Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர் கிட்டு பூங்காவையும் இராணுவமுகாமாக்க அபகரிக்க முயற்சி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கிட்டு பூங்காவையும் இராணுவமுகாமாக்க அபகரிக்க முயற்சி!

25 அக்டோபர் 2013




kittu%20park_CI.jpg


யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள கிட்டு பூங்காவையும்இ நிரந்தர இராணுவ முகாம் அமைப்பதற்கு வழங்குமாறு இராணுவத்தினர் நல்லூர் பிரதேச செயலகத்திடம் கோரியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளங்கள் தளபதிகளின் வீடுகள் நினைவுச் சின்னங்கள் என்பவற்றைக் கையகப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைவாக சுவீகரிப்பு நடவடிக்கைகள் யாழ். குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
இவ்வாறானதொரு நிலையில் பருத்தித்துறை வீதியில் நல்லூர் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள 8 பரப்பு விஸ்தீரணம் கொண்ட கிட்டு பூங்காவை இராணுவ முகாம் அமைப்பதற்குக் கையளிக்குமாறு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சினால் நல்லூர் பிரதேச செயலகத்துக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
 
தற்போது குறித்த காணியில் யாழ்.மாநகர சபையினால் நவீன பூங்கா ஒன்று அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியிலுள்ள யாழ். மாநகர சபையே இதனை நிர்வகித்து வருகிறது. 

இவ்வாறானதொரு நிலையில் இராணுவத்தின் 27ஆவது அணியினருக்குக் கிட்டு பூங்காவை வழங்குவது தொடர்பில் யாழ். மாநகர சபையின் அபிப்பிராயத்தை நல்லூர் பிரதேச செயலகம் கோரியுள்ளது.
 
 
 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98108/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாநகர சபை, ஒட்டுக் குழுக்களின்... கைப்பிடியில், சிக்கியுள்ளதால்...
எதனையும்... விற்கத் தயங்க மாட்டார்கள்.
நல்லூர் கோவிலும்..., யா.மா.ந.க. பிரதேசத்திற்குள், வருவதால்...
அதனையும்... விலை பேசி..., விற்று விடுவார்கள்.
புலிகளால்... திரத்தப் பட்ட மக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மாகாணசபை கூட்டமைப்பிடமும் மாநகரசபை மகிந்தவிடமும்
இருப்பதால் சில சிக்கல்கள் விக்கல்கள் வரத்தான் செய்யும் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிட்டு பூங்காவை கையகப்படுத்தி அழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: ஐங்கரநேசன்
29 அக்டோபர் 2013


வடக்கில் இராணுவத்தினரின் பிரசன்னம் இருக்கும் வரை  சிவில் நிர்வாகத்தில் தடை இருந்து கொண்டே இருக்கும். விடுதலைப்புலிகள் பயன்படுத்தினார்கள் என்பதற்காக கிட்டுப்பூங்கா உட்பட அனைத்தையும் இராணுவத்தினர் கையகப்படுத்துவது  ஏற்றுக்கொள்ள முடியாது என்று  வட மாகாண விவசாய அமைச்சர்பொ. ஐங்கரநேசன் தெரிவித்தார்

வடமாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களை வரவேற்கும் முகமாக நல்லூர் பிரதேச சபையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நல்லூரிலுள்ள கிட்டுப் பூங்காவை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. எமது இளம் சிறார்களுக்கு மனநிறைவான பயிற்சியை பொழுதுபோக்கைக் கொடுக்கவல்லதாக  கிட்டுப் பூங்கா என்று சுட்டிக்காட்டினார்.

அதனை விடுதலைப்புலிகள் முன்னர் பயன்படுத்தினர் என்பதற்காக அது உட்பட வன்னியில் கூட புலிகளின் பயன்பாட்டில் இருந்த இடங்களை கையகப்படுத்துவதை ஏற்றுக் கொள்ளமுடியாது.இத்தகைய சுயநலன்களுக்காக இயற்கைச் சூழல்களை அழிப்பதை ஏற்கமுடியாது என்றும் தெரிவித்தார்.

பழைய பூங்காவில் அரச அதிபருக்கு மட்டும் தங்குமிடம் அமைக்க முடியுமாக இருந்தது. ஆனால் ஏனைய மரங்கள் அனைத்தையும் அழித்து ஒழித்து ஆளுநர் தனக்கு அலுவலக தங்குமிடமும் அமைத்து இயற்கை வளத்தை அழித்து விட்டார். அந்தப் பூங்காவில் முன்னர் சூழல் சிறப்பாக இருந்தது.என்றார்.  
 
 
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98261/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.