Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானிய பாராளுமன்ற குழு அதிருப்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானிய பாராளுமன்ற குழு அதிருப்தி

17 அக்டோபர் 2013


இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானிய பாராளுமன்ற குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமை மற்றும் அரசியல் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டமைக்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடையாது என பிரித்தானிய பாராளுமன்றின் வெளிவிவகார குழுப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பிரித்தானியா பங்கேற்பதனை அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் விமர்சனம் செய்துள்ளனர். கொள்கை அடிப்படையில் அமர்வுகளுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டிருக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.


மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரதமர் கமரூன் நேரில் பார்வையிட வேண்டும் எனவும், மக்களை சந்திக்க அனுமதியளிக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சந்திக்கும் மக்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள் என இலங்கை அரசாங்கத்திடம் உறுதிமொழி பெற்றுக்கொள்ளப்பட வேண்டியது அவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.


மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை போன்றவற்றிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களும் இந்த அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது. கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் போன்ற முடக்கப்படுகின்றமை, ஊடகவிலயாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் மாற்றுச் சிந்தனையாளர்கள் தாக்கப்படுகின்றமை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97765/language/ta-IN/article.aspx

கொழும்பில் மாநாட்டை நடத்தும் முடிவு குறித்து கடும் விமர்சனம்
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 17 அக்டோபர், 2013 - 11:31 ஜிஎம்டி
ரிச்சர்ட் ஒட்டாவே

காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின் மாநாட்டை அடுத்த மாதம் இலங்கையில் நடத்துவதற்கான முடிவை எடுத்ததில் பிரிட்டிஷ் அதிகாரிகள் மிகவும் பயந்து, பணிவாகச் செயற்பட்டிருக்கிறார்கள் என்று பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சித்திருக்கிறார்கள்.
இலங்கையில் மனித உரிமைகள் மீறல்கள் விவகாரத்தில் பிரிட்டிஷ் அமைச்சர்கள் மிகவும் திடமான கொள்கை நிலைப்பாடை எடுக்க வேண்டும் என்று பிரிட்டனின் வெளிவிவகாரக் குழு கூறியுள்ளது.
2013 ஆம் ஆண்டு மாநாட்டை யார் நடத்துவது என்பது தொடர்பில் காமன்வெல்த் சமூகத்தில் கருத்துப் பிளவு ஏற்பட்டுள்ளதாக எமது பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
இலங்கையின் கொடூரமான உள்நாட்டுப் போர் 2009இல் முடிவுக்கு வந்தது முதல், அங்கு செய்தியாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் எதிரணிக் குழுக்கள் இலங்கை அரசாங்கத்தால் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படுவதாக விமர்சிக்கப்படுகின்றது.
ஆகவே இலங்கையில் நவம்பர் 15ஆம் திகதி காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டை நடத்துவதற்கான முடிவை எடுப்பதற்கு முன்னதாக பிரிட்டனின் வெளியுறவு அலுவலகம் கடுமையாக அதனை ஆராய்ந்திருக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்புகிறார்கள்.
கோர்டன் பிரவுண் பிரதமராக இருந்த வேளையில் பணியாற்றிய அமைச்சர்கள் இந்த முடிவை எடுப்பது தொடர்பில் மிகவும் பயத்துடனும், பணிவுடனும் செயற்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் இந்த விடயத்தில் ஒரு திடமான கொள்கை நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலையில், இலங்கையின் நடத்தையில் மேம்பாட்டை ஏற்படுத்துவதற்கான உறுதிமொழியை வலியுறுத்த வேண்டும் என்கிறார் பிரிட்டிஷ் நாடாளுமன்ற கீழவையின் வெளிவிவகாரக் குழுவின் தலைவரான ரிச்சர்ட் ஒட்டாவே .
தான் இந்த மாநாட்டை பகிஸ்கரிக்கப்போவதாக கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் கடந்த மாதம் அறிவித்திருக்கிறார். அத்துடன் நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் மாநாட்டை அடுத்து இரு வருடங்களுக்கு அமைப்பின் தலைமைப் பொறுப்பை இலங்கைக்கு வழங்குவதை அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் நிராகரிக்க வேண்டும் என்று மனித உரிமைக் குழுவான ஹியூமன் ரைட்ஸ் வாட்ஜ் கூறியுள்ளது.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/10/131017_colombomeetukmps.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.