Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் பொது அறிவுப் போட்டி - யாழ் களம் 2013

Featured Replies

தேசிய தலைவர் சிதம்பராக் கல்லூரியில் கல்வி கற்றதாக அவருக்கு கல்வி கற்பித்தவரும் யாழ் இந்துக்கல்லூரி ஆசிரியருமாக இருந்த ஜெகானந்த குரு அவர்கள் அடிக்கடி சொல்லுவார் என்று அவரிடம் கல்வி கற்ற மாணவர்கள் குறிப்பிட அறிந்திருக்கிறோம். அவரிடம் கல்வி கற்ற பழைய மாணவர்களுக்கு இது தெரிஞ்சிருக்கும். ஆனால் தேசிய தலைவர் மட்டக்களப்பு.. மற்றும் கொழும்பிலும் கல்வி கற்றதாக குறிப்புகள் உள்ளன. அதனால்  அவரின் ஆரம்பக் கல்வி பற்றி ஒரு தெளிவில்லாமல் இருக்கிறது. இந்த வினா அதற்கான தெளிவைக் கொண்டு வரும் என்று நம்புகிறோம். நன்றி புயல்.

 

பாலர் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை மேதகு வே. பிரபாகரன் கல்வி கற்ற பாடசாலை மட்டக்களப்பு

 

 

தாமரைக்கேணி அரசடி மகாவித்தியாலயம்

 

 

நான்காம் வகுப்பிலிருந்து யாழ். வல்வை சிதம்பராக் கல்லூரி

 

தலைவருக்குத் தேசிய உணர்வை ஊட்டிய பாடசாலை ஆசிரியரின் பெயர் வேணுகோபால்.

வாழ்க வளமுடன்

  • Replies 500
  • Views 39.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் புயல்.

விடுதலை புலிகளால் முதல் முதலில் மாமனிதர் யாருக்கு கொடுக்கப்பட்டது ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை புலிகளால் முதல் முதலில் மாமனிதர் யாருக்கு கொடுக்கப்பட்டது ?

 

எங்கள் மதிப்புக்கும் அன்புக்கும் உரிய எங்கட கோட் பாதர் என்று சொல்லத்தக்க பேராசிரியர் துரைராஜா அவர்களுக்கு...!

எங்கள் மதிப்புக்கும் அன்புக்கும் உரிய எங்கட கோட் பாதர் என்று சொல்லத்தக்க பேராசிரியர் துரைராஜா அவர்களுக்கு...!

 

சரியான பதில் நன்றி நெடுக் அண்ணே .

அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு தலைவர் கொடுத்த கௌரவ பெயர் ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேசத்தின் குரல்.

தேசத்தின் குரல்.

 

சரியான பதில் நன்றி நெடுக் அண்ணே .

 

ஒப்பிரேசன் பூமாலை நடவடிக்கை எந்த படையால் எங்கு செய்யப்பட்டது ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்துக்கு வானில் வந்த இந்திய  படைகளால் யாழ் குடாநாட்டில் விமானங்களில் இருந்து.. பொதிபோட்ட  நிகழ்வு.

சரியான பதில் நன்றி நெடுக் அண்ணே .

 

ஒப்பிரேசன் பூமாலை நடவடிக்கை எந்த படையால் எங்கு செய்யப்பட்டது ?

 

இந்தியா யாழ்ப்பாணத்திற்கு உணவுப் பொட்டலம் போட்ட நடவடிக்கையின் பெயர் பூமாலை.

 

வாழ்க வளமுடன்

சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் பத்து ஆண்டுகள் நிறைவை ஒட்டி வெளிவந்த வரலாற்று ஆவண நூலின் பெயர் என்ன?

நெருப்பாற்று நிச்சலில் 10 ஆண்டு .


சாள்ஸ் அன்ரனி படையணியின் சிறப்பு தளபதிகளின் பெயர்களை முடிந்தளவு பட்டியல் இடுங்கள் உறவுகளே .

ஈழத்துக்கு வானில் வந்த இந்திய படைகளால் யாழ் குடாநாட்டில் விமானங்களில் இருந்து.. பொதிபோட்ட நிகழ்வு.

ஜூன் 04, 1987 இலங்கையின் இனப்பிரச்சனையில் புதியதொரு அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தது. இந்திய விமானப்படை விமானங்கள் இலங்கை அரசின் அனுமதியின்றி இலங்கையின் விமானப் பரப்புக்குள் நுழைந்து போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கென உணவுப் பொதிகளை வானில் இருந்து வீசின. "ஒப்பரேசன் பூமாலை" என அழைக்கப்பட்ட இந்த நடவடிக்கை தமிழ் மக்களுக்கான "மனிதாபிமான உதவி" என்ற பெயரில் இடம்பெற்றது. இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட "ஒப்பரேசன் பூமாலை" இலங்கையின் இறையாண்மையை மீறிய ஒரு செயலாக அமைந்திருந்ததுடன் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசுக்கு நேரடியாக விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கையாகவும் அமைந்திருந்தது. இதன் மூலம் தமிழ் மக்களின் ஆபத்பாண்டவனாக இந்தியா தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. இந்தியா குறித்து தமிழ் மக்கள் கொண்டிருந்த கனவுகள் நனவானது போன்றதொரு உணர்வு தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்டது. ஆனால் தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்ததுபோல் விடயங்கள் எதுவும் நடந்தேறிவிடவில்லை.

Edited by சிறி

சாள்ஸ் அன்ரனியின் சிறப்பு தளபதிகளில் வீரச்சாவடைந்து உரிமை கோரப்பட்டவர்கள்... 

 

பிரிகேடியர். பால்ராஜ் 

மேஜர். கிண்ணி. ( மிகச்சிறிய காலம் )

லெப் கேணல் .கில்மன்

லெப் கேணல் சேகர்

லெப். கேணல். ராகவன்

லெப் கேணல் வீரமணி. 

 

மற்றும் ( இவர்களின் நிலை தெரியவில்லை...  நலமாக இருக்க வேண்டும் எண்று எண்ண தோண்றுகிறது...) 

 

நகுலன்

பல்லவன்

கோபி. 

 

இன்னும் பலர் இருக்கலாம் ஞாபகம் இல்லை... 

 

 

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

 லெப்.கேணல் அமுதாப் 

நன்றி தயா அண்ணே நுணுவிலான் பாராட்டுக்கள் .

 

லெப்டினன் கேணல் ராஜசிங்கன்.

 

நெருப்பாற்று நிச்சலில் 10 ஆண்டு .

சாள்ஸ் அன்ரனி படையணியின் சிறப்பு தளபதிகளின் பெயர்களை முடிந்தளவு பட்டியல் இடுங்கள் உறவுகளே .

 

மிகவும் சரியான பதில்

அஞ்சரனுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

லெப். கேணல் நியூட்டன் (ஒட்டுசுட்டான் படைத்தள மோதலில் வீரமரணம்)

லெப். கேணல் ஜஸ்ரின் (மணலாறு வீரச் சமரில் வித்தானவர்)

இவர்களும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியைச் சேர்ந்தவர்களென நினைக்கின்றேன்

வாழ்க வளமுடன்

முதன் முதலில் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரே சயனைட் குப்பியைப் பகிர்ந்து தற்கொடையாற்றிய

 

இரு  மாவீரர்கள் யார்? எந்த ஆண்டு நடைபெற்றது? (ஆண்டு; மாதம்; திகதி தந்தால் மிகவும் நல்லது)

Edited by Puyal

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவரின் 59 வது பிறந்த நாளை மின்னிட்டு அவரை கெளரவிக்கும் வகையில் தபால் தலைவெளியிட்டுள்ள நாடு எது..??!

பிரான்ஸ்

 

இம்முத்திரையைத் தவிர்த்து இன்னும் மூன்று முத்திரைகள் தமிழீழ விடுதலைப் புலிகளைச் சிறப்பித்து

 

வெளிவந்துள்ளன. மொத்தமாக நான்கு முத்திரைகள்

 

வாழ்க வளமுடன்

 

இது சரியா?

Edited by Puyal

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ்

 

இம்முத்திரையைத் தவிர்த்து இன்னும் மூன்று முத்திரைகள் தமிழீழ விடுதலைப் புலிகளைச் சிறப்பித்து

 

வெளிவந்துள்ளன. மொத்தமாக நான்கு முத்திரைகள்

 

வாழ்க வளமுடன்

 

இது சரியா?

 

தேசிய தலைவரைக் கெளரவித்து (2013) முத்திரை வெளியிட்டுள்ள நாடு பின்லாந்து. இதனை வெளியிட உழைத்த தமிழ் உறவுக்கும் நன்றி.

 

mqdefault.jpg

 

நன்றி உங்கள் பங்களிப்புக்கு புயல்.

Edited by nedukkalapoovan

முதன் முதலில் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரே சயனைட் குப்பியைப் பகிர்ந்து தற்கொடையாற்றிய

 

இரு  மாவீரர்கள் யார்? எந்த ஆண்டு நடைபெற்றது? (ஆண்டு; மாதம்; திகதி தந்தால் மிகவும் நல்லது)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் தின உரையில் தேசிய தலைவர் முன் வைக்கும் முக்கிய விடயங்கள் எவை..??!

மாவீரர் தின உரையில் தேசிய தலைவர் முன் வைக்கும் முக்கிய விடயங்கள் எவை..??!

 

மாவீரருக்கான வணக்கம், அரசியல்  நிலைமை, மக்களுக்கான செய்தி.  அவரது செய்திகள் மறைமுகமாகவே இருக்கும்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரியான விடை. சிறப்புப் பாராட்டுக்கள் தமிழிச்சி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வினாவும் விடையும்:

 

மாவீரர் தின நிகழ்ச்சி ஒழுங்குகள் எவை..??!

 

france_maveerar_001.jpg?itok=3I3k672F

 

27ஆந் திகதி , இன்றைய நாளில் தாயகத்திலும், உலக நாடுகளிலும் மக்கள் எங்கள் மாவீரச் செல்வங்களுக்கு சுடரேற்றி வணங்க தயாராகிக்கொண்டு இருக்கின்றார்கள்.

நினைவொலி எழுப்பலும் சுடரேற்றலும்

இன்று தமிழீழ தாயகம் மற்றும் தமிழகத்தில் . மாலை 6.05 மணிக்கு  சமகாலத்தில் அனைத்து ஆலய தேவாலய மணிகளும் ஒரு மணித்துளி நேரம் ஒலி எழுப்பும். அந்த நேரத்தைத் தொடர்ந்து எல்லா மக்களும் அகவணக்கம் செலுத்துவார்கள்.

துயிலுமில்ல மைதான நடுவில் – பீடத்தில் சற்று உயரமான பெரிய சுடர் நாட்டப்பட்டிருக்கும். மக்கள் வெள்ளம் உணர்வுக் கொந்தளிப்போடு மைதானத்தைச் சுற்றி நின்று தியாகங்களை நெஞ்சில் நினைத்திடத் தீச்சுடர் ஏற்றப்படும். அமைப்பின் முதன்மையானவர்கள் மத்திய சுடரை ஏற்ற மாவீரரின் பெற்றோர் உரித்துடையவர்கள் தீச்சுடரை சமகாலத்தில் ஏற்றுவர்.

 

சமகாலத்தில் ஒவ்வொரு இல்லங்களிலும் வாசலிலும் மாவீரரின் சுடரொளியை அனைவரும் ஏற்றுவர்.

புலம்பெயர் நாடுகளில் இன்ரைய நிகழ்வுக்காக அமைக்கப்பட்ட மண்டபப்ங்கள் மற்றும் வெளி அரங்குகள் துயிலும் இல்லமாக காட்சி தரும் தாயக நேரப்படி கணிப்பீடு செய்யபப்ட்டு அந்தந்த நாடுகளின் நேர வித்தியாசத்திற்கு ஏற்ப  மாவீரர்களுக்கு சுடரேற்றப்படும்.

சுடரானது சுவாலை விட்டெரியும். ஒவ்வொரு சுடர்களிலும் மாவீரர்களின் முகங்கள் பிரகாசிக்கும். உலகம் முழுவதும் தமிழர் வாழும்  நாடுகளில்  சுடரொளி ஓங்கிப் பரவும். மக்கள் குமுறி எழுந்து கண்ணீர்விட்டு நிற்க தியாகிகளின் காவியங்கள் ஒவ்வொரு தமிழீழ மக்கள் உணர்வுகளிலும் ஒவ்வொரு உலகத்தமிழர்கள் மனங்களிலும் மீட்டப்படும்.

சுடரேற்றி தியாக தீபங்கள் இவை என்று கூறத்தக்கதாக நினைவுகூரப்பட வேண்டும். வானத்தில் மின்னும் நட்சத்திரங்கள் போல தமிழர் வாழ் நாடுகளில்  மாவீரர் சுடர்கள் இந்நேரத்தில் எங்கும் ஒளிர வேண்டும். 
 
நவம்பர் 27 இரவு நிகழ்வுகள்

தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நினைவுரை இம்முறையும் இடம்பெறாது.

மாலை 6.05 மணிக்கு ஒலி எழுப்பும் நிகழ்வு தொடங்கக் கூடியதாக  மாவீரர் நினைவுக் குறிப்பு வாசிக்கப்படலாம்.
 
நினைவொலி எழுப்புதல்

தமிழீழ நேரம் (6.05 மணி)
 
 6.05 மணிக்கு அனைத்து வழிபாட்டிடங்களிலும் மணி ஒலி ஒரு மணித்துளி நேரம் எழுப்பப்படும். உயிர்காப்புப் பணியில் ஈடுபடும் ஊர்திகள் தவிர ஏனைய அனைத்து ஊர்திகளும் நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஏற்ற வகையில் நிறுத்தப்பட்டு அமைதி பேணப்படல் வேண்டும்.

அக வணக்கம் (6.06 மணி)
 
மாவீரர்களுக்கான நினைவொலி நிறுத்தப்பட்டவுடன் 6.06 மணிக்கு மாவீரர்களுக்கான ஒரு மணித்துளி அக வணக்கம் செலுத்தப்படும். இந்நேரம் இல்லங்களிலும் ஏனைய இடங்களிலும் இருக்கும் தமிழீழ மக்கள் எழுந்து நின்று மாவீரர்களை நினைவில் நிறுத்தி அகவணக்கம் செலுத்துதல் வேண்டும்.
 
ஈகைச் சுடரேற்றுதல் (6.07 மணி)
 
அகவணக்கம் நிறைவுற்றதும் 6.07 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றப்படுதல் வேண்டும். (மாவீரர்களின் பெற்றோர் அவரவர் சுடரேற்ற வேண்டிய கல்லறைகள் நினைவுக் கற்களுக்கு முன்னால் 5.45 மணிக்கு நிற்கக்கூடிய வகையில் அனைத்து ஒழுங்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கும்.)

மாவீரர் துயிலுமில்லங்களிலுள்ள மாவீரர் கல்லறைகள் நடுகற்கள் முன் மாவீரர்களின் பெற்றோர் குடும்பத்தினர் அதே நேரம் மாவீரர் துயிலுமில்லங்களில் இடம்பெயர்ந்த மாவீரர் பெற்றோர்கள் அவர்களுக்கென ஒழுங்கு செய்யப்பட்ட இடங்களில் ஈகைச்சுடர் ஏற்றுவர்.

இவை தவிர துயிலுமில்லங்களுக்கு வராதபோது மக்கள் தமது இல்லங்கள் பொது இடங்கள் அலுவலகங்கள், விளையாட்டு இடங்கள் தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் உரிய நேரத்தில் உரிய முறைப்படி ஈகைச் சுடரேற்றுவர். ஈகைச் சுடரேற்றும்போது மாவீரர் பாடல் ஒலிக்கப்படும். (மாவீரர் ஈகைச் சுடர் ஏற்றப்படும் நேரத்தில், அதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாது. வீதிகளில் ரயர்களை எரிப்பதோ அல்லது வேறு வகையில் ஒளி உருவாக்குவதோ தவிர்க்கப்படல் வேண்டும்.)
 

போற்றப்பட வேண்டிய பண்பாடாகட்டும்
 
எமது தாயகமாம் தமிழீழ நாட்டின் தேசிய நாட்களில் மாவீரர் நாள் மிக முக்கிய நாளாகும். மாவீரர் நாள் என்பது தமிழீழத்தின் விடிவிற்காகவும்  உயிரைத் தற்கொடையாக ஈய்ந்து  இந்த மண்ணிற்கே உரமாகி விட்டவர்களினதும் எமது மூச்சுடன் கலந்து விட்டவர்களினதுமாகிய நினைவு நாளாகும்.

உங்கள் உயிரிலும் மேலான குழந்தைகளும் எமது சக போராளிகளுமான இம்மாவீரர்களின் தியாகம் அவர்களின் உணர்வுகள் இலட்சிய தாகம் கனவுகள் என்பன எம்மால் மறக்கப்பட முடியாதவையாகவும் புனிதத் தன்மை வாய்ந்தவையுமாகும். காலம் காலமாக நினைவுகூர்ந்து என்றும் போற்றப்பட வேண்டியவையாகும்.

இம்மாவீரர்களின் நினைவுகள் எம்மை வழி நடாத்தும் உந்துசக்தியாக என்றும் இருக்கும் மாவீரர்களினது இத்தகைய நினைவு கூரல் என்பது ஒரு நிகழ்வாக மட்டும் இருந்து விடாது. எமது நாட்டு மக்களின் வரலாற்றுச் சுவடியாகவும் பண்பாட்டுக்குரியவையாகவும் வளர்ந்து வரல் வேண்டும்.

இந்த எமக்குரிய உயரிய நிகழ்வைத் தத்துவார்த்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் நிலை நாட்டுவதற்காக எமது தமிழீழ மக்கள் அனைவரினதும் மனமுவந்த ஒருங்கிணைந்த பங்களிப்புக்களை வேண்டி நிற்கின்றோம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தயாகம்.

 

--------------------------------------
ஒலிக்க விடக் கூடிய பாடல்கள்...
———-
எங்கள் தேசியக் கொடியிது
ஏறுதுபார் கொடி ஏறுது பார்
ஏறுதுபார் கொடி ஏறுது பார் – இங்கு
ஏறுதுபார் கொடி ஏறுது பார் – தமிழ்
ஈழத்தின் வேதனை தீர்த்தகொடி – எட்டுத்
திக்கிலும் மானத்தைச் சேர்த்தகொடி
காலத்தை வென்றுமே நின்றகொடி – புலி
காட்டியபாதையில் சென்ற கொடி
(ஏறுதுபார்)
செக்க நிறத்திலே வேங்கை நடுவிலே
சீறிடும் கொடியிது – தமிழ்
மக்களைக் காத்த நம்மானமா வீரரை
வாழ்த்திடும் கொடியிது – புலி
வீரத்தின் கொடியிது – மா
வீரனின் கொடியிது (ஏறுதுபார்)
எத்தனை எத்தனை வேங்கைகள் ரத்தத்தில்
ஏறிய கொடியிது – பெரும்
சத்திய வேள்வியில் செந்தமிழ் மீதினில்
சாற்றிய கொடியிது – தமிழ்
ஈழத்தின் கொடியிது – புலி
ஏந்திய கொடியிது (ஏறுதுபார்)
சாதிகள் சண்டைகள் சாய்த்து விழுத்திய
சாதனைக் கொடியிது – சங்கு
ஊதி முழங்கிட ஊர்மனை யாவிலும்
உலவிய கொடியிது – சம
தர்மத்தின் கொடியிது – எங்கள்
தாயவள் கொடியிது – (ஏறுதுபார்)
ஆயிரமாயிரம் பேரென வேங்கைகள்
ஆக்கிய கொடியிது – பிர
பாகரன் என்றிடும் காவிய நாயகன்
போற்றிடும் கொடியிது – தமிழ்த்
தேசத்தின் கொடியிது – எங்கள்
தேசியக் கொடியிது (ஏறுதுபார்)
- புதுவை இரத்தினதுரை -
**************
கார்த்திகைப் பூ பூத்திடும் நாள்
புதுவை இரத்தினதுரை
எழுதும் வரிகளே உருகிக் கசியும்
கவிதை இவர்.
அடையாளமற்றிருந்த இனமொன்றின்
முகவரி இவர்.
விதி வலியதல்ல
வலியதே விதியாகிறது என
எழுதிய புதுவிதியிவர்
பிறப்புக்கு இறப்பால் அர்த்தம் சொல்லி
சிறப்புற்ற சீவன்முத்தர்கள்.
தலை சாய்த்து வளைந்தாடுவதே
வாழ்வெனக் கருதும் நாணற்புற்களிடையே
நிமிர்ந்தெழும் வழியுணர்த்திய நிர்மலர்கள்.
எப்படியென்றும்
எங்கணம் சாத்தியமானதென்றும் அறிய
நாளைய ஆய்வுக்காரர்களுக்காக
நடப்பட்டுள்ள கல்வெட்டுகள்.
நேற்று இருந்ததெனவும்
இடையில் இல்லாதழிந்ததெனவும்
மீண்டும் இன்று முளைத்தெழுந்ததெனவும்
சொல்லப்படும் இனமானத்தினதும்
வீரத்தினதும் சொந்தக்காரர்கள்.
குச்சுக்குடிசைகளின் கூரைமேற் சுடர்ந்த
தாமிர கலசங்கள்.
அறியப்பட்டனவாகவும்
அதிகம் அறியப்படாதனவாகவும்
கல்லறை கிடக்கும் காலச்சாட்சிகள்.
வீரத்தின் மணிமுடி தரித்து
ஒரு காலம் இப்படியும் இருந்தோமெனச் சொல்லி
புதைக்கப்பட்ட காலப் பெட்டகங்கள்.
ஈழத்தமிழருக்கு எழுப்பும் அருளிய
தேவப் பிறவிகள்.
படைகொண்ட பரம்பரையென
மீண்டும் நிறுவிய மகுடர்.
சிதையுண்டு சிதிலமாகிய தேசிய கோபுரத்தை
புனரமைத்து வர்ணம் பூசியோர்.
இவனால் இது முடியுமெனக் கணித்து
தலைவனுக்கு இடது வலது ஆனோர்.
சாவு வாழ்வின் முடிவல்ல
தொடக்கமுமாகலாம் எனச்சொல்லி
வாழ்வுக்குப் புதிதான வழிகாட்டிகள்.
வருடமொரு கவிதையால்
இவர்களை வரைய முடியாது.
கார்த்திகை மாதத்தில் பூப்பதால்
மற்றவைகளிருந்து மாறுபட்டு
அதிசயமாய் விளைவதால்
கானகத்தில் கரைந்துறைவதால்
கழுத்தில் நஞ்சணிவதால்
மஞ்சளும் சிவப்புமாய் மலர்வதால்
கார்த்திகைப் பூவே
மாவீரருக்குக் கனகச்சிதமானது.
கார்த்திகைக் பூவே இவர்
இவரே கார்த்திகைப் பூ
மாவீரர் நாள்
கார்த்திகைப்பூ பூத்திடும்நாள்.
******
மாவீரர் பாடல்
- புதுவை இரத்தினதுரை -
உறுதிமொழி
மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை
முடிசூடும் தமிழ்மீது உறுதி.
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன்
வரலாறு மீதிலும் உறுதி.
விழி மூடி இங்கே துயில்கின்ற வேங்கை
வீரர்கள் மீதிலும் உறுதி.
இழிவாக வாழோம் தமிழீழப் போரில்
இனிமேலும் ஓயோம் உறுதி.
பாடல்
தாயக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே! – இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா
குழியினுள் வாழ்பவரே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் – அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்.
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.
வல்லமை தாரும் என்று
உங்களின் வாசலில்
வந்துமை வணங்கிகின்றோம்
உங்கள்
கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு
சத்தியம் செய்கிறோம்
வல்லமை தாரும் என்று
உங்களின் வாசலில்
வந்துமை வணங்குகின்றோம்
சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்
சந்ததி தூங்காது – எங்கள்
தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்
தாகங்கள் தீராது.
(எங்கே எங்கே…)
உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம் – அதை
நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
நிச்சயம் எடுத்தாள்வோம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்;பெறும்
தனியர(சு) என்றிடுவோம் – எந்த
நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்
நினைவுடன் வென்றிடுவோம்.
 

//மாவீரர் பணிமனை செய்திக் குறிப்பில் இருந்து.//

 

http://www.eelanatham.net/articles/2013/11/26/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

 


ஒலிக்க விடக் கூடிய பாடல்கள்.....

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.