Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழன் கண்ட சித்திரக்கவி பாகம் 02

Featured Replies

தமிழன் கண்ட சித்திரக்கவி பாகம் 02

Nachi-2-170x250.jpg
 
போன தொடரில் சித்திரக் கவியின் தோற்றத்தையும் அதன் பன்னிரெண்டு வகைகளையும் , அதில் நான்கு வகைகளை அதற்கான விதிமுறைகளையும் உதாரணங்களுடன் பார்த்தோம் . இந்தத் தொடரில் மிகுதி நான்கு வகைகளையும் பார்க்கலாம் .

05 நாக பந்தம்:

a02146np.jpg

இந்தக் கவிதை இரண்டு பாம்புகள் எப்படி மேல்நோக்கி பிணிப் பிணைந்து இருக்கின்றனவோ அப்படி அமைந்திருக்கும் இதன் விதிமுறையாக , இது வெண்பா யாப்பில் அமைக்கப் பெறவேண்டும்; அறம் உரைப்பதாக அமைய வேண்டும்; ஒரு பாடலில் இடம் பெறும் ஒவ்வொரு சொல் முடிவில் உள்ள எழுத்தும், மற்றொரு பாடலில் இடம் பெறும் ஒவ்வொரு சொல் முடிவில் உள்ள எழுத்தும் ஒன்றாக இருக்கும் அமைப்பில் பாடுவது இந்த நாக பந்தக் கவிதையாகும் .
 
ஆகவே நாகபந்தம் என்பது இரண்டு வெண்பாக்களின் இணைப்பால் அமைவது என்பது பெறத்தக்கது. (நாகம் = பாம்பு ; பந்தம் = கட்டுதல்) உதாரணமாக

வெண்பா - 1

அருளின் றிருவுருவே அம்பலத்தா யும்பர்
தெருளின் மருவாரு சிர்ச்சீரே - பொருவிலா
வொன்றே யுமையா ளுடனே யுறுதிதரு
குன்றே தெருள வருள்.

பாடலின் பொருள் : அருளின் திருவுருவாகவும், அம்பலத்தில் ஆடுபவராகவும், தேவரின் துயர் தீர்ப்பவராகவும், உமையாளுடன் இருப்பவராகவும், உறுதிதரும் குன்றாக இருப்பவராகவும் சிவபெருமான் விளங்குகிறார்.

வெண்பா - 2

மருவி னவருளத்தே வாழ்சுடரே நஞ்சு
பெருகொளியான் றேயபெருஞ்சோதி - திருவிலா
வானஞ் சுருங்க மிகுசுடரே சித்த
மயரு மளவை யொழி.

பாடலின் பொருள் :

சுடராகவும், நஞ்சை உண்டவரே! என் சித்தம் அயரும் நிலையை ஒழிக்க
இந்த இரண்டு வெண்பாக்களும் இணைந்து, நாகபந்தமாக அமைந்த முறையைக் இங்கே பார்ப்போம்

a02146na.jpg

சித்திரக் கவி, அட்ட நாக பந்தம், தமிழழகன் பாடலும் படமும், பாடல் "பாரதிக் கெல்லை பாருக்குள்ளே இல்லை" கருத்து - கலைக்கு எல்லை கற்பனையே

1057px-Eight_joined_cobra_poem_in_Tamil.

06 வினாவுத்தரம் :
 
கவிதையில் , சில வினாக்களைக் கேட்டு, அவ்வினாக்கலின் வாயிலாலே பதிலைப் பெற்று, அந்தப் பதில்களின் ஒட்டு மொத்தச் சேர்க்கையினால் ஒரு சொல்லைப் பெறுவது இந்த வினவுதரம் சித்திரக் கவியின் விதி முறையாகும் உதாரனதிர்காகப் பின்வரும் உரைநடைப் பகுதியைக் நாங்கள் பார்ப்போம்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்

a02146nl.jpg

(1) செல்வம் என்பதற்கு உரிய
ஈரெழுத்துச் சொல் யாது? திரு

a02146gc.jpg

(2) சாப்பிடப் பயனாகும் ; உமி
தரும் பொருள் யாது? நெல்

a02146pd.jpg

(3) தோட்டங்களைக் காப்பதற்காக
இடப்படுவது எது? வேலி

a02146fn.jpg

(4) சிவபெருமான் இருக்கும் ஊர்
எது? திரு+நெல்+வேலி

அதுவே திருநெல்வேலி என்னும் ஊராகும்.

இதைப் போலவே இன்னும் ஒன்றை நாங்கள் பார்க்கலாம் ,

பூமகள்யார்? போவானை ஏவுவான் ஏதுஉரைக்கும்?
நாமம் பொருசரத்திற்கு ஏதென்பார்? - தாம்அழகின்
பேரென்? பிறைசூடும் பெம்மான் உவந்துறையும்
சேர்வென்? திருவேகம் பம்

(1) பூமகள் (இலட்சுமி) யார்? திரு

(2) போகிறவனைப் ‘போ’
எனச் சொல்லி ஏவுகிற
ஒருவன் கூறும்சொல்
எது? ஏகு

(3) பொரு சரம் எது?
(போரில் பொருகிற போது
உயிர் வாங்கச் செல்லும்
கருவி எது?) அம்பு அம்பு

(4) அழகிற்கு மறுபெயர்
என்ன? அம்

(5) சிவபெருமான் விரும்பி
இருக்கும் இடம் எது? திரு+ஏகு+அம்பு
+அம்

இதுவே திருவேகம்பம் என்னும் ஊராகும்.

 07 காதை கரப்பு :

a02146lm.jpg

இந்தவகை சித்திரக் கவியில் தொடக்கமாக அமையும் முதல் எழுத்தை விட்டு விட வேண்டும். அடுத்த எழுத்து அதாவது இரண்டாம் எழுத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் 3ஆம் எழுத்தை விட்டுவிட வேண்டும். 4ஆம் எழுத்தை எடுக்க, இவ்வாறாக ஓர் எழுத்து விட்டு ஓர் எழுத்து என்ற அமைப்பில் சேர்க்க, சேர்க்கப் பெற்ற எழுத்து கடைசிச் சொல்லிற்கு முன் உள்ள எழுத்துத் தொடங்கி, முதலடி வரை தலைகீழாகப் படித்தால் ஒரு புதுப்பாடலாக அமைவது இவ்வகைச் சித்திரகவியாகும். (காதை = சொல், கவிதை; காப்பு = மறைவு)

உதாரணமாக ,

தாயே யாநோவவா வீரு வெமது நீ
பின் னைவெருவா வருவ தொரத்த
வெம்பு கல் வேறிருத்தி வைத்தி சினிச் சைர்
தாவாருங்நீயே

பாடல் பொருள்:

தாயானவனே, எம் வருத்தத்திற்குக் காரணமான ஆசையை நீக்கு. எமக்காக இரங்கி வரும் நீ, பின்னர் அச்சத்தை உண்டாக்குவது ஏன்? எம் அச்சம் நீக்கி வேறு இடம் தருக. எங்கள் ஆசைகளை நீக்கு, அரும்பொருளாக விளங்கும் பரம்பொருளே!

மேலே கோடிட்டுக் காட்டப் பெற்ற எழுத்துகள் தலைகீழாகக் கூடிப் பின்வரும் செய்யுளைத் தருகின்றன.

கருவார் கச்சித் திருவே கம்பத்
தொருவா வென்னீ மருவா நோயே

பாடல் பொருள்:

கச்சி, திருவேகம்பத்தில் உறைபவனை எண்ணினால் கருவாகும் பிறவி நோய் வாராது.

இந்த அமைப்பை காதை கரப்பு என்ற சித்திரகவிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக நாங்கள் பார்க்கலாம் .

08 கரந்துறைப்பாட்டு :

a02146ap.jpg

கரந்துறைப்பாட்டு என்ற சித்திரக் கவியானது பின் வரும் விதி முறையில் அமைந்திருக்கும் . அதாவது ஒரு செய்யுளில் உள்ள எழுத்துகளில் இருந்து சில எழுத்துகளைத் தேர்ந்து கொண்டு, மற்றொரு செய்யுளை அமைத்துக் கொள்வதாகும் (கரந்து = மறைந்து; உறை = இருத்தல்; பாட்டு = செய்யுள்) உதாரணமாக ,

அகலல்குற் றேரே யத முதம்

கர்தற் ரிதிடையும் பார்க்கின் - முகமதிய

முத்தென்ன லாமுறுவன் மாதர் முழுநீ

மைத்தடங்கண் வெவ்வேறு வாள்

பாடலின் பொருள்:

இப்பெண்ணின் அல்குல் தேர்ச் சக்கரம் போன்றது. வாய் இதழ் அமுதம் போன்றது. இடையின் அளவினைச் சொல்லால் கூற இயலாது. முகம் சந்திரனைப் போன்றது. பற்கள் முத்துக்கள் போன்றவை. மை தடவிய

கண்கள் நீலோற்பப் பூப் போன்றவை. அவை வாள் போன்று கூர்மையும் உடையவை.
மேல் பாட்டிலிருந்து,

அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு 

என்ற குறளைத் தேர்ந்து கொள்ள இயலும்.

இதேபோன்று பாடலுக்குள் பாடல் ஒன்று மறைந்திருப்பது கரந்துறைப் பாட்டு என்ற சித்திரகவியாகும்.

09 சக்கர பந்தம்:
xwnx.jpg

ஒரு சக்கரம் போன்ற  அமைப்பிலே , ஏதாவது  ஒரு சுழற்சி முறையில்  பாடலைஅமைப்பதை சக்கர பந்தம் என்ற சித்திரகவியாகச் சொல்லாம் .

இந்த சக்கர பந்தம் சித்திரக் கவியானது நான்காரைச் சக்கரம் (நான்கு + ஆரம் + சக்கரம்), ஆறாரைச் சக்கரம், எட்டாரைச்சக்கரம் என மூன்று வகைப் படுத்தப் படுகின்றது . இதிலே நாங்கள் நான்காரைச் சக்கரத்திற்கு மட்டும் ஓர் உதாரணத்தைப் பார்ப்போம் .

மேரு சாபமு மேவுமே
மேவு மேயுண வாலமே
மேல வாமவ னாயமே
மேய னானடி சாருமே

i0ip.jpg

10 சுழிகுளம்:
 
சுழிகுளம் என்ற சித்திரகவியானது  செய்யுளின் எழுத்தை  எண்ணிச் செய்யப் படுவதாகும் . இந்த சித்திரக் கவியின் விதியாக , இதில் இடம் பெறும் செய்யுள் 4 அடி கொண்டிருக்க வேண்டும். ஒவ்வோர் அடியும் எட்டு எழுத்துகளையே  கொண்டிருக்க     வேண்டும். இந்த எட்டு எழுத்துக்களும்   மேலும் கீழுமாகவும் , உள்ளும் புறமுமாக ஒத்தமைய வேண்டும். இதற்கு உதாரணமாக இந்தப் பாடலைப் பார்ப்போம்

கவிமுதி யார் பாவே
விலையரு மாநற்பா
முயல்வ துறுநர்
திருவழிந்து மாயா

பாடல் பொருள் :

வயது முதிர்ந்த கவிஞர்களால் பாடப்படும் பாடல்கள் விலைமதிப்பிட முடியாத அளவிற்குப் பெருமையுடையனவாகும்.அப்பாடலைப் பெற விடாது முயற்சி செய்ய வேண்டும். அப்படி முயற்சி செய்து ஒருவர் பெற்ற பாடல் அழியாத செல்வமாகும்

சித்திரமாகும் முறை :

4hmd.jpg
 
என்ற அமைப்பில் மேற்பாடல் நேராக வரிவடிவிலும், சுழியாகச் சித்திர வடிவிலும் அமைந்துள்து .

11 சருப்பதோ பத்திரம்:

சருப்பதோ பத்திரம் என்ற சித்திரக் கவியானது பின்வரும் விதிமுறையில் அமைந்திருக்கும் , பாடலுக்கு நான்கு வரிகள் ; வரிக்கு 8 எழுத்துகள் என்ற அமைப்பில் , கீழ் மேல், மேல் கீழ், முன் பின், பின் முன் எப்படிப் படித்தாலும் அதே செய்யுள் வருமாறு அமைக்க வேண்டும்.
 
9cyw.jpg
 
உதாரணமாக ,இதில் நாங்கள் எப்படி வாசித்தாலும் இந்தப் பாடலின்  அடி மாறாது அமையும் சிறப்பு இந்தக் கவிதையில் உண்டு.

12 அக்கரச் சுதகம் :

ஒரு செய்யுளில் பல பொருள்கள் கூறப் படுவதாக எடுத்துகொள்வோம் . அதனைப் பெறப் படிப்படியாக ஒரு சொல்லில் உள்ள எழுத்துகளைக் குறைத்துப் பொருள்களைப் பெறுவது

இந்த வகையான சித்திர கவியாகும். (அக்கரம் = அட்சரம் ; சுதகம் = நீக்கம்)

உதாராணமாக :(1) இலைகளுள் சிறந்தது = தலைவாழை

(2) தலைவரை விளிப்பது = தலைவா

(3) உறுப்பினுள் சிறந்தது = தலை

இதுவரை சித்திரகவியும் அது சொல்லும் விதிமுறைகளையும் பார்த்தோம் . இன்றையகால கட்டத்தில் இந்த சித்திரக் கவி பாடப் படுகின்றதா என்ற ஒரு கேள்வி எழுகின்றது . என்னைப் பொறுத்த வரையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இதற்கான முயற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன . உதாரணமாக கருத்துகளத்தில் ஆதித்த இளம்பிறையன் பதிந்த வேரில்லா வாழ்வே !!என்ற சக்கர பந்தம் என்ற வகையில் அமைந்த சிதிரகவியும், 

வேரில்லா வாழ்வே !!
 
mine.png

இன்னும் ஓரிரு இளையதலைமுறைகளின் சிந்திரக் கவியும் சிறிது ஆறுதல் தருவதாக இருக்கின்றன .உதாரணமாக ராம் கிஷோர் என்ற கவிஞரின் வேண்டாம் வேண்டும் , காட்சிப் பிழை என்ற சித்திரக் கவிதைகள் ,பிரமிக்க வைக்கின்றன இந்த தமிழர்களின் மதிநுட்பத்தைச் பறைசாற்றும் இந்த சித்திரக் கவி வடிவங்கள் எதிர்காலங்களில் மேலும் முன்னெடுக்கப்படவேண்டும்  .

வேண்டாம் வேண்டும்

Vendaam+vendum.jpgபாடலில் உள்ள மொத்த எழுத்துக்கள்    : 216
வடிவத்தில் உள்ள மொத்த எழுத்துக்கள் : 143

காட்சிப் பிழை

111-3.JPGஉச்சந்துனைகள் :

01 சித்திரக்கவிகள் விக்கி பீடியா
02 இளவேனிற் கனாக்கள் இணையம் ராம் கிஷோர்
03 சித்திரக்கவிகள் மெய்ஞானப் பல்கலைக்கழகம்
04 யாழ்  இணையம்

கோமகன்

11/10/2013

Edited by கோமகன்

சித்திரக்கவி பற்றி எழுதிய பண்டைய நூற்கள் எல்லாம் அழிந்து விட்டன. பரிதிமாற் கலைஞர் தொகுத்து அளித்த சித்திரக் கவி விளக்கம் என்ற நூலும் முழுவதுமாக கிடைக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளவற்றை மட்டுமே இன்று நாம் காண்கிறோம். அவற்றை எல்லாம் மெனக்கட்டு தேடி தொகுத்து இணைக்கும் கோவுக்கு நன்றிகள் பல. 

பரிதிமாற் கலைஞர் தொகுத்து அளித்த சித்திரக் கவி விளக்கம் இரண்டாம் தொகுதி தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும் 

http://www.thamizhagam.net/nationalized%20books/Parithimar%20Kalainjar/CHITRA%20KAVI%20VILAKKAM.pdf

அறிய விடயங்கள்...பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள்... :)

திருப்புகழில், திருவெழுகூற்றிருக்கை என்ற பாடல் தேர்த் தட்டு போல் அமைந்துள்ளது...இதுவும், சித்திரக்கவியா?...

......... பாடல் .........

ஓருரு வாகிய தாரகப் பிரமத்
     தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி
          ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை

இருபிறப் பாளரி னொருவ னாயினை
     ஓராச் செய்கையி னிருமையின் முன்னாள்

நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து
     மூவரும் போந்து இருதாள் வேண்ட
          ஒருசிறை விடுத்தனை

ஒருநொடி யதனில் இருசிறை மயிலின்
     முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை

நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி
     ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை

ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய
     மும்மதன் தனக்கு மூத்தோ னாகி
          நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்
               அறுகு சூடிக் கிளையோ னாயினை

ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து
     முக்கட் சுடரினை இருவினை மருந்துக்
          கொருகுரு வாயினை

ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி
     முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்
          ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென
               எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை

அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன்
     நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்
          டன்றி லங்கிரி யிருபிள வாக ஒருவேல் விடுத்தனை

காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த
     ஆறெழுத் தந்தணர் அடியிணை போற்ற
          ஏரகத் திறைவ னென இருந்தனையே.

[குறிப்பு:

1 முதல் 7 வரை படிப்படியாக கீழிருந்து மேல் பின்பு மேலிருந்து கீழ் என்று தேர் தட்டு மேலே செல்வதும், கீழே செல்வதுமாக அமைந்த அற்புதமான பாட்டு.

                                            1
                                         1 2 1
                                      1 2 3 2 1
                                   1 2 3 4 3 2 1
                                1 2 3 4 5 4 3 2 1
                             1 2 3 4 5 6 5 4 3 2 1
                          1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1

இடையில் தேர் தட்டு . . . . . . . . . . . . . . . . . . .

                          1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1
                             1 2 3 4 5 6 5 4 3 2 1
                                1 2 3 4 5 4 3 2 1
                                   1 2 3 4 3 2 1
                                      1 2 3 2 1
                                         1 2 1
                                            1

சில தமிழ்ச் சொற்கள் இரு பொருள் படும்படி அமைக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக, மூவாதாயினை என்ற சொல்லுக்கு இரு பொருள் .. (மூவா = மூன்று மற்றும் மூவா = வயதாகாமல் இளமையாக)].

......... சொல் விளக்கம் .........

ஓருருவாகிய தாரகப் பிரமத்து ... ஒரு (1) பொருளாகிய பிரணவமாம் முழுமுதலின்

ஒருவகைத் தோற்றத்து ... (சிவனின் ஐந்து முகங்களோடு அதோமுகமும் சேர்ந்த) ஒரு (1) வகையான தோற்றத்தில்,

இருமரபெய்தி ... சக்தி சிவம் என்னும் இரண்டின் (2) லக்ஷணங்களும் அமைந்து,

ஒன்றாய் ஒன்றி ... அதுவே ஓர் (1) உருவாகச் சேர்ந்து,

இருவரிற் தோன்றி ... சக்தி சிவம் என்ற இருவரிடமும் (2) தோன்றி,

மூவாதாயினை ... மூப்பே (3) இல்லாது என்றும் இளமையோடு விளங்குகிறாய்.

இருபிறப்பாளரின் ... (உபநயனத்துக்கு முன்னும் பின்னும்) இரு (2) பிறப்புக்களை உள்ள அந்தணர் குலத்தில்

ஒருவன் ஆயினை ... ஒப்பற்ற ஒருவனாக (1) விளங்கிய திருஞானசம்பந்தராய் அவதரித்தாய்.

ஓராச் செய்கையின் ... (ஓரா - இரு பொருள் - ஒன்று -1- மற்றும் தெரியாமல்) பிரணவத்தின் பொருள் தெரியாமல் விழித்த காரணமாக,

இருமையின் (2) முன்னாள் (3) ... (இருமை - இரு பொருள் - இரண்டு -2- மற்றும் கர்வம்) கர்வத்துடன் பிரம்மா முன்னாளில் (முன்னாள் = இரு பொருள் - மூன்று -3- மற்றும் முன்பொரு நாள்)

நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து ... நான்கு (4) முகங்களுடைய பிரமனின் குடுமியை கணநேரத்தில் (கைகளால் குட்டிக்) கலைத்து,

மூவரும் போந்து இருதாள் வேண்ட ... அரி, அரன், இந்திரன் ஆகிய மூவரும் (3) உன்னை அடைந்து உன்னிரு (2) பாதங்களில் பணிந்து முறையிட்டு வேண்ட,

ஒருசிறை விடுத்தனை ... பிரமனை நீ அடைத்த ஒரு (1) சிறையினின்றும் விடுவித்தாய்.

ஒருநொடியதனில் இருசிறை மயிலின் ... ஒரு (1) நொடிப்பொழுதில் இரண்டு (2) சிறகுகள் உடைய மயிலில் ஏறி,

முந்நீர் உடுத்த நானிலம் அஞ்ச ... மூன்று (3) பக்கங்களிலும் நீர் உள்ள கடல்களை ஆடையாக உடுத்தியுள்ள, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற நால் (4) வகையான நிலம் படைத்த இவ்வுலகமே அஞ்ச (5) (அஞ்ச என்றால் ஐந்து -5- என்றும் பயப்பட என்றும் இரு பொருள்),

நீ வலம் செய்தனை ... நீ உலகை வலம் வந்தாய்.

நால்வகை மருப்பின் ... நான்கு (4) விதமான தந்தங்களை உடையதும் (ஐராவத யானைக்கு நான்கு தந்தங்கள்),

மும்மதத்து ... மூன்று (3) வகையான மதம் பிடிக்கக் கூடியதும்,

இருசெவி ஒருகை பொருப்பன் ... இரண்டு (2) காதுகளையும், ஒரு (1) துதிக்கையையும் கொண்ட மலை போன்ற ஐராவதத்தை உடைய இந்திரனின்

மகளை வேட்டனை ... மகளாகிய தேவயானையை மணம் செய்து கொண்டனை.

ஒருவகை வடிவினில் ... ஒரு (1) வகையான யானை வடிவிலே

இருவகைத்து ஆகிய ... இள யானை, கிழ யானை என இரு (2) வடிவிலும் வரவல்லதும்,

மும்மதன் தனக்கு ... கன்ன மதம், கை மதம், வாய் மதம் என்ற மும்மத (3) நீரும் பெருகி வந்த கிழ யானைக்கு

மூத்தோன் ஆகி ... மூத்த சகோதரனாக* விளங்கினாய்.

நால்வாய் முகத்தோன் ... (நால்வாய் = இரு பொருள் - நான்கு -4- மற்றும் வாயினின்று) தொங்கும் துதிக்கை முகத்தோனும்,

ஐந்துகைக் கடவுள் ... ஐங்கரங்களை (5) (தோளிலிருந்து நான்கு கரங்களும், துதிக்கையும்) உடைய கடவுளும்,

அறுகு சூடிக்கு ... அறுகம் [அறுகம் = இரு பொருள் - ஆறு -6- மற்றும் அறுகம் (புல்)] புல்லைச் சூடியவனுமான கணபதிக்கு

இளையோன் ஆயினை ... இளைய சகோதரன் என விளங்குகிறாய்.

ஐந்தெழுத்து அதனில் ... நமசிவாய என்ற பஞ்ச (5) அட்சரத்தின் மூலமாக

நான்மறை உணர்த்து ... நான்கு (4) வேதங்களாலும் இவரே இறைவன் என்று உணர்த்தப் பெறுபவரும்,

முக்கட் சுடரினை ... சூரிய, சந்திர, அக்கினி என்னும் முச்சுடரை (3) தம் கண்களாக உடையவரும்,

இருவினை மருந்துக்கு ... நல்வினை, தீவினை இரண்டிற்கும் (2) மருந்தாக விளங்குபவரும் ஆகிய சிவபிரானுக்கு

ஒரு குருவாயினை ... ஒப்பற்ற ஒரு (1) குருநாதனாக அமைந்தாய்.

ஒருநாள் ... முன்பொரு (1) நாள்

உமையிரு முலைப்பால் அருந்தி ... உமாதேவியின் இரு மார்பிலும் சுரந்த ஞானப்பாலைப் பருகி

முத்தமிழ் விரகன் ... இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழிலும் வல்லவனாகி,

நாற்கவி ராஜன் ... நால்வகைக் கவியிலும்** அரசனாகி,

ஐம்புலக் கிழவன் ... பஞ்ச இந்திரியங்களின் உணர்ச்சிகட்கு அடிமைப்படாத உரிமையாளனாகி,

அறுமுகன் இவன் என ... ஆறு முகங்களை உடைய ஷண்முக மூர்த்தியே இவன்தான் என யாவரும் கூற

எழில்தரும் அழகுடன் ... இளமை ததும்பும் அழகோடு

கழுமலத்து உதித்தனை ... சீகாழிப்பதியில் திருஞானசம்பந்தனாகத் தோன்றினாய்.

அறுமீன் பயந்தனை ... கார்த்திகைப் பெண்களாகிய ஆறு நக்ஷத்திரங்களும் பெற்ற புதல்வனாகினாய்.

ஐம் தரு வேந்தன் ... கற்பகம், மந்தாரம், பாரிஜாதம், சந்தானம், அரிசந்தனம் என்ற ஐந்து தேவ விருட்சங்கள் இருக்கும் தேவலோகத்துக்குச் சக்ரவர்த்தியாக விளங்கினாய்.

நான்மறைத் தோற்றத்து ... நான்கு மறைகளைப் போன்று மிக ரகசியமானதும்,

முத்தலைச் செஞ்சூட்டு ... மூன்று பிரிவுகளோடு சிவந்த கொண்டைகளை (சிகரங்களை) உடையதுமான

அன்றிலங் கிரி ... அன்றில் பட்சி (கிரெளஞ்சம்) பெயர் கொண்ட மலையை

இரு பிளவாக ... இரண்டு கூறாகப் பிளக்குமாறு

ஒரு வேல் விடுத்தனை ... ஒப்பற்ற உன் வேலினைச் செலுத்தினாய்.

காவிரி வடகரை மேவிய குருகிரி ... காவிரியின் வட பாகத்தில் விளங்கும் சுவாமிமலையில் இருக்கும்

ஆறெழுத்து அந்தணர் அடியிணை போற்ற ... சரவணபவ என்னும் உன் ஷடாக்ஷர மந்திரத்தை ஓதும் அந்தணர்கள் உனது பாத கமலங்களைப் போற்ற,

ஏரகத்து இறைவன் என இருந்தனையே. ... திருவேரகத்தின் இறைவன் என்ற திருப்பெயருடன் எழுந்தருளி இருக்கின்றாய்.

நன்றி : http://www.kaumaram.com/thiru_uni/tpun1326.html

  • தொடங்கியவர்

ஆம் ......... இதுவும் ஒருவகையான சித்திரக் கவியே . நண்பர் ராம் கிஷோர் தனது இணையத்தில் பகிர்ந்திருந்தார் . ஒரு சில எடுத்துக்காட்டுக்கள் ........

01  சஸ்திர பந்தம் .

sasthra+bantham.jpg

02  கமல பந்தம்

kamala+bantham.jpg

03 ரத பந்தம்

radha+bantham.jpg

04 மயூர பந்தம்

mayura+bantham.jpg

இவை யாவுமே ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய தமிழ் செய்யுள்களாகும் .

http://ramilhan.blogspot.fr/search/label/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.