Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோழர் தியாகு ஜயாவின் போராட்ட செய்தி உடனுக்குடன்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
தோழர் தியாகு பட்டினிப் போராட்டம் நடத்தும் இடத்திற்கு எந்நேரமும் நிறுத்தி வைப்பதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தோழர்கள் ஏற்பாடு செய்திருக்கும் ஆம்புலன்ஸ்.

ஆம்புலன்ஸ் போராட்டப் பந்தலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தோழர்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்
 
0iqr.jpg
 
 
  • Replies 111
  • Views 10.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தியாகுவை கைது செய்யும் முடிவோடு காவல்துறை குவிப்பு. பகுதியில் உள்ள கடைகளை அடைக்க வைத்து விட்டனர்

தோழர் தியாகுவின் பட்டினிப் போராட்டம் 14-வது நாளை கடந்து கொண்டிருக்கிறது. எனவே, அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று காவல் துறை உயர் அதிகாரிகள் சொன்னதை தோழர் ஏற்க மறுத்து விட்டார்.

இராஜீவ் காந்தி பொது மருத்துவமனை மருத்துவர்கள் நேரில் வந்து தோழர் தியாகுவின் உடல் நிலையை ஆய்வு செய்தனர்

(facebook)

தமிழீழ விடுலைக்கான மக்கள் கூட்டமைப்பின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் - குமரன் சாலையில் ஆர்.பி.ஆர். வணிக வளாகத்தில் நடைபெற்றது.

இனப்படுகொலை செய்த நாடான இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பதைக் கண்டித்தும்,

அதில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தியும்,

காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டும்.

தமிழீழ மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்

என்ற இக்கோரிக்கைகளுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வரும் தோழர்.தியாகுவின் போராட்டத்தை ஆதரித்து, திருப்பூரில் எதிர்வரும் 18.10.2013 வெள்ளிக் கிழமை அன்று காலை 6 மணிமுதல் மாலை 6 மணி வரை ஒருநாள் முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என தமிழீழ விடுதலைக்கான மக்கள் கூட்டமைப்பின் தோழமை அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தொடர்புக்கு :

தமிழீழ விடுதலைக்கான மக்கள் கூட்டமைப்பு

திருப்பூர் மாவட்டம்.

94866 41586, 98422 48174, 98411 16780.

557096_657898154243946_1265598718_n.jpg

 

1375743_657898310910597_767822086_n.jpg

 

(facebook)

1379233_648103321895947_1252402823_n.jpg

 

(facebook)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
wwkz.jpg
t12z.jpg
c5vd.jpg
 
 

 


io4w.jpg
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தியாகு கைது. மருத்துவமனையில் அனுமதிக்க காவல்துறை திட்டம். சிறையிலும் உண்ணாவிரதத்தை தொடரப் போவதாக தியாகு அய்யா அறிவிப்பு

1394164_432518060188249_160548347_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தியாகு காவல்துறையின் பெரும் நெருக்கடியால் மீண்டும் மருத்துவமனையில் (அரசு பொது மருத்துவமனை )-யில் அனுமதி. 

ஆனாலும் தனது உண்ணாநிலையை தோழர் தியாகு தொடர்கிறார்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

5–வது நாளாக உண்ணாவிரதம்: செங்கல்பட்டு, சட்டக்கல்லூரி மாணவர்களுடன் எழுச்சித் தமிழர் சந்திப்பு 
செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் ராஜீ, ஜான்சன், யுவராஜ், மணிகண்டன், கிராந்தி ஆகியோர் கல்லூரி முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ளனர்

 

jtdm.jpg

 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

mre3.jpg
 
 
  அய்யா தியாகுவே வாருங்கள்! உயிர் மீண்டு வாருங்கள்!!

*****************************************************

இருக்கும் போது பாராட்டாதே! செத்துத் தொலையட்டும் சிலையெடுக்கலாம்.

- ஈரோடு தமிழன்பன்.

அய்யா தியாகுவே! உங்களின் அளப்பரியப் போராட்டக் களங்களின்

பின்னணி இந்தப் பாழாய்போன தமிழினம் புரிந்திருக்கவில்லை.

தற்பொழுது தாங்கள் நடத்திவரும் உண்ணாநிலையிருந்து மெய் வருந்தி

உயிர் உருக்கி 14 நாட்களை கடந்துவிட்ட தியாகம் இந்தத் திராவிட தாசர்களுக்கு நடிப்பாகத் தெரிகிறது.

சில புலம் பெயர் ஈழக் கைக்கூலிகள் தங்களை கே.பி. கும்பலின் அடிவருடி என தூற்றி எக்காளமிடுகின்றது.

தமிழனின் பிணத்தை வைத்து அரசியல் செய்யும் இந்த கேடுகெட்ட

தமிழக ஓட்டு பொறுக்கி அரசியல் வியாதிகள் உங்களை உங்கள் தியாகத்தை அங்கீகரிக்க மனமில்லை.

ஆகவே அய்யா தியாகுவே! இந்தப் பாழாய் போன சமூகத்திற்கு உங்கள் உயிரை பணயம் வைத்து செய்யவேண்டாம் இந்த விபரீத முயற்சி.

இந்த இதயமே இல்லாத இந்திய வல்லாதிக்கம் ஒரு போதும் உங்களின் 

உன்னத உயிரை மதிக்கப் போவதில்லை.

இந்தியாவை வெள்ளையன் ஆண்டதனால்தான் கபடதாரி காந்தியின்

போலி உண்ணாநிலையும் புனிதமானது.

அதே காந்தி இந்த கொள்ளைக்கார ஆட்சியிலிருந்திருந்தால் எப்போதோ

பட்டினியல் மரணித்திருப்பான்.

அய்யா தியாகுவே! நீங்கள் எங்களுக்கு வேண்டும். ஆகவே உண்ணாநிலையைக் கைவிட்டு உயிரோடு வாருங்கள்.

போராட்டத்தின் வடிவத்தை மாற்றுங்கள்.வடிவம் மாறுவதால் போராட்டம் மடியப் போவதில்லை.

உயிரோடு இருக்கும் போது உங்களைப் பாராட்டாத இந்த தமிழினம்

செத்தபின் சிலையெடுத்து விழா கொண்டாடிவிடும்.ஆகவே

தோழர் தியாகுவே! வாருங்கள்! உயிரோடு மீண்டு வாருங்கள்!!

போராட்டத்தன் வடிவத்தை மாற்றுங்கள்!

இப்படிக்கு..

உங்களை மதிக்கும் தொல்காப்பியன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அய்யா தியாகு அவர்கள் தமிழர்களின் கருத்துக் கருவூலமாய் தன்மான ஒளிச்சுடராய் இருந்து இளைஞர்களுக்கு வழிக்காட்ட வேண்டியவர் .இவரைப் போன்ற அறிஞர்கள் அரிதாக இருக்கின்றார்கள்.அவர் வாழ்விலே தான் இளைஞர்களின் உரிமை வேட்கை அடங்கியிருக்கிறது .
இவரை எப்படி நாம் இழந்து விட முடியும் ?

(தியாகுவுடன் வீ.பிரபாகரன்,இளையராஜா சே,சிபி ,மாறன் மற்றும் பல மாணவத் தோழர்கள் ..)
 

 

 

y8mu.jpg

 
 

தோழர் தியாகு அவர்களை மருத்துவமனையில் சந்தித்து உண்ணாப்போராட்டத்தைக் கைவிடுமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள்!
===========================================

இனப்படுகொலை நாடான இலங்கையை பொதுநலநாடுகள் மன்றத்திலிருந்து (காமன் வெல்த்திலிருந்து) நீக்க வேண்டும் என்றும், கொழும்பில் பொ.நா. மன்றக் கூட்டம் நடந்தால் அதில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்றும் ஈழம் தொடர்பான இன்னபிறக் கோரிக்கைகள் வைத்தும் கடந்த 01.10.2013லிருந்து காலவரம்பற்ற உண்ணாப் போராட்டம் நடத்தி வரும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு அவர்களை இன்று (14.10.2013) மாலை சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் நேரில் பார்த்து உடல்நலம் விசாரித்தார்.

இன்றுடன் 14 நாட்களாக உண்ணாப் போராட்டம் நடத்திவரும் தோழர் தியாகு, ஏற்கெனவே காவல்துறையினரால் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். மருத்துவமனையிலும் விடுவிக்கப்பட்டப்பிறகும் அவர் உண்ணாப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.

புரசைவாக்கம் உழைக்கும் மக்கள் மாமன்ற அலுவலகத்தில் உண்ணாப் போராட்டம் இருந்த தோழர் தியாகு அவர்களை காவல்துறையினரும் மருத்துவர்களும் அரசுப் பொது மருத்துவமனையில் இன்று(14.10.2013) மாலை சேர்த்தனர். அங்கும் அவர் சிகிச்சை ஏற்க மறுத்து உண்ணாப் போராட்டம் தொடர்கிறார்.

அவரிடம் நலம் விசாரித்த தோழர் பெ.மணியரசன் அவர்கள், “14 நாட்கள் ஆகிவிட்டன. உங்களுக்கு சர்க்கரை நோயும் இருக்கிறது. இனியும் தொடர்ந்தால், உயிருக்கும் உடல் உறுப்புகளுக்கும் ஆபத்து ஏற்படும். இலங்கையில் நடைபெறும் பொதுநலநாடுகளின் மன்றக் கூட்டத்தில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்றும் உங்கள் உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கடந்த 11.10.2013 அன்று தமிழகமெங்கும் அனைத்து அமைப்புகளும் சேர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தினோம். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, வரும் நாட்களிலும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் அறிவித்துள்ளன. அங்கங்கே மாணவர் போராட்டங்களும் நடந்து கொண்டுள்ளன. உங்கள் உயிர் பாதுகாக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. மேலும், தமிழின உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் நீங்கள் அறிவுத் தளத்திலும் போராட்டக் களத்திலும் பங்காற்ற வேண்டிய கடமை இருக்கிறது. நீங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை எங்களது தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் முன்வைத்துப் போராடுகின்றன. எனவே, நீங்கள் உண்ணாப் போராட்டத்தைக் கைவிட்டு, மாற்றுவகைப் போராட்டங்களில் ஈடுபடுமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று தோழர் தியாகு அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

==============================
தலைமைச் செயலகம்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

பலரின் தூற்றுதலாலும்

நாமெல்லாம்  ஒதுங்கி  நிற்க

 

இந்த இரு சிறியவர்களின்  பணி  வியக்க  வைக்கிறது.

தொடர்க  தங்கள் பணி

பையன்  மற்றும் துளசி

1393469_657965417570553_1500416404_n.jpg

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் 15.10.2013 அன்று நாம் தமிழர் கட்சி முத்துப்பேட்டை நகரம் சார்பில் இனப் படுகொலை செய்த இலங்கையில் காமென் வெல்த் மாநாடா..? என்ற போர் முழக்கத்துடன் பட்டினிப் போராட்டம்.

 

1382184_647572405282372_1427776103_n.jpg

 

(facebook)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சீமான் அண்ணாவின் நாளைய போராட்டம் 
ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என்று நினைக்கிறேன் துளசி அக்கா...தியாகு ஜயாவின் உடல் நிலையை பார்க்க மனம் கனக்குது......
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காட்டாயப்படுத்தி மருத்துவமனையில் தியாகு அனுமதி. அங்கேயும் உண்ணா நிலையை தொடர்கிறார்.

 

zmxh.jpg

 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
......................

Edited by பையன்26

 

சீமான் அண்ணாவின் நாளைய போராட்டம் 
ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என்று நினைக்கிறேன் துளசி அக்கா...தியாகு ஜயாவின் உடல் நிலையை பார்க்க மனம் கனக்குது......

 

 

சீமான் அண்ணா நடத்தும் பெரும் போராட்டம் 17 ஆம் திகதி என முன்னைய செய்திகளில் கூறப்பட்டுள்ளது. நாளைய போராட்டம் தனியே முத்துப்பேட்டை நகரில் நடக்கிறதோ தெரியவில்லை. பார்க்கலாம். :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெரியப் படுத்தியமைக்க்கு நன்றி..நான் நினைத்தேன் நாளைக்கு என்று

பேரன்புமிக்க தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு அவர்களுக்கு,

அன்பு வணக்கம் !

“வெற்றி அல்லது வீரச்சாவு” என்ற முழக்கத்தோடு, இலங்கையைப் பொதுநலவாய (காமன்வெல்த்) அமைப்பிலிருந்து நீக்க வேண்டும், இனப்படுகொலை நடந்த அம்மண்ணில் பொதுநலவாய மாநாடு நடைபெறக் கூடாது, மீறி நடந்தால் இந்தியா அதில் கலந்துகொள்ளக் கூடாது, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் முதலாம் நாள் முதல் உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் தங்களுக்கு தமிழ்நாட்டு, ஈழ உறவுகளோடு இணைந்து உலகத் தமிழ் அமைப்பும் துணைநிற்கும். மேலும் தங்களின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டும், தங்களின் பங்களிப்பும் வழிகாட்டலும் தமிழ்த் தேசியத்திற்கும், தமிழ் குமுகத்திற்கும் மேன்மேலும் தேவை என்பதாலும் இப்பட்டினிப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு, வேறுவழிகளில் தொடர்ந்து போராட உளமார்ந்த அன்புடன் வேண்டுகிறது.

தமிழ் சமூகம் ஒரு இக்கட்டான காலச் சூழலில் பயணிக்கும் இவ்வேளையில் தோழர் தியாகு அவர்களின் உடல்நிலை மோசமடைந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில், அனைத்துத் தமிழரும் சாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து ஒன்று திரண்டு போராட வேண்டும். அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் இப்போராட்டத்திற்கு வலிமை சேர்க்க வேண்டும். இந்திய நடுவண் அரசும், தமிழ்நாட்டு மாநில அரசும் விரைந்து செயற்பட்டு இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என உலகத் தமிழ் அமைப்பு வலியுறுத்துகிறது.

அன்புடன்,
உலகத் தமிழ் அமைப்பு

 

(facebook)

தியாகு ஐயா இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பற்றிய செய்தி.

 

 

(facebook)

Edited by துளசி

தோழர் தியாகு அவர்களே...

நீங்களும், நாங்களும், தமிழர் எல்லோருமே செத்துத் தொலைந்தாலும், ஆட்சியிலிருப்பவர்கள் அசர மாட்டார்கள். தயவு செய்து உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிடுங்கள். செத்துத் தோற்பதைவிட, வாழ்ந்து போராடுவோம், வாருங்கள்!

எண்ணற்ற தமிழ் மக்கள் சார்பாக
உங்கள் தோழன் சுப. உதயகுமாரன்

 

(facebook)

"காமன் வெல்த்" மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாதென வலியுறுத்தி தொடர் வண்டி மறியல் போராட்டம்.

* 2009ஆம் ஆண்டில் மே 16,17,18 ஆகிய மூன்று நாட்களில் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இலங்கை நாட்டில் நடைபெறும் "காமன் வெல்த்" மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது.

* இதே கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாநிலை அறப்போரில் போராடும் தோழர் தியாகுவின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும்

* தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள சிங்கள இனவெறி ராணுவத்தை உடனே அங்கிருந்து வெளியேற்ற வேண்டும்

*இனவெறியன் ராஜபக்சேவை போர் குற்றவாளி என அறிவிப்புச் செய்ய வேண்டும்.

*தனித் தமிழீழம் அமைவதற்கு பொது வாக்கெடுப்பை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கையை முன் வைத்து புதுச்சேரி விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் தொடர் வண்டி மறியல் போராட்டம் இன்று (14.10.2013) நடைபெற்றது. இதில் சுமார் நூற்றுக்கும் அதிகமான சிறுத்தைகள் கலந்துக் கொண்டு கைதாகினர்.

 

1379703_205795392932844_670657236_n.jpg

 

1374861_205796192932764_318996522_n.jpg

 

1382215_205796246266092_494347844_n.jpg

 

1383070_205796006266116_708562053_n.jpg

 

(facebook)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.