Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழர்கள் எமது பிரச்சினைகளை சர்வதேச தலைவர்களுக்கு எடுத்துரைக்கின்றனர் - அரியநேத்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்கள் எமது பிரச்சினைகளை சர்வதேச தலைவர்களுக்கு எடுத்துரைக்கின்றனர் - அரியநேத்திரன் photo.png

[saturday, 2013-10-26 06:55:38]
ariyanethiran-batti-seithy-3-20131026-15

இலங்கையில் ஏற்பட்ட கொடூர யுத்தம் காரணமாக எமது இனத்தின் சகோதர சகோதரிகள் புலம்பெயர்ந்து வேறு நாடுகளுக்கு சென்று தங்களது உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய நிலை உருவாகியது. இதன் நிமிர்த்தம் இந்ந நாடுகளுக்குச் சென்று குடியேறிய மக்கள் அந்த நாடுகளின் மொழிகளைக் கற்றுக்கொண்டு எமது நாட்டின் பிரச்சினையை அந்த நாட்டின் தலைவர்களுக்கு தெரியப்படுத்திக்கொண்டு இருக்கின்றார்கள் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார். இன்றைய உலகில் ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்ந்து நேற்று கல்முனையில் British college திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

  

தொடர்ந்து இவர் உரையாற்றுகையில்;

எமது தாயக நிலங்களில் இருந்து தற்போதைய காலகட்டத்தில் புலம்பெயர்ந்து வாழுகின்ற எமது உறவுகள் எம்மினத்திற்காக அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அதன் அடிப்படையிலேதான் எமது தாய்மொழி தமிழாக இருந்தாலும் அந்த நாடுகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட மொழிகளைக்கற்று அதனூடாக எமது நாட்டிலே தமிழ் மக்களுக்கு இன்று உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் அதற்கான அரசியல் தீர்வுகள் தேவை என்பதனையும் அந்தந்த நாடுகளில் உள்ள தலைவர்களுக்கு தகுந்த நேரத்தில் விளக்கம் கொடுத்து நிற்கின்றார்கள்.

இன்றைய உலகமயமாக்கல் தொடர்பாக நாம் ஒவ்வொருவரும் மொழிகளைக் கற்றுக்கொண்டே இருத்தல் வேண்டும். அதன் ஒருசெயற்பாடாகவே இன்று இந்த கல்லூரியின் திறப்பு விழா அமைந்திருப்பது சாலப்பொருத்தமானதாகும். உலகத்திலே மொத்தமாக 6600 மொழிகள் இருக்கின்றது. அதிலும் பேச்சு மொழிகளாக 2261 மொழிகள் காணப்படுகின்றது. அண்மையில் அமெரிக்காவில் உள்ள மொழியியலாளர்கள் மேற்கொண்ட மொழி ஆய்வின் அடிப்படையில் ஆங்கிலம் 3வது இடத்திலும், தமிழ் 17 வது இடத்திலும், சிங்களம் 64வது இடத்திலும் உள்ளது என ஆய்வாளர்கள் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.

நாங்கள் அனைவரும் தாய்மொழியில் சிந்திக்கக் கூடியவர்களாக இருப்பதன் மூலம் பலவிடயங்களை சாதிக்க முடியும். இதனை வெளிப்படுத்த ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்வோமாக இருந்தால் இலகுவாகவும், சிறப்பாகவும் எமது எதிர்காலத்தினை அமைத்துக் கொள்ள முடியும். அப்போதுதான் எங்களது இலட்சிய தாகம் நிறைவேறும். இந்த நாட்டைப் பொறுத்தவரையில் வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. ஆனால் அவர்களுக்கான தொழில்களை பெற்றுக்கொள்வது மிகவும் சிரமமான காரியமாகவே காணப்படுகின்றது.

காரணம் கலைப்பீடங்களில் அதிகளவான மாணவர்கள் பட்டங்களை முடிப்பதனால் தொழில் அறிவின்மை காரணமாகவும், ஆங்கில அறிவின்மை காரணமாகவும் நல்ல தொழில் வாய்ப்புக்களை பெறமுடியாத நிலையினை காணமுடிகின்றது. தற்போதைய காலச் சூழலுக்கு ஏற்றாற்போல் தங்களை மாற்றி அமைத்துக்கொண்டு தொழில் வாய்ப்புக்களை பெறும் கல்வியினை கற்பதன் மூலம்தான் நாமும் எதிர்காலச் சவால்களுக்கு முகங்கொடுத்து வாழக்கூடியவர்களாக மாறமுடியும். எமது 62 வருடகால போராட்டத்தில் அதிக இழப்புக்களை எதிர்நோக்கியிருக்கின்றோம். அதைவிடவும் தற்போது கலாசார சீர்கேடுகளையும், ஒழுக்க சீர்கேடுகளையும் எதிர்நோக்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.

கல்வியை தொடர்ந்து கற்றுக்கொண்டு நல்லொழுக்க விழுமியங்களை கடைப்பிடிப்பதன் மூலமே தாங்கள் சமூகத்தில் நல்லவர்களாக வல்லவர்களாக வாழ முடியும். அதைவிடுத்து வெறுமனே ஒழுக்கமில்லாத கல்வியைக் கற்பதனால் எவருக்கும் எந்தப் பயனும் வந்துவிடாது. பாடசாலையில் கற்பதனாலோ பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுவதனாலோ மாத்திரம் போதாது. நல்ல ஒழுக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம்தான் தான்கற்ற கல்வியின் மூலம் சிறந்த பயனைப் பெறமுடியும்.

தற்போது எமது வடகிழக்கைப் பொறுத்தவரையில் நாளாந்தம் எம்மவர்கள் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி இருக்கின்றது. சிறுவர்,பாலியல் துஸ்பிரயோகங்கள் நாளாந்தம் ஆங்காங்கே இடம்பெற்றுக்கொண்டு வருவதாக புள்ளிவிபரங்களின் மூலம் அறியமுடிகின்றது. போர் ஓய்விற்கு வந்து 3 வருடங்களுக்குப் பின்னர் தமிழ் இளையோர்கள் மத்தியில் ஒழுக்க சீர்கேடுகள் மலிந்து காணப்படுவதாக அண்மைக்காலமாக ஊடகஙகளில் செய்திகள் வெளிவந்த வண்ணமே உள்ளது.

எனவேதான் இனிவரும் காலங்களில் சிறந்த ஒழுக்கமுள்ள கல்வியைக் கற்று நவீனகால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய விதத்தில் எங்களை நாங்களே பாதுகாக்க வேண்டியவர்களாக மாறவேண்டும் எனவும் கூறினார்.

 

ariyanethiran-batti-seithy-1-20131026-34

 

ariyanethiran-batti-seithy-2-20131026-34

 

ariyanethiran-batti-seithy-3-20131026-34

 

ariyanethiran-batti-seithy-4-20131026-34

 

ariyanethiran-batti-seithy-5-20131026-34

 

ariyanethiran-batti-seithy-6-20131026-34

 

 

 

நன்றி - செய்தியிணையம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.