Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலண்டனில் உண்ணாவிரதப் போராட்டத்தில் பரமேஸ்வரன் : பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கும் முடிவை பிரித்தானியா மீளப்பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன்..

Featured Replies

November 3, 2013

 

295x200xparameswaran-295x200.jpg.pagespe

சிங்கள தேசத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவை பிரித்தானியா மீளப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி 04.11.2013 திங்கட்கிழமை, சுப்ரமணியம் பரமேஸ்வரன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றார்.

இலண்டனில் உள்ள பிரித்தானியப் பிரதமரின் வாசத்தலமான 10 டவுணிங்க் வீதிக்கு முன்பாக திங்கட்கிழமை மாலை 5:30 மணிக்கு தனது உண்ணாநிலைப் போராட்டத்தை பரமேஸ்வரன் ஆரம்பிக்கின்றார்.

பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கும் முடிவை பிரித்தானியா மீளப்பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடரவுள்ள இவ் உண்ணாநிலைக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் இணைந்து அடையாள உண்ணாநோன்பை மேற்கொள்ளுமாறு பிரித்தானியாவாழ் தமிழீழ உறவுகளுக்கு பரமேஸ்வரன் அறைகூவல் விடுத்துள்ளார்.

இம்மாதம் 15ம் திகதி பொதுநலவாய மாநாடு நடைபெற இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

http://tamizl.com/?p=48279

Edited by துளசி

  • தொடங்கியவர்

Vanakkam. Please support Subramanyam Parameswaran's HUNGER STRIKE outside 10 Downing Street asking UK to boycott CHOGM, Commonwealth Meeting, in Colombo.

Starting at 5:30 pm on Monday, 4 Nov.

Tube: Westminster.

Info TCC-UK 02033719313

 

Gobi Sivanthan

(facebook)

  • தொடங்கியவர்

வணக்கம் நண்பர்களே, உறவுகளே மீண்டும் ஓர் அகிம்சை போராட்டம், வெற்றி தோல்விக்கு அப்பால், எனது இனத்தின் விடுதலைக்கும், இனப்படுகொலைகளுக்கு நீதி கேட்டு ஓர் போராட்டம்,

காந்தியின் அகிம்சைக்கு பணிந்துதான் இந்தியாவுக்கு பிரிட்டன் சுதந்திரம் கொடுத்தது உண்மை என்றால் எம்முடைய இந்த போராட்டமும் வெற்றிகொள்ளும் என்பதில் சந்தேகம் இருக்காது,

ஆனால் அனைவரும் வரலாறு அறிந்தவர்கள், என்ன நடக்கும் என்பதும் அறிவோம். இது ஒர் மரணப் போராட்டம் அல்ல மாறாக நீதியை அழுத்தமாக தட்டிக் கேட்கும் போராட்டமாக இருக்கும்,

நமது சகோதரி இசைப்பிரியா அக்காவுக்கு நடந்தது உலகில் எந்த ஒரு இனத்திற்கும் நடந்திராத கொடூரம், அச்செயல் கொடுமையானது, அநீதியானது, அவரைப் போன்று பல சகோதரிகள் பல கொடூரங்களை அனுபவித்து எமக்காக மாண்டுள்ளார்கள். இந்த நாகரீக உலகில் எவர்க்கும் நடந்திராத கொடூரம். அதற்கு நீதி வேண்டும் என நினைப்பவர்கள் இந்தப் போராட்டத்திற்கு வாருங்கள்,

என்னுடைய போராட்டம் மட்டும் எதையும் சாதிக்காது, இந்த ஒரு போராட்டம் மட்டும் எதையும் சாதிக்காது, ஆனால் உங்கள் ஒவ்வொருவருடைய வருகையுமே அங்கே நீதியை பெற்றுத்தரும், உங்கள் ஆதரவுடன் நீதியின் கதவுகளை திறப்போம் என்ற நம்பிக்கையுடன் தொடர்கின்றேன்........

10 Downing St, London SW1A 2AA, station: westminster
04.11.2013
5.30 pm

நன்றியுடன்
சு.பரமேஸ்வரன்

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம். முக்கியமாக இவரது உண்ணாவிரதம் இம்முறை பிரித்தானியா ஊடகங்களில் முக்கிய இடத்தினைப் பிடிக்கவுள்ளது. பிரித்தானியா வாழ் உறவுகள் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு கொடுத்தால் மிகவும் நல்லதாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள தேசத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவை பிரித்தானியா மீளப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி 04.11.2013 திங்கட்கிழமை முதல் தொடர் பட்டினிப் போராட்டத்தில் சுப்ரமணியம் பரமேஸ்வரன் குதிக்கின்றார்.

 

 

இலண்டனில் உள்ள பிரித்தானியப் பிரதமரின் வாசத்தலமான 10 டவுணிங்க் வீதிக்கு முன்பாக திங்கட்கிழமை மாலை 5:30 மணிக்கு தனது உண்ணாநிலைப் போராட்டத்தை பரமேஸ்வரன் ஆரம்பிக்கின்றார்.

 

பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கும் முடிவை பிரித்தானியா மீளப்பெறும் வரை தொடரவுள்ள இவ் உண்ணாநிலைக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் இணைந்து அடையாள உண்ணாநோன்பை மேற்கொள்ளுமாறு பிரித்தானியாவாழ் தமிழீழ உறவுகளுக்கு பரமேஸ்வரன் அறைகூவல் விடுத்துள்ளார்.

 

http://kathiravan.com/newsview.php?mid=35&id=19931#category/entertainment/

  • கருத்துக்கள உறவுகள்

திங்கள் முதல் இலண்டனில் தொடர் பட்டினிப் போராட்டத்தில் பரமேஸ்வரன் 
/////////

சிங்கள தேசத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவை பிரித்தானியா மீளப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி 04.11.2013 திங்கட்கிழமை முதல் தொடர் பட்டினிப் போராட்டத்தில் சுப்ரமணியம் பரமேஸ்வரன் குதிக்கின்றார்.

 

facebook

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இப்பிடியான போராட்டங்களால் எதுவுமே நடக்க போறதில்லை அரச குடும்பமும் இங்கிலாந்து பிரதமரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டே தீருவார்கள் தாங்கள் ஆண்ட நாடுகளின் கூட்டமைப்பு இது அவர்களுக்கு இது பெருமையான கவுரவமான தங்கள் பலத்தை பறைசாற்றுகின்ற தங்களுக்கு கீழ் அடிமைப்படுத்தி வைத்திருந்த நாடுகளின் மாநாடு இது எக்காரணம் கொண்டும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
f7z1.jpg
 
 
  • தொடங்கியவர்

பரமேஸ்வரன் தொடுக்கும் பட்டினிப் போருக்கு உறுதுணை நிற்போம்!
நவ 4, 2013

பிரித்தானியப் பிரதமரின் வாசத்தல முன்றலில் தான் தொடுக்கும் பட்டினிப் போருக்கு உறுதுணை நிற்குமாறு புலம்பெயர்வாழ் தமிழீழ உறவுகளுக்கு சங்கதி-24 இணையம் ஊடாக சுப்ரமணியம் பரமேஸ்வரன் விடுக்கும் அறைகூவல்:

 

 

(facebook)

Edited by துளசி

  • தொடங்கியவர்

குருதியை உறைய வைக்கும் கடும் குளிரில் பரமேஸ்வரன் பட்டினிப் போர்!

தமிழினப் படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் சிங்கள தேசத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று பிரித்தானியப் பிரதமரை வலியுறுத்தி அவரது வாசத்தலம் முன்பாக குருதியை உறைய வைக்கும் கடும் குளிரில் பட்டினிப் போரை சுப்ரமணியம் பரமேஸ்வரன் தொடங்கியுள்ளார்.

நேற்று மாலை பிரித்தானியா நேரப்படி 6:25 மணிக்கு இலண்டனில் உள்ள பிரித்தானியப் பிரதமரின் வாசத்தல முன்றலில் மாவீரர்களுக்கும், மானச்சாவெய்திய மக்களுக்கும் அகவணக்கம் செலுத்தி சுடரேற்றப்பட்டதை தொடர்ந்து தனது உண்ணாநிலைக் கவனயீர்ப்புப் போராட்டத்தை பரமேஸ்வரன் ஆரம்பித்தார்.

கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறும் இடத்தில் கூடாரம் அமைப்பதற்கு இதுவரை அனுமதியளிக்கப்படாத நிலையில் கடும் குளிருக்கிடையே வீதியோர நடைபாதையில் அமர்ந்திருந்தவாறு தனது பட்டினிப் போராட்டத்தை பரமேஸ்வரன் முன்னெடுத்து வருகின்றார்.

 

1451469_639384139446558_108916320_n.jpg

 

1395850_639384169446555_1996378260_n.jpg

 

1422488_639384199446552_262061830_n.jpg

 

1458635_639384239446548_1441642302_n.jpg

 

1395334_639384272779878_1174379680_n.jpg

 

1456794_639384309446541_498629863_n.jpg

 

1426381_639384336113205_1847896851_n.jpg

 

943707_639384372779868_875663403_n.jpg

 

1380193_639384406113198_1558441693_n.jpg

 

1385739_639384439446528_950823155_n.jpg

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

நான்காவது நாளாக உறுதி தளராது பரமேஸ்வரன் பட்டினிப் போர்! தமிழீழ தாயக உறவுகளுக்கு நீதிகோரி பிரித்தானியப் பிரதமரின் வாசத்தலம் முன்பாக இன்றுடன் நான்காவது நாளாக உறுதி தளராது பட்டினிப் போரை சுப்ரமணியம் பரமேஸ்வரன் முன்னெடுத்துள்ளார். கடந்த 04.11.2013 திங்கட்கிழமை மாலை 6:25 மணிக்கு இலண்டனில் உள்ள பிரித்தானியப் பிரதமரின் வாசத்தலமான 10 டவுண்ங் வீதிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பரமேஸ்வரனின் பட்டினிப் போராட்டத்தில் இணைந்து கொண்ட இளைஞர் ஒருவர் 06.11.2013 புதன்கிழமை இரவுடன் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை முடிவுக் கொண்டு வந்தார். எனினும் இன்று வியாழக்கிழமையுடன் நான்காவது நாளாக தொடர்ச்சியாகப் பட்டினிப் போராட்டத்தை பரமேஸ்வரன் முன்னெடுத்து வருகின்றார்.

  • தொடங்கியவர்
உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பரமேஸ்வரன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார் இருப்பினும் போராட்டம் தொடர்கிறது.

 

1395319_10153481549785637_816386916_n.jp

 

1463553_10153481549895637_1287466794_n.j

 

994388_10153481550100637_870591857_n.jpg

 

(facebook)

  • தொடங்கியவர்

http://www.youtube.com/watch?v=zV_HAEA-i4M&feature=youtu.be&hd=1

 

(facebook)

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.