Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண ஆளுநர் சந்திரசிறி இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதராக நியமனம் பெற்று செல்லவுள்ளார்?

Featured Replies

ஓய்வுபெற்ற மாத்தறை நிர்வாகசேவை அதிகாரி வட மாகாண ஆளுநராக வரலாம்? - குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்.

வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதராக நியமனம் பெற்று செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினது கோரிக்கையின் பேரில் எதிர்வரும் பொதுநலவாய மாநாடு வரையிலும் வடக்கின் ஆளுநராக நீடித்திருக்க அவர் முடிவு செய்துள்ளதாக தொடர்புடைய தரப்புக்கள் தெரிவிக்கின்றன.


எதிர்வரும் 11ம் திகதி இடம்பெறவுள்ள வட மாகாணசபையினது அமர்வில் கலந்து கொண்டு ஆளுநர் உரையினை ஆற்ற அவருக்கு வடக்கு முதல்வர் சீ.வி.விக்கினேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். உத்தியோகபூர்வ இவ்வழைப்பினை கருத்தில் கொண்டு அங்கு கலந்து கொண்டு அங்கு அவர் உரையாற்றவுள்ளார். அதுவே அவரது வடக்கு மாகாணசபையினது பேரவைக்கான இறுதி விஜயமாக இருக்கலாமென கூறப்படுகின்றது.


ஏற்கனவே முதல்வர் சீ.வி.விக்கினேஸ்வரன் வடக்கு மாகாணசபையின் முதலாவது அமர்வில் தற்போதைய ஆளுநர் முன்னாள் படை அதிகாரியென்ற வகையில் அப்பதவிக்கு பொருத்தமற்றவரெனவும் சிவில் சமூகத்தினை சேர்ந்த ஒருவரை அப்பதவிக்கு நியமிக்கவும் பகிரங்கமாகவே  கோரியிருந்தார். இதன் பின்னரும் கதிரையை கட்டிப்பிடித்துக கொண்டிருக்க விரும்பவில்லை என அவர் மேல்மட்டத்தினது கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து   எதிர்வரும் பொதுநலவாய மாநாடு வரையிலும் வடக்கின் ஆளுநராக நீடித்திருக்க பணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


இந்நிலையில் ஆளுநர் சந்திரசிறி இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதராக நியமனம் பெற்று செல்லவுள்ளமை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அவரது இரு மகள்களுடன் குடும்பம் அவுஸ்திரேலியாவிலேயே வசித்து வருகின்றது. தனது பதவிக்காலமும் உத்தியோகபூர்வமாக இவ்வாண்டின் இறுதியுடன் முடிவுக்கும் வருவதனால்; தனது குடும்பத்துடன் அவுஸ்திரேலியா சென்று கடைசிக்காலத்தை கழிக்க உள்ளதாக அவர் தனது நெருங்கய சக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனால் அவருக்கு அவுஸ்திரேலிய தூதராக நியமனம் வழங்க மஹிந்த அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.


இதேவேளை வெற்றிடமாகவுள்ள வட மாகாண ஆளுநர் கதிரைக்கு மாத்தறையிலுள்ள ஓய்வு பற்ற இலங்கை நிர்வாக சேவை அதிகாரியொருவர் நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98558/language/ta-IN/article.aspx

Edited by nitharsanan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=131635


சில வேளைகளில் இது நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன... ஜனாதிபதியும் விக்னேஷ்வரனும் தமது இணக்கப்பாட்டு அரசியலில் சேர்ந்து இயங்குவதாக பொது நல மகாநாட்டு தலைவர்களுக்கு படம் காட்டலாம்... அதன் மூலம் அதை திரிவு படுத்தி வடக்கில் இராணுவம் ஆட்சி இல்லை என்ற மாயையை ஏற்படுத்த முயல்வார்கள்

மன்மோகன் சிங் வருவாரா?

 

 

தேர்தல் ஒன்று.

ஆளுனர் இரண்டு.

 

..........

 

...............

 

ஆளுநரே அந்த நாட்டில் வாழமுடியாமல் புலம்பெயர்ந்து செல்கிறார்.

பகிடியா இருந்தாலும் யதார்த்தம் இதுதான்.

அதுசரி கடைசி காலத்தில குடும்பத்துடன் காலத்தை களிக்க ஒரு பதவியா?

இவங்களுக்கெல்லாம் ஓய்வெடுத்து வாழ தெரியாதா?

சாகும் வரை மக்களின் வரிப்பணத்தில் தான் இருப்பார்களா

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி ஆங்கில இணையத்தளங்களில் எங்காவது வந்துள்ளதா?

இந்த செய்தி ஆங்கில இணையத்தளங்களில் எங்காவது வந்துள்ளதா?

நான் இதுவரை காணவில்லை. ஆனால் எனக்கும் மற்ற ஊடகண்களுக்கும் globalbullshitnews.com மாதிரி "அலரிமாளிகைக்கு நெருக்கமான" வட்டாரங்களை தெரியாதபடியால் மேலே உள்ள செய்தி பற்றி கருத்துக்கூற முடியாது. தலையங்கம் வழமை போலே கேள்விக்குறியோடு முடிவதை பார்த்து பரவசப்பட்டு போனேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

facebook சிங்களவர் பக்கங்களில் காணப்படுகின்றது

facebook சிங்களவர் பக்கங்களில் காணப்படுகின்றது

 

அப்ப அங்கே சுரண்டி இங்கே செய்தியாக போடுகிறார்களா இந்த இணையக்காரர்கள்?. அப்ப செய்தியின் மூலம் சொல்ப்ாட்டிருக்க வேண்டும். அதுவும் இல்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.