Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பு? மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் செல்லும் வகையில் பயணத்திட்டம்?

Featured Replies

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கும் வகையில் புதிய வியூகத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொழும்புவுக்குச் சென்று மாநாட்டில் பங்கேற்பதுடன், தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் பிரதமர் செல்லும் வகையில் பயணத்திட்டத்தை உருவாக்க வெளியுறவுத்துறை அமைச்சம் முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன்மூலம் தமிழக மக்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது. 

இலங்கை வடக்கு மாகாண முதல் அமைச்சர் விக்னேஷ்வரன், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுத்துள்ளதால் இந்த முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளதாக தெரிகிறது. இலங்கை தமிழர் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களை ஆய்வு செய்வதன் மூலம் தமிழக மக்களின் ஆதரவை பெற முடியும் என மத்திய அரசு கருதுகிறது. 

இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்குப் பகுதியின் தலைநகராக யாழ்ப்பாணம் திகழ்கிறது. இங்கு மன்மோகன் சிங் சென்று வருவது தமிழர்களை சமாதானப்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் வெளியுறவுத்துறை யோசனை தெரிவித்துள்ளது. என்றாலும் இது பற்றி இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

மன்மோகன்சிங்கின் சுற்றுப் பயண விவரத்தை வெளியுறவுத்துறை தயார் செய்தபின்பு இலங்கையிடம் அளிக்கும். அதன் பிறகே இறுதி செய்யப்படும். அதன் அடிப்படையில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் இந்திய குழுவினருக்கு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள், தங்கும் இட வசதி போன்றவை செய்யப்படும்.

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை செல்லக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள் சிலரும், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர்,

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஏறகனவே போட்ட திட்டம்தான்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Mdu-Adhinamc_zps00759af2.jpg

 

காமன்வெல்த்தில் இந்தியா கலந்து கொள்ளகூடாது: ஆதீனம்

 

மதுரை,நவ.5 - இலங்கையில் நடைபெறும்  காமன்வெல்த்  மாநாட்டில் இந்தியா எக்காரணத்தை முன்னிட்டும் கலந்து கொள்ளக்கூடாது என்று மதுரை ஆதீனம் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து மதுரை ஆதீனம் விடுத்துள்ள அறிக்கையில்   கூறியிருப்பதாவது, இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த வேண்டுமென முடிவு செய்ததே மிகப்பெரிய தவறு. அப்படிப்பட்ட முடிவை எடுக்க  இந்தியா சம்மதம் தெரிவி்த்திருக்க கூடாது. லட்சக்கணக்கான மனித இனத்தை கொன்று குவித்து பல்லாயிரம் கோடி மதிப்புள்ள  சொத்துக்களை அழித்து மனிதாபிமானத்திற்கே வேட்டு வைத்த இலங்கையில்காமன்வெல்த் மாநாட்டை நடத்தலாமா?

சின்னஞ்சிறு வயது பாலகன் பிரபாகரனின் அருமை மகனை ஈவுஇரக்கமின்றி கொலை செய்த இலங்கையிலா காமன்வெல்த் மாநாடு? இசைப்பிரியாவை மிகப்பயங்கரமாக கொலை செய்து விட்டு நாங்கள் செய்யவில்லை என நாடகமாடும் இலங்கையிலா  காமன்வெல்த் மாநாடு? காமன்வெல்த் என்ற சொல்லுக்கு பொதுச்சொத்து என்பதுதானே பொருள். அப்படிப்பட்ட இறைவனின் பிள்ளைகளான மனித உயிர்கள் என்ற பொதுச்சொத்தை நாசமாக்கிய இலங்கையிலா காமன்வெல்த் மாநாடு? மத்திய அரசே, மத்திய அரசே புறக்கணியுங்கள், புறக்கணியுங்கள் காமன்வெல்த் மாநாட்டை.  இவ்வாறு மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

http://www.thinaboomi.com

 

  • கருத்துக்கள உறவுகள்

Mdu-Adhinamc_zps00759af2.jpg

 

காமன்வெல்த்தில் இந்தியா கலந்து கொள்ளகூடாது: ஆதீனம்

 

 

எங்கட நிலமைய பாருங்க...

ஆதீனம் என்றால் அர்த்தம் புண்ணாக்கு என்பதா? 

 

ஆ+ தீன் (ம்)

 

<_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.