Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாணசபையின் முதல் அமர்வு எதிர்வரும் 25ம் திகதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாணசபையின் முதல் அமர்வு எதிர்வரும் 25ம் திகதி

15 அக்டோபர் 2013

வட மாகாணசபையின் முதலாவது அமர்வு எதிர்வரும் 25ம் திகதி நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் கைதடியில் இந்த அமர்வு நடைபெறவுள்ளது. அமர்வுகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இதுவரையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளாத உறுப்பினர்கள் அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னதாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிசாளர்இ பிரதி தவிசாளர் தெரிவுஇ வட மாகாணசபையின் ஆரம்ப அமர்வுகளின் போது நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. முதலாம் அமர்வுகளில் வட மாகாண ஆளுனர் பங்கேற்பாரா என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை


http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97676/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலை எமக்கும் வருமோ என்று சந்தேகப்பட வைக்கின்றது............. நன்றிகள் வினவு..... மணிப்பூரில் இந்திய இராணுவம் நடத்திவரும் போலி மோதல் கொலைகளை, சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ள ஒரு பொதுநல வழக்கு அம்பலத்துக்கு கொண்டு வந்துள்ளது. நீதிக்குப் புறம்பாகக் கொல்லப்பட்டவர்களது குடும்பத்தினர் சங்கம் என்ற மணிப்பூரைச் சேர்ந்த அமைப்பு தாக்கல் செய்துள்ள இம்மனு, 2007 முதல் 2012 வரையிலான 5 ஆண்டுகளில் சுமார் 1500 பேருக்கும் மேற்பட்டவர்கள் போலி மோதலில் இராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்றும், இது குறித்து ஒரு சுயேச்சையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை மணிப்பூரிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் கோரியிருக்கிறது. ஐரோம் ஷர்மிளா, தங்ஜம் மனோரமா மணிப்பூரில் அமலில் உள்ள ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கக் கோரி பத்தாண்டுகளுக்கு மேலாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் ஐரோம் ஷர்மிளா (இடது); அசாம் துப்பாக்கிப் படைப்பிரிவால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட தங்ஜம் மனோரமா (வலது படம்) வழக்கு, இன்னும் விசாரணை நிலையைக் கூட எட்டவில்லை. இந்த வழக்கில் தனது தரப்பை அறிக்கையாகத் தாக்கல் செய்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், மேற்குறிப்பிட்ட 5 ஆண்டுகளில் மணிப்பூரிலிருந்து மொத்தம் 1671 போலி மோதல் கொலைப் புகார்கள் தங்களிடம் வந்துள்ளதாகவும், அவற்றில் 191 புகார்களை விசாரித்ததில், அனைத்தும் போலி மோதல் கொலைகளே என்று தெரியவந்ததால், கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு 10.5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மீதமுள்ள வழக்குகளை விசாரிக்கவிடாமல் தடுக்க அம்மாநில அரசு, பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டுவருவதாகவும் தேசிய மனித உரிமை ஆணையம் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது. இப்பிரச்சினை குறித்து உச்ச நீதிமன்றமும் ஒரு விசாரணைக் குழுவை நியமித்தது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையிலான அந்தக் குழு, தன்னிடம் விசாரணைக்கு வந்த 7 கொலைகளும் போலி மோதல் கொலைகளே என்று கூறியிருப்பதுடன், ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறது. இத்தகையதொரு கொடூரமான இராணுவ ஒடுக்குமுறையை மணிப்பூரில் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது இந்திய அரசு. ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்று நவம்பர் 2000 முதல் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வரும் ஐரோம் சர்மிளா மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செயப்பட்டுள்ளதேயன்றி, அச்சட்டம் விலக்கிக் கொள்ளப்படவில்லை. ஜுலை 2004- இல் தங்ஜம் மனோரமா என்ற பெண்ணை அசாம் ரைபிள்ஸ் படையினர் வல்லுறவு செய்து கொன்றதை எதிர்த்து, “இந்திய இராணுவமே எங்களையும் வல்லுறவு செய்” என்று இம்பாலில் உள்ள அசாம் ரைபிள்ஸ் தலைமையகத்தின் முன் நிர்வாணமாக நின்று போராடினார்கள் மணிப்பூர் தாய்மார்கள். அவர்கள் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறைவைக்கப் பட்டனர். மக்கள் போராட்டம் காரணமாக அசாம் ரைபிள்ஸ் குற்றவாளிகள் மீது மாநில போலீசு வழக்கு பதிவு செய்த போதிலும், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் படி, இராணுவத்தின் மீது வழக்கு பதிவு செய்யும் அதிகாரம் மாநில போலீசுக்கு இல்லை என்று கூறி, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி மறுத்து வருகின்றது மத்திய அரசு. பிரிவினைவாத இயக்கங்களை ஒடுக்குவது என்ற பெயரில் மணிப்பூரில் படுகொலைகளையும் பாலியல் வன்முறைகளையும் அரங்கேற்றுவது மட்டுமின்றி, மணிப்பூர் இளைஞர்களைப் போதைக்கு அடிமையாக்கிச் சீரழிப்பதையும் இந்திய இராணுவம் திட்டமிட்டே செய்கிறது. சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மருந்துகளைக் கடத்த முயன்ற லெப்டினென்ட் கர்னல் அஜய் சவுத்திரி என்ற இந்திய இராணுவ கர்னல் பர்மா எல்லைக்கு அருகே சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் சிறப்பு அதிகார சட்டம், இந்த இராணுவ அதிகாரியையும் காப்பாற்றிவிடும். ஜந்தர் மந்தர் ஆர்ப்பாட்டம் இராணுவமும் துணை இராணுவப் படைகளும் மணிப்பூரில் கண்மண் தெரியாமல் நடத்திவரும் போலி மோதல் கொலைகளைத் தடுத்து, விசாரணை நடத்தக் கோரி மணிப்பூரி மாணவர்களும், மக்களும் டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்திய முழக்க ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்). ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் என்பது முதன்முதலாக 1958 – ஆம் ஆண்டில் ஒரு அவசரச் சட்டமாக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்றுவரை அந்தச் சட்டம் மணிப்பூரில் அமலில் இருக்கிறது. ஒரு பகுதி கலவரப்பகுதியாக தொடர்ந்து நீடிக்கிறதா, அங்கே ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் தொடர்வது அவசியமா என்று ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வுக்கு உட்படுத்தி, உரிய காரணங்கள் இருந்தால் மட்டுமே இதனை நீட்டிக்க வேண்டும் என்று 14 ஆண்டுகளுக்கு முன்னரே மணிப்பூர் தொடர்பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. போலி மோதல் கொலை குறித்த புகார்கள் வந்தால், அவற்றைக் கையாள வேண்டிய முறை குறித்தும் உச்ச நீதிமன்ற உத்தரவுகள் இருக்கின்றன. எனினும் இவை எதையும் அரசோ, இராணுவமோ குப்பைக் காகிதத்துக்குச் சமமாகக் கூட மதித்ததில்லை. சுமார் 20 இலட்சம் மக்கள் தொகை கொண்ட மணிப்பூரில் இதுவரை சுமார் 20,000 பேருக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இராணுவத்தினால் பாதிக்கப்படாத குடும்பம் மணிப்பூரில் இல்லை. ஐம்பது பேருக்கு ஒரு சிப்பாய் வீதம் இராணுவம் அங்கே நிறுத்தப்பட்டிருக்கிறது. 1958 முதல் அங்கே இந்திய இராணுவம் நிரந்தரமாகக் குடியிருக்கிறது. காரணம் – மணிப்பூரை இந்தியா ஆக்கிரமித்திருக்கிறது என்பதுதான். 1891-இல் மணிப்பூர் மன்னனைப் போரில் வென்று மணிப்பூரைத் தனது ஆளுகையின் கீழ் கொண்டுவந்தது பிரிட்டிஷ் அரசு. 1947 வரை பிரிட்டிஷ் இந்தியாவுடன் மணிப்பூர் இணைக்கப்படவில்லை. அனைவருக்கும் வாக்குரிமை என்ற அடிப்படையில் 1948 -இல், (இந்திய அரசியல் சாசனம் நிறைவேற்றப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே) மணிப்பூர் என்ற நாடு தனது முதல் தேர்தலை நடத்தியது. தேர்தலுக்குப் பின் ‘பிரஜா சாந்தி’ என்ற கட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 1949 அக்டோபரில், அந்நாட்டு மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், மணிப்பூர் இந்தியாவுடன் பலவந்தமாக இணைக்கப்பட்டது. மணிப்பூரின் ராஜா புத்த சந்திராவை பேச்சுவார்த்தை என்று சொல்லி அழைத்து, ஷில்லாங்கில் வீட்டுக் காவலில் அடைத்த இந்திய அரசு, இராணுவத்தைக் குவித்து அவரை மிரட்டி, மணிப்பூரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், மந்திரி சபையும் கலைக்கப்பட்டன. இதுதான் மணிப்பூரை இந்தியா ஆக்கிரமித்ததன் சுருக்கமான வரலாறு. இதனை எதிர்த்து மணிப்பூர் மக்கள் அமைதி வழியில்தான் போராடத் தொடங்கினார்கள். எனினும், அங்கே இந்திய இராணுவம் குவிக்கப்பட்டது. பின்னர் பல ஆயுதக் குழுக்கள் தோன்றின. அவற்றை ஒடுக்குவது என்ற பேரில் இராணுவத்தின் ஆட்சி அங்கே நிரந்தரமாக்கப்பட்டு விட்டது. “ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் வல்லுறவுக் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பு தரக்கூடாது” என்று வர்மா கமிசன் கூறியது. போலி மோதல் கொலைகளை விசாரிக்குமாறு ஏராளமான உச்ச நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன. இருப்பினும் இந்திய அரசு ஆக்கிரமிப்பு என்ற பெருங்குற்றத்தை நியாயப்படுத்துவதற்காகத்தான் ஆயுதப்(ஆக்கிரமிப்பு) படைகள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றி வைத்திருக்கிறது. மணிப்பூரை மட்டுமல்ல, சுய நிர்ணய உரிமை கோரிப் போராடிவரும் காஷ்மீர் மற்றும் வடகிழக்கிந்திய தேசிய இனங்கள் அனைத்தையும் தனது இராணுவ வலிமையைப் பயன்படுத்தித்தான் இந்திய அரசு நசுக்கி வருகிறது. நேரு காலத்திலிருந்து தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புகளையும் இன ஒடுக்குமுறைகளையும் போலி கம்யூனிஸ்டுகள், திராவிடக் கட்சிகள் உள்ளிட்ட எல்லா ஓட்டுப் பொறுக்கிகளும் ஆதரிக்கின்றனர். இந்த வெட்கங்கெட்ட ஆக்கிரமிப்பை தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகச் சித்தரிக்கின்றனர். அதனைக் கொண்டாடும்படி மக்களைப் பயிற்றுவித்திருக்கின்றனர். இத்தகைய அயோக்கியர்களான ஓட்டுப் பொறுக்கிகளும் இனவாதிகளும் ஊடகங்களும்தான், இன்று ஈழத்தமிழர்களுக்காகக் கண்ணீர் விடுகின்றனர். ஈழத்தை இந்திராகாந்தி வாங்கித் தந்திருப்பார், ஜெயலலிதா வாங்கித் தருவார் என்றெல்லாம் கதையளக்கின்றனர். - அஜித்

யாழ்.நாவற்குழியில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு  நிரந்தர காணிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

யாழ்.நாவற்குழியில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு வீடமைப்பு அதிகார சபையினால் நிரந்தர காணிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாவற்குழியில் வீடமைப்பு அதிகார அமைப்புக்குச் சொந்தமான காணிகளில் குடியேறியுள்ள 137 சிங்கள குடும்பங்களில் 50 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக நிரந்தர காணிகள் வழங்கப்படவுள்ளன.

இதற்காக வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1.5 பரப்பு காணி வீதம் வழங்குவதற்காக செவ்வாய்க்கிழமை (15) காணி அளவிடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.இந்நிலையில் அவ்விடத்திற்கு கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வருகை தந்தபோது, காணி அளக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் அவ்விடத்தைவிட்டு அகன்றனர்.தொடர்ந்து சிறிதரன் அம்மக்களுடன் சந்தித்துக் கலந்துரையாடினார்.DSC_0086%287%29.JPGDSC_0077%282%29.JPG

DSC_0078%285%29.JPG

 

 

நாவற்குழியில் நியாயம் கேட்கச் சென்ற சிறிதரன் மீது சீறிப் பாய்ந்த சிங்களவர்கள் (Video)

  வடக்கும் கிழக்கும் இணைய விரும்பினால் அதனை அரசு நிறைவேற்றியேயாக வேண்டும் : சி.வி.விக்னேஸ்வரன் கிழக்கு மாகாணம் வடக்குடன் இணைந்து செயற்பட வேண்டுமென நினைத்தால் வடமாகாணமும் அதற்கு சம்மதிக்குமானால் அரசாங்கம் அதனை கட்டாயம் நிறைவேற்றியாக வேண்டும். இதில் பிரிவினை வாதம் பேசுவதாகவோ, போராட்டத்தை தூண்டுவதாகவோ நினைத்து வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை அரசாங்கம் துன்பத்தில் விட்டுவிடக்கூடாது என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டிய அவசியம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு இல்லை. இணைந்து செயற்படப்போவதுமில்லை. நாம் சட்டத்தின் அடிப்படையிலேயே எமது நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம். இதில் யாருடைய தலையீடும் அல்லது அடக்குமுறையும் இருக்கக்கூடாதென்பதே எமது பிரதான நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கான விசேட பூஜை வழிபாடொன்று நேற்று கொழும்பு கொச்சிக்கடை அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பூஜையின் பின்னர் வீரகேசரிக்கு அளித்த விசேட செவ்வியில் குறிப்பிடுகையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தமிழ்க்கட்சிகள் பலவற்றை உள்ளடக்கிய மக்கள் கூட்டமைப்பாகும். இதில் தமிழரசுக்கட்சியும் ஒரு கூட்டுக்கட்சியாகவே நாம் கருதுகின்றோம். தமிழரசுக்கட்சி தனித்து செயற்படுகின்றது என்ற கூற்றினை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. வட மாகாண சபையினை பொறுத்தவரையில் ஒவ்வொரு கட்சியிலுமுள்ள அங்கத்தவர்களுக்கு அமைச்சுப் பதவி கொடுத்து ஆட்சி நடத்துவது கடினமானது. நாம் எமக்கு கிடைத்துள்ள பதவிகளை கட்சி அடிப்படையில் பார்க்காது தகுதியடிப்படையிலேயே பார்க்கின்றோம்.

இதன் காரணத்தினாலேயே அண்மைக்காலங்களில் கட்சிக்குள் சில கருத்து முரண்பாடுகளும், மனஸ்தாபங்களும் ஏற்பட்டன. எனினும் இன்று எமது கூட்டமைப்பு ஒற்றுமையாகவே செயற்பட ஆரம்பித்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு எம்மை அரசாங்கம் அழைத்திருப்பதற்கான தாற்பரியம் என்ன என்பது எம்மால் இன்னமும் புரிந்துகொள்ள முடியவில்லை. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நாம் கலந்துகொள்வது தொடர்பில் எமது கட்சியில் கலந்துரையாடிய பின்னர் இது தொடர்பிலான முடிவுகளை எடுக்க முடியும்.

வெறுமனனே அரசியல் காரணங்களினால் முரண்டுபிடித்துக்கொண்டு அரசாங்கத்தை பகைத்துக்கொள்வதினால் எவ்வித அர்த்தமுமில்லை. அதனால் நாம் அரசாங்கத்தை எதிர்க்கப்போவதுமில்லை. ஆகவே, முடிந்தவரை அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு வடமாகாணத்தில் எம்மக்களுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.

கடந்த காலத்தில் முஸ்லிம் தலைமைகள் அம்மக்களுக்கு பாதுகாப்பையும் அவர்களுக்கான உரிமைகளையும் பெற்றுக்கொடுக்காத காரணத்தால் முஸ்லிம் மக்கள் பெரும் துன்பத்திலிருந்தனத். அச்சந்தர்ப்பத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்து அவர்களின் பிரச்சினைகளையும் சர்வதேசம் வரை எடுத்துச் சென்றுள்ளார். இதன் காரணத்தினால் முஸ்லிம் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதும் அதன் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே, தமிழ் முஸ்லிம் மக்களை இணைத்து அனைவருக்குமான நல்லதொரு ஆட்சியினை வடக்கு மற்றும் கிழக்கில் அமைத்து அவர்களை பாதுகாப்போம் என அவர் குறிப்பிட்டார்.

 

Virakesari.lk

  தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு திறந்த மடல்..!

 

இலங்கையில் மாத்திரமல்லாது சர்வதேச சமூகத்தின் பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வடக்கு மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றது.

வடக்கில் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்த தமிழர்களுக்கு சரியான சந்தர்ப்பமும் அமைந்தது.

tna-team.jpg

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்ததன் மூலம் அந்த சந்தர்ப்பத்தை மக்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டதுடன் தமது எண்ணப்பாட்டை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டினர்.

ஆனால் கூட்டமைப்புக்கு வாக்களித்ததன் மூலம் தமிழ் மக்கள் எதனை எதிர்பார்த்தார்களோ அதற்கு மாறான செயற்பாடுகளே தற்போது இடம்பெறத் தொடங்கியிருக்கின்றன.

வடக்கு மாகாண சபையின் கன்னியமர்வுக்கு முன்பாகவே பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.

தமிழ்த் தேசியம், சுயாட்சி, சுயநிர்ணயம் என்றெல்லாம் வாக்கு கேட்டவர்கள் பதவி மோகத்துக்காக பிரிந்து நிற்கின்றமை வாக்களித்த மக்களிடையே பெருங்கவலையை உண்டுபண்ணியுள்ளது.

தேர்தலுக்கு முன்பு வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் இழுபறி இருந்தது. ஒருவாறாக சி.வி. விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்ட போதிலும் உட்கட்சிகளிடையே முரண்பாடு காணப்பட்டது.

எது எவ்வாறாயினும் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் கூட்டமைப்பு அமோக வெற்றிபெற்றது.

அதற்குப் பின்னர் இடம்பெற்ற சில சம்பவங்கள், கூட்டமைப்பினரா இவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளிடையே முரண்பாடான கருத்துக்கள் தோன்றியுள்ளமையும் ஒவ்வொரு கட்சியும் கூட்டமைப்பின் தீர்மானங்களை ஏற்காமல் தன்னிச்சையாக இயங்கும் நிலைமையையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டமையை அங்கத்துவ கட்சிகள் சில ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோன்று முதலமைச்சர் பதவியேற்புக்கு முன்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஜனாதிபதி மகிந்தவை நேரடியாக சந்தித்துப் பேசியிருந்தமையையும் சில கட்சிகள் விரும்பியிருக்கவில்லை.

இந்நிலையில் வடக்கு மாகாண சபை அமைச்சர்களுக்கும் உறுப்பினர்களுக்குமான பதவிப்பிரமாண நிகழ்வு கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த நிகழ்வை வட மாகாண சபைக்குத் தெரிவான 9 உறுப்பினர்கள் நிராகரித்திருந்தனர்.

இவ்வாறு நடக்கும் என்று தமிழ் மக்கள் சற்றேனும் நினைத்திருக்கவில்லை. கூட்டமைப்பினர் ஒன்றுபட்டு தமிழ் மக்களின் அபிலாஷைகளை தீர்த்து வைப்பார்கள் என்று மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அந்த நம்பிக்கைக்கு மாறான நிகழ்வே இடம்பெற்றது.

அமைச்சு தெரிவுகள் தமிழரசுக் கட்சியின் தனிப்பட்ட முடிவு. அது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முடிவல்ல என்றும் அதனை ஏற்றுக்கொள்ளாததால் தாம் நிகழ்வில் பங்கேற்கவில்லை என்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

இதேநேரம் பதவியேற்பு நிகழ்வை நிரகரித்திருந்த உறுப்பினர்கள், 14 ஆம் திகதி திங்கட்கிழமை முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக அறிவித்திருந்தனர்.

ஆயினும் மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப்பின் வேண்டுகோளின் பிரகாரம், கூட்டமைப்பின் ஒற்றுமை கட்டிக்காக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதற்கமைய பதவிப்பிரமாண நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டது.

எனினும் அவரது வேண்டுகோளையும் மீறி அதேநாள் காலையில் எம்.கே.சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அதேபோன்று புளொட் அமைப்பின் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஜி.ரி. லிங்கநாதன் ஆகியோரும் யாழில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

பல்வேறு கட்சிகள் இணைந்த கூட்டணியொன்றில் சிறுசிறு பிணக்குகள் ஏற்பட்டு மறைவது சகஜம்தான். ஆயினும் கூட்டமைப்பை பொறுத்தவரையில் தமக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணாமல் தமது செயற்பாடுகளினூடாக பிரிவின் உச்சகட்டத்தை வெளிக்காட்டுவதை தமிழ் மக்கள் கவலையுடன் நோக்குகிறார்கள்.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் நிலைப்பாட்டை அதன் தலைவர் இரா. சம்பந்தன் கவனத்திற்கொண்டு செயற்பட வேண்டியது அவசியம் என்பதை ஏற்றுக்கொள்கின்ற அதேவேளை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை அங்கத்துவக் கட்சிகள் புறக்கணித்தமை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

பதவி மோகம் கூட்டப்பினரின் நோக்கத்தை கெடுத்துவிட்டதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

வடமாகாண சபைக்குத் தெரிவான உறுப்பினர்களுக்கு பாரிய வரலாற்றுக் கடமைகள் இருக்கின்றன. குறிப்பிட்ட மாகாணமொன்றுக்கு சேவையாற்றுவதற்காக முதன்முதல் தெரிவானதால் பொறுப்புக்கள் நிறைந்திருக்கின்றன. இந்நிலையில் வடமாகாண சபையின் கன்னியமர்வு ஆரம்பமாவதற்கு முன்பாகவே பிளவுகளும் சாடல்களும் ஆரம்பித்துவிட்டன.

அப்படியாயின் காத்திரமான நீண்டகாலப் பயணத்தினூடாக தமிழ் மக்கள் அடைய விரும்பும் அபிலாஷைகள் தீர்க்கப்படுமா என்ற சந்தேகம் எழுவது நியாயமானது.

sivaji-siddarth.jpg

கூட்டமைப்பின் வெற்றியின் பின்னர் அவர்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கையை சர்வதேசம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வடக்கு மக்களின் ஏக பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்பு உறுப்பினர்கள் தங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் பிணக்குகளை குறுகிய காலத்தில் பேசித் தீர்மானிக்க முன்வர வேண்டியது காலத்தின் தேவையாகும்.

கூட்டமைப்பினர் கட்சி ரீதியாக பிளவுபடும் பட்சத்தில் நிச்சயமாக அது தமிழ் மக்களையே பாதிக்கும். அதேபோன்று தென்னிலங்கையிலிருந்து கூச்சலிடும் இனவாத விஷமிகளுக்கும் இந்த விடயம் சாதகமாகிவிடும்.

அதுமட்டுமல்ல கூட்டமைப்பு ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுப்பதை விரும்பாத சக்திகள் இந்த நிலைப்பாட்டை பயன்படுத்தி அக்கட்சியை மேலும் பலவீனமடையச் செய்ய வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளவும் இடமுண்டு.

தமிழ்ச் சமூகத்தின் பின்னடைவுக்கு தமிழ்த் தலைமைகளிடையே நீண்டகாலமாக காணப்படும் ஒற்றுமையின்மையும் ஒரு காரணமாகும். ஆக, இனிமேலும் அப்படியொரு இக்கட்டான நிலைக்கு மக்களை தள்ளிவிடாமல் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் கடமை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

இல்லையேல் இன்னுமொரு வரலாற்றுத் தவறு இடம்பெற்று எதிர்காலத்தில் ஏக்கங்கள் மாத்திரமே மிஞ்சும் நிலை உருவாகக் கூடும். அவ்வாறானதொரு நிலை ஏற்படும் பட்சத்தில் தற்போதைய தமிழ்த் தலைமைகளின் பெயர் கறை படிந்த கறுப்புப் புள்ளியாய் மக்கள் மனதிலும் வரலாற்றிலும் இடம்பெறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

-இராமானுஜம் நிர்ஷன்

virakesari.lk

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.