Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலையில ஐந்து மாணவர்கள் படுகொலைச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட சந்தேகநபர்கள் விடுதலை

Featured Replies

 திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 12 அதிரடிப்படையினரும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி 2ம் திகதி திருகோணமலை கடற்கரையில் விளையாடி கொண்டிருந்த பல்லைக்கழக மாணவர் உட்பட 5 தமிழ் மாணவர்கள்இ அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்நிலையில்இ இப்படுகொலைச் சம்பவம் தொடர்பான சந்தேகத்தின் பேரில் 12 விசேட அதிரடிப்படையினர் கடந்த ஜுலை 5ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களின் பிணை மனு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டபோது 12 சந்தேக நபர்களையும் தலா 50 000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 200 000 ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் மேல் நீதிமன்ற நீதிபதி விடுதலை செய்தார்.அத்துடன் சந்தேகநபர்களை கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு தலைமையகத்தில் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி தொடக்கம் 12 மணிவரை உள்ள நேரத்தில் சென்று கையொப்பமிடுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

http://www.sankathi24.com/news/34412/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

திருமலையில ஐந்து மாணவர்கள் படுகொலைச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட சந்தேகநபர்கள் விடுதலை:-

14 அக்டோபர் 2013


திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டில் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 12 அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை (14.10.13) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜுலை 5ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்களின் பிணை மனு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அமில ரணராஜா முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த 12 சந்தேகநபர்களையும் தலா 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 200,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் மேல் நீதிமன்ற நீதிபதி விடுதலை செய்தார்.

அத்துடன் வழக்கு விசாரணைகள் முடியும் வரை குறித்த சந்தேகநபர்கனை கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு தலைமையகத்தில் பிரதி ஞாயிற்றுக் கிழமைகளில் சென்று கையொப்பமிடுமாறும் உத்தரவிட்டார்.

பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்து காத்திருந்த 4 மாணவர்களும் மொறட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றிருந்த மாணவர் ஒருவருமே 2006ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலைகள் குறித்து சர்வதேச அளவில் இலங்கை அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97667/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
சர்வதேசத்தை  சிங்களம் அசட்டை செய்வத்தையே மேற்படி சம்பவம் காட்டி நிற்கிறது. பிரான்ஸ் அரசு என்ன சொல்கிறது என பார்க்கலாம்.புலிகள் ஒரு தாக்குதல் செய்தால் குய்யோ முறையோ என புலம்பும் சர்வதேசம் இம்மாணவர்கள் கொலையை இலங்கை அரசு செய்தது என்பது அனைவரும் அறிந்தும் சர்வதேசம் பெரிதாக அலட்டிக்கொள்வதாக தெரியவில்லை.
 
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு பெட்டியை கட்டுவதில் மட்டும் அக்கறையாக உள்ளார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.