தாக்குவது தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மிக மோசமாக சிறீலங்கா இராணுவம் தமிழர் நிலங்களில் செய்துள்ளது. இந்தப் பாரிய இனவழிப்புக் குற்றமானது உலகளாவிய ரீதியில் பதிவு செய்யப்படல் வேண்டும். இக்கல்லறைகளும் துயிலும் இல்லங்களும் ஒட்டு மொத்தமாக சர்வதேச அரங்கில் விடுதலைப் புலிகளின் கல்லறைகள் என்று ஒதுக்கி விட முடியாதவை. ஒவ்வொரு விடுதலைப் புலி வீரனும் எமது மக்களுக்குள்ளே இருந்து தான் பிறப்பெடுத்தவர்கள். அவர்கள் எங்களின் பிள்ளைகள். ஒவ்வொரு விடுதலைப் புலி மாவீரனின் பெற்றோரும் தமது பிள்ளையின் அல்லது பிள்ளைகளின் கல்லறைகள் உடைக்கப்பட்டதற்குத் தாம் வாழும் நாடுகளில் சிறீலங்கா இராணுவத்தின் மீதும் முப்படைகளின் கட்டளைத்தளபதி மகிந்த ராஜபக்ச மீதும் வழக்குத் தொடர முடியும்.

 

எமது தாய் மண்ணிலே இன்று தமது பிள்ளைகளின் கல்லறைகளைப் பூசிக்க முடியாமலும் வாய்விட்டு அழமுடியா நிலையிலுமே எம் மாவீரச் செல்வங்களின் பெற்றோர்கள் சகோதர, சகோதரிர்கள் உள்ளார்கள். ஆனாலும் புலம்பெயர்ந்த நாடுகளில் எல்லாம் ஒவ்வொரு நாட்டிலும் நு£ற்றுக்கணக்கான மாவீரர்களின் பெற்றோர்கள், சகோதரர்கள் உள்ளார்கள். இவர்கள் ஒவ்வொரு நாடுகளிலும் தமக்கான ஒரு அமைப்பை அல்லது சங்கத்தை உருவாக்கி அதன் மூலம் சர்வதேச விதிகளிற்கு அமைய அந்தந்த நாடுகளில் வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டும்.

 

இப்படி ஒவ்வொரு நாடுகளிலும் பதிவு செய்வதன் மூலம் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வை நம்மீது திரும்ப ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தமுடியும். இது விரைவாகவும் முக்கியமாகவும் செய்யப்படல் வேண்டும். இன்று தமிழ் மக்களிற்காக அரசியல் செய்பவர்கள் சிங்கள இனவெறி அரசின் பாரிய மனிதத்திற்கெதிரான குற்றங்களை மறைப்பதற்கும் சர்வதேசக் குற்றங்களிலிருந்து தப்பிக்க வைப்பதற்குமான ஒரு உள்நோக்கோடு மாவீரர் துயிலும் இல்லங்களை அரசாங்கப் பணத்திலேயே புனரமைப்பதாகவும் கூறி மாவீரர்கள் கல்லறைகள் மீதும் அரசியல் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். ஆனாலும் எமது மாவீரர்களின் விதைகுழிகளின் மீதான தகர்க்கப்பட்ட ஒவ்வொரு அங்குலக் கற்களிற்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தை சிறீலங்கா இனவெறி அரசிற்கும் ராஜபக்சவிற்கும் நாம் ஏற்படுத்துவோம்.

 

தொடரும்...

நன்றி: ஈழமுரசு

 

http://www.sankathi24.com/news/34082/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.