Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். சமரில் 485 படையினர் பலி- 1,250 பேர் காயம்

Featured Replies

யாழ். சமரில் 485 படையினர் பலி- 1,250 பேர் காயம்: 88 போராளிகள் வீரச்சாவு

யாழ். தென்மராட்சி முகமாலைப் பகுதியிலிருந்து சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட வலிந்த தாக்குதலை முறியடித்து விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 485 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டனர்.

களமுனையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

485 படையினர் கொல்லப்பட்டும் 1,250 படையினர் காயமடைந்தும் களமுனையிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல்களில் 88 போராளிகள் வீரச்சாவைத் தழுவியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (11.08.06) படையினர் தமது வலிந்த தாக்குதலை பெருமெடுப்பில் மேற்கொண்டனர்.

இந்த வலிந்த தாக்குதல்களில் சிறிலங்காப் படையினரின் வலிந்த தாக்குதல் டிவிசன்களான 53 ஆம் டிவிசன் கொமாண்டோக்களும் 55 ஆம் டிவிசன் தாக்குதல் படையணிகளும் பயன்படுத்தப்பட்டன.

விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதல்களில் இந்த டிவிசன்கள் கடும் சேதங்களை சந்தித்தன.

வலிந்த தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு கடும் சேதங்களை சந்தித்த இந்த டிவிசன் படையணிகள் களமுனையிலிருந்து பின் நகர்த்தப்பட்டன.

முன்னரங்கில் ஏனைய படைப்பிரிவுகளின் பட்டாலியன்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஏ - 09 சாலை வழியே நேற்று வெள்ளிக்கிழமை முன்னகர்வை படையினர் மேற்கொண்ட போது விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் கடும் சேதங்களை சந்தித்து தமது நிலைகளுக்குப் பின்வாங்கினர்.

இந்த தாக்குதலில் புதிததாக கஜபா றெஜிமன்ட் படையணியை சிறிலங்காப் படை இறக்கியது. இந்த அணி நேற்றைய சமரில் கடும் இழப்புகளைச் சந்தித்தது.

கடந்த வெள்ளிமுதல் இதுவரையான வலிந்த தாக்குதல்களில் கடும் சேதங்களை சந்தித்துள்ள 53 ஆம் 55 ஆம் டிவிசன்கள்தான் சிறிலங்காப் படையின் களமுனையில் ஈடுபடுத்தப்பட்ட வலிந்த தாக்குதல் படையணிகளாகும்.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட 1500 பேர் களத்தில் இல்லை எண்டு சொல்லுங்கோ! முறியடிப்புத் தாக்குதல் தானே இது! சனத்தை கேடயமாக சிங்கள இராணுவம் கேடயமாகப் பாவிக்காவிட்டால், ஊரை விட்டே ஓடியிருப்பினம்

களத்திலேயே புதைத்ததும்....

விட்டோடி ஒழிந்ததும் என மெய்க்கணக்கு எக்கச்சக்கம்

பாவம் ரம்புக்க வெல்ல..மகிந்தவுக்காக வாயில் வந்த முதலாம் வகுப்பு கணக்கையே சொல்லிக்கொண்டு இருக்கிறார்.(1ம்1ம் 2ஆம்)

ஊதியத்துக்கும்.... எக்கச்சக்கமாக வழங்கப்படுகிற சலுகைகளுக்கும் ஆசைப்பட்டு துப்பாக்கி து}க்கியகியவன் நு}று பேர் சேர்ந்தாலும்.. தாய் மண்ணின் நியாயமான உரிமைக்காகவும்

தமிழின விடிவுக்காகவும் ஆத்மார்த்தமாக.. ஆக்ரோசமாக போராடுகின்ற ஒரு புலிவீரருக்கு ஈடாகுமா....

என்ன புதினத்தின்ரை செய்தியாளர்கள் cover எடுத்து ஓடி ஓடி எண்ணினவையாமே எல்லா களமுனைகளிலும் எத்தனை இழப்புகள் 2 பக்கமும் எண்டு?

என்ன டிவிசன் சண்டை பிடிக்குது எண்டு இவை வான்அலைகளை ஒட்டுக் கேட்டவையோ? இல்லாட்டி சரத்பொன்சேக்கா புதினத்துக்கு பிரத்தியேகமா அறிவிச்சவராமே சரியா அடிவேண்டிப் போட்டம் எண்டு? புதினத்துக்கும் பதிவுக்கும் 2006 இற்கான லங்காபுவத் விருது வழங்கவேணும்.

உப்பிடித்தான் IBC காறரும் 2 நாளைக்கு முதல் துள்ளி குதிச்சவை பலாலி காங்கேசன்துறை படைத்தளங்கள் முற்றுகையில இருக்கு எண்டு. றம்புக்வெல கொஞ்சம் பறவாயில்லை போல கிடக்கு இவை தரவளியோடு பாக்கேக்க.

ஆகா.. ஆகா.. என்னே கணக்கு.. என்னே கணக்கு..

:P :lol::lol:

கிட்டத்தட்ட 1500 பேர் களத்தில் இல்லை எண்டு சொல்லுங்கோ! முறியடிப்புத் தாக்குதல் தானே இது! சனத்தை கேடயமாக சிங்கள இராணுவம் கேடயமாகப் பாவிக்காவிட்டால், ஊரை விட்டே ஓடியிருப்பினம்

கிட்டத்தட்ட 2 பற்றாலியன்கள் காலி...! காயப்பட்டவர்கள் திரும்பி படையணிக்கு வருவது மிகக்குறைவு.... அப்படி குணமாகி வந்தாலும் அவர்கள் இலகு காலாட்படைக்குத்தான் அனுப்ப படுவார்கள்... அதாவது முண்றேறி தாக்க அவர்கள் தயாராக இருப்பதில்லை... அரசாங்கம் கொடுக்கும் இளப்பீட்டு தொகையை பெறுக்கொண்டு விலகவோ அல்லது குறைந்த சம்பளத்துடன் இலகுகாலாட்படையில் இருப்பத்தான் விரும்புவார்கள்...

வேண்டும் எண்றால் பாருங்கோ விரிவில் அரசாங்கள் புதிய ஆள்சேர்ப்பை ஆரம்பிக்கும்....!

ஆகா.. ஆகா.. என்னே கணக்கு.. என்னே கணக்கு..

:P :lol::lol:

500 பேரில் 1400 பேரை கொண்ற தை விடவா...???

ஒட்டு மொத்தமாகவே 5000 புலிகள்தான் எண்டு சொன்னவை மாவிலாற்றிலும் மூதூரிலுமாக சேர்த்து 2000 புலிகளை கொண்றனீங்கள். இப்ப 1400 வரையான புலிகள் கொண்றீர்கள்

ஒட்டு மொத்தாக 3400 புலிகள் பலி இனியென்ன வன்னீக்கை, மட்டக்களப்பில, திருகோணமலையில் எல்லாம் போய் பரவி இருக்கிற அங்காங்கே தப்பி மிச்சம் இருக்கிற 1600 பேரையும்... பிடிக்கிறதுதானே..??? இன்னும் என்ன கவலை..??? :roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

அதை விட கறுணா பிரிந்தபோது அவரோடு, 5000 பேர் இருந்தவையாம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன புதினத்தின்ரை செய்தியாளர்கள் cover எடுத்து ஓடி ஓடி எண்ணினவையாமே எல்லா களமுனைகளிலும் எத்தனை இழப்புகள் 2 பக்கமும் எண்டு?

என்ன டிவிசன் சண்டை பிடிக்குது எண்டு இவை வான்அலைகளை ஒட்டுக் கேட்டவையோ? இல்லாட்டி சரத்பொன்சேக்கா புதினத்துக்கு பிரத்தியேகமா அறிவிச்சவராமே சரியா அடிவேண்டிப் போட்டம் எண்டு? புதினத்துக்கும் பதிவுக்கும் 2006 இற்கான லங்காபுவத் விருது வழங்கவேணும்.

உப்பிடித்தான் IBC காறரும் 2 நாளைக்கு முதல் துள்ளி குதிச்சவை பலாலி காங்கேசன்துறை படைத்தளங்கள் முற்றுகையில இருக்கு எண்டு. றம்புக்வெல கொஞ்சம் பறவாயில்லை போல கிடக்கு இவை தரவளியோடு பாக்கேக்க.

குறுக்ஸ்!

உங்களுக்கு ஒரு விடயத்தைச் சொல்லாம்! புதினம் நம்பக் தன்மை குறைந்தது என்றால், நீங்கள் புதிதாக ஒரு நம்பத் தன்மை கூடிய தளம் ஒன்றைத் தொடங்கி, ஊரில் இருந்து செய்திகளை எடுத்துத் தாங்கோ!

நாங்கள் அதை நம்பிப் படிப்பம். விமர்சனம் சொல்வதில் தமிழனுக்கு ஒரு தனிப்புகழ் உண்டு. ஆனால் அதிலும் இது ஓவர்;! மற்றவர்களை விட நீங்கள் நம்பக்தன்மை கூடியவர். விரைவில் அதைத் தாங்கோ! ஒரு கோட்டை அழிக்காமல் பெரிய கோடாகப் போட்டு, உண்மைச் செய்திகளைத் தாங்கோ!

500 பேரில் 1400 பேரை கொண்ற தை விடவா...???

நீங்கள் சொல்லும் கணக்கை விடவா????????????????

:P :(:lol:

ஆகா.. ஆகா.. என்னே தத்துவம்.. என்னே தத்துவம்.. ஒருகோட்டை அழிக்காமல் மறுகோட்டை வரைந்து.. என்னே தத்துவம்.. என்னே தத்துவம்..

:P :lol::lol:

ஒரு கோட்டை அழிக்காமல் பெரிய கோடாகப் போட்டு, உண்மைச் செய்திகளைத் தாங்கோ!

நீங்கள் சொல்லும் கணக்கை விடவா????????????????

:P :(:lol:

முல்லை தீவில் உங்கள் ஆக்களின் அழுகின உடல்களை லொறிகளில் செஞ்சிலுவை சங்கம் ஏற்றிக்கொண்டு போய் 950 உடல்களை கொக்காவிலிலை போட்டுட்டு போக சனம் காட்டு விறகுகளையும் ரயரையும் போட்டு எரிச்சதை பாத்தானாங்கள்... அப்ப உங்கட அரசாங்கம் வெறும் 55 பேர்தான் இறந்தவை எண்டு கணக்கு சொல்லிச்சு....! முல்லைத்தீவும் இப்பவும் எங்களின் கட்டுப்பாட்டிலை எண்டும் சொன்னவை....! நாங்கள் அதை உடனேயே நம்பீட்டம்...!

அதுசரி முகமாலை இராணுவ காவல் அரண்களை கைப்பற்றி உசன் வரைக்கும் போய் சண்டை நடக்குது இராணுவத்தாலை ஏன் கைப்பற்ற முடியவில்லை அதுவும் வெறும் 106 பேர்தான் இறந்தவை புலிகள் 1400 இறந்தவை எண்டால்...??? கிளாலி முகமாலைக்கு கிட்டவும் இல்லை 2 கிலோமீற்றராவது போகவேணும்....! அப்பிடி ஆமி முகமாலையில எண்டால் எப்பிடி கிளாலீல சண்டை...

தூயவன் எங்களுக்கு இப்ப தேவையில்லை எந்த டிவிசன் அடிபடுது எந்த டிவிசன் நித்திரை கொள்ளுது எத்தின டாங்கிக்கு காத்துப் போட்டுது எண்ட கதைகள். இந்த தகவல்கள் தற்போது எங்களது போராட்டம் இருக்கிற நிலைக்கு முற்று முழுதாக தேவை அற்றது அர்த்தம் அற்றது. எந்த தளம் சுற்றிவளைக்கப்பட்டிருக்கு எத்தின இராணுவத்திற்கு காயம், உலங்குவானுர்தி காணமல் போட்டுது எண்ட விண்ணாணங்களும் அல்ல.

ஒன்றை வடிவாக நீரும் மற்றய துள்ளிக் குதிக்கிறவையும், லங்கபுவத்திற்கு போட்டியாக தேசிய ஆதரவு என்ற கோதாவில் புனைக்கதை சோடிக்கிற ஊடகங்களும் தெரிந்து கொள்ளுங்கோ இது ஈழப்போர் -4 அல்ல. இதை ஈழப்போர் 4 ஆக சித்தரிக்க விரும்பவது யார் என்ற விளக்கம் இல்லாட்டி தயவு செய்து ஊடகம் நடத்தாதேங்கோ.

அது மாத்திரமல்ல ஈழப்போர் 1,2,3 போல் அல்லாது விடுதலைப் புலிகள் ஒரு நிழல் அரசை நடத்துபவர்கள் என்ற நிலைப்பாட்டில் இருந்து சர்வதேசம் அவர்களை பார்க்கிறது. அந்த நிழல் அரசு முழு அங்கீகாரத்தை பெற வேண்டி அவசியம் இருக்கிறது.

யாழ்பாணத்தில் உள்ள மக்களின் உண்மை நிலை என்ன? தமிழர் புனர்வாழ்வு கழகம் இடம் பெயர்ந்துள்ள மக்களிற்கு உதவி வழங்கள் புலம் பெயர்ந்த மக்களிடம் உதவி கேக்கிறது. இவை பற்றி செய்திகளிற்கு இல்லாத முக்கியத்துவம் எந்த டிவிசன் அடிபடுது போன்றவற்றிற்கு என்பது முழுக்க முழுக்க தவறானது பொறுப்பற்றது.

இங்கு நானோ இல்லை வேறு ஒருவரோ தளம் நடத்தி இந்த பிரச்சனையை தீர்க்க முடியாது. ஏற்கனவே ஊடகங்கள் என்ற பெயரை எடுத்தவர்கள் அதற்கான முதலீட்டை செய்தவர்கள் தமக்குரிய பணியை காலத்தின் தேவை அறிந்து செய்ய வேண்டும். இன்று நாங்கள் எல்லோரும் ஒரு தேசியமாக வடிவமமெடுத்து இருக்கிறம். அதற்கேற்றவகையில் எமது ஊடகங்கள் சர்வதேசத்தின் நம்பிக்கையை வெல்லக்கூடிய மாதிரியான பணியை செய்ய வேணும்.

வரலாற்றில் முதல் முறையாக விடுதலைப் புலிகள் இராணுவப் பேச்சாளர் என்று ஒருவரை நியமித்தது தமிழர் தரப்பு செய்திகள் முரண்பாடுகள் இன்றி கட்டுப்பாடான முறையின் தேவையான காலங்களின் வெளிவர வேண்டும் என்று. கண்ட பரதேசியும் தொலைபேசியாலை கதைச்சுப் போட்டு களமுனை செய்திகள் என்று கற்பனை கட்டுறதை முதல் நிறுத்த வேணும்.

இப்படியான செய்திகளை கவனம் எடுக்க வேணும்:

http://www.tamilcanadian.com/news/redirect...p?l=en&art=6982

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.. ஆகா.. என்னே தத்துவம்.. என்னே தத்துவம்.. ஒருகோட்டை அழிக்காமல் மறுகோட்டை வரைந்து.. என்னே தத்துவம்.. என்னே தத்துவம்..

:P :lol::lol:

அது உமககும் புரிந்தால் சரி!

நாங்களும் வளர்கின்றோமே என்று சொல்லிக் கொண்டு, ஆக்களைப் கொண்டு போய்ப் பயிற்சி கொடுப்பதும், இராணுவத்தோடு சேர்ந்து, மக்களுக்கு எதிராகச் செய்வதையும் நினைவில் கொண்டால் சரி!

தமிழீழம் ஒரு தீர்வு என்று புறப்பட்டு விட்டு, எதிரியோடு போய் ஒட்டி, எலும்புநக்கிகளாக இருக்கின்ற ஆட்கள் புரிந்தால் சரி!

தமிழீழம் தான் தீர்வு என்று வெளிக்கிட்டவை, மறு கோட்டை அழிக்காமல் தத்துவம் புரிந்திருந்தால், தாங்களும் சிங்கள இராணுவத்திற்கு எதிராகப் போராடியிருக்க வேணும். பிறகென்ன மயிருக்கு, ஆதிக்க சக்திகளோடும், இலங்கையரசோடும் ஒண்டிப் பிழைக்கினம்! :wink:

தூயவன் எங்களுக்கு இப்ப தேவையில்லை எந்த டிவிசன் அடிபடுது எந்த டிவிசன் நித்திரை கொள்ளுது எத்தின டாங்கிக்கு காத்துப் போட்டுது எண்ட கதைகள். இந்த தகவல்கள் தற்போது எங்களது போராட்டம் இருக்கிற நிலைக்கு முற்று முழுதாக தேவை அற்றது அர்த்தம் அற்றது. எந்த தளம் சுற்றிவளைக்கப்பட்டிருக்கு எத்தின இராணுவத்திற்கு காயம், உலங்குவானுர்தி காணமல் போட்டுது எண்ட விண்ணாணங்களும் அல்ல.

குறுக்ஸ் எனக்கு ஒரு சந்தேகம்... :roll: :roll: :roll:

இலங்கை அரசாங்கம் பிரச்சாரம் எண்ற ரீதியில் எதுக்காக ஒரு பேச்சாளரை நிறுத்தி உலக ஊடகங்களுக்கு செய்திகளை திரித்து கொடுக்கின்றது...???? சிங்கள அரசு வெல்வதாக காட்டுவதன் இரகசியம் தான் என்ன...??? புலிகளை தோற்கடிப்பதாய் காட்டும் விண்ணானங்கள் அவர்களுக்கு எந்த பலனையும் கொடுப்பதில்லையா...?? அப்படி அவர்கள் புலிகளின் இளப்புக்களை கூட்டிக்காட்டுவதால் புலிகளுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படுவதில்லையா...??? :roll: :roll: :roll:

அது உமககும் புரிந்தால் சரி!

நாங்களும் வளர்கின்றோமே என்று சொல்லிக் கொண்டு, ஆக்களைப் கொண்டு போய்ப் பயிற்சி கொடுப்பதும், இராணுவத்தோடு சேர்ந்து, மக்களுக்கு எதிராகச் செய்வதையும் நினைவில் கொண்டால் சரி!

தமிழீழம் ஒரு தீர்வு என்று புறப்பட்டு விட்டு, எதிரியோடு போய் ஒட்டி, எலும்புநக்கிகளாக இருக்கின்ற ஆட்கள் புரிந்தால் சரி!

தமிழீழம் தான் தீர்வு என்று வெளிக்கிட்டவை, மறு கோட்டை அழிக்காமல் தத்துவம் புரிந்திருந்தால், தாங்களும் சிங்கள இராணுவத்திற்கு எதிராகப் போராடியிருக்க வேணும். பிறகென்ன மயிருக்கு, ஆதிக்க சக்திகளோடும், இலங்கையரசோடும் ஒண்டிப் பிழைக்கினம்! :wink:

இந்த சொறிநாய்க்கு எல்லாம் மரியாதையா சொன்னா விளங்காது அதுக்கு சொல்ல ஒரு பாணி ஒரே ஒரு பாணி இருக்கு... அப்பிடி சொல்லுங்கோ விளங்கிக்கொள்ளும்... அந்த நாய்...!

தலா, நீங்கள் சொல்லிற பாசிச யேர்மனியின் பரப்புரை 2ஆம் உலகயுத்தத்தில் நடந்தது. இப்ப ஈழப்போர்4 நடக்குது எண்டு இக்பால் அத்தாஸ் தான் மூக்காலை அழுறார் ஆனால் யார் பிரகடனப்படுத்தப்படத்தினது? பிரகடனப்படுத்தப்படாத ஒன்றில் இராணுவ வெற்றி தோல்விகள் பற்றி பரந்த அளவில் பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவை இருக்கா? மேற்கத்தேய இராஜதந்திரி வேறை கவலைப்படுறார் முன்னரங்க நிலை மாறவில்லை இருந்த இடத்திலேயே இருந்து சுடுபடுகினம் 1ஆவது உலகயுத்தம் மாதிரிர எண்டு.

அப்பிடி எண்டால் அதுக்கும் பிறகு நடந்த ஈராக் போரில் "கொமிக்கல் அலி" எண்டு மேர்குலகால் வர்ணிக்கப்பட்டவர் சொன்ன செய்திகளை என்ன சொல்கிறீர்கள்...

அவர்தான் இவர்... "கொமிக்கல் அலி"

baghdad-bob.jpg20030414090055minister.jpg

இவர் மட்டும் அல்ல அமெரிக்காவும் நேற்று இஸ்ரேலும் கூட தங்களின் வெற்றியை மட்டும் தான் பறைசாற்றின.... அதுக்கு காரணமும் இருந்தது...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.