Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செனல்4 ஊடகத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாது – சவேந்திர சில்வா

Featured Replies

செனல்4 ஊடகத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாது – சவேந்திர சில்வா
13 நவம்பர் 2013
 

 

shavendra%20silva_CI.jpg

பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாது என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான நியூயோர்க்கின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டையே செனல்4 ஊடகம் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே செனல்4 ஊடகவியலாளர்களுக்கு இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதியளிக்குமாறு செனல்4 ஊடகவியலாளர் ஜொனதன் மில்லர் கோரியதாகவும், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு தாம் அழைப்பு விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், செனல்4 ஊடகவியலாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பிரித்தானிய ஊடகங்களில் சில இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்டுத்தும் தீவிர முனைப்புடன் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்களை செனல்4 ஊடகம் சர்வதேச நீதிமன்றில் சமர்ப்பிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். செனல்4 ஆணப்படம் தொடர்பில் விவாதம் நடாத்தத் தயார் எனவும், அது தொடர்பில் பகிரங்க விவாதமொன்றுக்கு ஊடகவியலாளர் கெலம் மக்ரே தயாரா எனவும் சவேந்திரா சில்வா கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே பகிரங்க விவாதமொன்றுக்கு விடுத்த சவாலை மக்ரே ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், மீண்டும் அது தொடர்பில் சவால் விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98901/language/ta-IN/article.aspx

அரசியல் வாதிகளோடு விவாதம் நடத்தலாம் அதென்ன அதிகாரிகளோடு பத்திரிகையாளர் விவாதம் செய்வது?

 

மன்னிக்கவும் போற்குர்ரவாளிகளுடன் பத்திரியாளர்கள் விவாதிப்பது?

 

எப்படி மாறும்?

 

ரயிலாலை கோத்தா, ஒரு பக்கம் இறக்க, றம்புக்வெல இன்னொரு பக்கம் கொழுப்பா, திமிரா கதைக்க, நீங்கள் நல்லா இருக்க வேண்டும் மக்கா!

 

பிரபாகரன் தெரிஞ்சு தான் மகிந்தரை பதவிக்கு வர உதவினார்.

எப்படி மாறும்?

 

ரயிலாலை கோத்தா, ஒரு பக்கம் இறக்க, றம்புக்வெல இன்னொரு பக்கம் கொழுப்பா, திமிரா கதைக்க, நீங்கள் நல்லா இருக்க வேண்டும் மக்கா!

 

பிரபாகரன் தெரிஞ்சு தான் மகிந்தரை பதவிக்கு வர உதவினார்.

உங்களை வரவேற்கிறேன் தாடிச்சாமி அண்ணா :) .............உங்கள் படம் எனக்கு பிடித்துள்ளது :icon_idea: .........அரிச்சுவடியில் வராத படியினால் இங்கே வரவேற்கிறேன் ................தொடருங்கள் உங்கள் வித்தையை ........

இவர் சனெல்-4 விவாதத்துக்கு அழைத்தாரா? அமெரிக்கா ஐரோப்பா எங்கும் திரையிடப்படும் இந்த ஆவணங்களின் வெளியீடு நிகழ்வென்றில் கலம் மக்ரேயை சந்திக்க முயன்றாரா?

 

இது சவேந்திர சில்வாவின் அறிக்கையா? உண்மையில் இந்த அறிக்கை கிடைத்தால் சனெல்-4 கட்டாயம் பதில் சொல்லும். இதை ஆங்கிலத்தில் கண்டவர்கள். மக்ரேக்கு அனுப்பி விடுங்கள். 

 

மக்ரே விவாதத்ததை ஏற்றுக்கொண்டால் முழு இங்கிலாந்து தமிழரும் அவர் பின்னால் நிற்க வேண்டும்.

எந்த நேரத்திலும் விவாதம் நடத்தத் தயார் – சவேந்திரசில்வாவுக்கு மக்ரே அறிவிப்பு!

— 17/11/2013 at 1:56 pm | no comments

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப்பிரதிநிதி சவேந்திர சில்வாவுடன் எந்த நேரத்திலும் விவாதம் நடத்த தான் தயாராக உள்ளதாக சனல் 4 ஊடகவியலாளர் கெலும் மெக்ரே அறிவித்துள்ளார்.அதன்படி சனல்4 ஆவணப்பட தயாரிப்பாளர் கெலும் மெக்ரேயுடன் விவாதத்துக்கு தாம் தயார் என்று ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப்பிரதிநிதி  சவேந்திர சில்வா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் கெலும் மெக்ரே தயாரித்துள்ள ஆவணப்படங்கள் தொடர்பிலேயே சவேந்திர சில்வா இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

ஏற்கனவே சனல்4 ஆவணப்படம் ஒன்று நியூயோக்கில் வெளியிடப்பட்ட போது, அதில் 7 நிமிடங்கள்  உரையாற்றுமாறு ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி பாலித கோஹனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் அதனை அவர் ஏற்றுக்கொள்ளாது இந்த நிகழ்வுக்கு சவேந்திர சில்வாவே பொருத்தமானவர் என்று கோஹன குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையிலேயே சவேந்திர சில்வா தற்போது மெக்ரேயுடன் விவாதத்தை கோரியுள்ளார். இந்த விவாதத்தை ஏற்றுக்கொண்டுள்ள மெக்ரே, அதற்காக நியூயோர்க் செல்வதற்கு தம்மிடம் நிதி வசதியில்லை என்று குறிப்பிட்டுள்ளதுடன் எந்த நேரத்திலும் விவாதத்துக்கு தாம் தயார் என்றும் மெக்ரே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

http://tamilleader.com/?p=23212

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.